Search
  • Follow NativePlanet
Share
» »தெலங்கானாவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்கள்

தெலங்கானாவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்கள்

By

'தெலுங்கர்களின் நாடு' என்ற பொருளில் அறியப்படும் தெலங்கானா மாநிலம் இந்தியாவின் 29-வது மாநிலமாக ஜூன் 2, 2014-ஆம் ஆண்டு உதயமானது.

கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் மேற்கில், தக்காணப் பீடபூமியில் வாரங்கல், அதிலாபாத், கம்மம், நிஜாமாபாத், நல்கொண்டா, பத்ராச்சலம், மேடக், போச்சம்பல்லி, நாகர்ஜுனாசாகர் மற்றும் மாநிலத் தலைநகர் ஹைதராபாத் ஆகியவற்றை உள்ளடக்கி தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத் ஹோட்டல்களும், கொஞ்சம் டீல்களும்!

தெலங்கானாவின் சுற்றுலாத் தலங்கள்

தெலங்கானாவின் சுற்றுலாத் தலங்கள்

தெலங்கானாவின் முதன்மை சுற்றுலாத் தலமாக மாநிலத் தலைநகர் ஹைதராபாத் அறியப்படுகிறது. அதோடு வாரங்கல்லில் உள்ள ஆயிரம் தூண் கோயில், பத்ராச்சலம் போன்ற ஸ்தலங்கள் ஆன்மிக ஸ்தலங்களாக புகழ்பெற்றுள்ளன.

படம் : Adityamadhav83

ஹைதராபாத்

ஹைதராபாத்

சார்மினார், ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டி, ஐமேக்ஸ், பிர்லா மந்திர், ஃபலக்னுமா பேலஸ், கோல்கொண்டா கோட்டை, ஹுசேன் சாகர் ஏரி, லாட் பஜார், ஐமேக்ஸ், ஸ்னோ வேர்ல்டு என்று எக்கச்சக்கமான சுற்றுலாப் பகுதிகள் ஹைதராபாத்தில் கொட்டிக்கிடக்கின்றன.

ஹைதராபாத்தின் சுற்றுலாத் தலங்கள்

ஹைதராபாத்ஹோட்டல் டீல்கள்

படம் : Ryan

ஹுசேன் சாகர் ஏரி

ஹுசேன் சாகர் ஏரி

எப்போதும் வற்றாத நீர்த்தேக்கத்துடன் காட்சியளிக்கும் இந்த பிரம்மாண்ட ஏரி ஹைதராபாத் மற்றும் செகந்தராபாத் இரண்டையும் இணைப்பது போன்று காட்சியளிக்கிறது. ஏரியை சுற்றிலும் ‘நெக்லஸ் ரோடு' எனும் பிரசித்தமான வீதி அமைந்துள்ளது. இது 1562-ஆம் ஆண்டு ஹஸரத் ஹுசைன் ஷா வாலி என்பவரால் உருவாக்கப்பட்டது.

படம் : Alosh Bennett

சார்மினார்

சார்மினார்

ஹைதராபாத் எனும்போதே ‘சார்மினார்' என்ற பெயரையும் சேர்த்து சொல்லும்படியாக சர்வதேச அளவிலும் இது புகழ்பெற்றுள்ளது. சார்-மினார் எனும் பெயருக்கு நான்கு கோபுரங்கள் என்பது பொருளாகும். கோல்கொண்டாவிலிருந்து ஹைதராபாத்துக்கு தனது தலைநகரை மாற்றிக்கொண்டபிறகு இந்த சார்மினாரை முஹம்மத் குலி குதுப் ஷாஹி கட்டியுள்ளார்.

இராமோஜிராவ் ஃபிலிம் சிட்டி

இராமோஜிராவ் ஃபிலிம் சிட்டி

ஐதராபாத்திலிருந்து 25 கிலோ மீட்டடர் தொலைவில் உள்ள இராமோஜிராவ் ஃபிலிம் சிட்டி 1500 ஏக்கர் பரப்பளவில் இந்தியாவின் பெருமையாக அமைந்துள்ளது. இது ‘கின்னஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' பட்டியலில் உலகிலேயே சினிமாபடப்பிடிப்புக்கான மிகப்பெரிய படப்பிடிப்பு வளாகமாக இடம்பெற்றுள்ளது.

மேலும்...

ஃபலக்னுமா பேலஸ், ஹைதராபாத்

ஃபலக்னுமா பேலஸ், ஹைதராபாத்

ஹைதராபாத்தின் அடையாளங்களில் ஒன்றாக திகழும் சார்மினாரிலிருந்து 5 கி.மீ தொலைவில் ஃபலக்னுமா பேலஸ் அமைந்துள்ளது.

