Search
  • Follow NativePlanet
Share
» »2500 ஆண்டுகள் பழமையான தமிழர்களின் புதையல்!

2500 ஆண்டுகள் பழமையான தமிழர்களின் புதையல்!

தமிழரின் விஞ்ஞானம் உலகையே மிஞ்சியதற்கான ஆதாரங்களாக 2500 ஆண்டுகள் பழமையான தமிழர்களின் புதையல் புதைந்துள்ள ஓர் கோட்டை உங்களுக்குத் தெரியுமா ?

தமிழர்களின் வரலாறு என்றாலே பல உலக அறிஞர்களே வியக்க வைக்கும ஆச்சரியங்களைக் கொண்டதாகவே இருக்கும என்பது நாம் அறிந்தது தான். என்னதான் அரசு தரப்பில் இரண்டாயிரம், மூன்றாயிரம் ஆண்டுகள் பழமையானது தமிழ் என்று சொன்னாலும் தற்போதும் அகழ்வாராய்ச்சியில் கிடைக்கும் சான்றுகள் இன்னும் கூடுதலான ஆண்டுகள் தமிழர்களின் நாகரீகம் பழமையானது என்றே தெளிவுபடுத்துகிறது. அக்காலத்து தமிழர்களின் கண்டுபிடிப்புகளும், வாழ்க்கை முறைகளும் இப்போதுள்ள விஞ்ஞானத்தையே மிஞ்சியுள்ளது என்றால் மிகையாகாது. அப்படி, உலக விஞ்ஞானத்தையே மிஞ்சிய தமிழர்களின் புதையல் புதைந்துள்ள ஓர் கோட்டை உங்களுக்குத் தெரியுமா ?

புதுக்கோட்டை

புதுக்கோட்டை

புதுக்கோட்டை பகுதி முழுவதுமே வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாகவே உள்ளன. சித்தன்னவாசல் குகை, கோட்டை, சமணப்படுக்கை, திருமயம் மலைக் கோட்டை, அருங்காட்சியகம் என இங்குள்ள வரலாற்று அம்சங்களை பட்டியலிடலாம். இவற்றை எல்லாம் கடந்து தற்போது மேலும் ஓர் மாபெரும் புதையல் கண்டுக்கப்பட்டுள்ளது என்றால் அது பொற்பனைக் கோட்டை தான்.

Thiyagu Ganesh

2500 ஆண்டு பழமையானது

2500 ஆண்டு பழமையானது

பொற்பனைக்கோட்டை சுமார் 2500 ஆண்டுகள் பழமையான உலோக உருக்கு ஆலையாக செயல்பட்டிருப்பது ஆச்சரியமே. தொல்லியல் ஆய்வுத் துறையினரால் கண்டறியக்கட்டுள்ள இங்கு கிடைக்கப்பெற்ற கல்வெட்டுக்களின் மூலமும், முன்னோர்களின் எச்சங்கள் மூலமும் இதனை உறுதி செய்ய முடிகிறது. இயற்கைச் சீற்றத்தினாலோ, அல்லது படையெடுப்பினாலோ அழிந்து போன இக்கோட்டை தற்போது மண்ணில் புதையுன்டு கிடக்கிறது.

Thiyagu Ganesh

தமிழர்களும், விஞ்ஞானமும்..

தமிழர்களும், விஞ்ஞானமும்..

உலக நாடுகளையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தான் தமிழன் என்பதற்கு சான்றுதான் இந்த 2500 ஆண்டுகள் பழமையான உலோக ஆலை. பொற்பனைக் கோட்டை உலோக உருக்கு ஆலையினுடைய வயதே சுமார் 2500 ஆண்டுகள் முற்பட்டதாக உள்ளது என்றால் கீழடி உள்ளிட்டவற்றை முழுவதுமாக ஆராய்ந்தால் தமிழர்களின் உண்மை வரலாறு தெரியும்.

Thiyagu Ganesh

பொன்பரப்பினான் கோட்டை

பொன்பரப்பினான் கோட்டை

பொன்பரப்பினான் கோட்டை என்றழைக்கப்பட்ட பொற்பனைக் கோட்டையில் வானாதிராயர்கள் என்னும் மன்னரின் கல்வெட்டுக்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. கோட்டையின் அடிந்த மதில் சுவர்களில் காவல் தெய்வங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் இன்றும் கம்பீரத் தோற்றத்துடன் உள்ள சிற்பம் கோட்டையின் மேல் தலத்தில் உள்ள மேலக்கோட்டை முனியும், கீழ் புறம் உள்ள கீழக்கோட்டை முனி, நடுவில் உள்ள காளி கோவில் ஆகும்.

உலோக உருக்கும் தொட்டிகள்

உலோக உருக்கும் தொட்டிகள்

சமதளமான கருங்கல் பாறையின் மேற்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த கோட்டையில் கல்லில் வடிக்கப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட வட்ட வடிவ உலோகம் உருக்கும் தொட்டிகள் அக்காலத்தின் விஞ்ஞான எச்சமாகும். குறிப்பாக, அந்தத் தொட்டிகளுக்கு அருகிலேயே தொட்டிக்குள் காற்றைச் செலுத்தி நெருப்பை வேகப்படுத்தும் துளைகளும் அமைக்கப்பட்டுள்ளது. தொட்டியையும் துருத்தியையும் தரைப்பரப்புக்கு கீழாக இணைத்திருக்கும் துளைகளை எந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இணைத்திருப்பார்கள் என்பதே இன்றும் கண்டறியமுடியாத அறிவியல் நுட்பமாக உள்ளது.

Thiyagu Ganesh

அலுமினியத் தாதுப் பொருட்கள்

அலுமினியத் தாதுப் பொருட்கள்

இக்கோட்டை ஆலை அமைந்துள்ள பகுதியில் இருந்து சில மீட்டர் தொலைவில் கற்களை உடைத்து உலோகத்திற்கான மூலப் பொருட்களை பிரித்தெடுத்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. இப்பகுதியில் அதிகப்படியான தாதுப்பொருட்கள் இருப்பதைக் கண்டறிந்ததாலேயே இங்கு ஆலை அமைக்கப்பட்டிருப்பதை காண முடிகிறது.

Thiyagu Ganesh

தமிழன்டா...

தமிழன்டா...


இன்னும் எத்தனை எத்தனையோ சிறப்புகள் இக்கோட்டையின் மண்ணில் சிதறிக்கிடக்கின்றன. ஊலோகத்தை உருக்கி எடுத்துச் செல்லப்பட்ட வழித்தடம், கழிவுகளை பிரித்த வாய்க்கால் என 2500 ஆண்டுகளுக்கு முன்பே தலைசிறந்த கண்டுபிடிப்பாலனாக நம் முன்னோர்களான தமிழர்கள் இருந்துள்ளனர். இன்னும் பல இடங்களில் நம் வரலாறு புதைந்தபடியே உள்ளது. இருப்பினும், இவ்வாறான கோட்டையின் வரலாற்றைக் கொண்டு இப்போது கெத்தாகக் கூறலாம் தமிழன்டா என்று.

Thiyagu Ganesh

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X