Search
  • Follow NativePlanet
Share
» »உங்கள் காதலியுடன் ஒரே நாளில் சென்று வரக்கூடிய 5 ரொமாண்டிக்கான இடங்கள்

உங்கள் காதலியுடன் ஒரே நாளில் சென்று வரக்கூடிய 5 ரொமாண்டிக்கான இடங்கள்

உங்கள் காதலியுடன் ஒரே நாளில் சென்று வரக்கூடிய 5 ரொமாண்டிக்கான இடங்கள்

By Udhaya

காதல் எல்லார் வாழ்விலும் வரக்கூடிய அற்புதமான உணர்வு. அதுவும் ஒவ்வொருத்தரும் அந்த அனுபவத்தை நினைத்து பார்த்து வாழ்நாள் முழுவதும் மகிழ்வார்கள். சிலருக்கு காதலித்த பெண்ணே மனைவியாக கிடைப்பார். இன்னும் சிலருக்கு சந்தர்ப்பங்களும் சில திருப்பங்களும் வாழ்வில் இன்னொரு பெண்ணை சந்திக்க செய்து சித்து விளையாட்டை காட்டி விடுகிறது. ஆனால் காதலிக்கும்போது மகிழ்வதைப் போல வேறெப்போதும் கிடைக்காது அந்த அனுபவங்கள். உங்கள் காதல் வீட்டில் இன்னும் தெரியவில்லை என்றால் உங்களுக்கு இருக்கும் பிரச்சனை குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் அவர்களுடன் சுற்றுலா செல்லமுடியாது. சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் அதிகம் பயணம் செய்திருப்பீர்கள் ஆனால் உங்களுக்கு வெளி இடங்களைப் பார்க்கவும் ஆசை இருக்கும். அப்படி ஆசைப்படும் உங்களுக்காக ஒரே நாளில் சென்று வரும் ரொமேன்டிக்கான அழகிய சுற்றுலாத் தளங்களும், சென்று வரும் திட்டங்களும் பற்றி தெரிஞ்சிக்க இந்த பதிவ முழுசா படிங்க....

 வர்க்கலா கடற்கரை

வர்க்கலா கடற்கரை


இதுவும் திருவனந்தபுரம் அருகே இருக்கும் கடற்கரைதான். காதலர்கள் கூட்டம் நிரம்பி வழியும் இடம். இங்கு வருவதற்கும் கிட்டத்தட்ட கோவளம் வரும் அதே முறைதான்.

இந்த இடம் குறித்த சில தகவல்கள்

எங்கே இருக்கிறது - திருவனந்தபுரம் அருகில்

தொலைவு - திருவனந்த புரத்திலிருந்து 40 கிமீ

பயண நேரம் - அதிக பட்சம் 1.30 மணி நேரம்

எப்படி அடைவது

விமானம் மூலமாக

அருகிலுள்ள விமான நிலையம் - திருவனந்தபுரம்

தொலைவு - 40 கிமீ

இந்த விமான நிலையம் சர்வதேச விமான நிலையம் என்பதால் உலகின் பல நாடுகளுடனும், இந்தியாவின் பல நகரங்களுடனும் இணைப்பில் உள்ளது.

ரயில் மூலமாக

அருகிலுள்ள ரயில் நிலையம் - வர்க்கலா ரயில் நிலையம்

தொலைவு - 1 கிமீ

இந்த ரயில் நிலையம் இந்தியாவின் பல நகரங்களுடனும் இணைப்பில் உள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, நாகர்கோவில், திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அடிக்கடி ரயில்கள் இருக்கின்றன.

நாகர்கோவிலிலிருந்து திருவனந்தபுரம் 2 மணி நேர பயணத்தில் எட்டும் தொலைவில் அமைந்துள்ளது.

சுயவாகனத்தில் பயணித்தால்.....

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் அருகிலுள்ள சுற்றுலா பயணிகள் எளிதில் இந்த கடற்கரைக்கு வருகை தரலாம்.