படம் : Mohan.mssg

ஷில்பராமம்

ஷில்பராமம்

ஹைதராபாத் நகரிலிருந்து 20 கி.மீ தூரத்தில் உள்ள இந்த கலைக்கிராமம் ஓவியம் மற்றும் சிற்பக்கலையை பேணவும் கைவினைத்தொழில் நுணுக்கங்களை வளர்க்கவும் உருவாக்கப்பட்டுள்ளது.

ஸ்னோ வேர்ல்டு

ஸ்னோ வேர்ல்டு

ஹைதராபாத்தில் உள்ள ஸ்னோ வேர்ல்டில் டன் கணக்கில் செயற்கை பனித்துகள் நிறைந்துள்ளதால் குழந்தைகளும் பெரியவர்களும் பனிக்கட்டி பொம்மைகள் உருவாக்கியும் பனியில் விளையாடியும் மகிழலாம். இந்த வளாகத்தில் நுழைந்தவுடனேயே உடலை சூடேற்றிக்கொள்வதற்காக சூடான சூப் பயணிகளுக்கு வழங்கப்படுகிறது. ஸ்னோ ட்யூப் ஸ்லைட், ஐஸ் பம்பிங் கார்ஸ், ஐஸ் ஸ்கேட்டிங் ரிங், ஸ்னோ வார் ஸோன் மற்றும் ஸ்லே ஸ்லைட் போன்ற விளையாட்டு அம்சங்கள் இந்த ஸ்னோ வேர்ல்டு பொழுது போக்கு மையத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

படம் : McKay Savage

ஹைடெக் சிட்டி

ஹைடெக் சிட்டி

பெங்களூர் மாநகரம் இந்தியாவின் மிகச்சிறந்த தகவல் தொழில் நுட்பத்துறை கேந்திரமாக மாறியபிறகு அப்போதைய ஆந்திர முதல்வரான சந்திரபாபு நாயுடு ஹைதராபாத் நகரத்தையும் ஒரு தகவல் தொழில்நுட்பவியல் கேந்திரமாக மாற்ற விரும்பினார். எனவே அவர் இந்த ஹைடெக் சிட்டி கேந்திரத்தில் பலவித கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி மிகப்பெரிய தகவல்தொழில் நுட்ப நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களை அமைப்பதற்கு வகை செய்துள்ளார்.

ஐமேக்ஸ்

ஐமேக்ஸ்

ஐமேக்ஸ் எனப்படும் விசேஷ திரைப்பட தொழில்நுட்ப வசதி மற்றும் பிரம்மாண்ட காட்சித்திரைகளுடன் ஹைதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த ‘பிரசாத் ஐமேக்ஸ்' திரையரங்கு தென்னிந்திந்தியாவில் முதல் முதலாக அமைக்கப்பட்ட ஐமேக்ஸ் திரையரங்காகும். இந்த திரையரங்கம் 72 அடி உயரமும் 92 அடி அகலமும் கொண்டது.

படம் : Mohan Krishnan

லாட் பஜார்

லாட் பஜார்

லாட் பஜார் அல்லது சூடி பஜார் என்று அழைக்கப்படும் இந்தக் கடைத்தெரு ஹைதராபாத் பழைய நகரப்பகுதியில், சார்மினாருக்கு வெகு அருகிலேயே அமைந்துள்ளது. வலையல்களுக்காக நாடு முழுவதும் பிரபலமான லாட் பஜாரில், லாட் வளையல்கள் என்று அழைக்கப்படும் ‘அமெரிக்கன் டைமண்ட்' பதிக்கப்பட்ட பூச்சு வளையல்களை நிறைய சுற்றுலாப் பயணிகள் வாங்கிச் செல்கின்றனர்.

பிர்லா மந்திர்

பிர்லா மந்திர்

ஹைதராபாத் நகரத்தில் பிர்லா பிளானட்டேரியத்துக்கு அருகிலேயே இந்த பிர்லா மந்திர் அமைந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து பிரத்யேக வரவழைக்கப்பட்ட வெண்பளிங்கு கற்களால் கட்டப்பட்டிருப்பது இந்த கோயிலின் சிறப்பம்சமாகும்.

அதிலாபாத்

அதிலாபாத்

தெலங்கானாவின் முக்கிய நகரங்களில் ஒன்றாக அறியப்படும் அதிலாபாத் நகரம் பல்வேறு கலாச்சார அம்சங்களின் கதம்ப நகரமாக காட்சியளித்துக்கொண்டிருக்கிறது. (படம் : அதிலாபாத் கோட்டை)

அதிலாபாத் சுற்றுலாத் தலங்கள்

படம் : Parth Joshi

பாசர சரஸ்வதி கோயில்

பாசர சரஸ்வதி கோயில்

அதிலாபாத்தில் உள்ள இந்த பாசர சரஸ்வதி கோயில்தான் இந்தியாவிலேயே சரஸ்வதி தேவிக்காக கட்டப்பட்ட மிகப்பெரிய கோயிலாகும்.

