Search
  • Follow NativePlanet
Share
» »ரூபகுண்ட்: உறைந்த ஏரியில் நிறைந்திருக்கும் மர்மம்

ரூபகுண்ட்: உறைந்த ஏரியில் நிறைந்திருக்கும் மர்மம்

ரூபகுண்ட்: உறைந்த ஏரியில் நிறைந்திருக்கும் மர்மம்

ரூபகுண்ட், ஹிமாலய மலையில் இருக்கும் மிக அழகான ஏரிகளுள் ஒன்று. வெயில் காலத்தில் சில மாதங்களை தவிர்த்து எப்போதும் உறைந்தே இருக்கிறது இந்த ஏரி.

Photo: Djds4rce

பனி உருகி பசுமையான புல்வெளிகள் காட்சி தரும் கோடை காலத்திலும் சரி, முற்றாக வெண்பனி மூடி உறையவைக்கும் குளிர் நிலவுகையிலும் சரி மலையேற்றம் (Trekking) செய்ய சுற்றுலாப்பயணிகள் இந்த ரூபகுண்ட் மலையை மிகவும் விரும்புகின்றனர்.

இந்த இடம் உத்தரகண்ட் மாநிலத்தில் சமோலி மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த ஏரியில் இன்றுவரை யாராலும் விளக்க முடியாத ஒரு மர்மம் இருக்கிறது.

Photo: Schwiki

இன்றும் கோடைகாலத்தில் நாம் இங்கு சென்றால் வெப்பத்தினால் உருகி இருக்கும் இந்த ஏரியில் நிறைய எலும்புக்கூடுகளை காண முடியும். 1942ஆம் ஆண்டு இரண்டாம் உலகபோரின் போது ஆங்கிலேயே சிப்பாய் ஒருவரினால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஏரியில் எங்கிருந்து இந்த எலும்புக்கூடுகள் வந்தன என்பதை பற்றி பல்வேறு கதைகள் உலாவருகின்றன.

இங்கு உலாவும் ஒரு கதையின் படி கனுஜ் மாகாணத்தின் அரசர் ராஜ ஜாஸ்தாவலும், ராணி பலம்பா மற்றும் அவர்களது பணியாட்கள் நந்தாதேவி கோயிலுக்கு வழிபாடு நடத்த செல்கையில் பனிப்புயலில் அகப்பட்டு உயிரிழந்ததாகவும் அவர்களின் எலும்புக்கூடுகள் தான் இன்றும் அழியாமல் இருக்கின்றன என கூறப்படுகிறது.

Photo: Schwiki

இதனை ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள் இந்த எலும்புக்கூடுகள் எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்தவையாக இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். இரண்டு மீட்டர் ஆழம் உள்ள இந்த ஏரியில் எலும்புக்கூடுகளை மிக தெளிவாக நாம் பார்க்க முடியும். இந்த எலும்புக்கூடுகளுடன் தொளினால் ஆன செருப்புகள், மர சாமான்கள் மற்றும் இரும்பினால் ஆன ஈட்டிகள் இருந்திருகின்றன.

Photo: Utsav Verma

இந்த மர்மங்கள் எல்லாவற்றையும் தாண்டி ட்ரெக்கிங் செய்ய விரும்புகிறவர்களுக்கு பல நல்ல வழிகள் இருக்கின்றன. லோஹசுங் என்னும் இடத்தில் இருந்து ரன் கி தார் என்னும் இடம் வரையிலும் அல்லது பெண்டி புக்கில் என்னும் இடத்தில் இருந்து பக்வசபா என்னும் இடம் வரையிலும் ட்ரெக்கிங் மேட்கொள்ளலாம்.

Photo: Utsav Verma

பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை இங்கு நந்தா தேவி ராஜ் சாட் என்னும் விழாவும் கொண்டாடப்படுகிறது. வெறும் சாகசம் எனபதை தண்டி மர்மம் நிறைந்த சுவாரஸ்யமான அனுபவத்தையும் நாம் இங்கே பெறலாம்.

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+