Search
  • Follow NativePlanet
Share
» »சேலத்தில் நீங்கள் கட்டாயம் சுற்ற வேண்டிய இடங்கள் எவை தெரியுமா?

சேலத்தில் நீங்கள் கட்டாயம் சுற்ற வேண்டிய இடங்கள் எவை தெரியுமா?

சேலத்தில் நீங்கள் கட்டாயம் சுற்ற வேண்டிய இடங்கள் எவை தெரியுமா?

சேலம் மாவட்டம் சுற்றுலாவுக்கு சிறந்ததாகும். இங்கு சுற்றிப்பார்க்க பல இடங்கள் உள்ளன. இந்த மாதம் வெய்யில் குறைவாகும். மேலும் மழை காலம் என்பதால் அருகிலுள்ள மாவட்டங்களிலிருந்து வரும் நீர் இங்குள்ள நீர்நிலைகளை வளமாக்கும். காண்பதற்கு கண்ணுக்கினியதாக இருக்கும்.

புறாவுடன் பயணம்

புறாவுடன் பயணம்


நம்மைப் போல சிந்தித்த பயணி ஒருவர் தன் ஆசை ஆசையாக வளர்த்த புறாவை தன்னுடன் பேருந்தில் அழைத்துச் சென்றுள்ளார். இதனால் அந்த பேருந்தின் நடத்துனருக்கு மெமோ கொடுக்கப்பட்டுள்ளது. அட ... எதுக்குனு தெரியுமா? முழு கதையும் கேளுங்க..

 சோதனை

சோதனை

பேருந்தை மறித்து ஏறிய டிக்கெட் பரிசோதகர்கள், புறாவுக்கு அவர் டிக்கெட் வாங்கியுள்ளாரா என கேட்க, நடத்துனர் இல்லை என பதில் அளித்துள்ளார்.

Surya Prakash.S.A

 புறாவுக்கு போரா

புறாவுக்கு போரா

அரசு பேருந்தில் பயணம் செய்யும் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் மனிதர்களுக்கு கொடுக்கும் டிக்கெட் விலையில் நான்கில் ஒரு பங்கு கட்டணம் வசூலிக்க வேண்டும் என விதி உள்ளது தெரியாதா என கூறி, நடத்துனருக்கு மெமோ கொடுத்துள்ளனர்.

Lijorijo

 சுற்றுலா செல்ல

சுற்றுலா செல்ல

இப்படி விசித்திரமான ஒரு நிகழ்வு நடந்திருக்கும் இடம் குறித்து நீங்க தெரிஞ்சிக்கவேண்டாமா? கண்டிப்பா தெரிஞ்சிக்கணும். நீங்க இந்த மாதம் சுற்றுலா செல்ல சேலம் மிக அருமையான இடம்.

தகவலுழவன்

 பரவச உலகம்

பரவச உலகம்

இது சேலம் மாவட்டத்தில் உள்ள தீம் பார்க் ஆகும். இது சேலம் நகரிலிருந்து அரை மணி நேரத் தொலைவில் அமைந்துள்ளது.

 குரும்பப்பட்டி விலங்கியல் பூங்கா

குரும்பப்பட்டி விலங்கியல் பூங்கா

சேலம் மாநகரிலிருந்து 12 கிமீ தொலைவில் அமைந்துள்ளது குரும்பப்பட்டி விலங்கியல் பூங்கா. இது ஏற்காடு செல்லும் வழியில் உள்ளது. நகரிலிருந்து அரை மணி நேரத்தில் சென்றுவிடமுடியும். அரை நாள் முழுவதும் இங்கு செலவழிக்கலாம்.

 சுகவனேஸ்வரர் கோயில்

சுகவனேஸ்வரர் கோயில்

சேலம் மத்திய பேருந்து நிலையத்திலுருந்து வெறும் மூன்று கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த கோயில். மிகவும் சக்திவாய்ந்த கோயிலாக உள்ளூர் மக்களால் கருதப்படுகிறது. இந்த கோயிலுக்கு சென்று வந்தால் உடல் நலம் குறித்த தொல்லைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.

த*உழவன்

 அரசு அருங்காட்சியகம்

அரசு அருங்காட்சியகம்

சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் சாலையில் 2 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த அரசு அருங்காட்சியகம்.

அரியவகை சிலைகள், வரைபடங்கள், ஓவியங்கள், காணக்கிடைக்காத அரிய பொருட்கள் என வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

 பொய் மான் கரடு

பொய் மான் கரடு

சேலத்திலிருந்து திருச்சி செல்லும் வழியில் கிட்டத்தட்ட 9 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த பொய்மான் கரடு.

ஒரு மலைத்தொடரின் கிழக்கு பார்த்த குகை ஒன்று பார்ப்பதற்கு மான் ஒன்று நிற்பது போன்ற தோற்றத்தைத் தரும். இதனால்தான் பொய்மான் கரடு எனப்பெயர் வந்தது.

Surya Prakash.S.A.

ரயில்வே நடைமேடை

ரயில்வே நடைமேடை

இந்தியாவின் மிக நீளமான ரயில்வே நடைமேடை சேலத்தில்தான் உள்ளது.

Arunjothi -

Read more about: travel
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X