» »மழைக் காலத்துல இந்த இடங்கள் எப்படி இருக்கும்னு தெரியுமா?

மழைக் காலத்துல இந்த இடங்கள் எப்படி இருக்கும்னு தெரியுமா?

Posted By: Udhaya

மழைக்காலம் வந்துட்டாலே குளிரும், உறக்கமும் அதிகமாயிடும். காலையில் ஓட்டப்பயிற்சி பாதிக்கும். இன்னும் கொஞ்சம் அதிக நேரம் தூங்கலாம்னு தோணும்.

இன்னும் மேல போனா, அலுவலகம் போகவேண்டாம்னு கூட யோசிக்கவைக்கும். அப்படியே லீவு கிடச்சா கூட, மறுபடியும் தூங்கத்தான் தோணும்.

இப்படிபட்ட அறிகுறிகள் உங்ககிட்ட இருக்கா? அப்போ நீங்கதான் சரியான ஆள். உங்களமாரியே இருக்குற உங்க நண்பர்கள கூட்டிட்டு இங்க வாங்க.. இதுதான் என்ஜாய் பண்ண சரியான தருணம்

கோவா

கோவா

கோவா மழைக்கால சுற்றுலா பயணிகளுக்கு பல அற்புதங்களை அள்ளித் தருகிறது.

கோவா

கோவா

குறைந்த அளவே பிரபலமான கடற்கரைகள், இயற்கை எழில் கொஞ்சும் காடுகள் என கோவாவிலும் சில இடங்கள் மழைக்காலத்தில் குதூகலிக்கும்.

கோவா

கோவா


தேவாலயங்கள், கோட்டைகள் மற்றும் அருங்காட்சியகம் என பல இடங்கள் இருந்தாலும் அவையும் மழைக்காலத்தில் பார்க்கலாம்தானே.

மூணாறு

மூணாறு


கேரளாவின் மலைப்பிரதேசங்களில் மிகச் சிறந்த ஒன்றாக விளங்குகிறது மூணாறு.

மூணாறு

மூணாறு

மழை மேற்கு தொடர்ச்சி மலைகளின் அழகை தெள்ளத் தெளிவாக்கி எடுத்து காட்டுகிறது. அதிலும் குறிப்பாக மூணாறுவின் அழகு உங்களை வெளியேறவிடாமல் தன்வசப்படுத்திக்கொள்ளும்.

மூணாறு

மூணாறு

திரில் அனுபவங்கள் நிறைந்த பல மலையேற்றங்கள், நீர்வீழ்ச்சிகள் என உங்களை கடவுளின் சொந்த நாடு மகிழச் செய்யும்.

சிரபுஞ்சி

சிரபுஞ்சி


சிரபுஞ்சி, உலகின் அதிக மழை பொழியும் ஊர்களில் ஒன்றாகும். ஆம் அத்தனையும் பசுமை போர்வை போர்த்திய நிலப்பரப்புகளுடன் மனம் மகிழ்ந்து புத்துணர்ச்சியை உண்டாக்கும் இடம்.

சிரபுஞ்சி

சிரபுஞ்சி

இந்தியாவின் சிறந்த மழைக்கால சுற்றுலாத் தளம் இதுவாகும். இதன் அழகில் நீங்கள் உங்களையே மறந்துவிடுவீர்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

சிரபுஞ்சி

சிரபுஞ்சி

நோகாலிகை நீர்வீழ்ச்சி, வேர்ப் பாலத்தினூடே ஒரு நடை பயணம், புதுப்புது குகைகள், ஆள் ஆரவாரமில்லாத அமைதியான பகுதிகளுக்கு பயணம் என சிரபுஞ்சி உங்களை மனமகிழச் செய்யும்

கொடைக்கானல்

கொடைக்கானல்


கொடைக்கானல் என்ற அழகிய ஓவியமான மலைவாழிடம் மேற்கு தொடர்ச்சி மலைகளிலுள்ள பழனி மலைத்தொடர்களில் அமைந்துள்ளது.

கொடைக்கானல்

கொடைக்கானல்

எழில் கொஞ்சும் அழகுடன் மற்றும் புகழுடன் இருப்பதால் இந்நகரத்தை "மலைகளின் இளவரசி" என்றும் அனைவரும் அன்போடு அழைக்கிறார்கள்.

கொடைக்கானல்

கொடைக்கானல்

கிழக்கை நோக்கி மலை இறங்கினால் முருகனின் பழனி மலையை அடையலாம். கொடைக்கானலுக்கு தெற்கே கம்பம் பள்ளத்தாக்கு உள்ளது.

லகாவுல் மற்றும் ஸ்பிட்டி

லகாவுல் மற்றும் ஸ்பிட்டி

ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில், இந்திய திபெத்திய எல்லையில் அமைந்துள்ளது லாஹௌல் மாவட்டம்.

