Search
  • Follow NativePlanet
Share
» »சில்லென்று பொழுதைக் கழிக்க மலபாரின் மகாராணியைப் பார்க்க போலாமா ??

சில்லென்று பொழுதைக் கழிக்க மலபாரின் மகாராணியைப் பார்க்க போலாமா ??

சில்லென்று பொழுதைக் கழிக்க மலபாரின் மகாராணியைப் பார்க்க போலாமா ??

By Sabarish

மலபார் என்றவுடனேயே உங்களுக்குத் தெரிந்திருக்கும் இன்று நாம் கேரள மாநிலத்திற்குத் தான் சுற்றுலா போகப் போகிறோம் என்று. கிழக்கே மேற்கு தொடர்ச்சி மலைகள், மேற்கில் அரபிக் கடல், தென்கிழக்கில் தமிழ்நாடு, வடகிழக்கில் கர்நாடகம் எல்லைகளாக அமைந்துள்ள கேரள மாநிலத்தில் நாம் சுற்றுலா செல்ல வேண்டும் என்றால் அதற்கு ஒரு குறிப்பிட்ட நாட்கள் போதாது. முழுவதுமாகவே இடம்பெயர வேண்டும் என்றுதான் கூற வேண்டும். அத்தகைய எண்ணற்ற சுற்றுலாத் தலங்களைக் கொண்டதுதான் கேரள மாநிலம்.

கேரளாவின் அடையாளங்கள்

கேரளாவின் அடையாளங்கள்


பெரும்பாலும், கேரளாவிற்குச் சுற்றுலா செல்பவர்கள் விரும்பி தேர்வு செய்வது கடற்கரை பகுதிகளையும், மலைத் தொடர்களையுமே. கோவளம், பேக்கள், முளுபிலங்காடு, வர்களா கடற்கரை பகுதிகளும், தேக்கடி, மூணார், வயநாடு, பெரியார் தேசியப் பூங்கா, ஆலப்புழா கட்டு வள்ளம், கொச்சி மற்றும் கொல்லம் போன்ற பகுதிகள் உலகில் மற்ற பகுதிகளில் உள்ள சுற்றலாப் பயணிகளையும் வெகுவாக ஈர்க்கும் வல்லமை கொண்டவையாக உள்ளது.

மலைத்தொடர் சுற்றுலா

மலைத்தொடர் சுற்றுலா


இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத இயற்கை எழில்கொஞ்சும் மலைத்தொடர்கள் கேரளாவில் மட்டுமே அமைந்துள்ளன என்றால் மிகையாகாது. வயனாடு, மூணாறு, உரும்பிக்கரை என ஏராளமான மலைச்சுற்றுலாத் தளங்கள் இங்கு உள்ளன. மேகக் கூட்டங்கள் உரசிச் செல்ல, பசுமைக் காட்சிகளை காண விருப்பமுடையோர் யாவரும் கேரளாவை புறக்கணிக்க முயல்வதில்லை. அதிலும், மனித நடமாட்டத்தால் பெரிதும் பாதிக்கப்படாத, இயற்கை பொழிவு மங்காத ஒரு கேரள மலைத்தொடருக்குத்தான் இன்று நாம் சுற்றுலா போகிறோம்.

ஜொளிக்கும் ராணியாய் காட்சியணிக்கும் ராணிபுரம்

ஜொளிக்கும் ராணியாய் காட்சியணிக்கும் ராணிபுரம்

காசர்கோடு மாவட்டத்தில் 50 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ராணிபுரம் மலைத்தொடர். அமைதியும், அடர்ந்த பசுமையும் நிறைந்த காடுகளைக் கொண்டுள்ள இங்கு இரண்டு டிரக்கிங் பாதைகள் உள்ளன. வண்ணமிகுந்த பட்டாம்பூச்சிகள், குளிர்ந்த சீதோஷன நிலையில் மட்டுமே காணப்படும் பறவைகள், வனவிலங்குகள் என எண்ணற்றவை இங்குள்ளது சுற்றுலா செல்ல மேலும் ஆவலைத் தூண்டும் வகையில் உள்ளது. கேரள- கர்நாடகாவின் எல்லையான இங்கு அவ்வப்போது யானைகளும் வந்து செல்வது சுற்றுலா வாசிகளுக்கு வியப்படையச் செய்யும் நிகழ்வாகும்.

