Search
  • Follow NativePlanet
Share
» »காற்று வெளியிடை கிளைமேக்ஸ் லோகேஷனுக்கு ஒரு லாங் டிரைவ் போலாமா?

காற்று வெளியிடை கிளைமேக்ஸ் லோகேஷனுக்கு ஒரு லாங் டிரைவ் போலாமா?

By Vinubala Jagasirpiyan

இயக்குநர் மணிரத்னம், இசைப்புயல் ஏஆர் ரஹ்மான், கார்த்தி ஆகியோர் கூட்டணியில் உருவாகும் படம் காற்று வெளியிடை. இந்த படத்தோட படப்பிடிப்பு எல்லாம் முடிஞ்சி விரைவில் படம் திரைக்குவர விருக்கிறது.

இந்த படத்தோட கிளைமேக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்ட இடத்துக்கு ஒரு டூர் போய்ட்டுவரலாம் வாங்க....

இந்த மாநிலத்தின் பரிபாலமான மற்றும் சாகச பயணமாக திகழ்கிறது மணாலியில் இருந்து லெஹ் லடாக் செல்லும் சாலை பயணம். ஏறத்தாழ 500 கிமி நீள்கிற இப்பாதை பயணிபிப்பதற்கு ஓர் சுவாரஸ்யமான  உணர்வு தருவதோடு,  மிக அழகான இயற்கை சார்ந்த காட்சிகள் மற்றும் பனி சூழ்ந்து கொண்டு இருக்கும் அழகை தொகுத்து வழங்குகிறது. போக்குவரத்து தேர்வு முற்றிலும் உங்கள் விருப்பமே ஆனால் எதில் வாயிலாக சென்றாலும் அழகிய காட்சிகள் மற்றும் சாகசங்கள் உறுதி.

இந்த பயணத்தின் இறுதியில் லெஹ்வின் வரிசையான பள்ளத்தாக்கின் உச்சியில் நீங்கள் நின்று கொண்டிருப்பீர்கள். இந்த பயணத்திற்கு உங்களை தயார் செய்து கொள்ளுங்கள். ஐந்து மலை வழிகளை தாண்டி செல்ல வேண்டிய கட்டையம் உள்ளது இப்பயணத்தில், ஒவ்வொன்றும் சுமார் 13,000அடியில் இருந்து 17,000 அடிவரை உயரம் ஆகும்.

மேடும் பள்ளமுமாக இருக்கும் இந்த பாதை பல தனித்துவமான இயற்கை அதிசயங்களை கடந்து வருகிறது. பணிகளால் படர்ந்து இருக்கும் இந்த சாலைகள் ஜூன் மாதத்தின் பாதியின் முதல் நவம்பர் மாதம் வரை மட்டுமே உபயோகிக்க கூடிய நிலைமையில் இருக்கும்.

இங்கே குறிப்பிட பட்டிருக்கும் 12 இடங்கள் இந்த சாலை வழி பயணத்திற்கு மேலும் ஒரு சிறப்பை சேர்க்கிறது.

பாங்கொங் ஏரி:

பாங்கொங் ஏரி:

பாங்கொங் என்றும் இந்த அழகிய ஏரி லேஹில் இருந்து கிட்டத்தட்ட 160கிமி தூரத்தில் உள்ளது. இந்த ஏரிக்கு செல்லும் பயணம் கண்டிப்பாக உங்களுக்கு ஓர் அற்புத அனுபவத்தை தரும். இந்த அமைதியான மற்றும் சாந்தமான ஏரி, ஓர் பயணியின் சொர்க்கம் மட்டுமல்லாது ஓர் புவியியல் வல்லுநர்க்கு ஏற்ற இடம். ஓர் சுவராஸ்யமான குறிப்பு என்னவென்றால் இந்த ஏரியில் நிறைந்த உப்பு தண்ணீரால் நீர்வாழ் உயிரினங்களே இந்த பகுதியில் இல்லை. எனினும் இங்கே வாத்துகள் மற்றும் நீர் பறவைகள் தண்ணீரில் மிதப்பதை பார்க்கலாம். "3 இடியட்ஸ்" என்னும் பிரபலமான படத்தின் இறுதிக் காட்சிகள் இங்கே தான் சித்தரிக்க பட்டது.