கன்னியாகுமரியிலிருந்தும், திருவனந்தபுரத்திலிருந்தும் வருவது மிகவும் எளிது.

காலை 8 மணிக்கு புறப்பட்டாலும் அதிக பட்சம் திருநெல்வேலியிலிருந்து 4.30 மணி நேரத்திலும், தூத்துக்குடியிலிருந்து 5.30 மணி நேரத்திலும், கன்னியாகுமரியிலிருந்து 4 மணி நேரத்திலும் வந்தடையலாம்.

இங்கு வந்து ஓரிரு மணிகள் பொழுதை கழித்துவிட்டு போவது புதிதாய் காதலிப்பவர்களுக்கும், புதியதாக திருமணம் ஆனவர்களுக்கும் மிகச் சிறப்பாக இருக்கும். உங்கள் மனம் விட்டு பேச ஏதுவானதாக இருக்கும்.

 கோவளம்

கோவளம்


இது சென்னை அருகே இருக்கும் கோவளம் அல்ல. அதே நேரத்தில் சென்னையிலிருந்து வருவதற்கு கொஞ்சம் சிரமம்தான். என்றாலும் மதுரைக்கு தெற்கில் இருக்கும் காதல் இணையர்கள் எளிதாக வந்து செல்ல ஏற்ற இடம் கோவளம்.

ஆம் இந்த கோவளம் திருவனந்தபுரத்தில் இருக்கிறது. மழை மற்றும் குளிர்காலத்தில் அதிக அளவு மக்கள் இங்கு வருகை தருகிறார்கள். காதல் ஜோடிகளைக் கொஞ்சும் அன்பு நிறைந்த அழகிய இடம் இது..

இந்த இடம் குறித்த சில தகவல்கள்

எங்கே இருக்கிறது - திருவனந்தபுரம் அருகில்

தொலைவு - திருவனந்த புரத்திலிருந்து 19 கிமீ

பயண நேரம் - அதிக பட்சம் 40 நிமிடங்கள்

எப்படி அடைவது

விமானம் மூலமாக

அருகிலுள்ள விமான நிலையம் - திருவனந்தபுரம்

தொலைவு - 15 கிமீ

இந்த விமான நிலையம் சர்வதேச விமான நிலையம் என்பதால் உலகின் பல நாடுகளுடனும், இந்தியாவின் பல நகரங்களுடனும் இணைப்பில் உள்ளது.

ரயில் மூலமாக

அருகிலுள்ள ரயில் நிலையம் - திருவனந்தபுரம்

தொலைவு - 15 கிமீ

இந்த ரயில் நிலையம் இந்தியாவின் பல நகரங்களுடனும் இணைப்பில் உள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அடிக்கடி ரயில்கள் இருக்கின்றன.

நாகர்கோவிலிலிருந்து திருவனந்த புரம் 2 மணி நேர பயணத்தில் எட்டும் தொலைவில் அமைந்துள்ளது.


சுயவாகனத்தில்

நீங்கள் சுய வாகனத்தில் பயணிக்க விரும்பினால், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, தேனி ஆகிய மாவட்டங்களில் இருக்கும் சுற்றுலாப் பிரியர்கள், உங்கள் காதலியுடன் இங்கு எளிதில் வந்து செல்லமுடியும். மற்றவர்களுக்கு முடியும் என்றாலும் நேரம் அதை தாமதப்படுத்தும்.

ஒரே நாளில் சென்று திரும்ப திட்டம்

மதுரை உள்பட நீங்கள் எந்த ஊரிலிருந்து வந்தாலும் நாம் நாகர்கோவில் வழியாக கோவளத்தை அடைவது மிகச் சுலபமாகும்.

காவல்கிணறு வழியாக நாகர்கோவில் வந்தடைந்து, அங்கிருந்து மொத்தம் 2 மணி நேரத்தில் கோவளத்தை அடைய முடியும்.

காவல்கிணறு - கோவளம் இடையேயான தொலைவு 89 கிமீ ஆகும்.

