» »பொள்ளாச்சி - அதிரப்பள்ளி : இப்படி ஒரு பைக் ரைடு போனா எப்படி இருக்கும் தெரியுமா ?

பொள்ளாச்சி - அதிரப்பள்ளி : இப்படி ஒரு பைக் ரைடு போனா எப்படி இருக்கும் தெரியுமா ?

Posted By: Sabarish

Subramonip

தென் இந்தியாவின் மேன்செஸ்டர், தொழில்நுட்ப வளர்ச்சி, மக்கள் தொகையில் அபரிவித அளவு என கோயம்புத்தூர் மாவட்டம் பல பெருமைகளைக் கொண்டுள்ளது நாம் அறிந்ததே. பொதுவாக மக்கள் தொகை, தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரிப்பின்போது நகரமயமாக்களின் அடிப்படையில் இயற்ப் பேரழகு அளிவது வழக்கம். அதேப்போன்றே கோயம்புத்தூர் அடுத்த மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகள் அழிக்கப்பட்டன. இருப்பினும், இன்றளவும் இயற்கையின் அளவில் சிறிதும் பொழிவிழக்காத பல மலைப் பிரதேசங்கள் இப்பகுதியில் காணப்படுவது வியக்கத்தகுந்த ஒன்றாகும்.

பசுமைக் காடுகள்

பசுமைக் காடுகள்

Jaseem Hamza

கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கோயம்புத்தூரை தனியாக பிரித்து வைக்கும் இயற்கைக் கோடு மேற்குத்தொடர்ச்சி மலை எனலாம். சுமார் 1600 கிலோமீட்டர்கள் பரந்துவிரிந்து உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையில் பசுமைக் காடுகள், வனவிலங்குகள், கொட்டும் நீரோடை என ஆண்டுதோரும் பசுமை நிறைந்து காணப்படும்.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி

Siva301in

கோயம்புத்தூரில் இருந்து சுமார் 43 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பொள்ளாச்சி நகரம். பல்வேறு காரணங்களால் கோயம்புத்தூர் தனது பசுமை அழகை இழந்த தோதிலும், பொள்ளாச்சி சற்று வேறுபட்டு இன்றளவும் தனது சுற்றுவட்டாரப் பகுதியினை பசுமைக் காடுகளாகவே பாதுகாத்து வருகிறது. அதில், டாப்சிலிப், வால்பாறை உள்ளிட்டவைகளும் அடங்கும்.

நீர்வீழ்ச்சிக் காடு

நீர்வீழ்ச்சிக் காடு

Arundask333

தமிழகத்திற்கும், கேரள மாநிலத்திற்கும் எல்லைக் கோடான அதிரப்பள்ளி, வால்பாறை அடுத்த சோலையாறு அணையை அடுத்தும், கேரளாவில் இருந்து கொடநாட்டிற்கு அடுத்தும் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. மேலும், அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியைச் சுற்றிலும் பல்வேறு அருவிகள் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து வருகின்றன.

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?

Caminoreal2bis

நீங்கள் நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் மலையேற்ற சாகம் செய்ய விரும்பினால் பொள்ளாச்சி - அதிரப்பள்ளி சாலை உங்களை உணர்வுப் பூர்வமாக உச்சத்திற்கு கொண்டு சென்றுவிடும். சாலை முழுக்க பசுமை போர்த்திய காடுகள், சில்லென்ற காற்று, அவ்வப்போது, சாலையில் வெளியேறும் காட்டு விலங்குகள் என இத்தனை அழகுகளையும் கண்டுரசிக்க கண்கள் இரண்டு போதுமா ?

பொள்ளாச்சி - வால்பாறை

பொள்ளாச்சி - வால்பாறை

Dilli2040

பொள்ளாச்சியில் இருந்து ஆழியார் வழியாக சுமார் 65 கிலோ மீட்டர் பயணித்தால் தேயிலைத் தோட்டங்கள் நிறம்பிய பசுமைக் காடுகளுக்கு நடுவில் அமைந்துள்ளது வால்பாறை. இந்த இடைப்பட்ட தூரத்தில் பொள்ளாச்சியில் இருந்து 22 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஆழியார் அணை, இதனை அடுத்துள்ள குரங்கு அருவி உங்களது பயணத்தை உற்றாகத்துடன் துவக்கி வைக்கும். நீங்கள் மீன் விரும்பியாக நீங்கள் இருந்தால் ஆழியார் அணையின் வெளிப்புறத்தில் வரிசையாக இருக்கும் மீன் கடைகளில் ஒரு வெளுவெளுத்துட்டு வாங்க.

