Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி ஏற்றப்பட்டது இப்படி ஒரு இடத்திலா?

இந்தியாவின் முதல் மூவர்ணக்கொடி ஏற்றப்பட்டது இப்படி ஒரு இடத்திலா?

Cover Image PC: (REF) Mike Behnken

நாம் சுதந்திரம் அடைவதற்கு முன்பே மூவர்ணக் கொடியை ஒரு தலைவர் ஏற்றியிருக்கிறார் தெரியுமா? நிச்சயமாக நீங்கள் நினைக்கும் நேதாஜிதான். அவர் முதல் முறையாக கொடி ஏற்றிய இடத்தைப் பற்றிதான் இந்த பதிவில் காணவிருக்கிறோம்.

1943ம் ஆண்டு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், இந்திய மூவர்ணக் கொடியை போர்ட் பிளேரில் ஏற்றினார். அவர் கொடி ஏற்றிய இடம் ஜிம்கானா கிரவுண்ட். அது இப்போது நேதாஜி ஸ்டேடியம் என்று அழைக்கப்படுகிறது. இந்த இடம் பற்றியும், இதனைச் சுற்றியுள்ள காணத் தகுந்த அழகிய இடங்கள் பற்றியும் இந்த பதிவில் காண்போம்.

எங்களது பதிவுகள் தொடர்ந்து கிடைக்க மறக்காமல் இந்த பக்கத்தின் வலது பக்க மேல் முனையில் இருக்கும் பெல் ஐகானை சொடுக்கி சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள். மேலும் எங்களது தமிழ் நேட்டிவ் பிளானட் முகநூல் பக்கத்தையும் மறக்காமல் பாலோ செய்யுங்கள்.

எங்குள்ளது?

அந்தமான்-நிகோபார் யூனியன் பிரதேசத்தின் தலைநகரமான இந்த போர்ட் பிளேர் நகரம் தெற்கு அந்தமான் தீவில் அமைந்துள்ளது. இது அந்தமான் தீவுக்கூட்டங்களிலேயே பெரிய தீவாகும். இந்த தீவின் தென்கோடியில் போர்ட் பிளேர் உள்ளது. வருடமுழுதும் இனிமையான வெப்பப்பிரதேச பருவநிலையை பெற்றுள்ளதோடு போதுமான அளவு மழையையும் இந்த தீவுப்பிரதேசம் பெறுகிறது.

இந்தியர்களுக்கு அனுமதியில்லை

இந்தியர்கள் மட்டுமல்லாது வெளிநாட்டினர்கள் மத்தியிலும் பிரசித்தமாக அறியப்படும் போர்ட் பிளேர் நகரத்தில் சில இடங்கள் இந்தியர் அல்லாதவருக்காகவே ஒதுக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

முப்படையினரின் கோட்டை இது

இந்தியாவைப் பொறுத்தவரையில் தேசப்பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான முக்கிய கேந்திரமாக திகழும் இந்நகரத்தில் இந்திய விமானப்படை, கப்பற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு படையினரின் செயல்பாடுகள் அதிக அளவில் காணப்படுகின்றன.

வரலாறு

1800 வது ஆண்டுகளின் பிற்பகுதியில் இது காலனிய இந்தியாவில் பரவலாக அறியப்பட்டிருந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ‘காலாபாணி' சிறைச்சாலை இந்நகரில்தான் அமைந்துள்ளது. சிறைச்சாலையானது அக்காலத்தில் இந்திய அரசியல் கைதிகள் மற்றும் சுதந்திரப்போராட்ட வீரர்கள் அடைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட வதைக்கூடமாக பயன்படுத்தப்பட்டதாகும். மிகக்கொடுமையான அநீதிகளும் கொடுமைகளும் கைதிகளுக்கு இழைக்கப்பட்ட சம்பவங்களும் ‘காலாபாணி' என்றும் ‘சிறைச்சாலை' என்றும் வெளியான திரைப்படங்களில் காட்டப்பட்டிருந்தது.

கேளிக்கை அம்சங்கள்

கேளிக்கை அம்சங்கள் நிரம்பிய பல கடற்கரைகளும், ஓய்வுச்சுற்றலா வசதிகளும் இந்நகரத்தில் நிறைந்துள்ளன. இந்த செல்லுலர் சிறைக்கு அருகிலேயே ஒரு நீர் விளையாட்டு வளாகமும் அமைந்துள்ளது. இங்கு படகுப்பாராச்சூட் பறப்பு, வாட்டர் ஸ்கூட்டர், துடுப்புப்படகு, மிதவைப்படகு போன்ற ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்துள்ளன.

