Search
  • Follow NativePlanet
Share
» »கமலின் அரசியல் சுற்றுப் பயணம் எங்கெல்லாம் செல்கிறார் தெரியுமா? பட்டியல் இதோ!

கமலின் அரசியல் சுற்றுப் பயணம் எங்கெல்லாம் செல்கிறார் தெரியுமா? பட்டியல் இதோ!

கமல்ஹாசனின் சொந்த ஊர் பரமக்குடி. இது ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது. தனது சொந்த ஊரை உள்ளடக்கிய ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து மக்களை சந்திக்கும் பிரச்சாரத்தைத் தொடங்கவுள்ளதாக கமல் அறிவித்துள்ளார். கமல்ஹாசனின் கட்சிப் பெயர் என்ன, அவர் என்ன மாதிரியான கொள்கைகளை மக்களிடம் வைக்கப் போகிறார், என்ன சொல்லி மக்கள் ஆதரவைத் திரட்டப் போகிறார் என்பது மிகப் பெரிய எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.

எங்கெல்லாம் செல்கிறார். என்ன திட்டம் வைத்திருக்கிறார். அவரது சுற்றுப்பயணத் திட்டத்தில் எந்தெந்த இடங்களெல்லாம் இடம்பெறவிருக்கிறது என்பது குறித்து இந்த பதிவில் காண்போம்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் நகரைத் தலைநகரமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பெரும்பான்மையானவர்களுக்கு தெரிய வேண்டுமென்றால், ராமேஸ்வரம் இந்த மாவட்டத்தில்தான் உள்ளது. மேலும் இங்கு நிறைய சுற்றுலாத் தளங்கள் உள்ளன. அவை உத்தரகோசமங்கை

ஏர்வாடி, ராமேஸ்வரம், தேவிப்பட்டினம், வலிநோக்கம், சுந்தரமுடையன், தங்கச்சிமடம், திருப்புல்லானி, திருவாடனை, தனுஷ்கோடி, திருவப்பனூர், கமுதி, கீழக்கரை, புதுமண்டபம், பரமகுடி, நாகாச்சி, பாம்பன் பாலம், சித்தரன்குடி பறவைகள் சரணாலயம், குந்துக்கல் விவேகானந்த நினைவகம், அரியமான்கடற்கரை, கடற்கரை அனுமான் கோயில் சேதுக்கரை, ஆத்தங்கரை முனி கோயில், கடல் வாழ் உயிரி அருங்காட்சியகம், பெரியபட்டினம் தர்கா, பண்ணைகுளம் மசூதி, பழைய ஜுமா மசூதி, அதியுத்து தர்கா, திருவெற்றியூர் பாகம் பெரிய கோயில், சிக்கல் சதுர்வேதமங்கலம், இருமேனி நல்ல நீர் கிணறு மற்றும் சில்வர் பீச் ஆகியன.

இத்தனை சுற்றுலாத் தளங்களுக்கும் ஒருவர் செல்லவேண்டிய அவசியம் இருக்காது. ஏனெனில் இவற்றில் பெரும்பான்மை ஆன்மீகத் தலங்களாகும். மேலும் ராமநாதபுரம் நகரைச் சுற்றிலும் பல ஆன்மீகத் தலங்கள் அமைந்துள்ளன.

உத்தரகோசமங்கை

உத்தரகோசமங்கை

ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங் கை கோயிலில் உள்ள 300 ஆண்டுகள் பழமையான சிவன், விஷ்ணு, பிரம்மா இணைந்த ஏகபாத மூர்த்தி சிற்பம் உள்ளது. இது மிகவும் அர்த்தமுள்ளதாக கூறப்படுகிறது. சக்தி வாய்ந்த இந்த கோயில் சேதுபதி மன்னர்களின் சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறது.

உலகின் முதல் பொருளாக கருதப்படும் லிங்கத்தில் தோன்றியதாக 64 சிவமூர்த்தங்களை குறிப்பிடுகின்றனர் ஆன்மீகவாதிகள். இவற்றை அஷ்டாஷ்ட விக்கிரகங்கள் என கூறுகின்றனர். இம்மூர்த்தங்களைச் சுருக்கி, இருபத்தைந்து மூர்த்தங்களாக உருவாக்கப்பட்டதாக உத்தரகாரண ஆகமம் கூறுகிறது. இதில் ஒன்று ஏகபாத மூர்த்தி ஆகும்.

