Search
  • Follow NativePlanet
Share
» »சாகா வரம் தரும் மூலிகை பற்றி தகவல் ஆசியாவின் மிகப் பழமையான நூலகத்தில் - நம்ம ஊர்லதான் இருக்காம்!

சாகா வரம் தரும் மூலிகை பற்றி தகவல் ஆசியாவின் மிகப் பழமையான நூலகத்தில் - நம்ம ஊர்லதான் இருக்காம்!

சாகா வரம் தரும் மூலிகை பற்றி தகவல் ஆசியாவின் மிகப் பழமையான நூலகத்தில் - நம்ம ஊர்லதான் இருக்காம்!

ஆசியாவிலேயே மிகப்பழமையான நூலகம் என்ற புகழை பெற்றுள்ள சரஸ்வதி மஹால் நூலகம் தஞ்சாவூர் நகரத்தில் அமைந்திருக்கிறது. வாருங்கள் தஞ்சாவூருக்கு பயணம் செய்து, இங்குள்ள நூலகத்தின் பெருமைகளையும், நினைவுச் சின்னங்களையும் குறித்து அறிந்துகொள்வோம்,.

எங்களது பதிவுகள் தொடர்ந்து கிடைக்க மறக்காமல் இந்த பக்கத்தின் வலது பக்க மேல் முனையில் இருக்கும் பெல் ஐகானை சொடுக்கி சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள். மேலும் எங்களது தமிழ் நேட்டிவ் பிளானட் முகநூல் பக்கத்தையும் மறக்காமல் பாலோ செய்யுங்கள்.

 ஓலைச் சுவடிகள்

ஓலைச் சுவடிகள்


சரஸ்வதி மஹால் நூலகத்தில் மிகப்பழமையான ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த ஓலைச் சுவடிகளில் மருத்துவம், விஞ்ஞானம் உள்ளிட்ட பல தகவல்கள் எழுதப்பட்டுள்ளது.

PC: Wiki

நூல்கள்

நூல்கள்

அதுமட்டுமல்லாமல் தமிழ், மராத்தி, தெலுங்கு, ஆங்கிலம் போன்ற மொழிகளில் ஏராளமான நூல்களும் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.

PC: Wiki

எப்போது உருவாக்கப்பட்டது?

நாயக்க மன்னர்கள் காலத்தில் அரண்மனை நூலகமாக உருவாக்கப்பட்ட இந்த நூலகம் அவர்களுக்கு பின் மராட்டா வம்சத்தை சேர்ந்த இரண்டாம் சரபோஜி மன்னரால் மேலும் வளர்க்கப்பட்டிருக்கிறது.

தமிழர்களின் கையில்

1918ம் ஆண்டிலிருந்து இந்த நூலகம் தமிழ்நாட்டு அரசாங்கத்தின் நிர்வாகத்தில் இருந்துவருகிறது. பொதுமக்கள் பயன்பாட்டிற்கென திறக்கப்படும் இந்த பழமையான நூலகத்தில் 1998ம் ஆண்டிலிருந்து கணிணி மயமாக்கும் முயற்சிகளும் நடந்து வருகின்றன. இப்போது கிட்டத்தட்ட முடிந்துவிட்டன என்றும் சொல்லலாம்.

பஞ்சாங்கம்

பஞ்சாங்கம்


1807ம் ஆண்டு அச்சடிக்கப்பட்ட மெட்ராஸ் பஞ்சாங்கம் மற்றும் 1791ம் ஆண்டு ஆம்ஸ்டர்டாம் நகரில் அச்சிடப்பட்ட பைபிள் படநூல் போன்றவை இங்கு பாதுகாக்கப்பட்டுள்ளன.

PC: Wiki

அருங்காட்சியகம்

நூலக வளாகத்திலேயே ஒரு அருங்காட்சியகம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நூலகம் குறித்த பல தகவல்களையும் ஆவணங்களையும் பார்வையாளர்கள் காணலாம்.

அறிவார்ந்தோர்களே தமிழாளர்களே

தமிழ்நாட்டின் சிந்தனையாளர்களும், தமிழ் ஆர்வலர்களும், அறிவார்ந்தோர்களும் ஒருமுறையாவது விஜயம் செய்ய வேண்டிய நூலம் இது. இளைய தலைமுறைக்கு இந்த நூலகம் அறிமுகம் செய்யப்படவேண்டியதும் அவசியம்.

Read more about: travel thanjavur
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X