வால்பாறை - சோலையாறு

வால்பாறை - சோலையாறு

Unknown

வால்பாறையில் இருந்து 25 கிலோ மீட்டர் காட்டு வழி சாலையில் பயணித்தால் மலை முகடுகளின் நடுவே உள்ள சோலையாறு அணையை அடையலாம். இந்த சாலை சற்று கறடுமுறடான சாலை என்பதால் அதற்கு ஏற்றவாறு வாகனங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், இதன் இடைப்பட்ட தூரத்தில் பெட்ரோல் நிலையங்களும் இல்லாத காரணத்தால் முன்கூட்டியே பெட்ரோல் நிறப்பிக்கொள்வது நல்லது. சக்கரத்தில் காற்றையும் சரிபார்த்துக்கொள்ள தவறிவிடாதீர்கள்.

சோலையாறு அணை

சோலையாறு அணை

Dilli2040

ஆசியாவிலேயே இரண்டாவது ஆழமான அணை என்று கூறப்படும் சோலையாறு பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் கீழ் வரும் ஒரு முதன்மையான நீர்த்தேக்கம் ஆகும். 160 அடி கொள்ளளவு கொண்ட இந்த நீர்த்தேக்கம், சுற்றியுள்ள மலைக் காடுகள் புகைப்பட விரும்பிகளை பெரிதும் ஈர்க்கக் கூடிய தன்மைகொண்டது.

தொட்டபுரா காட்சி முனை

தொட்டபுரா காட்சி முனை

Jaseem Hamza

சோலையாறு அணையில் இருந்து சுமார் 22 கிலோ மீட்டர் தொலைவில் அடர் வனப்பகுதியின் நடுவே உள்ளது தொட்டபுரா காட்சி முனை. ஆனைமலை- சாலக்குடி சாலையில் உள்ள இதன் அருகிலேயே சோலையாறு நீர்த்தேக்கமும் உள்ளது. சோலைவனக் காடுகளில் பெருக்கெடுத்து வரும் நீர் இப்பகுதியிலேயே இணைந்து பெரிய அணைபோல காட்சியளிக்கிறது. புகைப்படக் கலைஞராக இருந்தால் இந்தக் காட்டின் சற்று உட்புறத்தில் சுற்றித்திரியும் மான், முள்ளம்பன்றி, யானை, சாம்பார் மான் உள்ளிட்ட எளிதில் கண்களுக்குப்படும் விலங்குகளை புகைப்படம் எவ்வித இடையூறுமில்லாமல் புகைப்படம் எடுக்கலாம். ஆனால், வனப்பகுதியின் உட்புறத்தில் நீண்ட தூரம் செல்வதை தவிக்க வேண்டும்.

தொட்டபுரா - வழச்சல் நீர்வீழ்ச்சி

தொட்டபுரா - வழச்சல் நீர்வீழ்ச்சி

Ashujnmc

தொட்புராவில் இருந்து 29 கிலோ மீட்டர் தூரத்தில் தமிழக- கேரள எல்லையில் சோலயார் மலைப்பகுதியில் உள்ளது வழச்சல் நீர்வீழ்ச்சி. இது சாலக்குடி காடுகளிலிருந்து 36 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அடர் வனப்பகுதியாகும். அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியைப்போல் அல்லாது முற்றிலும் மாறுபட்ட தோற்றத்துடன் வேகமாக ஓடும் ஆறு போன்றே இந்த நீர்வீழ்ச்சி பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. பார்ப்பதற்கு நயாகரா போன்றே இதுவும் காட்சியளிப்பது குறிப்பிடத்தக்கது.

