Search
  • Follow NativePlanet
Share
» »வாசகர் விருப்பம் - ஹிசார் நகரத்திலிருந்து 4 - 7 மணி நேரத்துக்குள் செல்லத் தகுந்த இடங்கள்!

வாசகர் விருப்பம் - ஹிசார் நகரத்திலிருந்து 4 - 7 மணி நேரத்துக்குள் செல்லத் தகுந்த இடங்கள்!

புதுடில்லிக்கு மேற்கே 164 கிமீ தொலைவில் உள்ள ஹிசார் நகரம், ஹரியானா ஹிசார் மாவட்டத்தின் தலைமையிடமாகும். டெல்லிக்குப் போட்டியாக புலம்பெயர் மக்களை ஈர்க்கும் நகரமாக ஹிசார் கருதப்படுகிறது. எஃகு தொழிற்சாலைக

By Udhaya

நம்முடைய வாசகர் ஒருவர் ஹரியானாவின் ஹிசார் நகரத்துக்கு சென்றுள்ளார். அவருக்கு 4 முதல் 7 மணி நேரத்துக்குள்ளாக செல்லவேண்டிய சுற்றுலாத் தளங்களைப் பற்றி தெரிந்துகொள்ள விருப்பம். ஆனால் கூகுளில் தேடினால், அதற்கான வழிமுறைகள் சற்று கடினமானதாகவே இருக்கிறது. ஏனென்றால் சரியான திட்டமிடல் இன்றி ஒரு இடத்துக்கு எப்படி செல்வது என்ற சந்தேகம் அவருக்குள் இருந்துள்ளது. நம்மை தொடர்பு கொண்டு கேட்ட அவருக்கு நம்மிடமிருந்து தெளிவான பதிலும், அவரது சுற்றுலாவுக்கான வழிகாட்டியும் சிறப்பான முறையில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் அவர் நம்முடைய வழிகாட்டிதலின்படி பயணித்துக்கொண்டிருப்பார். ஒருவேளை நீங்களும் அந்த ஊருக்கு போனால், எந்தெந்த இடங்களுக்கு செல்லவேண்டும் என தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா? வாருங்கள் இப்போதே செல்வோம். உங்களுக்கும் வேறு இடங்களைப் பற்றி தெரிந்து கொள்ளவேண்டுமானால் நமது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் (தமிழ் நேட்டிவ் பிளானட்) இன்பாக்ஸில் கேளுங்கள்.

ஹிசார் எங்கே இருக்கிறது?

ஹிசார் எங்கே இருக்கிறது?


புதுடில்லிக்கு மேற்கே 164 கிமீ தொலைவில் உள்ள ஹிசார் நகரம், ஹரியானா ஹிசார் மாவட்டத்தின் தலைமையிடமாகும். டெல்லிக்குப் போட்டியாக புலம்பெயர் மக்களை ஈர்க்கும் நகரமாக ஹிசார் கருதப்படுகிறது. எஃகு தொழிற்சாலைகள் நிரம்ப இருப்பதால் ஹிசாருக்கு 'எஃகு நகரம்' என்ற இன்னொரு பெயரும் உண்டு.

இங்கு சுற்றுலாவுக்காகவென்று யார் செல்வார் என நிறைய பேர் நினைக்கலாம். ஆனால் ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள். திரும்ப திரும்ப ஒரே இடத்துக்கு செல்வது போர் அடிக்கும். இப்படி புதிய புதிய இடங்களுக்கு செல்வது மனதுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும்.அப்படி எண்ணுபவர்கள்தான் புதிய புதிய இடங்களைத் தேடி செல்கிறார்கள். வாருங்கள் அருகிலுள்ள சுற்றுலாத் தளங்களை காண்போம்.
hisar.gov.in

 சுற்றுலாத் தலங்கள்

சுற்றுலாத் தலங்கள்

ஹிசாரில் சுற்றுலாவுக்கு ஏற்ற பல இடங்கள் உள்ளன. 1860 டிசம்பரில் துவங்கி 1864 மே முதலாக நான்கு வருடங்கள், 4500ரூபாய் செலவில் கட்டப்பட்ட செயிண்ட் தாமஸ் தேவாலயம் இங்கு முக்கிய சுற்றுலா தளமாக கருதப்படுகிறது. இயேசுவின் பன்ணிரண்டு சீடர்களில் ஒருவரான செயிண்ட் தாமஸ் என்வருக்கு இத்தேவாலயம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தேவாலயத்தின் வடிவமும், கட்டுமானமும் விக்டோரிய மகாராணி காலத்திய பாணியை எடுத்துரைப்பதாக உள்ளது.

