Search
  • Follow NativePlanet
Share
» »பாபா முதல் ரஜினி வரை எல்லோரும் தேடும் சொர்க்கத்தின் ரகசியம்... இதுதான்

பாபா முதல் ரஜினி வரை எல்லோரும் தேடும் சொர்க்கத்தின் ரகசியம்... இதுதான்

By Udhaya

ரஜினிகாந்த் ஒவ்வொரு முறையும் இமயமலை செல்லும்போது அறிவித்துவிட்டு செல்வார். பாபாவை காணச் செல்கிறதாக சொல்வார். அதே நேரத்தில் அவர் பாபாவை கண்டாரா இல்லையா என்று எப்போதும் வெளியிடமாட்டார். அது ரகசியமாக காக்கப்படும். பாபாவே கடவுளாக நினைத்து வழிபடுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் பாபா உண்மையில் முக்தி அடைந்த ஞானி. கடவுளை நேரில் கண்டவர் என்றும் அவர் கடவுள் இல்லை என்றும் சிலர் கூறுகின்றனர். அப்படி, பாபாவின் ரகசியம் என்ன.. அதை காண செல்லும் ரஜினியின் திட்டப் பயணங்கள் குறித்த மர்மங்கள் என்ன என்பது தெரியாது. ஆனால் சிலர் இதை ரஜினி ரகசியமாக வைத்திருந்தாலும், அது எங்களுக்கும் தெரியும் என்கின்றனர். சொல்லப்போனால் ரஜினிக்கு முன்பாகவே இமயமலை ஏறும் பழக்கமுள்ளவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் சொல்வதெல்லாம் இந்த இரண்டு கோயில்கள் மட்டும்தான். ஆம், இந்த கோயில்களில்தான் அந்த ரகசியங்கள் அடங்கியுள்ளன.

அமர்நாத்

அமர்நாத்

ஸ்ரீநகரிலிருந்து, சுமார் 145 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள அமர்நாத், இந்தியாவின் பிரதான யாத்ரீக ஸ்தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து, சுமார் 4175 அடி உயரத்தில் அமைந்துள்ள இத்தலம், இந்துக்கள் வணங்கும் அழிவுக் கடவுளான சிவபெருமானின் பக்தர்களிடையே மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது. இங்கு, இயற்கையாக அமையப்பெற்றுள்ள பனியினாலான சிவலிங்கம், முக்கிய ஈர்ப்பு அம்சமாக திகழ்கிறது. இந்த யாத்ரீக ஸ்தலம் தன் பெயரை, அழிவற்ற என்ற பொருள் கொண்ட ‘அமர்', மற்றும் கடவுள் என்பதைக் குறிக்கும் "நாத்", ஆகிய இரு இந்து வார்த்தைகளிலிருந்து பெற்றுள்ளது.

Gktambe

 புராணக்கதை

புராணக்கதை

இங்கு உலவும் ஒரு பிரபல நாட்டுப்புறக் கூற்றின் படி, சிவபெருமானின் துணைவியான பார்வதி தேவி, தன்னிடம் வெகு காலமாக, சொல்லாமல் மறைத்து வரும் மரணமில்லாமையின் ரகசியத்தைக் கூறும்படி, சிவனிடம் மன்றாடியதாகவும், அவர் பார்வதியை இமய மலையில், ஒரு ஆளரவமற்ற இடத்திற்கு அழைத்துச் சென்று, யாரும் கேட்டு விடாதபடி அந்த ரகசியத்தை பகிர்ந்து கொண்டார் என்றும் கூறப்படுகிறது.

அவ்வாறு இமயமலைக்கு செல்லும்போது, சிவன் தன் தலையில் வீற்றிருக்கும் சந்திர பிறையை சந்தன்வாரியிலும், தன் வாகனமாகிய காளையை பஹல்கத்திலும், அதன் பின் தன் மகன், யானைமுகத்தோனாகிய கணேசரை மஹாகுணாஸ் மலையிலும், தன் சர்ப்பத்தை, ஷேஷ்நாக்கிலும், ஐம்பூதங்களை பஞ்சதரணியிலும், விட்டு விட்டு, பார்வதியை மட்டும் ஒரு குகைக்குள் அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