PC: Sreehari Sukumaran

ட்ஸோ மோரிரி ஏரி:

ட்ஸோ மோரிரி ஏரி:

ட்ஸோ மோரிரி "மலைகளின் ஏரி" என்றும் அழைக்கப்படுகிறது. லெஹ் மலைகளின் மத்தியில் உள்ள இந்த ஏரி ஓய்வு எடுக்க சிறந்த இடம். இந்த இடத்தில் இருக்கும் ஒரு வித அமைதியே அதற்கு காரணம். இந்த ஏரியை சுற்றி இருக்கும் பெர்றேன் குன்றும், பனி படர்ந்த மலைகளும் ஒரு அழகிய பின்னணியை அளிக்கிறது.

ட்ஸோ மோரிரிக்கு பொது போக்குவரத்து எதுவும் கிடையாது. நீங்கள் அங்கே உள்ள சுற்றுலா பயணவழிகாட்டியை தொடர்பு கொள்ள வேண்டும்.அவர்கள் தரும் அனுமதி சான்றிதழ்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும். முடிந்தால் அதற்கு நகல்களை எடுத்து கொள்ளவும், ஏனினில் சில சோதனை சாவடிகளில் இந்த சான்றிதழை அவர்கள் குறிப்பிற்காக வைத்துக்கொள்வர்.

PC: KennyOMG

 ராயல் லெஹ் மாளிகை:

ராயல் லெஹ் மாளிகை:


லாச்சேன் பல்காற் எனவும் அழைக்கப்படும் லெஹ் மாளிகை, லெஹ் இராச்சியத்தின் முன்னாள் மாளிகை ஆகும். லெஹ் நகரத்தில் உள்ள ஓர் மிக பெரிய சுற்றுலா தலமாக இது விளங்குகிறது. பண்டைக்கால லெஹ் நகரத்தில் இருக்கும் நம்கயல் குன்றை இந்த லெஹ் மாளிகை மிஞ்சுகிறது. இது புத்த மதத்தினரின் கலாச்சாரங்களுக்கும், அவர்களின் மதத்திற்கும் ஓர் முக்கிய மையமாகவே இருக்கிறது. மோசமான நிலையில் இருக்கும் இந்த மாளிகை தற்பொழுது இந்திய தொல்பொருளவாளர்களால் கவனிக்க பட்டு வருகிறது.

PC: KennyOMG

சன்ஸ்கர் பள்ளத்தாக்கு:

சன்ஸ்கர் பள்ளத்தாக்கு:

ஹிமாலயன் மலையின் வடக்கு பகுதியில் உள்ள சன்ஸ்கர் பள்ளத்தாக்கு, அதிக உயரத்தில் உள்ள அரை பாலைவனம் ஆகும். சன்ஸ்கர் பள்ளத்தாக்கு இரண்டு முக்கிய சன்ஸ்கர் ஆறுகளான டோடா மற்றும் கற்கியாக நதிகளின் இடையே உள்ள பிரதேசத்தில் உள்ளது.

சாகசம் விரும்புவோர்களுக்கு சன்ஸ்கர் ஓர் பிரபலமான இடம், இவர்களுக்கு இவ்விடம் ஏமாற்றம் அளிக்காத ஒன்றாக இருக்கிறது. இவ்விடம் இந்தியாவிலேயே அதிவேக படகு சவாரிக்கு ஏற்ற இடமாக உள்ளது, வேகம் அளவு தரம் III அல்லது IV வரை செல்ல கூடிய வசதி இங்கு உள்ளது. மலை ஏறுதல் மற்றும் நடைபயணம் கூட இங்கே வரும் சுற்றுலா பயணிகள் விரும்பும் ஒன்றாகும்.

PC: Narender9

காந்த மலை:

காந்த மலை:


லெஹ் - கார்கில் - பால்டிக் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றால் இந்த காந்த மலையை அடையலாம். லேஹில் இருந்து 30 கிமி துலைவில் இருக்கும் இந்த மலை, கடல் மட்டத்தில் இருந்து சுமார் 14,000 அடி உயரத்தில் உள்ளது. இங்கே இருக்கும் காந்த சக்தியின் காரணம் இயற்கை அல்லது அதையும் மீறிய எதோ ஒரு சக்தி என்று பலர் நம்புகின்றனர்.
இந்த காந்த மலையில் இருக்கும் ஓர் கீழ் நோக்கி இருக்கும் சரிவு, ஒளியியல் மாயையினால் மேல்நோக்கி இருப்பது போல் ஓர் பொய் விம்பத்தை பதிவு செய்கிறது. அதனால் இந்த சரிவில் நிறுத்தப்படும் அணைக்கப்பட்ட ஓர் வாகனம் தன்னாலேயே நகரும். இது வெறும் மாயை தான்.