வணிக நோக்குடன் இந்த பொழுதுபோக்கு அம்சங்கள் வழங்கப்பட்டாலும் அந்தமான் தீவுப்பகுதியின் இயற்கைச்சூழலில் இத்தகைய சாகசப்பொழுதுபோக்கு அம்சங்களில் ஈடுபடுவது விசேஷமான அனுபவமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

எப்போது எப்படி அடைவது

போர் பிளேர் நகரின் இதமான பருவநிலை இது போன்ற நீர் விளையாட்டுகளுக்கு பொருத்தமாக இருப்பது ஒரு கூடுதல் சிறப்பம்சம். போர்ட் பிளேர் நகரத்துக்கு பயணம் மேற்கொள்வதும் சுலபமாகவே உள்ளது.

சென்னை, கல்கத்தா மற்றும் புவனேஸ்வர் நகரங்களிலிருந்து போர்ட் பிளேர் வீர சாவர்க்கர் விமான நிலையத்துக்கு தினசரி விமான சேவைகள் உள்ளன. இது தவிர இந்திய கப்பல் துறை நிறுவனம் பலவிதமான சொகுசு பயணக்கப்பல்களையும் போர்ட் பிளேர் நகருக்கு இயக்குகிறது.

மலட்டுத் தீவு

இந்தியாவின் ஒரே உயிருள்ள எரிமலைத் தீவு இதுவாகும். இங்கு மட்டுமே தென்னாசியாவிலேயே அமைந்துள்ள ஒரே ஒரு எரிமலை உள்ளது.

போர்ட் பிளேரிலிருந்து 84 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த தீவு. இங்கு மனிதர்கள் வசிப்பதில்லை என்பதால் இது மலட்டுத் தீவு எனப்படுகிறது.

இங்கு சுற்றுலா வருபவர்கள் தனிமையில் இருக்கவும், காதலில் திளைக்கவும் வருகிறார்கள்.

வைப்பர் தீவு

காலாபானி சிறைச்சாலை கட்டப்படுவதற்கு முன்பு இந்த தீவில்தான் கைதிகள் தங்கவைக்கப்பட்டனர். போர்ட் பிளேர் நகரிலிருந்து 8 கிமீ பெர்ரி படகு மூலமாக பயணித்தால் இந்த தீவை அடையலாம்.

இந்த தீவில் வைப்பர் எனப்படும் மிகக் கொடிய விஷம் கொண்ட பாம்புகள் நிறைந்துள்ளன.

ஜாலி பாய் தீவு

கடல்சார் தேசிய பூங்கா அமைந்துள்ள வைரம் போல் ஜொலிக்கும் தூய மணற்பரப்பு மற்றும் மரகதப்பச்சை ஸ்படிக நீர்ப்பரப்பு போன்றவற்றை இந்த தீவின் கடற்கரைகள் கொண்டுள்ளன. மேலும் பயணிகளுக்கு அதிர்ஷ்டம் இருப்பின் டால்பின்களையும் இந்த தீவுப்பகுதியில் தரிசிக்க வாய்ப்புண்டு.

வனத்துறையிடமிருந்து நுழைவு அனுமதியை பெறவும் ஃபெர்ரி கட்டணமாகவும் முறையே ரூ 50 மற்றும் ரூ500 கட்டணத்தை போர்ட் பிளேர் துறைமுகத்திலேயே நீங்கள் செலுத்த வேண்டியிருக்கும். நீங்கள் கண்களால் பருகப்போகும் இயற்கை விருந்துக்கு இந்த கட்டணம் மிக மிக குறைவு என்பதை பயணத்தின்போது புரிந்துகொள்வீர்கள்.

ராஸ் தீவு

போர்ட் பிளேர் நகரத்திலிருந்து 2 கி.மீ தூரத்தில் கிழக்கே அமைந்துள்ள ராஸ் தீவில் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட சில கட்டிட அமைப்புகளின் சிதிலங்கள் காணப்படுகின்றன.

Read more about: travel andaman
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more