யானை வனச்சரகம்

யானை வனச்சரகம்

Jan Joseph George

வழச்சல் நீர்வீழ்ச்சியை சுற்றியுள்ள பகுதிகள் ஆற்றங்கரை பசுமைத்தாவரங்களை மிகுதியாக கொண்டுள்ளன. மேலும் இப்பகுதி முக்கியமான பறவைகள் சரணாலயமாகவும் இந்தியாவின் சிறந்த யானைப்பாதுக்காப்பு வனச்சரகமாகவும் அறியப்படுகிறது. பொதுவாக குறைந்த நீர் மட்டத்துடன் காணப்படும் இந்த நீர்வீழ்ச்சி மழைக்காலத்தின் போது நீர்மட்டம் உயர்ந்து மிக பிரம்மாண்டமான அகலமான ஆக்ரோஷமான வேகத்துடன் நீர் வழியும் நீர்வீழ்ச்சியாக மாறி விடுகிறது.

வழச்சல் - அதிரப்பள்ளி

வழச்சல் - அதிரப்பள்ளி

Dilshad Roshan

வழச்சலில் இருந்து சாலக்குடி ஆற்றங்கரையை ஒட்டியவாறே சுமுர் 5 கிலோ மீட்டர் பயணித்தால் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியை அடையலாம். இதன் இடையில் வழச்சலில் இருந்ழ ஒரு சிலை கிலோ மீட்டர்களிலேயே சப்ரா நீர்வீழ்ச்சியும் உள்ளது. இதனையடுத்து கேரள எல்லையான திருச்சூர் மலைப்பிரதேசத்தில் கொச்சியிலிருந்து 70 கிலோ மீட்டர் தூரத்தில் அதிரப்பள்ளி கிராமம் அமைந்துள்ளது.

ரம்மியமான வனப்பகுதி

ரம்மியமான வனப்பகுதி

Smartsweet32632

தென்னிந்தியாவின் மிகப்பிரசித்தமான நீர்வீழ்ச்சிக்கும் ரம்மியமான வனப்பகுதிகளுக்கும் இந்த அதிரப்பள்ளி புகழ்பெற்று விளங்குகிறது. பல்லுயிர் பெருக்கத்துக்கான இயற்கை வளத்தை பெற்றிருக்கிறது. அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி என்ற பிரசித்தமான நீர்வீழ்ச்சியோடு வழச்சல் மற்றும் சர்ப்பா என்ற துணை நீர்வீழ்ச்சிகளும் சேர்ந்து மொத்தம் மூன்று நீர்வீழ்ச்சிகள் இந்த அதிரப்பள்ளி கிராமப்பகுதியில் அமைந்துள்ளன. இப்பகுதியின் இயற்கை வளம் கேரளாவில் வேறெங்கும் காணமுடியாத தனித்தன்மையான செழிப்பை கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

பசுமைவனக் காடு

பசுமைவனக் காடு

Jaseem Hamza

மேற்குத்தொடர்ச்சி மலைகளுக்கு அருகில் அமைந்துள்ளதால் இப்பகுதி அடர்த்தியான தாவரங்களுடனும் பலவகைப்பட்ட உயிரினங்களுடனும் காட்சியளிக்கிறது. இந்த கிராமத்தை ஒட்டிய வனப்பகுதி அதிரப்பள்ளி வழச்சல் வனப்பகுதி என்று அழைக்கப்படுகிறது. அருகி வரும் பல உயிரினங்களும் பறவைகளும் இந்த காடுகளில் வசிக்கின்றன. இந்திய காட்டுயிர் அறக்கட்டளை அமைப்பு இந்த அதிரப்பள்ளி வனப்பகுதியை இந்தியாவிலேயே மிகச்சிறந்த யானைகள் பாதுகாப்பு தலமாக குறிப்பிட்டுள்ளது.

கவனம் தேவை

கவனம் தேவை

Sivavkm

இங்குள்ள அனைத்து நீர்வீழ்ச்சிகள் சுற்றுலாத்தலங்கள் போன்றவற்றுக்கு நல்ல சாலைகளும் பாதை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், பயணிகள் அதிக கவனத்துடன் பயணம் மேற்கொள்வது அவசியமாகும். பொதுவாக காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நீர்வீழ்ச்சி சாலையில் பயணம் செய்யலாம். மலையேற்றம், பிக்னிக் சிற்றுலா, மிதவைப்படகு சவாரி மற்றும் இதர பொழுது போக்கு அம்சங்கள் அதிரப்பள்ளியில் பயணிகளுக்காக காத்திருக்கின்றன.

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்