அக்ரோஹா அணை என்றும் அக்ரோஹா கோவில் அழைக்கப்படும் கோவில் வளாகம் அக்ரோஹா என்னுமிடத்தில் அமைந்துள்ளது. ஷக்தி சரோவர் என்ற மிகப்பெரிய குளமும், யோகா மூலம் நோய்களை குணப்படுத்தும் நேசுரோபதி என்ற இயற்கை மருத்துவமனையும் இங்கு உள்ளன.

லொஹரி ரகோ என்ற வரலாற்று பெருமை மிக்க கிராமம் ஹிசாருக்கு கிழக்கே 52 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இங்குள்ள மூன்று மணல் திட்டுக்களில் தூப் சிங் மற்றும் சந்தர்பால் சிங் என்ற ஹரியானா தொல்பொருள் மற்றும் அருங்காட்சியக அதிகாரிகளால் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் அவை சோதி சிஸ்வால் பீங்கான் காலத்தியவை என்று கண்டறியபட்டுள்ளது.

ஹிசாரில் இருந்து 1.5கிமீ தொலைவில் உள்ள அக்ரோஹா மணல் திட்டு தொல்பொருள் தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு கிடைக்கப்பெற்ற வரலாற்று தொன்மை மிக்க பொருட்கள் 3ஆம் அல்லது நான்காம் நூற்றாண்டில் இருந்து 13 அல்லது 14ஆம் நூற்றாண்டை வரையிலானவை என கருதப்படுகின்றன. அக்ரோஹா தளம் ஒருபுறம் கோவில் வளாகத்தாலும் மற்றொரு புறம் ஷீலா மாதா கோவிலாலும் சூழப்பட்டுள்ளது.

இப்படி இன்னும் ராகி ஷாபூர், பாபா பன்னீர் பாட்ஷா என்ற ஆன்மீக குருவின் கும்பாத் எனப்படும் கல்லறை, பார்சி நுழைவாயில், டெல்லி நுழைவாயில், ஹிசார் நுழைவாயில், கோசைன் நுழைவாயில் மற்றும் உம்ரா நுழைவாயில், ப்ரித்விராஜ் கோட்டை, தர்கா சார் குதாப் எனப்படும் உயர்வேலைசமாதி வளாகம், ஃபெரோஸ் ஷா மாளிகை முதலிய சுற்றுலாத் தளங்களை காணமுடியும்.
hisar.gov.in

ரேவாரி

ரேவாரி

ஹிசாரிலிருந்து தொலைவு - 174 கிமீ

பயண நேரம் - 2 மணிகள் 50 நிமிடங்கள்

சிறப்பு - இந்தியாவின் கடைசி இந்து அரசாட்சி

ஹவேலி என்றழைக்கப்படும் இவர் வாழ்ந்த மாளிகை இன்னமும் கூட இந்த நகரத்தில் உள்ள குதப்பூர் என்ற இடத்தில் உள்ளது. இவர் காப்பர் தகடுகள், பாத்திரங்கள் மற்றும் பித்தளை போன்ற உலோக பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு இவர் வாழ்ந்த காலத்திலேயே அடித்தளம் நாட்டினார். இப்போதும் கூட இவ்வூர் இந்த தொழிற்சாலைகளுக்காக புகழ் பெற்று விளங்குகிறது.

ரேவாரி ஹரியானாவில் உள்ள குர்கான் மாநகராட்சியின் ஒரு பகுதியாக விளங்கியது. பின்னர் 1989 வரை மகேந்திரகர்ரின் ஒரு பகுதியாக இருந்தது. அதற்கு பின்னரே இது தனி மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது.

