Search
  • Follow NativePlanet
Share
» »மலம்புழா பாம்பு தோட்டத்தில் அழகிய விசிட்

மலம்புழா பாம்பு தோட்டத்தில் அழகிய விசிட்

மலம்புழா தோட்டம் மற்றும் அணையிலிருந்து வெகு அருகிலேயே அமைந்திருக்கும் ஸ்நேக் பார்க், ஒரு ஊர்வன மறுவாழ்வு மையமாக செயல்பட்டு வருகிறது. இந்தப் பூங்காவில் காணப்படும் பல்வேறு இனங்களை சேர்ந்த விஷ மற்றும் வி

By Udhaya

மலம்புழா தோட்டம் மற்றும் அணையிலிருந்து வெகு அருகிலேயே அமைந்திருக்கும் ஸ்நேக் பார்க், ஒரு ஊர்வன மறுவாழ்வு மையமாக செயல்பட்டு வருகிறது. இந்தப் பூங்காவில் காணப்படும் பல்வேறு இனங்களை சேர்ந்த விஷ மற்றும் விஷமற்ற பாம்புகள் வனத்துறையினரின் கட்டுபாட்டில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் ஊரவன் மீட்பு மையமாக செயல்பட்டு வரும் இந்த பூங்காவுக்கு காயம்பட்ட எத்தனையோ பாம்புகள் கொண்டுவரப்படுகின்றன. வாருங்கள் மலம்புழா பாம்பு பண்ணைக்கு ஒரு பயணம் போய்ட்டு வரலாம்.

எங்குள்ளது

எங்குள்ளது

இந்த பாம்பு பூங்காவானது மலம்புழா அணை மற்றும் மலம்புழா தோட்டம் ஆகியவற்றுக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த பூங்காவில் அதிக அளவில் பாம்புகள் வளர்க்கப்பட்டு, காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

malampuzhadam.com

 எப்படி செல்வது

எப்படி செல்வது

மலம்புழா நகரம் தமிழ்நாடு மற்றும் கேரள நகரங்களுடன் சாலை மூலமாக நன்றாக இணைக்கப்பட்டிருக்கிறது. அதோடு சென்னை, கோயம்பத்தூர், பெங்களூர் போன்ற நகரங்களிலிருந்து பாலக்காடு நகருக்கு ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. எனவே பயணிகள் பாலக்காடு நகரை அடைந்த பிறகு பேருந்துகள் அல்லது வாடகை கார்கள் மூலம் எந்த சிரமமுமின்றி மலம்புழா நகரை வந்தடையலாம்.

மலம்புழா நகருக்கு வெகு அருகிலேயே பாலக்காடு ரயில் நிலையம் அமைந்திருக்கிறது. இந்த ரயில் நிலையம் நாட்டின் முக்கிய நகரங்களுடன் நன்றாக இணைக்கப்பட்டிருக்கிறது. எனவே பயணிகள் இந்த ரயில் நிலையத்தை அடைந்த பிறகு வாடகை கார்கள் அல்லது பேருந்துகள் மூலம் வெகு சுலபமாக மலம்புழா நகரை அடைந்து விடலாம்.

மலம்புழா நகரின் அருகாமை விமான நிலையமாக 55 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் கோயம்பத்தூர் விமான நிலையம் அறியப்படுகிறது. அதோடு மலம்புழா நகரிலிருந்து 160 மற்றும் 110 கிலோமீட்டர் தொலைவில் கொச்சி பன்னாட்டு விமான நிலையமும், கோழிக்கோடு சர்வதேச விமான நிலையமும் அமைந்திருக்கின்றன. இந்த விமான நிலையங்களிலிருந்து பயணிகள் மலம்புழா நகரத்தை வாடகை கார்கள் மூலம் சுலபமாக அடையலாம். மேலும் கோயம்பத்தூர், கொச்சி, கோழிக்கோடு ஆகிய மூன்று நகரங்களிலிருந்தும் தினசரி பேருந்துகள் மலம்புழா நகருக்கு இயக்கப்படுகின்றன.

malampuzhadam.com

அறிமுகம்

அறிமுகம்

மலம்புழா தோட்டம் மற்றும் அணையிலிருந்து வெகு அருகிலேயே அமைந்திருக்கும் ஸ்நேக் பார்க், ஒரு ஊர்வன மறுவாழ்வு மையமாக செயல்பட்டு வருகிறது. இந்தப் பூங்காவில் காணப்படும் பல்வேறு இனங்களை சேர்ந்த விஷ மற்றும் விஷமற்ற பாம்புகள் வனத்துறையினரின் கட்டுபாட்டில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் ஊரவன் மீட்பு மையமாக செயல்பட்டு வரும் இந்த பூங்காவுக்கு காயம்பட்ட எத்தனையோ பாம்புகள் கொண்டுவரப்படுகின்றன.

malampuzhadam.com

என்னென்ன பாம்புகள்

என்னென்ன பாம்புகள்

1984-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பாம்பு பூங்காவில் ராஜ நாகம், பழுப்பு வைன் பாம்பு, கட்டுவிரியன், நல்ல பாம்பு, கண்ணாடி விரியன், ஓநாய் பாம்பு,வெள்ளை நாகம், கோப்ரா, பாரஸ்டன் கேட் பாம்பு, பாண்டட் குக்ரி, சிலான்கேட், நாய்முக பாம்பு, காமன் கிராய்ட், கறுப்பு நாகம், ரஸல் வைப்பர், இந்திய பாறைப் பாம்பு, தங்க மர பாம்பு, நரி பாம்பு உள்ளிட்ட பாம்பு இனங்களை நீங்கள் இங்கு கண்டு ரசிக்கலாம். மேலும் இந்தப் பூங்காவில் தண்ணீர் பாம்புகள் மற்றும் முதலைகளும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

malampuzhadam.com

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

மலம்புழா அணை

மலம்புழா தோட்டம்

ரோப்வே

பாம்பு பாதுகாப்பு பகுதி

நன்னீர் மீன் வளர்ப்பு மையம்

குழந்தைகள் பூங்கா

ஜப்பானியர்களின் தோட்டம்

பாறைத் தோட்டம்

malampuzhadam.com

Read more about: travel
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X