மேலும், அவர் அக்குகைக்குள் நெருப்பை உருவாக்கி, அங்குள்ள ஜீவராசிகள் யாரும் கேட்டுவிடாதபடி, அனைத்தையும் எரித்து சாம்பலாக்கினார். ஆனால், இரண்டு புறா முட்டைகள், மான் தோல் ஒன்றின் அடியில் இருந்ததனால் நெருப்பினால் தீண்டப்படாமல் இருந்ததை, அவர் கவனிக்கத் தவறிவிட்டார். சிவன், பார்வதியிடம் அந்த ரகசியத்தை சொல்லிக் கொண்டிருக்கும் போது, அவ்விரு முட்டைகளும், சத்தமின்றி பொரிந்து, அந்த ரகசியத்தை கேட்டுக் கொண்டிருந்தன. அமர்நாத் குகைக்கு செல்லும் பயணிகள், இப்போதும் இரு புறாக்களை அங்கு பார்க்கலாம். இங்கு பிரபலமாக உள்ள நம்பிக்கையின் படி, அவ்வாறு சிவன் கூறிய ரகசியத்தை ஒட்டுக் கேட்ட அவ்விரு புறாக்களும், மறுபடி மறுபடி இவ்வுலகில் தோன்றி, அமர்நாத் குகையை தங்கள் நிரந்தர இருப்பிடமாக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

Gktambe

பழமை

பழமை

இப்புகழ் வாய்ந்த வழிபாட்டு ஸ்தலம், 6-வது நூற்றாண்டைச் சேர்ந்த, சமஸ்கிருத குறிப்பான, நிலமட புராணாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புராணா, காஷ்மீர் மக்களின், ஆச்சாரம் மற்றும் கலாச்சார வாழ்வியல் பாணிகளைப் பற்றிக் கூறுகிறது. அமர்நாத், 34 பிசிஇ -யில், காஷ்மீர் அரியணையில் ஏறிய, பிற்காலத்தில் துறவறம் பூண்ட, ஆரியராஜ் மன்னருடனும் தொடர்புபடுத்திக் கூறப்படுகிறது. இம்மன்னர், படிப்படியாக தன் ராஜ உரிமைகளைத் துறந்துள்ளார். அவர், கோடைகாலங்களில், பனி லிங்கத்தை வழிபடுவதற்காக, இத்தலத்திற்கு அடிக்கடி வந்து சென்றதாகக் கூறப்படுகிறது. அமர்நாத், ராஜதரங்கிணியிலும், அமரேஷ்வரா என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Saisumanth532

எப்போது செல்வது

எப்போது செல்வது

கோடைகளில், அமர்நாத்தின் சராசரி தட்பவெப்பநிலை, பெரும்பாலும் 15 டிகிரி செல்சியஸாகவே இருக்கும். ஆனால், குளிர்காலங்களில், வெப்ப நிலை -5 டிகிரி செல்சியஸுக்கும் குறைந்து, கடுங்குளிருடன் விளங்கும். பொதுவாக, அமர்நாத், நவம்பர் முதல் மார்ச் அல்லது ஏப்ரல் வரை, பனியால் மூடப்பட்டிருக்கும். இப்பகுதியில், வருடத்தின் எந்த சமயத்திலும் பருவ மழை பெய்யக்கூடும்; அவ்வமயங்களில் அமர்நாத் யாத்திரையும் தடைபடக் கூடும். மே மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலகட்டமே, இங்கு செல்வதற்கு ஏற்ற காலகட்டமாகும்.

Saisumanth532

கேதார்நாத்

கேதார்நாத்

இந்தியாவில் ஹிந்துக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்படும் இந்த கேதார்நாத் எனும் ஆன்மீக யாத்திரை ஸ்தலம் உத்தரகண்ட் மாநிலத்தில் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இமயமலையின் கர்வால் மலைத்தொடர்களில் கடல்மட்டத்திலிருந்து 3584மீ உயரத்தில் இந்த கேதார்நாத் கோயில் ஸ்தலம் அமைந்துள்ளது. கேதார்நாத் கோயில் ஹிந்து மரபின் முக்கிய ஆன்மீக கேந்திரமாக வணங்கப்படுகிறது. 12 ஜோதிர்லிங்கங்களில் முதன்மையான ஜோதிர்லிங்கம் இக்கோயிலில் அமைந்திருப்பதாக கருதப்படுகிறது. பிரம்மாண்டமான மந்தாகினி ஆறு இக்கோயிலுக்கு அருகிலேயே ஓடுகிறது. கோடைக்காலத்தில் இந்த ஸ்தலத்துக்கு ஏராளமான யாத்ரீகர்கள் சிவபெருமானை வழிபட வருகை தருகின்றனர். 1000 வருடங்கள் பழமையானதாக கருதப்படும் கேதார்நாத் கோயிலானது ஒரு செவ்வக வடிவிலான மேடைத்தளத்தின்மீது அழகாக வெட்டப்பட்ட பெரிய பாறைப்பலகைகளை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கிறது.