சுற்றியுள்ள சுற்றுலாத் தளங்கள்

ரேவாரியிலுள்ள ரேவாரி ஹெரிடேஜ் ஸ்டீம் லோகோமோடிவ் அருங்காட்சியகம் தான் அங்குள்ள முக்கியமான ஈர்ப்பாகும். இந்த இடம் 1893-ஆம் கட்டப்பட்டதாகும். இந்தியாவிலேயே இந்த ஒரு அருங்காட்சியகத்தில் மட்டும் தான் பல மைல் தூரம் பயணம் செய்த சில ஸ்டீம் எஞ்சின்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன.

சொஹ்னா

சொஹ்னா

ஹிசாரிலிருந்து தூரம் - 196 கிமீ

பயண நேரம் - 3 மணி 20 நிமிடங்கள்

சிறப்பு - இயற்கையின் பச்சை குழம்பு

சொஹ்னா என்ற நகரம் ஹரியானாவில் உள்ள குர்கான் மாநகராட்சியில் அமைந்துள்ள ஒரு நகராட்சி செயற்குழுவாகும். சொஹ்னா என்ற இந்த சிறிய நகரம் ஒரு புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குகிறது, முக்கியமாக வார இறுதி நாட்களில் பயணம் செய்பவர்களுக்கு. இது குர்கானிலிருந்து அல்வாருக்கு செல்லும் நெடுஞ்சாலையில் 24 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

சொஹ்னா என்ற நகரம் ஹரியானாவில் உள்ள குர்கான் மாநகராட்சியில் அமைந்துள்ள ஒரு நகராட்சி செயற்குழுவாகும். சொஹ்னா என்ற இந்த சிறிய நகரம் ஒரு புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குகிறது, முக்கியமாக வார இறுதி நாட்களில் பயணம் செய்பவர்களுக்கு. இது குர்கானிலிருந்து அல்வாருக்கு செல்லும் நெடுஞ்சாலையில் 24 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.


சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்

ஆரவல்லி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது சொஹ்னா நகரம், இங்குள்ள வெந்நீர் ஊற்று மற்றும் பழங்கால சிவன் கோவிலுக்காக புகழ் பெற்று விளங்குகிறது. இங்கு ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் கங்காஸ்நான் என்ற திருவிழா கொண்டாடப்படுகிறது. அதோடு மற்றொரு திருவிழாவான டீஜ் திருவிழா ஒவ்வொரு வருடமும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதம் நடத்தப்படுகிறது. மலை மீது இருக்கும் ஒரு பெரிய பூங்காவும் இங்கிருக்கும் மற்றொரு முக்கிய ஈர்ப்பாகும்.

அழகிய இயற்கை சூழலுடன் உள்ள டம்டமா ஏரியும் இங்கு புகழ் பெற்ற ஒரு சுற்றுலாத் தலமாகும். இங்கு படகு சவாரி செய்தபடியே இயற்கை அழகை ரசிக்கலாம். மேலும் பிப்ரவரி மாதம் இங்கு நடத்தப்படும் விண்டேஜ் கார்களின் ஊர்வலம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வண்ணம் இருக்கும்.

Ekabhishek

 நர்னோல்

நர்னோல்

தொலைவு - 160 கிமீ

பயண நேரம் - 2 மணி 34 நிமிடங்கள்

ஹரியானாவின் மஹேந்தர்கார்ஹ் மாவட்டத்தில் உள்ளது வரலாற்றுப் புகழ்பெற்ற நர்னோல் நகரம். மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இந்நகரத்தில் தான் அக்பரின் நவரத்ன அமைச்சர்களில் ஒருவரான பீர்பால் பிறந்ததாக நம்பப்படுகிறது. முகாலய சாம்ராஜியத்தையே உலுக்கிய பெர்சிய மன்னர் ஷெர்ஷா சூரி இங்கு பிறந்ததாகச் சொல்கிறார்கள். வரலாற்று மற்றும் புராண முக்கியத்துவங்களுக்கு அப்பாற்ப்பட்ட சாவன்பிராஷ் என்ற ஆயுர்வேத கலவை உருவான இடம் என்ற பெருமையும் நர்னோலிற்கு உண்டு.