செல்லும் வழியில் பூவார் கடற்கரை உட்பட பல இடங்கள் இருக்கின்றன.

மதுரையிலிருந்து காவல்கிணறு 3.30 மணி நேர பயணத்திலும், தூத்துக்குடியிலிருந்து 1.30 மணி நேர பயணத்திலும் அமைந்துள்ளது. ஆக மொத்தம் 3 முதல் 5 மணி நேரத்தில் கோவளத்தை அடைய முடியும்.

காலை 8 மணிக்கு புறப்பட்டாலும் இரவுக்குள் வீட்டில் வந்து சேர்ந்துவிடலாம்.

மேகமலை

மேகமலை

மேகமலை நான்கு சிகரங்களுக்கு இடையே அமைந்துள்ள ஒரு மலைப் பகுதி என்பது இதன் சிறப்புகளுள் ஒன்றாகும்.

இது கடல்மட்டத்திலிருந்து 1500 மீ உயரத்தில் அமைந்துள்ளது மேலும் இந்த மலைக்கு அதிகாலையில் வந்தால் மேகம் முழுவதும் சூழ்ந்து இருப்பதை காணமுடியும். சூரிய உதயத்தின் போது மிகவும் சிறப்பாக இருக்கும்.

அழகிய பறவைகளும், வளைந்து நெளிந்து செல்லும் பாதையும் நம் பயணத்தை களைப்பில்லாமல் கொண்டு செல்லும்.


இந்த இடம் குறித்த சில தகவல்கள்

எங்கே இருக்கிறது - மதுரை அருகில்

தொலைவு - மதுரையிலிருந்து 122 கிமீ

பயண நேரம் - அதிக பட்சம் 3 மணி நேரம்

எப்படி அடைவது

விமானம் மூலமாக

அருகிலுள்ள விமான நிலையம் - மதுரை

தொலைவு - 122 கிமீ

இந்த விமான நிலையம் சர்வதேச விமான நிலையம் என்பதால் உலகின் பல நாடுகளுடனும், இந்தியாவின் பல நகரங்களுடனும் இணைப்பில் உள்ளது.

ரயில் மூலமாக

அருகிலுள்ள ரயில் நிலையம் - திண்டுக்கல் ரயில் நிலையம்

தொலைவு - 124 கிமீ

இந்த ரயில் நிலையம் இந்தியாவின் பல நகரங்களுடனும் இணைப்பில் உள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, நாகர்கோவில், திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அடிக்கடி ரயில்கள் இருக்கின்றன.

மதுரையிலிருந்து மேகமலை 3 மணி நேர பயணத்தில் எட்டும் தொலைவில் அமைந்துள்ளது.

சுயவாகனத்தில் பயணித்தால்......

மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஒரே நாளில் மேகமலை வந்து திரும்பிவிடலாம். மதுரை, சிவகாசி, திண்டுக்கல், பழனி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து காதலர்கள் இந்த இடத்துக்கு 3 முதல் 4 மணி நேரம் செலவழித்து வருகிறார்கள். அவர்கள் காதலை கொண்டாடும் இடமாக மேக மலை இருக்கிறது. புதுமணத் தம்பதிகள் இங்கு வருவது அவர்கள் மனம் விட்டு பேச ஏதுவாகவும், தென்றல் காற்றில் காதலை பரிமாறவும் சிறப்பாக இருக்கும்.

காலை 8 மணிக்கு கிளம்பினால் கூட மதுரை, சிவகாசி, திண்டுக்கல், பழனி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வருபவர்கள் இரவுக்குள் வீட்டை அடைந்துவிடமுடியும்.

 மூணாறு

மூணாறு

தமிழ்நாட்டுக்கு அருகிலேயே இப்படி ஒரு அசத்தலான இடம் இருக்கானு வாயை பிளக்க வைக்கும் இயற்கை அழகு கொண்டதுதான் இந்த மூணாறு. மூணார் என்னும் பெயருக்கு மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இடம் என்பது பொருளாகும். மதுரப்புழா, நல்லதண்ணி மற்றும் குண்டலி எனும் மூன்று ஆறுகள் கூடும் ஒரு வித்தியாசமான புவியியல் அமைப்பில் இந்த மலைப்பிரதேசம் அமைந்திருப்பதால் இப்பெயர் வந்துள்ளது.