குளிர்காலத்தில் கண்களைக் கவரும் வகையில் காட்சியளிக்கும் ராணிபுரம் கேரளாவைத் தேர்வு செய்து வரும் சுற்றுலா பயணிகள் தவறவிடக்கூடாத பகுதியாகும். நவீன நாகரிகத்தில் இருந்து மன அமைதியைத் தேடி வரும் கட்டிட காட்டு வாசிகள் இங்குள்ள மலைக் கிராமத்தில் ஓய்வெடுத்து அற்புதமான நினைவுகள் நிறைந்த குவியல்களுடன் வெளியேறலாம்.

Bibu Raj

அருகில் என்ன உள்ளது

அருகில் என்ன உள்ளது

மலோம் தேவாலயம், பெருத்தாடி ஸ்ரீ மகாதேவ கோவில், மேரி கிருத்துவ ஆலயம், ராணிபுரம் தேசியப் பூங்கா, கோட்டஞ்சேரி மலைத்தொடர், கிரேட்டர் தலகாவேரி தேசியப் பூங்கா என ராணிபுரத்தினை சுற்றிலும் கண்டு மகிழ வேண்டிய சுற்றுலாத் தலங்கள் ஏராளமாக உள்ளன. ராணிபுரம் மலைப்பகுதிக்குச் சுற்றுலா செல்லத் திட்டமிட்டீர்கள் என்றால் தவறாமல் இந்தப் பகுதிகளுக்கும் போய் பார்த்துட்டு வாங்க.

Vaikoovery

பெருத்தாடி ஸ்ரீ மகாதேவ கோவில்

பெருத்தாடி ஸ்ரீ மகாதேவ கோவில்


கேரளா பனத்தாடியில் இருந்து ராணிபுரம் செல்லும் சாலையில் மலை முகட்டின் அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது பெருத்தாடி ஸ்ரீ மகாதேவ கோவில். இயற்கை சூழ அமைக்கப்பட்டுள்ள இக்கோவிலில் சிவபெருமான் லிங்க வடிவில் தோற்றமளிக்கிறார். கேரளாவிற்கே உரித்தான கலைநயத்துடன் அமைக்கப்பட்டுள்ள இக்கோவிலின் தோற்றம் சற்று சீன கட்டிடத்தைப் போலவும் காட்சியளிக்கிறது. தொடர்ந்து ராணிபுரம் அருகருகே உள்ள கிருத்துவ தேவாலயங்கள், உங்களது இந்தப் பயணத்தை ஆன்மீகப் பயணமாகவும் மாற்றும்.

Vaikoovery

 ராணிபுரம் தேசியப் பூங்கா

ராணிபுரம் தேசியப் பூங்கா


கேரள- கர்நாடகாவின் எல்லைப் பகுதியில் மலோமில் இருந்து 27 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ராணிபுரம் தேசியப் பூங்கா. குடும்பத்தினருடன் அல்லது இளைஞர்களாக இந்த பயணத்தை வாகனத்தில் செல்கின்றீர்கள் என்றால் நிச்சயம் மறக்க முடியாத அனுபவங்களை இது ஏற்படுத்தும். நான்கு புறமும் பசுமை மலைக்காடுகள் சூழ நடுவே உள்ள இந்த பூங்காவில் கேரள வனத்துறையால் வனவிலங்கு சரணாலயமும் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு யானைகள், சிறுத்தைகள் உள்ளிட்ட மிருகங்களையும் பார்க்க முடியும்.
Vaikoovery

கோட்டஞ்சேரி மலைத்தொடர், மலோம்

கோட்டஞ்சேரி மலைத்தொடர், மலோம்

ராணிபுரத்தில் இருந்து 36 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கோட்டஞ்சேரி மலைத்தொடர். சற்று அடர்ந்த பசுமைமிக்க வனப்பகுதியாக காட்சியளிக்கும் இப்பகுதிக்குச் செல்ல பேருந்து வசதிகளும் உள்ளது.