லகாவுல் மற்றும் ஸ்பிட்டி

லகாவுல் மற்றும் ஸ்பிட்டி

இங்குள்ள பூர்வீக குடிமக்கள் சிகப்பு நிற தோல் மற்றும் பழுப்புநிற நிற கண்கள் உடைய இந்தோ ஆரிய மற்றும் திபெத்திய பரம்பரையில் வந்தவர்கள்

லகாவுல் மற்றும் ஸ்பிட்டி

லகாவுல் மற்றும் ஸ்பிட்டி

வீடுகள் 10 டிகிரி உட்புறமாக சாய்ந்த சுவர்கள் கொண்ட திபெத்திய பாணி கட்டிடக்கலையால் கட்டப்பட்டது.

பாண்டிச்சேரி

பாண்டிச்சேரி

பாண்டிச்சேரியில் கடற்கரைகள் மட்டுமல்லாமல், இந்தியாவின் மிகச்சிறந்த தியான மையங்களில் ஒன்றான அரவிந்தர் ஆசிரமமும் இங்கிருக்கிறது.

பாண்டிச்சேரி

பாண்டிச்சேரி

உதய நகரம் என்று அழைக்கப்படும் ஆரோவில் நகரம், சுற்றுலாப் பயணிகளை அதன் தனித்தன்மையான கலாச்சாரம், பாரம்பரிய சின்னங்கள் மற்றும் கட்டிடக்கலைகளால் ஈர்க்கிறது.

பாண்டிச்சேரி

பாண்டிச்சேரி

இந்த நகரத்தில் இந்து கோவில்கள் மற்றும் கிறித்தவ தேவாலயங்கள் ஆகியவை ஒரே கலவையில் கலந்திருக்கின்றன.

மகாபலீஸ்வர்

மகாபலீஸ்வர்

மஹாராஷ்டிரா மாநிலத்தின் சதாரா மாவட்டத்தில் அமைந்திருக்கும் மஹாபலேஷ்வர் ஒரு பிரபலமான மலை வாசஸ்தலமாகும்.

மகாபலீஸ்வர்

மகாபலீஸ்வர்

ரம்யமான மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் அமைந்துள்ள இந்தப் பகுதி உலகில் என்றென்றும் பசுமையாக காணப்படும் இடங்களில் ஒன்று.

மகாபலீஸ்வர்

மகாபலீஸ்வர்

தலை சுற்றவைக்கும் 4718 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இந்த சுற்றுலா நகரம் 150 ச.கி.மீ அளவில் பரந்து காணப்படுகிறது.

லோனாவாலா

லோனாவாலா


சந்தடி நிறைந்த நெருக்கடியான மும்பை வாழ்க்கையிலிருந்து விலகி ஒரு உல்லாசமான மனமாற்றத்துக்கு ஏற்ற இடம் இந்த ‘லோனாவலா' எனப்படும் பிரசித்தி பெற்ற மலைப்பிரதேசம் ஆகும்.

சிறந்த மழைக்கால சுற்றுலா பிரதேசமாகும்.

உதய்பூர்

உதய்பூர்


இரண்டாம் மஹாராணா உதய் சிங் இந்நகரத்தை 1559ம் ஆண்டில் தோற்றுவித்துள்ளார். உதய்பூர் நகரம் இந்தியாவின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக அறியப்படுவதோடு மட்டுமல்லாமல் தன் வளமான பண்பாட்டு மற்றும் பாரம்பரிய அம்சங்களுக்கு கீர்த்தி பெற்றும் விளங்குகிறது.

வயநாடு

வயநாடு

மேற்குத்தொடர்ச்சி மலையின் பசுமையான மலைகளுக்கிடையே அமைந்துள்ள இந்த வயநாடு பிரதேசமானது ‘இயற்கை' என்பது இதுதான் என்று பயணிகளுக்கு எடுத்துக்காட்டும் வண்ணம் கன்னிமை மாறாத எழில் காட்சிகளுடன் அமைதியாக வீற்றிருக்கிறது.

பெரியார் தேசிய பூங்கா

பெரியார் தேசிய பூங்கா


கேரள மாநிலத்தின் அனைத்து பகுதிகளுமே மழைக்காலத்தில் செல்ல தகுந்த இடமாகும்.

அதிலும் பெரியார் தேசிய பூங்கா மிகச்சிறந்த பருவகால சுற்றுலாதளமாகும்.

குடகு மலை

குடகு மலை

கூர்க் அல்லது கொடகு என்று அழைக்கப்படும் மலைப்பிரதேசம் கர்நாடக மாநிலத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலா ஸ்தலங்களில் ஒன்று.

குடகு மலை

குடகு மலை

கடல் மட்டத்திலிருந்து 900 மீட்டரிலிருந்து 1715 மீட்டர் வரையான உயரத்தில் இது அமைந்துள்ளது.

குடகு மலை

குடகு மலை

கூர்க் பிரதேசம் ஒரு புராதனமான அழகை இங்குள்ள ஆரவாரமில்லாத அமைதியான நகரங்களில் பெற்றுள்ளது.

Read more about: travel, temple