Search
  • Follow NativePlanet
Share
» »கேரளா போகமுடியலனு வருத்தப்படாதீங்க... இந்த இடங்களுக்கு போங்க

கேரளா போகமுடியலனு வருத்தப்படாதீங்க... இந்த இடங்களுக்கு போங்க

By Udhaya

கேரள கடற்கரைகளுக்கு சுற்றுலா திட்டமிட்டிருப்பீர்கள். திடீரென உங்கள் திட்டம் ரத்தாகியிருந்தால் நிச்சயம் வருத்தப்படுவீர்கள் அல்லவா. ஆனால் கவலையை விடுங்கள். கேரள கடற்கரைப் போல நம்ம ஊரிலேயே கடற்கரைகள் இருக்கின்றன. அங்கெல்லாம் சென்று சுற்றுலாவை சிறப்பிக்கலாமே.

நாம் இந்த பயணத்தில் செல்லவிருக்கும் இடங்கள்

வேளாங்கன்னி

கோவளம்

மஹாபலிபுரம்

தரங்கம்பாடி

பழவேற்காடு

நாகப்பட்டினம்

கடலூர்

எப்படி செல்வது எப்போது செல்வது என்னென்ன செய்வது என்பது குறித்த அனைத்து தகவல்களையும் இந்த பதிவில் காணவிருக்கிறோம். அதுக்கு முன்னாடி மறக்காம மேல இருக்குற பெல் பட்டன அழுத்தி சப்ஸ்கிரைப் பண்ணிடுங்க. அப்டி நம்ம பேஸ்புக் பக்கத்துலயும் நம்மள பாலோ பண்ணுங்க.

 வேளாங்கன்னி | எப்படி செல்வது

வேளாங்கன்னி | எப்படி செல்வது

வேளாங் கன்னி தமிழக த்தின் கிழக்குக் கடற்கரை ஓரம் அமைந்து ள்ளது.

சென்னையி லிருந்து கிழக்கு கடற்கரை ச் சாலை ஓரமாக மாமல்ல புரம், பாண்டிச் சேரி, சிதம் பரம், நாகப்ப ட்டினம் வழி யாக வேளாங் கன்னியை 7 முதல் 8 மணி நேரத் தில் அடைய முடி யும்.

வேளாங் கன்னி | செய்ய வேண்டியவை

வேளாங் கன்னி | செய்ய வேண்டியவை

வேளாங்க ன்னி திருத்தலம் புண் ணிய தலமாக கருத ப்படுகிறது. வேளாங் கன்னியில் அன்னை மரியா விற்கு ஒரு மகத் தான பேரா லயம் எழுப்பப் பட்டிருக்கிறது. இந்த பேராலயம் மடோனா ஆப் வேளாங் கன்னிக்கு அர்ப்பனம் செய்யப் பட்டிருக்கிறது. இந்த பேரால யத்தில் குடிகொண் டிருக்கும் அன்னை மரியா, ஆரோ க்கிய அன்னை என்று பக்த ர்களால் அழைக்கப் படுகிறார்.

குறிப் பாக வேளாங் கன்னி பேராலயம், பக்தர் களின் காணிக்கை அருங்கா ட்சியகம், பேராலய கடை மற்றும் வேளாங் கன்னி கடற் கரை போன் றவை காண் போரின் கண்ணை யும் கருத்தை யு ம் கவரு பவைகளாக உள்ளன. அன்னை யின் நீரூற்று, புனித ஸ்நா னம் மற்றும் அன்னை யின் நீரூற்று ஆலயம் ஆகிய வை சுற்றலா பயணி களுக்கு பரவசத் தை ஏற்படு த்தும்.

Googlesuresh

கோவளம் கடற்கரை | எப்படி செல்வது

கோவளம் கடற்கரை | எப்படி செல்வது

சென்னை யிலிருந்து கிழக் கு கடற்க ரைச் சாலை வழியா க 40 கிமீ வ ரை பயணித் தால் எளிதில் கோவ ளம் கடற்கரை யை அடைய லாம். சென்னை யிலிருந்து புறப்படு பவர்கள் 1 முதல் 1.30 மணி நேரங்க ளுக்குள் கோவ ளம் கடற்க ரையில் கா ல் ந னை க் க முடி யும்.

சென்னை, பாண்டி ச்சேரி மற்றும் தரங் கம்பாடி அரு கில் அமை ந்துள்ள கோவ ளம், தமிழ் நாட்டின் எந்தப் பகுதியி லிருந்தும் சாலை வழியாக எளி தில் அடை யும் வகை யில் உள் ளது.

 கோ வளம் கடற்கரை | செய்ய வேண்டியவை

கோ வளம் கடற்கரை | செய்ய வேண்டியவை

தமிழ் நாட்டின் பிரபலமான மீன்பிடி கிராம மான கோவளம், கடற் கரை யை நேசிப்பவர் களுக்கு அற்புத மான அனுபவ த்தை அளிக்கக் கூடிய சுற்று லாத் தலம். இந்த ஸ்தலம் சென்னை க்கு அருகா மையில் இருப்ப தால் வார இறுதி யை குடும்ப த்துடன் சந்தோ ஷமாக கழிப்பத ற்காக ஏராள மான சென் னை வாசிகள் கோவள த்திற்கு வருகின் றனர். கோவளத் தில் உள் ள டச்சு கோட்டை யானது சுற்று லா விடு தியாக மா ற்றப்பட்டு வருடந்தோ றும் நிறை ய சுற்றுலா ப் பயணி களை ஈர்க்கி றது. இ து ‘தா ஜ் பிஷர்மேன் கோவ்' என்று அழைக் கபடுகிறது. இ ளைப்பாறுவதற் க்கும் நல்ல மு றையி ல் நேரத்த தை செ லவு செய் வத க்கும் ஏற்ற இடம் இது.

