Search
  • Follow NativePlanet
Share
» »அப்பப்பா! எடப்பாடிக்கு சொந்தமான இடங்களில் இத்தனை விசயங்கள் இருக்கா?

அப்பப்பா! எடப்பாடிக்கு சொந்தமான இடங்களில் இத்தனை விசயங்கள் இருக்கா?

அப்பப்பா! எடப்பாடிக்கு சொந்தமான இடங்களில் இத்தனை விசயங்கள் இருக்கா?

By IamUD

எடப்பாடி என்றவுடன் நம் நினைவுக்கு வருவது நம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்தான். எடப்பாடி என்பது சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஊர் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும். முதலமைச்சர் எடப்பாடிக்கு சொந்தமாக சேலம் மாவட்டம் முழுவதும் பல இடங்கள் இருக்கின்றன. வாருங்கள் அவற்றைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

நூறு மடங்கு அதிகரித்த சொத்துக்கள்

நூறு மடங்கு அதிகரித்த சொத்துக்கள்

2011ம் ஆண்டு மற்றும் 2016ம் ஆண்டுகளில் தேர்தலில் போட்டியிடும்போது எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அளித்த கணக்குப்படி மொத்த சொத்துக்களின் மதிப்பு நூறு சதவிகிதங்களுக்கும் மேல் அதிகரித்துள்ளது. இவர் சென்னை, கோவை மற்றும் சேலம் மாவட்டங்களில் பல வேளாண் நிலங்களும், கட்டிடங்களும் வைத்துள்ளார். இவருக்கு சொந்த மான இடங்களில் நாம் காணவேண்டிய பல இடங்களும் உள்ளன. வாருங்கள் அவற்றைப் பற்றியும் தெரிந்து கொள்வோம்.

Jaseem Hamza

அசுர வளர்ச்சிக்கு உதவும் பவானி சங்கமேஸ்வரர் கோவில்

அசுர வளர்ச்சிக்கு உதவும் பவானி சங்கமேஸ்வரர் கோவில்

தொழில் வளம் பெருகச் செய்யும் சங்கமேஸ்வரர் கோவில் எடப்பாடி பகுதிக்கு அருகிலேயே அமைந்துள்ளன.

இது ஒரு சக்தி வாய்ந்த சிவன் கோவில் ஆகும்.

பவானி ஆறு, காவிரி ஆறு மற்றும் சரஸ்வதி ஆறு ஆகியவை இணையும் இடத்தில் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

Ssriram mt

பரிகாரத்தலம்

பரிகாரத்தலம்


இந்த இடம் மிகச் சிறந்த பரிகாரத்தலமாக காணப்படுகிறது. ராமேஸ்வரத்துக்கு நிகரான பரிகாரத் தலமாக இந்த இடம் விளங்குவதால் இங்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகளும் பக்தர்களும் வருகை தருகின்றனர்.

Ssriram mt

குளித்து மகிழ

குளித்து மகிழ

இந்த கோவிலின் அருகிலேயே ஒரு இடம் குளித்து மகிழுமாறு அமைந்துள்ளது. இங்கு பக்தர்கள் பலர் வந்து குளித்த தங்கள் பாவம் போக்கியதாக நம்புகின்றனர். இங்கு ஒரு படகு சவாரியும், குளியலும் உங்கள் பயணத்தை புத்துணர்வாக்கும்.

Ssriram mt

ஈரோடு கோட்டை

ஈரோடு கோட்டை

இந்தியாவின் மிகப் பெரிய மண் கோட்டையாக விளங்கியிருக்கலாம் என்பது பிரான்ஸ் பயணி ஒருவரின் குறிப்பிலிருந்து அறிய முடிகிறது. ஈரோட்டில் அமைந்துள்ளதால் இது ஈரோடு கோட்டை என்று அழைக்கப்படுகிறது.

