Search
  • Follow NativePlanet
Share
» »ஆஞ்சநேயரின் மனித முகம் எப்படி இருக்கும் தெரியுமா? பாம்பன் அருகே காணுங்கள்!

ஆஞ்சநேயரின் மனித முகம் எப்படி இருக்கும் தெரியுமா? பாம்பன் அருகே காணுங்கள்!

பாம்பன் தீவருகே கண்டமதனா மலையில் ஆஞ்சநேயர் வாழ்கிறார்! ஆச்சர்யத் தகவல்கள். #தேடிப்போலாமா? 5

ஆஞ்சநேயர் என்பவர் ஒரு கடவுளாகவும், ராம பக்தராகவும் பரவலாக அறியப்படுகிறார். இந்த உலகில் ஆஞ்சநேயர் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்கிறார்கள். அதை எத்தனைபேர் நம்புகிறார்கள் என்பது தெரியவில்லை.

ஆனாலும், அவர்மீது உண்மையான பக்தி கொண்டவர்கள் அவர் இன்னும் உயிரோடு இருப்பதை நம்புகின்றனர். அப்படி இந்தியாவில் பல்வேறு இடங்கள் கூறப்பட்டாலும், தமிழகத்தின் பாம்பன் தீவருகே அவர் அடிக்கடி வருவதாக நம்பப்படுகிறது.

சீதையை காக்க அனுமன் படை இந்த வழியாகத்தான் சென்றது.. அப்படியானால் இது உண்மையாகத்தானே இருக்கும் என்ற வாதத்தை முன்வைக்கின்றனர் அவர்கள். சரி, பாம்பன் தீவில் அமைந்திருக்கும் கண்டமதனா மலைக்கு ஒரு சுற்றுலா செல்வோமா?

 எங்குள்ளது

எங்குள்ளது

தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது ராமேஸ்வரம். இதன் அருகில் அமைந்துள்ளது பாம்பன் தீவு. இங்குதான் அந்த மலை இருக்கிறது. இங்குதான் ஆஞ்சநேயர் அடிக்கடி வந்து செல்வதாக நம்பப்படுகிறது. ஆஞ்சநேய பக்தர்கள் பலர் இதை நம்பி இந்த கோயிலுக்கு சென்று பூசை செய்து வழிபட்டு வருகின்றனர். இன்னும் சிலர் இந்த கோயில்களில் ஆஞ்சநேயரைப் பார்த்ததாகவும் சொல்கின்றனர்.

21ம் நூற்றாண்டில் இதையெல்லாம் நம்ப முடியாமல் இருக்கலாம். எனினும் மக்களின் நம்பிக்கைக்கு மிகுந்த சக்தி உண்டு என்பதால் நாமளும் இந்த கோயிலுக்கு சென்று பார்க்கலாம்.

 எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?

ராமேஸ்வரத்திலிருந்து மூன்று கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த மலை. கிட்டத்தட்ட தீவின் மேற்கு எல்லையில் உள்ள அழிந்த நகரான தனுஷ்கோடிக்கு செல்லும் பாதையில் அமைந்துள்ளது.

ராமேஸ்வரத்திலிருந்து வெகு அருகில் அமைந்துள்ள இந்த இடத்தை வெறுமனே கேள்வி ஞானத்தின்பேரிலேயே அறிந்துள்ளோம். வாருங்கள் நேரிடையாக சென்று பார்க்கலாமே.

ஒரே தாவலில்

ஒரே தாவலில்


கண்டமதனா மலைக்குன்றின் உச்சியில் இருந்தே ஆஞ்சநேயர், ராவணன் ஆட்சி செய்த இலங்கைப் பகுதியை நோட்டமிட்டதாகவும், இங்கிருந்து ஒரே தாவலில் இலங்கைச் சென்றடைந்ததாகவும் இங்குள்ள மக்களின் நம்பிக்கை.

ராம பக்தரான ஆஞ்சநேயர், தன் மார்பை கிழித்து ராம சீதை உருவத்தைக் காட்டியதாக புராணத்தின்படி நம்பும் மக்கள் இங்கு நிறைய இருக்கிறார்கள் அல்லவா.

சுற்றுலா திட்டம்

சுற்றுலா திட்டம்


ஒவ்வொரு சுற்றுலாவின் போதும் நீங்கள் கட்டாயம் துல்லியமான திட்டமிடல் செய்துகொள்ளவேண்டும். அதுதான் வழிப்பயணத்தில் உங்களுக்கு நேரத்தையும், பணத்தையும் மிச்சமாக்க உதவும்.

சென்னையிலிருந்து ராமேஸ்வரம், ராமேஸ்வரத்திலிருந்து அனுமான் வாழும் இடம் எப்படி செல்லலாம் என்பது பற்றி இந்த பதிவில் காணலாம்.

ரொமான்டிக்கான பீச்சுகள்

ரொமான்டிக்கான பீச்சுகள்

இந்த அளவு ரொமான்டிக்கான பீச்சுகள் நம்ம ஊரில் இருக்கு தெரியுமா?

சென்னை - ராமேஸ்வரம்

சென்னை - ராமேஸ்வரம்

சென்னையிலிருந்து ராமேஸ்வரம் மொத்தம் 11 மணி நேரத் தொலைவு ஆகும். சுய வாகனத்தில் வந்தால் அதைவிட 2 மணி நேரங்கள் குறைவான நேரத்திலேயே வந்தடையலாம்.

வரும் வழியில் மேல்மருவத்தூர், அரியலூர், திருச்சி, சிவகங்கை என பல இடங்கள் பார்க்கமுடியும்.