Vaikoovery

கிரேட்டர் தலகாவேரி தேசியப் பூங்கா

கிரேட்டர் தலகாவேரி தேசியப் பூங்கா

ராணிபுரம் தேசியம் பூங்காவில் இருந்து 33 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கோட்டஞ்சேரி மலைத்தொடர். கேரளாவைக் கடந்து கர்நாடகாவிற்கு உட்பட்ட மேற்குத்தொடர்ச்சி மலையில் கடகு என்னும் பகுதியில் அமைந்துள்ள இங்கு செல்ல வனத்துறையின் முறையான அனுமதி பெறுவது கட்டாயம். கர்நாடகாவின் சுற்றுலாத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இது 105.01 சதுர கிலோமீட்டர் கொண்டதாகும். ஆங்காங்கே காபி மற்றும் ஏலக்காய் தோட்டங்கள் உள்ள கிரேட்டர் தலகாவேரி தேசியப் பூங்காவில் யானை, காட்டுப் பன்றி, நீலகிரி மான், சிறுத்தைப் புலி, லங்கூர், சாம்பார் மான், புள்ளி மான், பெரிய அளவிலான மலபார் அணில், பறக்கும் அணில், குள்ள மான், மங்கூஸ், பிரவுன் மங்கூஸ் உள்ளிட்ட வன விலங்குகளும், ராஜ நாகம், கோப்ரா, பைத்தோன் உள்ளிட்ட அரிய வகை பெரியளவிலான பாம்பு இனங்களும் காணப்படுகின்றன.

Bhavith21

எப்படிச் செல்வது

எப்படிச் செல்வது

கோவையில் நீங்கள் ராணிபுரம் மலைத் தொடருக்கு செல்ல திட்டமிட்டீர்கள் என்றால் சத்தியமங்கலம், ஆசனூர் வழியாக மைசூர் சென்று அங்கிருந்து கர்நாடகாவின் வழியாக பயணித்து ராணபுரத்தை அடையலாம். இந்த 402 கிலோ மீட்டர் தூர பயணத்திலும் நீங்கள் கண்டு ரசிக்க வேண்டிய சுற்றுலாத் தலங்கள் அதிகம் உள்ளன.

அணைகள் நிறைந்த வழிப்பாதை

அணைகள் நிறைந்த வழிப்பாதை

கோவையில் இருந்து 63 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பவானிசாகர் அணை உங்களது பயணத்தை இன்பமிகுந்ததாக மாற்றும். இதன் அருகிலேயே புகழ்பெற்ற பண்ணாரி அம்மன் கோவிலும் உள்ளது. தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலை 948 வழியாக பயணத்தை மேற்கொண்டால் அடுத்த 62-வது கிலோ மீட்டரில் உள்ளது சுவர்ணவதி அணை. இதனை அடுத்து பயணிக்க உள்ள பாதை முழுவதும் ஏரி, காவிரி ஆறு என மனதை மயக்கும் நீர்நிலைகள் இந்த சுற்றுலாவை மேலும் வலுசேர்க்கும்.

கேரளா வழியில் ராணிபுரம்

கேரளா வழியில் ராணிபுரம்

கர்நாடக வழியாக ராணிபுரம் மலைத்தொடரை சென்றடைவதை விட கேரன மாநிலம் வழியாக பயணிப்பது இந்த பயணத்தை நினைவுகள் மிகுந்ததாக மாற்றும். காரணம், வழிநெடுகிலும் உள்ள கடற்கரை பகுதிகளே. மொத்தம் 373 கிலோ மீட்டர் பயணத்தில் 200 கிலோ மீட்டர் கடற்பகுதிதான் உள்ளது. கோழிக்கோடு, கொய்லேன்டி, வகரா, தலசேரி, கன்னூர், பயனூர், கன்னங்காடு என கடற்களை ஓரத்திலேயே இந்த பயணத்தை நீங்கள் மேற்கொள்ளலாம்.

குட்டி கோவா

குட்டி கோவா


இந்தியாவில் உள்ள ஒரு முன்னாள் பிரெஞ்சு காலனிதான் குட்டி கோவா என்றிழைக்கப்படும் மாகி. இதன் மூன்று பக்கம் கேரளாவினால் சூழப்பட்டிருந்தாலும் இது பாண்டிச்சேரியுடன் இணைந்தது. கோழிக்கோட்டிலிருந்து 58 கிலோ மீட்டரிலும், கண்ணூரில் இருந்து 24 கிலோ மிட்டரிலும் அமைந்துள்ள மாகி சுற்றுலா தலத்திற்கு புகழ்பெற்றது. ராணிநகர் நோக்கியான இந்த பயணத்தை கூடுதலான நாட்களைக் கொண்டு திட்டமிட்டு மாகிக்கு செல்லாம்.

Read more about: travel trekking kerala
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X