Vijayaraghavan Rajendran

மஹாபலிபுரம் | செய்ய வேண்டியவை

மஹாபலிபுரம் | செய்ய வேண்டியவை

சென்னையிலிருந்து 57 கிமீ தொலைவில் அமைந்துள்ளது மஹாபலிபுரம். இது அனைவருக்கும் தெரிந்த ஒரு இடம்தான் என்றாலும், இங்கு செல்ல சிலர் தயக்கம் காட்டுகின்றனர். காதலர்கள் மட்டுமே பார்க்கும் இடமல்ல மஹாபலிபுரம். தமிழின் தொன்மைக்கும், தமிழகத்தை ஆண்டவர்களின் கட்டிடக் கலையை தரிசிக்கவும் செல்லலாமே.

Nigel Swales

 மஹாபலிபுரம் | எப்படி செல்வது

மஹாபலிபுரம் | எப்படி செல்வது

சென்னையிலிருந்து காலை 7 மணிக்கு கிளம்பினால் காலை 8.30 மணிக்கெல்லாம் சென்றுவிடக் கூடிய தொலைவில் தான் மஹாபலிபுரம் இருக்கிறது. மாலை 6 மணிக்கு புறப்பட்டால், 7.30க்கு திரும்பிவிடலாம்.

57 கிமீ தூரத்தை கடக்க அவ்வளவு நேரம் எடுக்காது என்றாலும், மித வேகம் மிக நன்று. இந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. நிச்சயம் தலைக்கவசம் அணிந்தவாறு இருசக்கர வாகனங்களில் பயணியுங்கள்.

தரங்கம்பாடி | எப்படி செல்வது

தரங்கம்பாடி | எப்படி செல்வது

சென்னையிலிருந்து கடலூர் தாண்டி தரங்கம்பாடி அமைந்துள்ளது. மொத்தம் 271 கிமீ தூரத்தில் இருக்கும் இந்த இடத்தை அடைய கிழக்கு கடற்கரைச் சாலை வசதி சிறப்பாக உள்ளது.

தரங்கம்பாடி கடற்கரை

தரங்கம்பாடி கடற்கரை

கவி பாடும் கடற்கரை காற்றுடன், இதமாய் வீசும் காதல் கீதமும், வரலாற்றுப் பொக்கிஷங்கள் நிறைந்த கடற்கரை பாறைகளினூடே நாம் வரலாற்றைத் தேடலாம் தரங்கம்பாடி கடற்கரையிலே.

இந்த கடற்கரையும் என்பொழுதும் நினைவில் நிற்கும் இடமாக அழகுடன் உள்ளது. நடனமாடும் அலைகள் ஒரு புறம் மற்றும் சூரியன் மறு புறம் என இரண்டு பக்கங்களிலுமே இக்கடற்கரை நீண்டிருக்கிறது. அமைதியான மற்றும் அழகான சூழலில் அமைந்துள்ள இக்கடற்கரை சோர்ந்த மனதிற்கு புத்துணர்ச்சியூட்டும்.

Eagersnap

 பழவேற்காடு | செய்ய வேண்டியவை

பழவேற்காடு | செய்ய வேண்டியவை

சுற்றுலாப் பயணிகளின் மத்தியில் பழவேற்காடு இரு விஷயங்களுக்காக மிகவும் அறியப்படுகிறது. அவை பழவேற்காடு ஏரி மற்றும் பழவேற்காடு பறவைகள் சரணாலயம் ஆகியவையாகும். பழவேற்காட்டிலுள்ள இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய உப்பு நீர்நிலை ஒவ்வொரு வருடமும் மில்லியன் கணக்கில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக இருக்கிறது. இந்த நீர்நிலையின் தண்ணீர் நன்னீரை விட அதிகமான உப்புத் தன்மையுடன் இருந்தாலும், இது கடல் நீர் கிடையாது. இந்த புவியியலமைப்பில் உள்ள பழவேற்காடு பறவைகள் சரணாலயம் பறவைகள் சீசனில் பல்வேறு இடம் பெயரும் பறவைகளுக்கு அடைக்கலம் தந்து வருகிறது.

Nandha

 பழவேற்காடு | எப்படி செல்வது

பழவேற்காடு | எப்படி செல்வது

சென்னையிலிருந்து வடக்கே 57 கிமீ தொலைவில் அமைந்துள்ளது பழவேற்காடு எனும் இடம். இது திருவள்ளூர் மாவட்டத்துக்கு வடக்கு எல்லையில் அமைந்துள்ள ஏரி ஆகும். இது கடலுடன் கலக்கும் நிலையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more about: travel chennai beaches
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more