ராமேஸ்வரத்தில் நாம் காணவேண்டிய இடங்கள் ஏராளமாக இருக்கின்றன. எனினும் முதலில் நாம் ஆஞ்சநேயர் வாழ்ந்த இடத்தைப் பார்த்துவிட்டு, பின் அடுத்தடுத்த சுற்றுலாத் தளங்களை பார்க்கலாம்.

 ராமேஸ்வரம் - ஆஞ்சநேயர் வாழும் இடம்

ராமேஸ்வரம் - ஆஞ்சநேயர் வாழும் இடம்


இது மலைப்பகுதி என்பதால், நடந்தே சென்றுவிடலாம். 3கிமீ அளவுக்கு நீங்கள் நடந்துசெல்லவேண்டும். மிதமான வேகத்தில் நடந்தால் 40 நிமிடங்களில் கோயிலை அடைந்துவிடலாம். அல்லது சுய வாகனத்திலோ, வாடகை வாகனத்திலோ செல்லலாம். இந்த கோயிலுக்கு ராம் சரூர்க்கா கோயில் என்று பெயர்.

 ராம் சரூர்க்கா கோயில்

ராம் சரூர்க்கா கோயில்

ராமர் பாதம் எனும் இடத்துக்கு அருகே இந்த கோயில் அமைந்துள்ளது. ராமேஸ்வரத்திலிருந்து இந்த கோயிலுக்கு போகும் வழியில் எண்ணற்ற தீர்த்தங்களும், கோயில்களும் அமைந்துள்ளன.

கோவாவின் உண்மை முகம்

கோவாவின் உண்மை முகம்

நீங்கள் அதிகம் தெரிந்திராத கோவாவின் உண்மை முகம்

செல்லும் வழியில் உள்ள கோயில்கள்

செல்லும் வழியில் உள்ள கோயில்கள்

இரட்டைப் பிள்ளையார் கோயில், சுக்ரீவர் தீர்த்தம்,அம்மன் கோயில், அங்கதன் தீர்த்தம், ஜாம்பவான் தீர்த்தம், ஷாக்சி ஹனுமான் கோயில், ராமர் பாதம் கோயில் ஆகியன அவற்றுள் முக்கியமானவையாகும்.

 கண்டமதனமலையின் சிறப்புகள்

கண்டமதனமலையின் சிறப்புகள்

கண்டமதன பர்வதம் எனும் கண்டமதன மலை மிகவும் சிறப்பு வாய்ந்தது. ராமேஸ்வரம் செல்பவர்கள் கட்டாயம் இந்த மலைக்கு சென்றே வருகின்றனர். இங்கு ராமர் பாதம் எனும் கோயிலும் அமைந்துள்ளது.

இந்த மலையில் சிறப்பான சூரிய உதயம் மற்றும் மறைவு காட்சிகளைக் காணமுடியும். ராமர் பாதத்தைக் காண வருபவர்கள் இங்கு வந்து சூரிய உதயம் மற்றும் மறைவு காட்சிகளை கண்டு மகிழ்கின்றனர்.

 சுக்ரீவர் தீர்த்தம்

சுக்ரீவர் தீர்த்தம்


இந்த கோயிலுக்கு செல்லும் வழியில் சுக்ரீவர் தீர்த்தத்தைக் காணலாம். அருகிலேயே சுக்ரீவர் கோயில் அமைந்துள்ளது. மேலும் இந்த மலையின் மீதேறி ராமேஸ்வரம் முழுவதையும் கண்டுகளிக்கலாம்.

அருகிலுள்ள மற்ற தீர்த்தங்கள்

அருகிலுள்ள மற்ற தீர்த்தங்கள்

ராம தீர்த்தம், பீம தீர்த்தம், அர்ஜூன் தீர்த்தம், கண்டமதன தீர்த்தம், தர்மா தீர்த்தம், வீர தீர்த்தம், கிருஸ்ண தீர்த்தம், பஞ்ச தீர்த்தம், நகுல தீர்த்தம், சகாதேவ தீர்த்தம், பரசுராம தீர்த்தம், குமுதா தீர்த்தம் என நிறைய இருக்கின்றன.

ராமேஸ்வரம் சென்றால் செய்த பாவங்கள் போகும் என்றும் கூறுவார்கள். அவர்களுக்காக இல்லையென்றாலும், சுற்றுலாவுக்காக சென்று வாருங்களேன்.

கோயில்கள்

கோயில்கள்


ராமேஸ்வரத்தில் அமைந்திருக்கும் கோயில்கள் அனைத்துக்கும் போவதென்றால் நீங்கள் ஒரு முழு நாள் முழுவதையும் இங்கேயே செலவிடவேண்டும்.

ராமேஸ்வரம் தொடங்கும்போதே நாம் பாம்பன் பாலத்தில் பயணித்து வரவேண்டும். பாம்பன் பாலம் கடந்து தரையில் நாம் முதலில் பார்ப்பது அன்னை வேளாங்கன்னி தேவாலயம் ஆகும். பின் சற்று தொலைவில் தங்கச்சிமடம் அமைந்துள்ளது. அங்கு புனித வளனார் ஆலயம் அமைந்துள்ளது. அதையடுத்து அருளானந்தர் சர்ச் அமைந்துள்ளது. அப்படியே ராமதீர்த்தத்தை அடைந்து பின் ராமேஸ்வரத்தை அடைகிறோம். அங்கு ராமநாதசுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலைச் சுற்றி எண்ணற்ற உணவகங்கள், விடுதிகள் என நிறைய கடைகள், ஷாப்பிங் இடங்கள் இருக்கின்றன.

தஞ்சைக் கோயில்

தஞ்சைக் கோயில்

ராஜராஜனின் தஞ்சைக் கோயிலில் இத்தனை சிறப்புக்களா?

Read more about: travel temple rameshwaram
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X