Search
  • Follow NativePlanet
Share
» »புதுச்சேரி ஆரோவில்லுக்கு டூர் போறீங்களா? இதெல்லாம் தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க

புதுச்சேரி ஆரோவில்லுக்கு டூர் போறீங்களா? இதெல்லாம் தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க

இந்தியாவின் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள வானூர் வட்டப் பகுதியில் அமைந்துள்ளது, வெளிநாட்டினர் அதிகம் வந்து செல்ல சுற்றுலாத்தலம். அது இன்றைக்குப் புதுச்சேரியிலிருந்து 12 கி.மீ தொலைவில் உலகப்புகழ் பெற்ற ஆரோவில்லாக மலர்ந்துள்ளது. வெளிநாட்டினர் மட்டுமின்றி மன அமைதியை தேடும் உள்நாட்டினர் பலரும் தேடிச் செல்லும் மிக முக்கிய பகுதியாக மாறி உள்ளது.

புதுச்சேரி டிரிப் என்றாலே பலரின் டூர் பட்டியலில் கண்டிப்பாக ஆரோவில் இருக்கும். அப்படி ஆரோவில் செல்ல நீங்களும் பிளான் செய்திருக்கிறீர்கள் என்றால் அதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்களை பற்றி பார்க்கலாம்.

ஆரோவில் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை :

ஆரோவில் என்பது ஒரு சர்வதேச நகரம் ஆகும். இது புதுச்சேரிக்கு அருகில், தமிழ்நாட்டில் அமைந்துள்ளது. இது 1968 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. மனித ஒற்றுமையை மேம்படுத்துவதை இதன் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.

யுனெஸ்கோ இந்த திட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளது. உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 50,000 மக்கள் வரை இங்கு வசிக்க முடியும். தற்போது சுமார் 2,500 பேர் வசிக்கிறார்கள்.

ஆரோவில்லைச் சுற்றிலும் பழமையான சிறப்புக்குரிய சிவாலயங்கள், சிறு தெய்வக் கோயில்கள் அமைந்துள்ளன. 18 சிவன் கோயில்கள் உள்ளனவாக இப்பகுதி மக்களால் குறிப்பிட்டு சொல்லப்படுகிறது. குறிப்பாக, திருஞான சம்பந்தரால் பாடப்பெற்ற இரும்பை மாகாளம், திருவக்கரை, அரசிலி ஆலயங்களை ஒட்டி ஆரோவில் அமைந்துள்ளது.

இந்த மையத்திலிருந்து நாற்புறமும் சுருள் சுற்று வடிவத்தில் விரிந்த நான்கு பகுதிகள் உள்ளன. அதன் தென்கிழக்குத் திசையில் குடியிருப்பும், வடகிழக்குத் திசையில் பண்பாட்டுப் பகுதியும், தென்மேற்குப் பகுதியில் பன்னாட்டுப் பகுதியும் வடமேற்குத் திசையில் தொழிற்கூடங்களும் அமைந்துள்ளன. புதிய கட்டடக் கலைகள் பலவற்றின் உறைவிடமாகத் திகழும் ஆரோவில்லின் குடியிருப்புகள் இயற்கைச் சூழ்நிலையோடு அழகு நிறைந்து விளங்குகின்றன.

8 மொழிகளில் 25,000-க்கும்‌ மேற்பட்ட நூல்கள் மற்றும் குறுந்தகடுகளைக் கொண்ட நூலகங்கள் இங்கு உள்ளன. இந்திய மற்றும் பிறநாட்டு மொழிகளைக் கற்பதற்கான மொழிக்கூடம் இங்கு உள்ளது. பாரத் நிவாஸ் வளாகத்தில் ஆரோவில் ஆவணப்பாதுகாப்பு மையமும் செயல்படுகின்றது.

நடனம், யோகா, தற்காப்புக் கலை, இசை, ஓவியம் முதலியவற்றிற்கான பயிலரங்குகள், கண்காட்சிகள், கலைநிகழ்ச்சிகள், பல்வேறு ஒருங்கிணைந்த மருத்துவச் சிகிச்சை முகாம்கள், அறிவியல் கண்காட்சிகள் தொடர்ந்து நடத்தப் பெற்று வருகின்றன.

ஆரோவில்லிற்கும் வெளி நிறுவனங்களுக்கும் தங்கள் பங்களிப்பை நல்கி வரும் எழுத்தாளர்கள், இசை மற்றும் ஓவிய, நடன, கட்டடக் கலைஞர்கள், சிற்பிகள், நடிகர்கள், மட்பாண்டக் கலைஞர்கள் பலர் இயங்கி வருகின்றனர்.

ஆரோவில்லின் நுழைவுப் பகுதியிலேயே பார்வையாளர்கள் மையம் (VISITOR'S INFORMATION CENTRE) உள்ளது. அங்கு ஆரோவில் பற்றிய கண்காட்சி, மற்றும் படக்காட்சி ஆகியவற்றைக் காணலாம்.

மாத்ரி மந்திரைத் தொலைவிலிருந்து பார்வையிட நுழைவுச்சீட்டு வழங்கப் பெறும். அதற்கென எந்தக் கட்டணமும் கிடையாது. அதனைப் பெற்றுக் கொள்வோர், ஆம்பித் தியேட்டர் வரை சென்று தோட்டங்களைப் பார்வையிடலாம்.

முன் அனுமதி பெற்றவர்கள் மட்டும் குறிப்பிட்ட எண்ணிக்கை அளவிலேயே மாத்ரிமந்திரினுள் செல்ல அனுமதிக்கப் பெறுவதால் முன்கூட்டியே பதிவு செய்து கொள்வது நல்லது.

மைய உள் அறைக்குச் சென்று மன ஒருமையடைய வேண்டுவோர் மாத்ரி மந்திர் அலுவலகத்தில் தொலைபேசி வழியிலோ, நேரிலோ முன்பதிவு செய்து கொண்டு, முறையான அனுமதி பெற்றுச் செல்லலாம். மழை நாட்களில் அனுமதி இல்லை. மாத்ரிமந்திர் பகுதியில் நுழையும் போது பூரண அமைதி நிலைக்குத் தயாராகிக் கொள்வது நல்லது.

சில குறிப்பிட்ட தினங்களில் மாத்ரி மந்திருக்குள் செல்ல அனுமதிக்கப் பெறாத நிலையில் முன்கூட்டியே அதற்கான தகவல்களைத் தெரிந்து கொண்டு வருவது நல்லது.

புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்திற்குச் செல்ல விரும்பினால், 10 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டும். இதற்கு ஆன்லைன் முன்பதிவு வசதி உள்ளது.

More News

    Read more about: puducherry auroville
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+