இந்துக்களின் நம்பிக்கைப் படி, ராமேஸ்வரம் செல்பவர்கள் இந்த கோயிலுக்கு கட்டாயம் வந்து செல்கின்றனர். இதன் அருகிலேயே ஏர்வாடி எனும் இடம் உள்ளது. இங்கு குட்பஸ் சுல்தான் சையத் இப்ராஹிம் என்பவரது நினைவிடம் அமைந்துள்ளது.

ராமேஸ்வரம்

ராமேஸ்வரம்

இந்துக்களின் புனிதத் தலங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படும் இராமேஸ்வரத்திற்கு கண்டிப்பாக ஒவ்வொருவரும் 'சார் தம்யாத்ரா' அல்லது புனிதப் பயணம் செய்ய வேண்டும். மகா விஷ்ணுவின் ஏழாவது அவதாரமான இராமர், இலங்கை மன்னன் இராவணன் கடத்திச் சென்று சிறை வைத்த தன்னுடைய மனைவி சீதா தேவியை மீட்கும் பொருட்டாக, இலங்கைக்கு தரைப்பாலத்தைக் கட்டிய இடம் தான் இன்றைய இராமேஸ்வரம் என்று புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது.

இதை பலர் உண்மை என நம்புகின்றனர். இன்னும் பலர் இதை புராணக் கதை மட்டும்தான் நிசத்தில் இல்லை என நம்புகின்றனர். ராம சேது பாலத்தை வைத்து பேசுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். எனினும் இது ஆன்மீகத்தைத் தாண்டிய இந்தியாவின் சிறந்த சுற்றுலாத் தளமாகும்.

இதனருகில் தேவிப்பட்டினம் எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு கடல் நவக்கிரக கோயில் உள்ளது. இது மிகவும் சிறப்பானதாகும். ஏனெனில் இங்குதான் உலகின் ஒரே கடற்புற நவக்கிரக கோயில் அமைந்துள்ளது. இதையடுத்து வலிநோக்கம் எனும் இடத்தில் இம்ரான் உதயதுல்லா மசூதி அமைந்துள்ளது. இங்கு தமிழக அரசின் உப்பு நிறுவனம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி

தங்கச்சிமடம்

தங்கச்சிமடம்

அன்றாடம் செய்திகளில் அடிபடும் பெயர் இந்த தங்கச்சி மடம். மீனவகிராமத்தை அதிகம் கொண்ட பகுதி இதுவாகும். இதனருகில்தான் ஐயா டாக்டர் அப்துல்கலாம் அவர்கள் பிறந்து வளர்ந்தார் என்பது சிறப்பானது. பேய்க்கரும்பு எனும் பகுதி தங்கச்சிமடத்துக்கு அருகிலுள்ள பகுதியாகும்.

இதுமட்டுமல்லாமல், தங்கச்சிமடத்தில் மிக அழகான கடற்கரை அமைந்துள்ளது. இங்கு மீன்பிடிப்பவர்கள் அதிகம் என்பதால் படகுகளும் நிறைய இருக்கின்றன. தெரிந்தவர்கள் மூலமாக சென்றால் கடலில் படகு போக்குவரத்து செல்ல வாய்ப்பும் அமையும். எனினும் அது உங்கள் செல்வாக்கையும், அன்பையும் பொறுத்து அமையும்.

இதற்கு அருகில் சுந்தரமுடையன் எனும் பகுதியில் அமைந்துள்ளது சீனியப்பா ஷாகித் தர்கா. இது இந்த பகுதி மக்கள் மிகவும் விரும்பும் இடமாகும். இங்கு மத வேறுபாடு இன்றி அனைத்து மதத்தினரும் ஒன்று சேர்ந்து வரும் இடமாகும். இதையடுத்து அமைந்துள்ள திருப்புல்லானியில் அமைந்துள்ளது ராமேஸ்வரத்தின் சிறப்பு மிக்க திருமால் கோயில். இதற்கு பெயரே கிரேட் பெருமாள் கோயில் என்பதுதான்.

rajaraman sundaram

தனுஷ்கோடி

தனுஷ்கோடி

ராமேஸ்வரமும் தனுஷ்கோடியும் ஒன்றுதான் என்று பலர் நினைக்கிறார்கள் ஆனால் அது உண்மை இல்லை. ராமேஸ்வரத்தின் பெருமையும் புனிதமும் தனுஷ்கோடிக்கு இருந்தாலும், தனுஷ்கோடி ஒரு அழிந்துவரும் பகுதி என்பதுதான் உண்மை.