படம் : Bhaskaranaidu

குந்தலா அருவி

குந்தலா அருவி

அதிலாபாத்திலுள்ள குந்தலா எனும் இடத்தில் அமைந்துள்ள சிறிய அருவியான குந்தலா அருவி.

படம் : రహ్మానుద్దీన్

 நாகர்ஜுனாசாகர்

நாகர்ஜுனாசாகர்

தெலங்கானாவில் உள்ள நாகர்ஜுனாசாகர் நகரம் உலகம் முழுக்க வியாபித்து இருக்கும் புத்த மதத்தை சேர்ந்தவர்களின் முக்கிய யாத்ரீக மையங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.

நாகர்ஜுனாசாகரின் சுற்றுலாத் தலங்கள்

படம் : Sabyk2001

நாகர்ஜுனா சாகர் அணை

நாகர்ஜுனா சாகர் அணை

நாகர்ஜுனா சாகர் அணை கிருஷ்ணா நதியின் குறுக்காக கட்டப்பட்டுள்ளது. 124 உயரம் கொண்ட இந்த அணை 1.6 கி.மீ நீளத்துடனும், 26 கதவுகளுடனும் நவீன இந்திய கட்டிடக்கலையின் மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.

எத்திப்போத்தலா அருவி

எத்திப்போத்தலா அருவி

எத்திப்போத்தலா அருவி நாகர்ஜுனாசாகர் நகருக்கு வெகு அருகாமையிலும், நாகர்ஜுனாசாகர் அணையிலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கிறது. இந்த அருவி கிருஷ்ணா நதியின் கிளை நதியான சந்திரவங்காவிலிருந்து பிறந்து, 70 அடி உயரத்திலிருந்து ஆர்பரித்துக் கொட்டிக்கொண்டிருக்கிறது. இந்த அருவிக்கு அருகிலேயே அமைந்திருக்கும் ரங்கநாதன் மற்றும் தாத்ரேயர் கோயில்களுக்கு பயணிகள் நேரம் இருந்தால் சென்று வரலாம்.

படம் : Praveen120

பத்ராச்சல இராமர் கோயில்

பத்ராச்சல இராமர் கோயில்

ஹைதராபாத்துக்கு வடகிழக்கே 309 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த சிறிய நகரமான பத்ராச்சலத்திலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் பத்ராச்சல இராமர் கோயில் அமைந்துள்ளது.

படம் : Adityamadhav83

இராமாயணக் காட்சி

இராமாயணக் காட்சி

பத்ராச்சலம் கோதாவரி ஆற்றங்கரையில் உள்ள இராம லக்ஷ்மண சிற்பங்கள்.

படம் : Vivek rachuri

ஸ்ரீ யோகானந்த நரசிம்மசுவாமி கோயில்

ஸ்ரீ யோகானந்த நரசிம்மசுவாமி கோயில்

பத்ராச்சலத்தின் மற்றொரு புகழ்பெற்ற கோயிலான ஸ்ரீ யோகானந்த நரசிம்மசுவாமி கோயில்.

படம் : Adityamadhav83

வாரங்கல்

வாரங்கல்

வாரங்கல் மாவட்டம் அடிப்படையாக ஒரு விவசாய பூமியாக விளங்குகிறது. எனினும் இந்நகரத்தில் பல அற்புதமான கட்டிடக்கலை அதிசயங்கள் நிரம்பியுள்ளன.

வாரங்கல்லின் சுற்றுலாத் தலங்கள்

வாரங்கல் கோட்டை

வாரங்கல் கோட்டை

வாரங்கல் நகரத்தின் பிரதான சுற்றுலா அம்சமாக இந்த வாரங்கல் கோட்டை புகழுடன் அறியப்படுகிறது. தற்சமயம் சிதிலங்களின் மிச்சமாகவே காணப்பட்டாலும் இங்கு வீற்றிருக்கும் கலையம்சங்கள் நம்மை நமது மஹோன்னத வரலாற்று நாகரிகத்துக்கு இழுத்து சென்று கண் கலங்க வைப்பவை.

படம் : ShashiBellamkonda

ஆயிரம் தூண் கோயில்

ஆயிரம் தூண் கோயில்

நுணுக்கமாக வடிக்கப்பட்ட 1000 தூண்களைக்கொண்டதாக அமைந்துள்ளதால் இதற்கு ஆயிரம் தூண் கோயில் என்ற பெயர் வந்துள்ளது. இது வாரங்கல் கோட்டைக்கு அடுத்தபடியாக வாரங்கல் நகரத்தில் முக்கியமான சுற்றுலா அம்சமாக புகழ் பெற்றுள்ளது.

படம் : Gopal Veeranala

பத்ரகாளி கோயில்

பத்ரகாளி கோயில்

வாரங்கல்லில் உள்ள பத்ரகாளி கோயில்.

படம் : Sai Kanth Sharma Kondaveeti

Read more about: தெலங்கானா
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X