» »சிறையிலிருந்து நினைத்த நேரத்திற்கு சசிகலா வெளியில் எங்கு செல்கிறார் தெரியுமா?

சிறையிலிருந்து நினைத்த நேரத்திற்கு சசிகலா வெளியில் எங்கு செல்கிறார் தெரியுமா?

Posted By: Udhaya

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் குற்றவாளி சசிகலா ஜாலியாக வெளியே போய் விட்டு எந்த பதற்றமுமின்றி சிறைக்குள் மீண்டும் வருவதாக வீடியோ வெளியாகியுள்ளது..

சசிகலா அப்படி சிறையிலிருந்து எங்குதான் செல்கிறார் என்பது போன்ற பேச்சுக்கள் சமூக வலைத்தளங்களில் வந்துகொண்டிருக்கின்றன.

இதுகுறித்து அதிகாரிகள் யாரும் அதிகாரப்பூர்வமாக அறிக்கை எதுவும் வெளியிடவில்லை. ஏற்கனவே இதுகுறித்து நடவடிக்கை எடுத்த காவல் அதிகாரி வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது நாம் அறிந்ததே.

ஒருவேளை சசிகலா சிறையிலிருந்து வெளியில் சென்று வந்தால் எங்கெல்லாம் சென்றிருக்கலாம் என்பது குறித்து பார்க்கலாம் வாருங்கள்.

ஷாப்பிங்

ஷாப்பிங்

சசிகலா சிறையிலிருந்து வெளியில் சென்று ஷாப்பிங் செய்துவருகிறார் என்பதுபோன்று வீடியோ வெளியாகி வருகிறது. உண்மையில் சசிகலா எங்கெல்லாம் சென்றிருக்க சாத்தியம் எனும் இடங்களைப் பற்றி பார்ப்போம்.

போரஃம் மால்

போரஃம் மால்

பெங்களூருவின் மிக முக்கியமான ஒரு மால் இந்த போரஃம் மால் ஆகும். தமிழக - கர்நாடக எல்லையான ஓசூருக்கு செல்லும் சாலையில் அமைந்துள்ளது இந்த மால்.

கோரமங்களா எனப்படும் நகரத்துக்கு அருகில் அரைமணி நேரத் தொலைவில்தான் சசிகலா தங்கியுள்ள பரப்பர அக்ரகாரம் அமைந்துள்ளது. இதனால் இங்கு சென்றிருக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

மேலும், இது பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதி என்பதாலும், சசிகலாவை பெரும்பாலும் யாருக்கும் அவ்வளவாக அறிமுகம் இல்லாததாலும், எளிதாக சென்றுவர வாய்ப்புக்கள் மிக அதிகம்.

Augustus Binu

 கருடா மால்

கருடா மால்

பெங்களூருவின் மற்றொரு மிக முக்கியமான மால் என்றால் அது கருடா மால் ஆகும். மெக்ராத் சாலையில் அமைந்துள்ள இந்த மால் மிகவும் புகழ்பெற்ற மால் ஆகும். மே 2005 ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த இடம் 126000 சதுரஅடி பரப்பு கொண்டது.

பரப்பன அக்ரகாராவிலிருந்து 45 நிமிடத்துக்குள் வந்துவிடலாம் என்பதால் இங்கேயும் சசிகலா வந்து சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

wiki

 யுபி சிட்டி

யுபி சிட்டி


பெரும்பணக்காரர்கள் அடிக்கடி செல்லும் இடங்களில் ஒன்றான இந்த இடம் கிட்டத்தட்ட பெங்களூரு நகரத்தின் மையத்தில் அமைந்துள்ளது.

பிரிஸ்டீஜ் குழுமத்தின் இணை கூட்டில் உருவான இடம் இது. இதன் உரிமையாளர் யுபி குழுமம்.