இந்த இடம் குறித்த சில தகவல்கள்

எங்கே இருக்கிறது - பொள்ளாச்சி அருகில்

தொலைவு - உடுமலையிலிருந்து 85 கிமீ

பயண நேரம் - அதிக பட்சம் 3 மணி நேரம்

எப்படி அடைவது

விமானம் மூலமாக

அருகிலுள்ள விமான நிலையம் - கோயம்புத்தூர்

தொலைவு - 158 கிமீ

இந்த விமான நிலையம் சர்வதேச விமான நிலையம் என்பதால் உலகின் பல நாடுகளுடனும், இந்தியாவின் பல நகரங்களுடனும் இணைப்பில் உள்ளது.

ரயில் மூலமாக

அருகிலுள்ள ரயில் நிலையம் - தேனி ரயில் நிலையம்

தொலைவு - 85 கிமீ

இந்த ரயில் நிலையம் இந்தியாவின் பல நகரங்களுடனும் இணைப்பில் உள்ளது. மதுரை, கோயம்புத்தூர், உடுமலை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அடிக்கடி ரயில்கள் இருக்கின்றன.

உடுமலையிலிருந்தும், தேனியிலிருந்தும் 3 மணி நேர பயணத்தில் எட்டும் தொலைவில் அமைந்துள்ளது.


சுய வாகனத்தில் பயணித்தால்....

உடுமலைப் பேட்டையிலிருந்து கண்ணன்தேவன் மலை வழியாக எளிதில் இந்த இடத்தை அடையலாம். மேலும் தேனியிலிருந்தும் இந்த இடத்துக்கு வரும் பாதை மிக சுலபமானது.

காலை 8 மணிக்கு வரத் தொடங்கினாலும் இரவுக்குள் செல்லும் வகையில் இருக்கும் நகரங்கள். உடுமலைப் பேட்டை, பொள்ளாச்சி, திண்டுக்கல், தேனி

அட்டகட்டி

அட்டகட்டி

பொள்ளாச்சியிலிருந்து வால்பாறை செல்லும் வழியில் அமைந்துள்ளது இந்த அட்டகட்டி எனும் பகுதி. மிகவும் பசுமையாக இருபுறமும் பச்சை பசேலென்று காட்சியளிக்கும் இந்த இடம் சுற்றுலா பிரியர்களை மிகவும் கொள்ளை கொள்ளும் இடமாகும்.


இந்த இடம் குறித்த சில தகவல்கள்

எங்கே இருக்கிறது - பொள்ளாச்சி அருகில்

தொலைவு - பொள்ளாச்சியிலிருந்து 36 கிமீ

பயண நேரம் - அதிக பட்சம் 1 மணி நேரம்

எப்படி அடைவது

விமானம் மூலமாக

அருகிலுள்ள விமான நிலையம் - கோயம்புத்தூர்

தொலைவு - 158 கிமீ

இந்த விமான நிலையம் சர்வதேச விமான நிலையம் என்பதால் உலகின் பல நாடுகளுடனும், இந்தியாவின் பல நகரங்களுடனும் இணைப்பில் உள்ளது.

ரயில் மூலமாக

அருகிலுள்ள ரயில் நிலையம் - பொள்ளாச்சி ரயில் நிலையம்

தொலைவு - 36 கிமீ

இந்த ரயில் நிலையம் இந்தியாவின் பல நகரங்களுடனும் இணைப்பில் உள்ளது. பழனி, கோயம்புத்தூர், உடுமலை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அடிக்கடி ரயில்கள் இருக்கின்றன.

பொள்ளாச்சியிலிருந்து 1 மணி நேர பயணத்தில் எட்டும் தொலைவில் அமைந்துள்ளது.

Read more about: travel beach kerala tamilnadu
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X