Search
  • Follow NativePlanet
Share
» »செல்பி எடுக்க பிடிக்குமாங்க உங்களுக்கு...?? அப்போ இந்த இடங்களுக்கு ஒரு டூர் போங்க...

செல்பி எடுக்க பிடிக்குமாங்க உங்களுக்கு...?? அப்போ இந்த இடங்களுக்கு ஒரு டூர் போங்க...

இப்பெல்லாம் வீட்ல விசேஷம் நடந்தாலோ, இல்லை நம்ம கண் முன்னே ஏதேனும் விபத்து நடந்தாலோ, கூண்டுக்குள்ளே சிங்கமோ புலியோ என்ன நடந்தாலும் அதற்க்கு முன்னே நின்று 'செல்பி' எடுத்துக்கொள்வது வாட்ஸ் ஆப் மூலமாக பரவும் 'அந்த' ஆடியோக்கள் போல எங்கும் பரவி விட்டது.

வாருங்கள், இந்தியாவில் அட்டகாசமான செல்பி எடுக்க சிறந்த இடங்கள் எவைஎவை என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

சாந்தி ஸ்துபா, லடாக் :

சாந்தி ஸ்துபா, லடாக் :

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருக்கும் லடாக் விவரிக்க முடியாத அழகுடைய சுற்றுலாத்தலமாகும். இமய மலையின் பேரழகு ததும்பும் இந்த லடாக்கில் லெஹ் பகுதியில் அமைந்திருக்கிறது 'சாந்தி ஸ்துபா' என்னும் புத்த மத கோயில். 1991 ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டின் ஒத்துழைப்புடன் கட்டப்பட்ட இந்த கோயிலில் அப்படி என்ன சிறப்பு ? என்று கேட்கிறீர்களா ? . அடுத்த பக்கத்துக்கு வாருங்கள்.

Photo:Lovell D'souza

சாந்தி ஸ்துபா, லடாக் :

சாந்தி ஸ்துபா, லடாக் :

இந்த சாந்தி ஸ்துபா அமைந்திருக்கும் இடத்தில் இருந்து லெஹ் நகரின் மொத்த அழகையும் நாம் ரசிக்க முடியும். லெஹ்வில் சுற்றுலாப்பயணிகளால் மிகவும் விரும்பபப்டும் இடமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இந்த சாந்தி ஸ்துபாவில் அற்புதமான இயற்கை காட்சிகளுக்கு பின்னணியில் ஒரு செல்பி கிளிக்கிடுங்கள்.

Photo:Laughing Buddha

சாந்தி ஸ்துபா, லடாக் :

சாந்தி ஸ்துபா, லடாக் :

லடாக் மற்றும் லெஹ் பகுதியில் இருக்கும் மற்ற சுற்றுலாத்தலங்கள் பற்றிய விவரங்களை இங்கே அறிந்து கொள்ளுங்கள். லடாக்கில் இருக்கும் ஹோட்டல் பற்றிய விவரங்களையும், எப்படி அடைவது என்பது பற்றிய தகவல்களையும் தமிழின் முதன்மை பயண வழிகாட்டியில் அறிந்து கொள்ளுங்கள்.

Photo:Koshy Koshy

'ஸ்கை டைவிங்' செல்பி :

'ஸ்கை டைவிங்' செல்பி :

கேட்கவே வித்தியாசமாக இருக்கிறதல்லவா ?. வெளிநாடுகளில் மட்டுமே பிரபலமாக இருந்த 'ஸ்கை டைவிங்' சாகச விளையாட்டு இப்போது இந்தியாவிலும் பல நகரங்களில் நடத்தப்படுகிறது. ஒரு விமானம் மூலம் பல நூறு அடிகள் உயர சென்று பாரசூட் உதவியுடன் குதிப்பது என்றென்றைக்கும் மறக்க முடியாத அனுபவத்தை தரும்.

Photo: Flickr

'ஸ்கை டைவிங்' செல்பி :

'ஸ்கை டைவிங்' செல்பி :

அப்படி 'ஸ்கை டைவிங்' செய்கையில் நாடு வானில் ஒரு 'செல்பி' கிளிக்கிடுங்கள். இந்த 'ஸ்கை டைவிங்' விளையாட்டு இப்போது பாண்டிச்சேரியிலும் நடத்தப்படுகிறது. இந்த சாகசத்தில் ஈடுபடும் முன்பாக சில நாட்கள் பயிற்சி எடுத்தக்கொள்ள வேண்டும். வித்தியாசமான சாகசத்தில் ஈடுபட விரும்புகிறவர்கள் ஸ்கை டைவிங்கை நிச்சயம் ஒரு முறை முயன்று பாருங்கள்.

Photo: Flickr

'ஸ்கை டைவிங்' செல்பி :

'ஸ்கை டைவிங்' செல்பி :

பாண்டிச்சேரியை தவிர இந்தியாவின் மற்ற எந்தெந்த இடங்களில் ஸ்கை டைவிங் விளையாட்டு நடத்தப்படுகிறது என்பதை தமிழ் பயண வழிகாட்டியில் அறிந்து கொள்ளுங்கள்.