PC: AKS.9955

நுப்ரா பள்ளத்தாக்கு:

நுப்ரா பள்ளத்தாக்கு:

லெஹ்யின் மேற்கு பகுதியில் இருந்து 150கிமி துலைவில் நுப்ரா பள்ளத்தாக்கு உள்ளது. இங்கே ஷோய்கு மற்றும் சியாச்சன் நதிகள் இணைந்து ஓர் பெரிய பள்ளத்தாக்கை ஏற்படுத்தி உள்ளது. இந்த பள்ளத்தாக்கு தான் லடாக்கை, கரகோரம் எல்லைகளை பிரபலமான சியாச்சென் பனிப்பாறைகளில் இருந்து பிரிக்கிறது.
வடகிழக்கு பகுதியில் உள்ள நுப்ரா பள்ளத்தாக்கில் தான் சஸ்ஸர் மற்றும் பிரபலாமான "சில்க் ரூட்" உள்ள கரோகரமும் உள்ளது. இதுவே நுப்ராவில் இருந்து சின்ஜிஅங் செல்லும் வழி.
நுப்ரா பள்ளத்தாக்கின் உள்ள வடக்கு எல்லையில் இருக்கும் கடைசி இலக்கு இந்த பணமிக்க கிராமம். இந்த இடத்திற்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்க படுகின்றனர் இது மட்டும் அல்லாது நுப்ரா பள்ளத்தாக்கில் பல உள்ளன. லெஹ்க்கு செல்லும் சுற்றுலா பயணிகள் தவற விடக்கூடாது இடமாக இருக்கிறது இது.

PC: KennyOMG

சாந்தி ஸ்துப்பா:

சாந்தி ஸ்துப்பா:

சான்ஸ்ப மலை உச்சியில் அமர்ந்து இருக்கும் சாந்தி ஸ்துப்பா, புத்தர்களின் வெள்ளை குவிமாடம் ஆகும். இது உலக அமைதிக்காகவும், செழிப்பிற்காகவும் மற்றும் புத்த சமயத்தின் 2500 ஆண்டுகள் நினைவு சின்னமாகவும் கட்டப்பட்டது. இந்த ஸ்துப்பா ஜப்பானிய புத்தர்களாலும் லடாக் புத்தர்களாலும் கட்டப்பட்டது. இந்த இடத்தில இருந்து பார்க்கும் பொழுது இயற்கையின் விசாலமான அழகு நம் கண்களுக்கு விருந்தாகும். மத முக்கியத்துவங்களை தவிர இவ்வகையான இயற்கை சூழலே இவ்வடத்திற்கு பெரிய அளவில் சுற்றுலா பயணிகளின் வருகையை தருகிறது. இந்த ஸ்துப்பாவின் அடித்தளத்தில் புத்தரின் பீடம் உள்ளது.

Pc: Ronakshah1990

கார்கில்:

கார்கில்:


லெஹ்க்கு அடுத்த லடாக்கில் உள்ள இரண்டாம் பெரிய நகரம் கார்கில். இது லெஹ்யில் இருந்து சுமார் 234 கிமி தொலைவில் உள்ளது. இந்திய போர் வரலாற்றில் முக்கிய இடம் பதித்து உள்ள கார்கில், சுற்றுலா பயணிகளை பெரிய அளவில் ஈர்க்கிறது.
அதுமட்டும் இல்லாமல் இந்த இடம் சாகச விரும்பிகளுக்கு ஓர் சொர்க்க பூமி. இது மலை ஏறுதலுக்கு மற்றும் நடைப்பயணம் செலுத்தலுக்கு சரியான இடமாகும். சனி, ரங்குண்டம், சோங்குள், ஸ்டோவ்ண்டே, முல்பெக் மடாலயம் கார்கிலில் உள்ள மற்ற சுற்றுலா இடங்கள் ஆகும்.