சமூக ஆர்வலர்கள் பலரும் எச்சரிக்கும் ஒரு நிகழ்வு இந்தியாவின் அழிந்துவரும் பகுதிகளில் மிக முக்கியமாக இருக்கப்போவது தனுஷ்கோடிதான் என்பது. சுற்றுசூழல் ஒருபுறமும், இயற்கை சீற்றங்கள் மறுபுறமும் இருந்து இந்த தனுஷ்கோடியை அழிக்க நினைக்கிறது.

இங்கு அருகில் இருக்கும் திருவாடனையில் ஆதி ரத்னேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் ராமநாதபுரம் மாவட்டத்தின் சிறப்பு மிக்க கோயிலாகும். இதைத் தொடர்ந்து திருவப்பனூர் சிவ தலமும் அமைந்துள்ளது. இது மிகவும் பாரம்பரியமானது. பாண்டியர்களின் போற்றுதலுக்குரியது என்பது கூடுதல் சிறப்பாகும்.

கமுதியில் பசும்பொன் முத்துராமலிங்கம் அவர்களின் நினைவிடம் அமைந்துள்ளது. முத்துராமலிங்கம் என்பவர் மிகச் சிறந்த ஆன்மீகவாதி. மதம் சாதி பாராமல் அனைத்து தரப்பு மக்களுக்கும் உதவி செய்துவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவரை இன்று குறிப்பிட்ட சாதி அடையாளமாக பார்க்கப்படுவது மிகவும் கவலைக்குரியதாக பார்க்கப்படுகிறது.

Armstrongvimal

கீழக்கரை

கீழக்கரை

வள்ளல் பெருந்தகை சீதக்காதி பிறந்த இடம் இந்த கீழக்கரை. ஒரு இயற்கை துறைமுகமான இந்த இடம் பல விசயங்களுக்கு சிறப்பானதாக கொண்டாடப்படுகிறது.

இங்கிருந்து மிக அருகில் நல்லதண்ணி தீவு, அப்பா தீவு, சுழி தீவு, உப்புத் தண்ணி தீவு உள்ளிட்ட பல தீவுகள் அமைந்துள்ளன.

முத்து அதிகம் கிடைக்கும் இடமாக இது கருதப்படுகிறது. மேலும் கடல் வணிகம் சிறந்துவிளங்கும் பகுதி இதுவாகும்.

புதுமண்டபம் பகுதி மீன் பிடி தொழில் செய்பவர்கள் அதிகம் வாழும் பகுதியாகும். இங்கு மீன் வள ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது.

wiki

பரமக்குடி

பரமக்குடி

இந்திய சினிமாவைக் கலக்கிக் கொண்டிருக்கும் விக்ரம், உலக அளவில் பிரபலமான நடிகர் கமல் ஆகியோர் உட்பட பலர் பிறந்த இடம் இந்த பரமக்குடி ஆகும். இங்குதான் தியாகி இம்மானுவேல் அவர்கள் நினைவிடமும் அமைக்கப்பட்டுள்ளது. அடிக்கடி சண்டை, கலவரம் நடக்கும் பகுதியாக அரசு நினைத்தாலும், இங்கு வாழும் மக்கள் அன்புக்கு அன்பாய் இருப்பவர்கள். இங்கு வரும் வெளியூர் பயணிகளுக்கும் சிறந்த அரணாய் இருப்பவர்கள்தான். பொதுவாக சுற்றுலாப் பயணிகள் ராமநாதபுரம் வர பயப்படுவதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. ஆனால் அதையெல்லாம் ஒரு பொருட்டாகக் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை.

