Search
  • Follow NativePlanet
Share
» »கோவா, காசி & அம்ரித்சர் இந்த மூன்று நகரங்களுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. அது என்னவென்று தெரியுமா?

கோவா, காசி & அம்ரித்சர் இந்த மூன்று நகரங்களுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. அது என்னவென்று தெரியுமா?

By Super Admin

எப்போது வரும் என்று வருடம் முழுவதும் நாம் ஏங்கும் ஒரு பண்டிகை என்றால் அது தீபாவளி தான். தீபஒளியின் திரு நாளான தீபாவளி நாம் நம் குடும்பத்தினர் எல்லோருடனும் ஒன்று கூடி பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் சாப்பிட்டு மகிழ்ச்சியில் திளைக்கும் ஒரு நாள். இந்த வருடம் வழக்கத்தை விடுத்து தீபாவளியை வித்தியாசமாக கொண்டாட நீங்கள் யோசித்துக்கொண்டிருக்கிறீர்களா? வாருங்கள் இந்த தீபாவளியை மறக்க முடியாததாக்கிட நாம் செல்லவேண்டியது மூன்று இடங்களை பற்றி தெரிந்துகொள்வோம்.

கோவா, காசி மாற்றும் அம்ரித்சர் ஆகிய மூன்று நகரங்களில் இந்தியாவில் வேறெங்கும் இல்லாத வகையில் தீபாவளி பண்டிகை வெகு விமரிசையாகவும், வித்தியாசமாகவும் கொண்டாடப்படுகிறது. அதைப்பற்றி விரிவாக தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

காசி - தேவ தீபாவளி

காசி - தேவ தீபாவளி

உலகில் இருக்கும் மிகப்பழமையான நகரங்களில் ஒன்றான காசி ஹிந்துக்களின் புனித நகரமாகவும் திகழ்கிறது. உலகெங்கும் வாழும் ஹிந்துக்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி இங்கே தேவ தீபாவளியாக வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

Davy Demaline

காசி - தேவ தீபாவளி

காசி - தேவ தீபாவளி

காசியில் பாயும் பாவங்களை நிவர்த்தி செய்யும் புண்ணிய நதியான கங்கை நதியின் இருபுறமும் உள்ள படித்துறைகளில் ஆயிரக்கணக்கான அகல்விளக்குகள் ஏற்றப்படுகின்றன.

Davy Demaline

காசி - தேவ தீபாவளி

காசி - தேவ தீபாவளி

தேவ தீபாவளி பண்டிகையானது வழக்கமாக நாம் தீபாவளி கொண்டாடும் நாளில் இருந்து 15 நாட்கள் கழித்து கொண்டாடப்படுகிறது. காசியில் உள்ள ரவிதாஸ் படித்துரையில் இருந்து ராஜ்காட் படித்துரை வரையிலும் கரையின் இருபுறமும் லட்சக்கணக்கான தீபங்கள் ஏற்றப்படுகின்றன.

Davy Demaline

காசி - தேவ தீபாவளி

காசி - தேவ தீபாவளி

காசியில் 1985ஆம் ஆண்டில் இருந்து தேவ தீபாவளி கொண்டாடும் வழக்கம் ஆரம்பித்திருக்கிறது.

படித்துரைகளில் மட்டுமில்லாது காசியில் வாழும் மக்கள் தங்கள் வீடுகளின் முன்பாகவும் விளக்குகளை ஏற்றி கங்கையை வழிபடுகின்றனர்.

Davy Demaline

காசி - தேவ தீபாவளி

காசி - தேவ தீபாவளி

ஐந்து நாட்கள் கொண்டாடப்படும் ஐந்தே தேவ தீபாவளி பண்டிகையின் போது ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில் கங்கை கரையில் சிறப்பு 'கங்கா ஆரத்தி' பூஜை நடைபெறுகிறது.

இதனை காணவே ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் காசிக்கு வருகின்றனர்.

Davy Demaline

காசி - தேவ தீபாவளி

காசி - தேவ தீபாவளி

சுற்றுலாப்பயணிகள் சிறிய படகுகளில் சென்று தஸ்வமேத படித்துரையில் நடக்கும் இந்த கங்கா ஆரத்தியை கங்கை நதியில் படகில் மிதந்தபடியே கண்டு ரசிக்கலாம்.

Davy Demaline

காசி - தேவ தீபாவளி

காசி - தேவ தீபாவளி

தேவ தீபாவளியை முன்னிட்டு காசியில் கங்கா மகோத்சவம் என்ற விழாவும் நடத்தப்படுகிறது. இவ்விழாவில் இந்திய கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் விதமாக கர்னாட மற்றும் ஹிந்துஸ்தானி இசை நிகழ்சிகள், சிற்ப கண்காட்சி, மல்யுத்தப் போட்டிகள் போன்றவை நடத்தப்படுகின்றன.

Davy Demaline

காசி - தேவ தீபாவளி

காசி - தேவ தீபாவளி

காசிக்கு இதுவரை சென்றிடாதவர்கள், செல்ல வேண்டும் என்ற ஆசையுள்ளவர்கள் நிச்சயம் இந்த வருடம் காசிக்கு சென்று தேவ தீபாவளியை கொண்டாடி மகிழுங்கள். இவ்வருடம் நவம்பர் மாதம் 25ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கிறது.