PC: Saurabh Lall

கர்த்துங் லா:

கர்த்துங் லா:


ஏறத்தாழ 18,375 அடி உயரத்தில் உள்ள கர்த்துங் லா, உலகத்திலெயே மிக உயரத்திலுள்ள வாகனம் செல்லும் சாலை என அழைக்கப்படுகிறது. இது ஷியோக் மற்றும் நுப்ரா பள்ளத்தாக்கிற்கு ஓர் நுழைவாயிலாக இருக்கிறது. பாலைவனத்தின் மிக அழகிய மற்றும் கண் கவர் காட்சிகளை இங்கே காணலாம்.

உலகளவில் உள்ள வாகன ஓட்டிகள் இங்கே வந்து இந்த காட்சிகளை ரசித்து செல்கின்றனர். இங்கே கிடைக்கும் அனுபவங்களும் நினைவுகளும் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும் என்பது உறுதி.
மே முதல் அக்டோபர் வரை கர்த்துங் லாவை விஜயம் செய்ய சீரான காலம்.

PC: Steve Evans

லாமையுரு மடாலயம்:

லாமையுரு மடாலயம்:


லடாக்கில் உள்ள மிக பழையமையான மடாலயத்தில் ஒன்று தான் இந்த லாமையுரு மடாலயம். இது சுமார் 3510 மீட்டர் உயரத்தில் உள்ளது. மஹாசித்தச்சார்யா நரோபாவால் 11 ஆம் நூற்றாண்டு கண்டு எடுக்க பட்ட இம்மடாலயம் ரெட் ஹாட்ஸ்க்ட் புத்தியர்களுக்கு சொந்தமாக இருக்கிறது.

இந்த மடாலயத்தை சார்ந்து பல புராணங்கள் ஊடுருவுகின்றது. லாமையுரு ஒரு ஆறு எனவும், ஓர் புத்தரின் ஆசிர்வாதத்தை பெற்றுக்கொண்டு, மலைகளில் பெருக்கெடுத்து வந்த இந்த ஆறு, மீண்டும் மலைகளை நோக்கி சென்று இந்த மடாலயத்திற்கு இடம் ஒதுக்கி தந்தது என்று புராணங்கள் கூறுகின்றது.

PC:Kondephy

அல்சி மடாலயம்:

அல்சி மடாலயம்:

அல்லி கிராமத்தில் இருக்கும் இந்த மடாலயம், ஓர் பெரிய மொழிபெயர்ப்பாளர் குருறிஞ்சேன் சங்கபோவால் 958 ஏடியில் இருந்து 1055 ஏடிக்குள் கட்டப்பட்டது. தற்பொழுது லிகிற் மடலாயதால் கண்காணிக்க பட்டு வருகிறது.
இந்த மடாலயத்தில் நான்கு பாகங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் வெவ்வேறு காலகட்டங்களில் கட்டப்பட்டவை ஆகும். இங்கே இருக்கும் பரிபாலமான மடாலயத்தில் இதுவும் ஒன்று. இந்து ராஜாக்களை பற்றி மற்றும் புத்தர்களின் பல போதனைகள் பற்றியும் இங்கு இருக்கும் சுவர்களில் சித்தரிக்க பட்டுள்ளன.

PC: Steve Hicks

செய் மடாலயம்:

செய் மடாலயம்:

லேஹில் இருந்து 15கிமி துளைவில் உள்ள குன்றின் மீது உள்ளது இந்த செய் மடாலயம். இது லடாக் பள்ளத்தாக்கில் மிகவும் மதிக்கப்படும் மடாலயங்களில் ஒன்றுக்கும் இது டெல்டன் நம்கயல் ராஜாவால் 17ஆம் நூற்றண்டு மறைந்த தன் தந்தை சிங்கே நம்கயலுக்கு எழுப்பப்பட்ட நினைவு சின்னமாகும்.

இந்த மடாலயத்தை செய் அரண்மனை என்றும் அழைக்கின்றனர். ஏனினில் இது பல நூற்றாண்டுகளாக மன்னரின் அரண்மனையாக இருந்து வந்து உள்ளது. ஒரு கால கட்டத்தில் இது மன்னர்களின் சிம்மாசமாக இருந்து வந்தது. தற்பொழுது இங்கே இருக்கும் ஸக்யமுனி புத்தரின் செம்பு சிலைக்கு இவ்விடம் பிரபலமாக உள்ளது.

PC: Leva Yakupov

Read more about: travel

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more