மீடோஸ் காலத்தில் இந்த கோட்டை முற்றிலும் அழிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இது இப்போது பார்ப்பதற்கு சாதாரண பகுதி மாதிரி இருந்தாலும் இந்த இடத்தில் கோட்டை இருந்ததற்கான அடையாளங்களும் காணப்படுகின்றன.

Sheba

 திண்டமலை முருகன் கோவில்

திண்டமலை முருகன் கோவில்

திண்டல் முருகன் கோவில் அல்லது அருள்மிகு வேலாயுதசாமி திருக்கோவில் மிகவும் சக்தி வாய்ந்த கோவில் ஆகும்.

கொங்கு நாட்டு ஆலைய அமைப்பில் தனிப்பட்ட ஒரு அமைப்பு போன்று தீப கம்பம் ஒன்றை வெளியில் நிறுத்தி கட்டப்பட்டது போன்று காட்சி தரும் இந்த கோவில் கார்த்திகை தீபத்துக்கு மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது. அன்றைய தினத்தில் இந்த கோவிலுக்கு வந்தால் பொன்னும் பொருளும் கிடைத்து வாழ்க்கை வளம் பெரும்.

Ssriram mt

எப்படி செல்வது

எப்படி செல்வது

இது ஈரோட்டிலிருந்து பெருந்துறை செல்லும் வழியில் 8 கிமீ தொலைவில் திண்டல் எனும் மலையில் அமைந்துள்ளது.

இந்த மலையில் அமைந்துள்ள கோவில் 60 மீட்டர் உயரத்தில் பல மரங்கள் நிறைந்து காணப்படுகிறது.

Ssriram mt

ஏற்காடு

ஏற்காடு

தமிழ்நாட்டின் சேர்வராயன் மலையில் அமைந்துள்ள ஏற்காடு, கிழக்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள ஒரு மலை வாசஸ்தலம் ஆகும். 1515 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இதன் அசரவைக்கும் கண்ணுக்கினிய அழகு மற்றும் இதமான வானிலை பல சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது. ஊட்டி போன்ற மற்ற பிரபல மலை வாசஸ்தலங்களுடன் ஒப்பிடும்போது இங்கு பல விஷயங்கள் மிக மலிவாக இருப்பதால் ஏற்காடு 'ஏழையின் உதகமண்டலம்' என்று குறிப்பிடப்படுகிறது.

Riju K

ஏற்காட்டில் என்னவெல்லாம் காணலாம்

ஏற்காட்டில் என்னவெல்லாம் காணலாம்


ஏற்காட்டில் உள்ள காடுகளில் சந்தனம் , தேக்கு மற்றும் வெள்ளி கருவாலி மர வகைகள் மிகுதியாக காணப்படுகின்றன. மேலும் காட்டெருமை, மான், நரிகள், கீரிபிள்ளைகள், பாம்புகள், அணில்கள் போன்ற விலங்கு வகைகளும், பறவை இனங்களான புல்புல், கருடன், சிட்டு குருவி மற்றும் ஊர்குருவி வகைகள் இங்குள்ள காடுகளில் காணப்படுகின்றன.

rajaraman sundaram

 கோடை விழா

கோடை விழா

இடங்களை சுற்றி பார்ப்பது மட்டுமல்லாமல் சுற்றுலா பயணிகள் ஏற்காட்டை சுற்றிலும் மலையேற்றத்திலும் ஈடுபடலாம். மே மாதத்தில் இங்கு வர நேர்ந்தால் இங்கு நடை பெறும் கோடை திருவிழாவை தவற விட்டு விட கூடாது. இத்திருவிழாவில் நடைபெறும் படகு போட்டி, மலர் கண்காட்சி மற்றும் நாய்களின் கண்காட்சி முதலியன கண்களுக்கு விருந்தாக இருக்கும். வரலாற்று ஆர்வலர்களுக்கும் ஏற்காட்டில் ஒரு சில வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் இருக்கின்றன.

rajaraman sundaram

Read more about: tamil nadu salem
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X