சுற்றுலாத் தளங்கள்

தோசி ஹில் எனப்படும் அணைந்த எரிமலை புகழ்பெற்ற சுற்றுலா தளமாக விளங்குகிறது. பயணிகள் இன்னமும் இங்கு எறி கற்குழம்பைக் காணலாம். அதுமட்டுமல்லாது இங்கிருக்கும் வேத காலத்து ஆசிரமமான சவ்யான் ரிஷி ஆசிரமமும் புகழ்பெற்று விளங்குகிறது. இம்மலையில் அடிவாரத்தில் உள்ள சாமுண்டா தேவி கோவிலின் இடத்தின் முகாலயர்கள் காலத்தின் ஒரு மசூதி கட்டப்பட்டது. பின் சுதந்திரத்திற்கு பிறகு தோண்டியெடுக்கப்பட்ட இக்கோவிலுக்கு வருடம் முழுதும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.

archaeologyharyana.nic.in

பானிபட்

பானிபட்


தூரம் 141 கிமீ

பயண நேரம் 2 மணி 30 நிமிடங்கள்

வரலாற்றுச் சிறப்பு மட்டுமல்லாமல், 'நெசவாளர்களின் நகரம்' என்றும் பானிபட் அழைக்கப்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தியாகும் கைத்தறி பொருட்கள் இந்தியாவின் பிற பகுதிகள் மற்றும் அயல் நாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன.

சுற்றுலாத் தளங்கள்

இந்தியாவின் பிற நகரங்களைப் போலவே பானிபட்டிலும் பல்வேறு மதம் தொடர்பான தலங்கள் உள்ளன. முகலாய வம்சத்தை நிறுவியவரான பாபரால் கட்டப்பட்ட காபுலி ஷா மசூதி என்ற பழமையான மசூதி பானிபட்டில் உள்ளது. தேவி கோவில் என்ற பெயரில் இருக்கும் இந்து மத கோவிலும் கட்டிடக்கலையின் சிறப்புகளை பெற்றுள்ள இடமாக உள்ளது.
commons.wikimedia.org

 குருக்ஷேத்ரா

குருக்ஷேத்ரா

தூரம் 164 கிமீ

பயண நேரம் 2 மணி 55 நிமிடங்கள்

குருக்ஷேத்ரா எனும் பெயர் ‘தர்மபூமி' எனும் பொருளை உணர்த்துவதாக கூறப்படுகிறது. பரத வம்சத்தை சேர்ந்த ‘குரு' ஆண்ட மண் என்பதால் குருஷேத்திரம் என்ற பெயர் வந்திருக்கிறது. அந்த பரத வம்சத்தில் உதித்த பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே நிகழ்ந்த உக்கிரமான போர் இந்த ஸ்தலத்தில்தான் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது.

சுற்றுலாத் தளங்கள்

புராதன பின்னணி கொண்ட குருக்ஷேத்ரா நகரில் பல்வேறு ஆன்மீக ஸ்தலங்கள் அமைந்திருக்கின்றன. இங்குள்ள பிரம்மசரோவர் தீர்த்தக்குளம் வருடாவருடம் அதிகமான யாத்ரீகர்களை ஈர்க்கும் முக்கியமான அம்சமாக வீற்றிருக்கிறது. சூரிய கிரகண நாளில் இந்த ஸ்தலத்திற்கு அதிகமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த புனித குளத்தில் நீராடினால் மன நிம்மதி கிட்டும் என்பதாக நம்பப்படுகிறது. மறைந்துபோன மூதாதையர் மற்றும் குடும்பத்தினர் பெயரில் பிண்டதானம் செய்வதற்கான சடங்கு ஸ்தலமாகவும் இது அறியப்படுகிறது.
commons.wikimedia.org

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X