Search
  • Follow NativePlanet
Share
» »இன்று சனிப்பெயர்ச்சி : பரிகார பூஜைக்கு செல்லவேண்டிய தலங்கள்

இன்று சனிப்பெயர்ச்சி : பரிகார பூஜைக்கு செல்லவேண்டிய தலங்கள்

இன்று சனிப்பெயர்ச்சி : பரிகார பூஜைக்கு செல்லவேண்டிய தலங்கள்

நவகிரகங்களில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவராகவும் ஈஸ்வரன் பட்டம் பெற்றவராகவும் உலக மக்கள் அனைவரும் பயபக்தியுடன் வணங்கப் பெறுபவராகவும் திகழ்பவர் சனீஸ்வர பகவான் ஆவார். சனிபகவானின் சிறப்புகளைப் பற்றியும், சனிப்பெயர்ச்சியின் போது பரிகார பூஜைகள் நடைபெறும் சனீஸ்வரர் ஆலயங்கள் பற்றியும் இந்த பகுதியில் பார்க்கலாம்.

குச்சனூர் சனி பகவான் கோயில்

குச்சனூர் சனி பகவான் கோயில்

தேனி அருகே குச்சனூரில் அமைந்துள்ளது இந்த கோயில். 30 ஆண்டுகள் வாழ்ந்தவரும் இல்லை 30 ஆண்டுகள் தாழ்ந்தவரும் இல்லை என்பது வழக்கில் உள்ள சொல் வழக்காகும். அதாவது 30 ஆண்டுகள் தொடர்ச்சியாக எந்தவித சிரமங்கள் கஷ்டங்கள் தோல்விகள் இல்லாமல் இவ்வுலகில் வாழ்ந்தவர்களும் கிடையாது அதே போல் 30 ஆண்டுகள் கஷ்டங்களை மட்டுமே அனுபவித்தவர்களும் கிடையாது என்பது இதன் பொருளாகும். அதன்படி இந்த கோயிலுக்கு சென்றால் சனிப்பெயர்ச்சியின் போது அதன் தாக்கத்தை குறைக்கலாம் என்கிறார்கள். முக்கியமாக அஷ்டமத்து சனி பாதிப்பு இருப்பதாக கருதுபவர்கள் இங்கு அதிகம் வருகைதருகின்றனர்.

எங்குள்ளது

எங்குள்ளது

சனி பகவான் ராசி மண்டலத்தை ஒரு சுற்று சுற்றி வருவதற்கு 30 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறார். இந்த 30 ஆண்டுகளில் பலவித சுக-துக்கங்களை சனி பகவான் உலக மக்களுக்கு வழங்குகிறார். அதன்படி இந்த கோயில் தேனி மாவட்டத்தின் கேரள எல்லையோரம் அமைந்துள்ளது.

எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்

தேனியிலிருந்து சுமார் ஒரு மணி நேர பயணத்தில் சின்னமனூர் என்ற ஊருக்கு சென்று அங்கிருந்து பேருந்து அல்லது ஆட்டோ மூலம் குச்சனூரை அடையலாம். சனி பகவானுக்குறிய வழிபாட்டுப் பொருட்கள் அனைத்தும் கோவிலின் வளாகத்திலேயே கிடைக்கிறது. ஜோதிடவியலில் சனி பகவான் உத்தியோகத்திற்க்கு பொருப்பு வகிக்கிறார் எனவே உத்தியோகத்தில் ஏற்படும் இடர்பாடுகளை நீக்குவதற்கு இங்கு வழிபட்டு வருவது சிறப்பு.

 அருகில் காணவேண்டியத் தலங்கள்

அருகில் காணவேண்டியத் தலங்கள்

மேகமலை, மாவூத்து, கைலாசநாதர் ஆலயம், கும்பக்கரை நீர்வீழ்ச்சி, கௌரியம்மன் கோயில், தேவதானப்பட்டி அம்மன் கோயில், தீர்த்த தொட்டி, போடிமெட்டு, பாலசுப்ரமணியர் கோயில், சோத்துப்பாறை, சுருளி நீர்வீழ்ச்சி, சின்னச்சுருளி, சண்முகா நதி அணைக்கட்டு ஆகியன அருகிலுள்ள இடங்களாகும்.

 அருள்மிகு அக்னீஸ்வரர் கோயில்

அருள்மிகு அக்னீஸ்வரர் கோயில்

அக்னீஸ்வரர் கோயில் சனிப் பெயர்ச்சிக்கு பரிகாரம் நடைபெறும் கோயில் ஆகும். இது திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

எங்கேயுள்ளது

எங்கேயுள்ளது


திருவாரூர் மாவட்டம் திருக்கொள்ளிக்காடு அருகே கீராளத்தூர் பகுதியில் அமைந்துள்ளது அக்னீஸ்வரர் கோயில்.

சிறப்பு

சிறப்பு

பொதுவாக பெரும்பாலான கோயில்களில் நவக்கிரகங்கள் ஒன்றையொன்று பார்க்காமல் அமைந்திருக்கும். இந்த கோயிலில் ப வடிவில் அமைந்துள்ளது சிறப்பாக பார்க்கப்படுகிறது.

wiki

திறக்கும் நேரம்

திறக்கும் நேரம்


காலை 6மணி முதல் 12வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். கோயிலில் ராஜகோபுரம் இல்லை. முன்பக்கம் நந்தி உள்ளது.

 வட திருநள்ளாறு

வட திருநள்ளாறு

சென்னை பல்லாவரத்தை அடுத்துள்ள பொழிச்சலூரில் உள்ளது அகஸ்தீஸ்வரர் ஆலயம். சென்னையில் உள்ள நவக்கிரகக் கோவில்களுள் சனிபகவான் அம்சத்துக்குரிய கோவிலாக விளங்குகிறது.

அகத்தியர் பூசித்த இடம்

அகத்தியர் பூசித்த இடம்

அகஸ்தியர் பல வருடங்கள் பூஜித்த லிங்கம் இத்தலத்தில் உள்ளது. அகஸ்தியருக்குத் திருமணக்காட்சியைச் சிவபெருமான் இத்திருத்தலத்தில் காண்பித்தார். சனி பகவான் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டார். எனவே சனிபகவானை இத்தலத்தில் வழிபடச் சனிபகவானால் நமக்கு உண்டாகும் இன்னல்கள் தீரும் என்ற நம்பிக்கை உள்ளது.

Read more about: travel temples
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X