Photo: Flickr

தாஜ் மஹால் :

தாஜ் மஹால் :

காதல் ததும்ப அன்பு மனைவியுடன் கண்டிப்பாக செல்ல வேண்டிய ஒரு இடம் இருக்குமானால் அது நிச்சயம் தாஜ்மஹால் தான். உலகில் இருக்கும் கட்டிடங்களிலேயே மிகவும் அழகானதாக போற்றப்படும் தாஜ்மஹாலுக்கு முன்பு நின்று செல்பி எடுத்துக்கொள்ள நிச்சயம் மறந்து விடாதீர்கள்.

Photo: Flickr

தாஜ் மஹால் :

தாஜ் மஹால் :

வழக்கமாக தாஜ்மஹாலை பகலில் சென்று நிறைய தடவை பார்த்திருக்கிறேன் என்று நினைப்பவர்கள் ஒரு முழு நிலவு நாளில் தாஜ் மஹாலுக்கு சென்றிடுங்கள். நிலவின் ஒளி வெண்பளிங்கு கற்களில் பிரதிபலிக்கும் பேரழகை கண்டு லயித்திடுங்கள்.

Photo: Flickr

தாஜ் மஹால் :

தாஜ் மஹால் :

தாஜ்மஹால் அமைந்திருக்கும் ஆக்ரா நகரை பற்றிய விரிவான தகவல்களையும் அங்குள்ள ஹோட்டல்களில் சலுகை விலையில் முன் பதிவு செய்திடவும் எங்கள் தமிழ் பயண வழிகாட்டிக்கு செல்லுங்கள்.

Photo: Flickr

அதிரப்பள்ளி அருவி :

அதிரப்பள்ளி அருவி :

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு குறிப்பாக கமலஹாசனின் ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமான ஓரிடம் தான் இந்த அதிரப்பள்ளி அருவி. தமிழ் சினிமாவின் 'பெஞ்ச் மார்க்' திரைப்படங்களில் ஒன்றான 'புன்னகை மன்னன்' படத்தின் மிகவும் பேசப்பட்ட காட்சி இங்கு படம்பிடிக்கப்பட்டதலேயே இது 'புன்னகை மன்னன் அருவி' என்றும் நம்மவர்களால் அழைக்கப்படுகிறது.

Photo: Flickr

அதிரப்பள்ளி அருவி :

அதிரப்பள்ளி அருவி :

இந்த அருவியானது கேரளா மாநிலத்தில் அதிரப்பள்ளி என்னும் இடத்தில் சாலக்குடி ஆற்றின் குறுக்கே அமைந்திருக்கிறது. இங்கே தண்ணீர் 80 அடி உயரத்தில் இருந்து ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அடர்ந்த வனத்திற்கு மத்தியில் அமைந்திருக்கும் இந்த அருவியில் குளிப்பதோடு மட்டுமில்லாமல் அருவிக்கு மேலே சென்றும் இந்த இடத்தை ரசித்திட முடியும்.

Photo: Flickr

அதிரப்பள்ளி அருவி :

அதிரப்பள்ளி அருவி :

இந்தியாவின் நயாகரா என்று அழைக்கப்படும் இந்த அருவிக்கு வார விடுமுறையில் குடும்பத்துடனோ, நண்பர்களுடனோ சென்று செல்கி எடுத்து கொண்டாடி மகிழுங்கள். அதிரப்பள்ளியை பற்றிய மேலதிக தகவல்களை தமிழ் பயண வழிகாட்டியில் அறிந்து கொள்ளுங்கள்.

Photo: Flickr

ராதா நகர் கடற்கரை, அந்தமான் :

ராதா நகர் கடற்கரை, அந்தமான் :

அந்தமான் தீவில் அமைந்திருக்கும் ஹவேலோக் தீவில் இருக்கும் இந்த ராதாநகர் கடற்கரை தான் ஆசியாவிலேயே மிகவும் சுத்தமான கடற்கரையாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. நீலக்கடலும், வெள்ளை மணல் நிலமும் சங்கமிக்கும் இந்த தீவில் அமைதியாக ஆர்ப்பாட்டமில்லாமல் விடுமுறையை கொண்டாட சிறந்த இடமாகும்.

Photo: Flickr

ராதா நகர் கடற்கரை, அந்தமான் :

ராதா நகர் கடற்கரை, அந்தமான் :

இந்த கடற்கரையின் முக்கியமான சிறப்பம்சங்களில் ஒன்று யானை சவாரி. ஆம், கடற்கரையில் உல்லாசமாக யானையின் மீது அமர்ந்து பயணம் செய்யலாம். இயற்கை காட்சிகளை புகைப்படம் எடுப்பதில் விருப்பமுடையவர்கள் நிச்சயம் இந்த ராதா நகர் கடற்கரைக்கு ஒருமுறையேனும் வர வேண்டும்.

Photo: FLickr

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+