13 ஏக்கரில் அமைந்துள்ள இந்த இடம் ஷாப்பிங் செல்வதற்கு முக்கியமான இடமாகும். இதனால் சசிகலா இங்கு சென்றிருக்க வாய்ப்பிருக்கிறது.

wiki

 மாந்திரி மால்

மாந்திரி மால்


பரப்பன அக்ரகாராவிலிருந்து 1 மணி நேரத் தொலைவில் அமைந்துள்ள இந்த மால் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு எப்பவும் கூட்டம் அலைமோதும்.

இந்த மால் அமைந்துள்ள இடம் மல்லேஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவின் மிக பெரிய மால்களில் இந்த மாந்திரிமாலும் ஒன்று.

Wiki

 பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி

பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி

இதுவும் பெங்களூருவின் பெரிய மால்களுள் ஒன்று. மகாதேவபுரத்தில் அமைந்துள்ள இந்த மால் 1400000 சதுர அடி பரப்பு கொண்டது.

இங்கு 270 கடைகளும் , 9 திரைகள் கொண்ட ஒரு திரையரங்கமும் உள்ளன.

பரப்பன அக்ரகாரத்திலிருந்து 1 மணி நேரத் தொலைவில் அமைந்துள்ள இந்த மால் சசிகலா வந்து செல்வதற்கு ஏற்புடைய இடமாக இருப்பதாக சமூக வலைத் தளங்களில் கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.

Onlinemak

 ஓரியன் மால்

ஓரியன் மால்


ஓரியன் மால் சற்று தொலைவில் இருப்பதால் அங்கு சசிகலா செல்வதற்கு வாய்ப்பு குறைவு என்று சொல்லப்பட்டாலும், சிறையிலிருந்தே வெளி வருபவருக்கு இது என்ன அவ்வளவு கடினமா என்பது போன்று சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்படுகிறது.

oyvipu

 லால் பாக், பெங்களூர்

லால் பாக், பெங்களூர்

சிறையில் தங்க மனமில்லாமல் சசிகலா பூங்காக்களுக்கும் செல்ல வாய்ப்பிருப்பதாக சமூக வலைத்தளங்களில் நகைச்சுவைக்காக எழுதி வருகின்றனர். அப்படி இருக்கும் இடங்களில் ஒன்றுதான் லால் பாக்.

 லால் பாக், பெங்களூர்

லால் பாக், பெங்களூர்


பெங்களூரின் தெற்குப்பகுதியில் புகழ்பெற்ற இந்த லால் பாக் தாவரவியல் பூங்கா (botanical garden) என்றழைக்கப்படும் பிரமாண்ட பூங்காத்தோட்டம் (பார்க்)அமைந்துள்ளது. லால் பாக் என்றால் ‘சிவப்பு தோட்டம்' என்பது பொருள். இந்த பூங்காத்தோட்டமானது புகழ் பெற்ற முகலாய தோட்டங்களை போன்று அமைக்கும் நோக்கத்துடன் ஹைதர் அலியால் துவங்கப்பட்டு அவரது மகன் திப்புசுல்தானால் முழுதும் உருவாக்கி முடிக்கப்பட்டது.

 பெங்களூரு பன்னாட்டு விமான நிலையம்

பெங்களூரு பன்னாட்டு விமான நிலையம்

சிலர் சசிகலா தனி விமானத்தில் சென்னை சென்றுவருவதாகவும் எழுதி வருகின்றனர். உண்மையில் அவர் சென்றாரா இல்லையா என்பது தெரியாவிட்டாலும், நடக்கும் சம்பவங்களும், வெளியாகும் வீடியோக்களும் சமூக வலைத்தளத்தில் இப்படி ஒரு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. கண்ணா இது எல்லாம் ஜூஜூபிதான்.. சசிகலாவுக்கு இருக்கும் செல்வாக்குக்கு ... விடுங்க நமக்கு எதுக்கு வம்பு.. பெங்களூருல என்னலாம் பண்ணலாம் தெரியுமா

Read more about: travel

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்