நாகாச்சி அம்மன் கோயில் இதன் அருகில் அமைந்துள்ளது. மேலும் பாம்பன் பாலம் பற்றியும் நாம் நிறைய கட்டுரைகளில் படித்திருக்கிறோம்.

சித்தரன்குடி பறவைகள் சரணாலயம்

சித்தரன்குடி பறவைகள் சரணாலயம்

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சித்தரங்குடி பறவைகள் சரணாலயம் மிக அதிக பறவைகள் வரும் இடமாக இருந்தது. எங்கே காணினும் பறவைகள் கூட்டமாகவும், சிறப்பான சுற்றுலா தலமாகவும் விளங்கியது சித்தரங்குடி பகுதி. அப்படி இருந்த பகுதிக்கு இப்போது என்னவாயிற்று. முன்பு போல் அதிக பறவைகள் சித்தரங்குடி தேடி வருவது இல்லை. இங்குள்ள கண்மாயில் அதிக அளவு மரங்கள் வளர்ந்து அடர்த்தியாகி விட்டதாலும், நீர் பெரும்பாலும் இல்லாததாலும் இப்படி ஒரு நிலை. ஆனால் இதை வசமாகப் பயன்படுத்திக்கொண்டனர் மேலச் செல்வனூர் மக்கள். ஆம் அங்குள்ள கண்மாயில் அதிக அளவு பறவைகள் வருகின்றன. இந்த ஊரில் பறவைகள் ஆர்வலர்களுடன் சேர்ந்து பொதுமக்களும் பறவைகளைக் காத்து வருகின்றனர். இந்த ஊரில் பறவை வேட்டை மிகக்கடுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.

குந்துக்கல் எனும் இடத்தில் விவேகானந்தர் நினைவகம் அமைந்துள்ளது.

wiki

அரியமான்கடற்கரை

அரியமான்கடற்கரை

நீலக்கடல் நீர் மின்னுவதாகவும், நாள் முழுவதும் அமைதியாகவும் இருக்கக் கூடிய அழகிய கடற்கரையாக அரியமான் கடற்கரை உள்ளது. நாள் முழுவதும் மென்மையான குளிர்காற்று தவழ்ந்து வரும் இந்த கடற்கரை சுற்றுலா வருவதற்கு மிகவும் ஏற்ற இடமாகும். இராமநாதசுவாமி கோவிலிலிருந்து 27 கிமீ தொலைவில் உள்ள இந்த கடற்கரை 150மீ அகலமும், 2 கிமீ நீளமும் உடையதாகும்.

இந்த கடற்ரையின் அழகுக்கு அழகு சேர்க்கும் வகையில் ஒரு தனியார் கட்டுமான நிறுவனர், சவுக்கு மரங்களை கடற்கரையில் நட்டுள்ளார்.

மேலும் குழந்தைகள் பூங்கா, நீச்சல் குளம், படகு சவாரி, செயற்கை இடிமின்னல், நீர்ச்சறுக்கு மற்றும் இதர விளையாட்டுகளையும் இங்கு ஏற்படுத்தியுள்ளார். சுற்றுலா செல்பவர்களின் சுற்றுப் பயணத்தை அர்த்தமுள்ளதாக்கிடவே இந்த வசதிகள் இங்கு செய்யப்பட்டுள்ளன.

கடற்கரை அனுமான் கோயில் சேதுக்கரை

கடற்கரை அனுமான் கோயில் சேதுக்கரை

சேதுக்கரையில் கடற்கரை அனுமான் கோயில் அமைந்துள்ளது. இதுவும் மிகச் சிறப்பான ஒரு கோயில் ஆகும். இங்கு வருகை தரும் பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் தங்கள் எதிர்காலம் சிறப்பாக வேண்டிக்கொள்கின்றனர். இதையடுத்து, ஆத்தங்கரை முனி கோயில் ஒன்றும் உள்ளது. ஆர் எஸ் மடை எனும் பகுதியில் கடல் வாழ் உயிரி அருங்காட்சியகம் அமைந்துள்ளது.

பெரியபட்டினம் அமைந்துள்ள தர்கா மற்றும். பண்ணைகுளம் மசூதி ஆகியன சிறப்புமிக்க இடங்கள்.

