Search
  • Follow NativePlanet
Share
» »தோனிக்கு நிகரா ரிஷப் பண்ட்? இவரோட சொந்த ஊர கொஞ்சம் பாருங்க!

தோனிக்கு நிகரா ரிஷப் பண்ட்? இவரோட சொந்த ஊர கொஞ்சம் பாருங்க!

தோனிக்கு நிகரா ரிஷப் பண்ட்? இவரோட சொந்த ஊர கொஞ்சம் பாருங்க!

By IamUD

கூல் கேப்டன் தோனிக்கு நிகரா இந்த 21 வயது சிறுவன்.. இணையதளம் முழுக்க இதுதான் ஹாட் டாக். அட நேத்து நடந்த இந்தியா ஆஸ்திரேலியா மேட்ச்ல தல தோனிக்கு பதிலா விக்கெட் கீப்பிங் பண்ணவரு இவருதான். பேரு ரிஷப் பண்ட். மோசமான பீல்டிங்கால இந்தியா தோல்வியை தழுவிச்சி. அதுல அதிகமா கழுவி ஊத்தப்படுறது நம்ம பண்ட்தான். தோனிக்கு நிகரா ரிஷப் பண்ட்னு பேசறதுக்கு முன்னாடி நாம 21 வயசான இவரோட பிறந்த ஊர் பத்தி தெரிஞ்சிக்கணும்..

புண்ணிய பூமி

புண்ணிய பூமி

ஆம்.. அது ஒரு புண்ணிய பூமி.. ஹரித்வார் மாவட்டத்துலதான் ரிஷப் பண்ட் பிறந்துருக்காரு. இன்னிக்கு தோனிக்கு நிகரானு கேள்விக் கேட்கப்படும் ரிஷப் பண்ட்டோட சில சாதனைகளையும் அவரோட பிறந்த ஊரோட பெருமைகளையும் பாக்கலாம் வாங்க..

PratyushaAwasthi

அண்டர் 19 உலகக் கோப்பை

அண்டர் 19 உலகக் கோப்பை

2016ம் வருசம் அண்டர் 19 வேர்ல்ட் கப்ல இந்திய அணியில இடம்புடிச்சாரு ரிஷப் பண்ட். அப்ப ஒரு மேட்ச்ல 18 பந்துகள்ல 50 ரன்கள் அடிச்சி மிக வேகமான 50 ரன்களை கடந்த முதல் இந்தியர்னு பெருமை பெற்றாரு. இதுமாதிரி அவர பத்தி சொல்ல நிறைய விசயங்கள் இருக்கு.. அவரோட பிறந்த ஊர்ல என்னெல்லாம் இருக்கு பாக்கலாமா?

Fowler&fowler

கல்விக்கூடங்களின் ஆலமரம்

கல்விக்கூடங்களின் ஆலமரம்

ரூர்க்கி என்பது கல்விக்கூடங்களின் ஆலமரம் என்றே சொல்லலாம். அங்கு இருக்கும் ஐஐடியில் படிக்க இந்தியாவின் பெரும்பான்மையான மாணவர்கள் முயன்று கொண்டிருக்கின்றனர்.

Sanyam Bahga

எங்குள்ளது

எங்குள்ளது

புண்ணிய நகரமான ஹரித்வாரிலிருந்து 30 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.

ராஜபுத்ர அரசர் ஒருவரின் மனைவியில் பெயரால் ரூரி என்று அழைக்கப்பட்ட இந்த நகரம் பின் ரூர்க்கியாக அழைக்கப்படுகிறது.

Livefree2013

ஹர் கி பௌரி, ஹரித்வார்

ஹர் கி பௌரி, ஹரித்வார்


ஹரித்வாரின் இருக்கும் ஹர்-கி-பெளரி புகழ்பெற்ற புனிதனாம பிரம்ம குண்டமாக திகழ்கிறது. மலைகளில் இருந்து விழும் கங்கை இந்த இடத்திலிருந்து சமநிலைப்பகுதிகளுக்கு பாய்கிறது. இந்த இடத்தில் தியானம் செய்த தன் தம்பி ப்ரிதாரியின் நினைவாக மன்னர் விக்கிரமாதித்யர் இந்த பிரம்மகுண்டத்தை கட்டியதாக சொல்லப்படுகிறது

ஹர்-கி.பெளரியில் குளிப்பது பாவங்களைப் போக்குவவதாக பயணிகள் நம்புகிறார்கள். முடி காண்டிக்கை செலுத்தவும், இறந்தவர்களின் அஸ்தியைக் கரைக்கவும் இங்கு பக்தர்கள் குழுமுகிறார்கள். ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளா திருவிழாவைக் காண உலகெங்கும் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிகிறார்கள்.

Kanu 887

மானசா தேவி கோவில்

மானசா தேவி கோவில்

ஹரித்வாரில் இருந்து 3கிமீ தொலைவில் அமைந்திருக்கும் மானசா தேவி கோவில் புகழ்பெற்ற மதஸ்தலமாகும். காஷ்யப் என்ற பழங்கால துறவி ஒருவரின் அருளால் உருவானதே மானசா தேவி கோவில். நாகக் கடவுளான நாக வாசுகியின் மனைவியாக மானசா தேவி வணங்கப்படுகிறார். ஷிவாலிக் மலைகளில் உள்ள பில்வா பார்வத் பகுதியின் நுனியில் அமைந்திருக்கிறது மான்சா தேவி கோவில். இங்கிருக்கும் மானசா தேவியின் இரண்டு சிலைகளில் ஒன்றிற்கு ஐந்து கைகளும், மூன்று வாய்களும் மற்றொன்றிற்கு எட்டு கைகளும் அமைந்துள்ளது.

Ekabhishek

 உடன் கோட்டோலா

உடன் கோட்டோலா

பயணிகள் கேபிள் கார் மூலமாக குன்றின் மேல் அமைந்திருக்கும் கோவில்களுக்கு செல்லும் கயிற்று வழி உடன் கோட்டோலா என்றழைக்கப்படுகிறது. நடப்பதை விட, ஏறுவதை விட வேகமான, சொகுசான பயண முறையாக இது கருதப்படுகிறது. சண்டி தேவி கோவிலின் அருகாமையில் இந்த வழி ஆரம்பமாகிறது.

आशीष_भटनागर

பாரத மாதா கோவில்

பாரத மாதா கோவில்

இந்திய அன்னைக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள பாரத மாதா கோவில் ஹரித்வாரின் புகழ்பெற்ற சுற்றுலா தளங்களின் ஒன்றாகும். புகழ்பெற்ற மதகுருவான ஸ்வாமி சத்யமித்ரானந்த கிரி என்பவரால் பல இந்துக் கடவுள்களுக்கும், சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ள, எட்டு மாடிகள் கொண்ட இந்த கோவில் உருவாக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி, வீர் சாவர்க்கர், சுபாஷ் சந்திர போஸ் ஆகியோரின் சிலைகள் இந்த கோவிலில் உண்டு.

Pratap gaurav kendra udaipur

More News

    Read more about: haridwar
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+