» »ராவணன் அசுரணல்ல!! தெய்வம்!! - கிராமத்தில் நிகழும் மர்மங்கள் தெரியுமா?

ராவணன் அசுரணல்ல!! தெய்வம்!! - கிராமத்தில் நிகழும் மர்மங்கள் தெரியுமா?

Written By: Udhaya

சீதையை ராவணன் கவர்ந்து சென்றதால், மீட்டுவரவேண்டிய கட்டாயத்தில் ராமர் அனுமன் உதவியுடன் இலங்கைக்கு சென்றார்.

போரில் ராவணன் கொல்லப்பட்டு, சீதை மீட்கப்பட்டாள். கற்பில் சந்தேகமுற்ற ராமன் கண்முன் தீயில் இறங்கினாள் சீதை. சீதையை தன் விரலாலும் சீண்டவில்லை ராவணன் என்பதெல்லாம் ஒருபுறமிருக்க, ராவணன் எங்கள் தெய்வம் என கிளம்பி அவருக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகமெல்லாம் நடத்துகின்றனர் இந்த கிராமத்தினர். அதுவும் வில்லாலி வில்லன் ராமன் பிறந்த நம் நாட்டில்.. அந்த கிராமத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

ராவணன் அசுரனல்ல! தெய்வம்!!

ராவணன் அசுரனல்ல! தெய்வம்!!

மகாராஷ்டிர மாநிலம் அகோலா மாட்டத்தில் உள்ள சங்கோலா கிராம மக்கள் ராவணனை கடவுளாக வணங்கி வருகிறார்கள்.

ராவணன் அசுரனல்ல! தெய்வம்!!

ராவணன் அசுரனல்ல! தெய்வம்!!

இராவணனை இலங்கையை ஆண்ட அசுரகுல அரசன் என்கிறது இராமாயணம். அவனோ இயற்கை எழில் கொஞ்சும் இலங்கைத் தீவை செல்வசெழிப்பாக ஆட்சிபுரிந்துவந்துள்ளான்.

ராவணன் அசுரனல்ல! தெய்வம்!!

ராவணன் அசுரனல்ல! தெய்வம்!!

இராவணனை தமிழ் மன்னன் எனவும், அவன் நீதிதவறாதவன் என்றும் வரலாற்றுக் கதைகள் பரவியுள்ளது தென்தமிழ்நாட்டில். அதே நேரத்தில் இராவணனை கொன்ற தினத்தை கொண்டாடுபவர்களும் இருக்கின்றனர்.

தங்கை சொல் தவறாத அண்ணன்

தங்கை சொல் தவறாத அண்ணன்

இராமயணம் அடிப்படையில் பார்த்தால் கூட தன் தங்கைக்காகத்தான் எல்லாவற்றையும் செய்தார் இராவணன். இதனால் தங்கை சொல் தட்டாத அண்ணன் என்று அவரை போற்றுகின்றனர் இம்மக்கள்.

 சிவபக்தன்

சிவபக்தன்


இராவணன் அடிப்படையில் சிவபக்தன். அவன் செய்த செயல்களுக்கு தண்டனை கிடைக்கப்பெற்றது. அதற்காக ஒவ்வொரு முறையும் வதம் செய்து பழி தீர்க்கவேண்டியதில்லை என்பது இம்மக்களின் வாதம்.

மூக்கை அறுத்த லக்குவன்

மூக்கை அறுத்த லக்குவன்

இராமனின் தம்பி லக்குவன் இராவணின் தங்கை மூக்கை அறுத்து அவமானப்படுத்தியதால்தான் இராவணன் சீதையை கடத்திச் சென்றான். ஆனாலும், இராவணனும் நம் கடவுள் தான் என்கின்றனர்.

Gane Kumaraswamy

பத்து தலை சிலை

பத்து தலை சிலை

இராவணன் பத்து தலையுடன் காட்சிதரும் சிலை ஒன்றை வைத்து பூசை செய்கின்றனர் இக்கிராமமக்கள்.

Shyam Sundar

பூசாரி

பூசாரி

இந்த கோயிலின் பூசாரியான லக்டே என்பவர் கனவில் இராவணன் தோன்றி குறிப்பிட்ட இடத்தைக் கூறி அங்கு சிலை இருப்பதாகவும், அதை கோயிலாக கட்டி வழிபடுமாறும் கூறினானாம். அதன்படி இந்த வழிபாடு நடைபெற்று வருகிறது.

ஆரத்தி வழிபாடு

ஆரத்தி வழிபாடு

வாரம் தோறும் சனிக்கிழமைகளில் ஆரத்தி எடுத்து வழிபாடும் நடைபெறுகிறது. இது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Suraj Belbase

Read more about: travel temple

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்