பழைய ஜுமா மசூதி

பழைய ஜுமா மசூதி

கீழக்கரையில் அமைந்துள்ள பழைய மசூதி அல்லது பழைய ஜூம்மா மசூதிக்கு ஒரு சிறப்பு இருக்கிறது இதுதான் இந்தியாவில் கட்டப்பட்டு இன்று வரை இயங்கிக் கொண்டிருக்கும் ஒரே பழைய மசூதி ஆகும். கிபி 628 - கிபி 630 களில் கட்டப்பட்ட இந்த மசூதி, 1036ல் மீண்டும் புதுப்பிக்கப் பட்டது. இது தனது பழமையை இன்றும் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது.

அருகிலுள்ள அதியுத்து தர்கா, பட்டாணி சாகிப் தர்கா என்றும் அழைக்கப்படுகிறது. இதையடுத்துள்ள இருமேனி நல்ல நீர் கிணறு அமைந்துள்ளது இது சுவையான நீரைக் கொண்டுள்ளது. மேலும் அருகில் சில்வர் பீச் அமைந்துள்ளது. அருகிலுள்ள சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களிலும் நிறைய சுற்றுலாத் தளங்கள் அமைந்துள்ளன. அவற்றில் மிக முக்கியமானவற்றை மட்டும் காண்போம்.

Kilakarai

சிவகங்கை

சிவகங்கை

வேட்டாங்குடி பறவைகள் சரணாலயம், செட்டிநாடு சுவை உணவுகள், பாண்டியர்களின் கோயில்கள், தர்காக்கள், மசூதிகள், தென்திருப்பதி, பிள்ளையார்பட்டி, கோவிலூர் கோயில், கண்டதேவி கோயில், இடைக்கட்டூர் தேவாலயம் கொல்லங்குடி காளியம்மன் கோயில், காளீஸ்வரர் கோயில், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் ஆகியன இதில் முக்கியமானவையாகும்.

Nileshantony92

வேட்டாங்குடி பறவைகள் சரணாலயம்

வேட்டாங்குடி பறவைகள் சரணாலயம்

வேட்டாங்குடி பறவைகள் சரணாலயம் 1977ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இங்கு பலதரப்பட்ட பறவைகள் வருகைத் தருகின்றன. பெரும்பாலும் வெளிநாட்டு பறவைகள் இங்கு வந்து செல்கின்றன. இதை பார்வையிட பல சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர்.

கிட்டத்தட்ட 217 வகை பறவைகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன. 8000க்கும் அதிகமான பறவைகள் இங்கு வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

Ve.Balamurali

செட்டிநாடு சுவை உணவுகள்

செட்டிநாடு சுவை உணவுகள்

செட்டிநாடு, தென் தமிழக மாவட்டங்களான புதுக்கோட்டை, காரைக்குடி,சிவகங்கை மற்றும் ராமநாதபுர மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதியாகும். 19ஆம் நூற்றாண்டின் பிற்ப்பகுதியில் இந்தப்பகுதிகளில் அதிகமாக வாழ்ந்த வாணிபத்தொழில் செய்து வந்த 'நகரத்தார்' எனப்படும் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் பர்மா, இலங்கை போன்ற நாடுகளுக்கு சென்று வாணிபம் செய்து பெரும் பொருள் சேர்த்தனர். பின்னர் அவர்கள் 20ஆம் நூற்றாண்டில் திரும்பவும் செட்டி நாட்டுக்கே திரும்பி வந்து விடுகின்றனர். இன்று நாம் பார்த்து வியக்கும் செட்டிநாட்டு அரண்மனைகளும், வீடுகளும் இப்படி வந்தவர்களால் கட்டப்பட்டதே. செட்டிநாட்டில் செய்யப்படும் உணவுகள் உலகப்பிரபலமானவை

Sonja

திண்டுக்கல்

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் மதுரை மாவட்டத்தை தொட்டு அமைந்துள்ளது. இது பாதி வறட்சியாகவும், பாதி செழிப்பாகவும் இருக்கும் மாவட்டமாகும். இங்கு குறிப்பிட்டு சொல்லக்கூடிய சுற்றுலாத் தளங்களாக கொடைக்கானல், பழனி, சிறுமலை மற்றும் திண்டுக்கல் கோட்டை ஆகியன இருக்கின்றன.

Parthan

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more