காசி நகரை பற்றிய மேலும் அதிக விவரங்களையும், அங்கிருக்கும் ஹோட்டல்கள் பற்றிய தகவல்களையும் தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்துகொள்ளுங்கள்.

கோவா - நரகாசுர வதம் !!

கோவா - நரகாசுர வதம் !!

இந்தியாவின் பார்டி தலைநகரமான கோவாவில் தீபாவளி ரகளையாக கொண்டாடப்படுகிறது. போர்துகீசியர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்ததாலோ என்னவோ ஒரு கார்னிவல் பண்டிகை கொண்டாட்டத்தை போலவே தீபாவளியும் இங்கே கொண்டாடப்படுகிறது.

Nicolas Mirguet

கோவா - நரகாசுர வதம் !!

கோவா - நரகாசுர வதம் !!

நரகாசுர வதம் என்ற நிகழ்வு தான் கோவா தீபாவளியின் தனித்துவமாகும்.

பரவலாக சொல்லப்படும் புராண கதையின் படி தேவர்களை துன்புறுத்தி வந்த நரகாசுரன் என்ற அரக்கன் தான் வதைக்கப்படும் தருவாயில் தனது இறப்பு மக்களால் கொண்டாடப்படவேண்டும் என்ற வரத்தை பெற்றதாககவும் அதனாலேயே தீபாவளி என்ற பண்டிகை கொண்டாடப்படுவதாகவும் நம்பப்படுகிறது.

Nicolas Mirguet

கோவா - நரகாசுர வதம் !!

கோவா - நரகாசுர வதம் !!

நரகாசுரன் வதைக்கப்பட்டதை நினைவுகூரும் விதமாகவும், அதனை கொண்டாடும் விதமாகவும் கோவாவில் இருக்கும் கிராம மக்கள் விதவிதமாக நரகாசுரனின் சிலையை வடிவமைத்து ஊர்வலமாக கொண்டு செல்கின்றனர்.

Vipal

கோவா - நரகாசுர வதம் !!

கோவா - நரகாசுர வதம் !!

கிராமங்களுக்கிடையே யார் மிக கோரமான அரக்க சிலையை உருவாக்குகிறார்கள் என்ற போட்டியே நடக்கிறது. இதற்காக வித்தியாசமாகவும், பிரம்மாண்டமாகவும் கிராம மக்கள் நரகாசுரனின் சிலையை வடிவமைக்கின்றனர்.

பேப்பர், புல், களிமண் போன்றவை கொண்டு செய்யப்படும் இச்சிலைகள் தீபாவளி நாளின் போது ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு தீயிட்டு கொளுத்தப்படுகின்றன.

officina del sorriso 3

கோவா - நரகாசுர வதம் !!

கோவா - நரகாசுர வதம் !!

தலையில்லாத நரகாசுரனின் சிலை!!

Vipal

கோவா - நரகாசுர வதம் !!

கோவா - நரகாசுர வதம் !!

தீபாவளி பண்டிகையின் இரவுப் பொழுதில் புகழ்பெற்ற கோவா கடற்கரைகளில் இந்தியர்கள் மட்டுமில்லாமல் வெளிநாட்டவரும் கலந்துகொண்டு விதவிதமான வண்ணமயமான பட்டாசுகளை வெடித்து மகிழ்கின்றனர்.

Nicolas Mirguet

கோவா - நரகாசுர வதம் !!

கோவா - நரகாசுர வதம் !!

கோவா நகரை பற்றிய மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களையும் அங்கிருக்கும் ஹோட்டல்கள் பற்றிய விவரங்களையும் இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

Vinod Sankar

அமிர்தசரஸ்:

அமிர்தசரஸ்:

எந்த பண்டிகையானாலும் பஞ்சாபியர்களுக்கு குஷி தான் போலும். கொண்டாடி தீர்த்துவிடுகின்றனர். சீக்கியர்கள் அதிகமாக வாழும் பஞ்சாபில் தீபாவளி பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

குறிப்பாக அமிர்தசரஸில் இருக்கும் சீக்கியர்களின் புனித கோயிலான பொற்கோயில் முழுக்கவும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படுகிறது. அதோடு பொற்கோயிலில் கண்ணைப்பறிக்கும் வான வேடிக்கைகளும் நடத்தப்படுகின்றன.

gags9999

அமிர்தசரஸ்:

அமிர்தசரஸ்:

முகலாய மன்னன் ஜகாங்கீர் என்பவனால் சிறைபிடிக்கப்பட்ட தங்களின் ஆறாவது புனித குருவான ஹர்கோபிந்த் சிங் விடுதலையான நிகழ்வையே சீக்கியர்கள் தீபாவளியாக கொண்டாடுகின்றனர்.

Pati Gaitan

அமிர்தசரஸ்:

அமிர்தசரஸ்:

வித்தியாசமாக தீபாவளியை கொண்டான நினைப்பவர்கள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ள இடங்களுக்கு செல்லுங்கள்.

இந்த தீபாவளி திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாட ஒன் இந்தியாவின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

Subharnab Majumdar

Read more about: diwali goa varanasi amritsar
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X