Paul Hamilton

 அமைதியும் ஆறுகளும்

அமைதியும் ஆறுகளும்

சோன்பிரயாக் எனும் இடம் கேதார்நாத்திலிருந்து 19 கி.மீ தூரத்தில் 1829 மீ உயரத்தில் அமைந்துல்ளது. இது மந்தாகினி ஆறும் பாசுகி ஆறும் சங்கமிக்கும் இடமாகும். இந்த சங்கமத்தின் ஆற்று நீருக்கு விசேஷ சக்திகள் உள்ளதாக நம்பிக்கை உள்ளது. இந்த நீரை தொட்டவர்களுக்கு வைகுண்டத்தில் இடம் உண்டு என்பது ஐதீகம். வாசுகி தல் எனப்படும் பிரசித்தமான ஏரியின் பெயரால் அழைக்கப்படும் மற்றொரு முக்கியமான இடம் கடல் மட்டத்திலிருந்து 4135 மீ உயரத்தில் அமைந்துள்ளது. இது கேதார்நாத்திலிருந்து 8 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்த பிரம்மாண்டமான ஏரியை சுற்றிலும் பிரம்மாண்டமாக இமயமலைதொடர்கள் எழும்பி நிற்பது பிரமிக்க காட்சியாகும். சௌகம்பா சிகரமும் இந்த ஏரிக்கு அருகிலேயே உள்ளது. சதுரங்கி மற்றும் வாசுகி என்ற பனிமலைகளை கடந்துதான் இந்த வாசுகி தல் ஏரிக்கு செல்ல முடியும் என்பதால் இது மிக மிக கடினமான பயணமாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. சாகச மனமும், உடல் உறுதியும், தயார்நிலையும் கொண்டவர்கள் மட்டுமே இப்பயணத்தை மேற்கொள்ள முடியும்.

Samadolfo

உயிரினங்கள்

உயிரினங்கள்

பலவிதமான உயிரினங்களும், தாவரங்களும் இந்த சரணாலயத்தில் காணப்படுகின்றன. காட்டுப்பூனைகள், கோரல்கள், நரி, கருங்கரடி, பனிச்சிறுத்தை, சாம்பார் மான், தாஹிர் ஆடு மற்றும் அருகி வரும் விலங்கினமான கேதார்நாத் கஸ்தூரி மான் போன்றவற்றை இங்கு பார்க்கலாம். பறவை ரசிகர்கள் விரும்பும் விதத்தில் இந்த சரணாலயத்தில் பலவகை ஈ பிடிப்பான்கள் மற்றும் குருவிகள் வசிக்கின்றன. விதவிதமான மீன்களையும் இப்பகுதியில் ஓடும் மந்தாகினி ஆற்றில் பார்க்கலாம். கேதர்நாத்துக்கு வரும் பயணிகள் நேரம் இருப்பின் குப்த்காஷி எனும் இடத்துக்கும் விஜயம் செய்வது நல்லது. இங்கு 3 கோயில்கள் அமைந்துள்ளன. பழமையான விஷ்வநாதர் கோயில், மணிகர்னிக் குண்ட் மற்றும் அர்த்தநாரீஸ்வர் கோயில் என்பவையே அவை.

Samadolfo

எப்படி எப்போது செல்லலாம்

எப்படி எப்போது செல்லலாம்

கேதார்நாத்துக்கு அருகில் 239 கி.மீ தூரத்திலேயே டேராடூன் நகரின் ஜோலி கிராண்ட் விமான நிலையம் உள்ளது. ரயில் மூலம் கேதார்நாத் வரவிரும்பும் யாத்ரீகர்கள் ரிஷிகேஷ் ரயில் நிலையம் வரை வந்து அங்கிருந்து கேதார்நாத்துக்கு பயணம் மேற்கொள்ளலாம். ரிஷிகேஷிலிருந்து கேதார்நாத் 227 கி.மீ தூரத்தில் உள்ளது. மே மாதம் மற்றும் அக்டோபர் மாதத்திற்கு இடையே உள்ள பருவம் கேதார்நாத் புனித ஸ்தலத்திற்கு பயணம் மேற்கொள்ள ஏற்றதாக உள்ளது. இக்காலத்தில் இப்பகுதியில் சுற்றுச்சூழல் இனிமையானதாக காட்சியளிக்கிறது. கடும் பனிப்பொழிவின் காரணமான கேதார்நாத்தில் வசிக்கும் உள்ளூர் மக்கள் குளிர்காலத்தில் தற்காலிகமாக இடம் பெயர்ந்து விடுவர் என்பது ஒரு குறிப்பிடத்தக்க தகவலாகும்.

Bikingdiaries

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more