» »ஜப்பானியர் வடிவமைத்த சாந்தி ஸ்தூபி எங்கிருக்கு? கொள்ளை அழகு கொண்ட அந்த இடத்திற்கு எப்படி போவது?

ஜப்பானியர் வடிவமைத்த சாந்தி ஸ்தூபி எங்கிருக்கு? கொள்ளை அழகு கொண்ட அந்த இடத்திற்கு எப்படி போவது?

Written By: Bala karthik

பயண ஆர்வலர்களுக்கு ஜம்மு & காஷ்மீரின் லடாக் பகுதி ஒரு அங்கமாக காணப்படுகிறது. பாறை நிலப்பரப்பு, குளிர்ச்சியான பாலைவனங்கள், கம்பீரமான மலை சிகரங்கள், மற்றும் பனிப்பொழிவு என இவ்விடம் காணப்பட, நம் சிந்தையின் செயல்கள் வேகமாகி லடாக்கிற்கு செல்லவும் நம் மனதில் ஆசை உண்டாகிறது. தலை நகரமான லேஹ் பகுதி, நினைவு பரிசு கடைகள், பிஸியான பஜார் என காணப்படுவதோடு அவர்களின் நாகரிகத்தின் பெருமையையும் தாங்கிக்கொண்டு நிற்கிறது.

விறுவிறுப்பான பயணமானது லடாக்கை சுற்றி உண்டாக, நம் பயணத்திற்கு பைக் அல்லது பாதங்களை பயன்படுத்தலாம். சாலை பயணம், மலை ஏறுதல், கூடாரமிடல், நதி நீர் படகு சவாரி அல்லது ரேப்பெல்லிங்க் என திரும்பும் திசை எல்லாம், சாகச விளையாட்டுக்கள் நம்மை சூழ்ந்து காணப்படுகிறது. லடாக் பகுதி மிகவும் சாத்தியமானதாக விளங்க, இந்த அழகிய பகுதியில் அழகிய மடாலயங்களும் ஆங்காங்கே அமைந்திருக்க, பழங்காலத்தின் பெருமையையும் தாங்கிக்கொண்டு மீண்டும் வர வேண்டிய ஆர்வத்தையும் மனதில் விதைக்கிறது.

சாந்தி ஸ்தூபா

சாந்தி ஸ்தூபா


இருப்பினும், இந்த ஆர்டிக்கலில் ஒரே ஒரு அழகிய அமைப்பை பற்றி மட்டுமே நாம் பார்க்க போகிறோம். சான்ஸ்பாவில் அமைந்திருக்கும் சாந்தி ஸ்தூபி, லேஹ்ஹிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. புத்த ஸ்தூபி வெள்ளை நிறமாக முழுவதும் காட்சியளிக்க, லேஹ் நகரத்தின் மலை உச்சியில் 1991ஆம் ஆண்டு கட்டப்பட்டது தான் இந்த ஸ்தூபி என்பதும் நமக்கு தெரியவருகிறது. இத்தகைய வெள்ளை நிற குவிமாடத்தை இந்த ஸ்தூபி கொண்டிருக்க, நம் கண்களிற்கு பளிச்சென தென்பட துடிக்கிறது இவ்விடம். இந்த புள்ளியிலிருந்து நின்று நாம் பார்க்க, லேஹ் நகரத்தின் ஒட்டுமொத்த காட்சியையும் நம்மால் பார்க்கவும் முடிகிறது.

Anoop

சாந்தி ஸ்தூபியின் கட்டமைப்பு:

சாந்தி ஸ்தூபியின் கட்டமைப்பு:


இந்த சாந்தி ஸ்தூபி கட்டிடத்தின் யோசனையை ஜப்பானின் நிச்சிதட்சு பூஜி என்ற துறவி தந்திட, முதலில் அமைதியான ஸ்துபி கோபுரத்தை எங்கும் அமைக்கவே அவர் எண்ணிட, இந்தியாவில் புத்த மதத்தை திருப்பி கொண்டுவந்தவரும் இவரே என சொல்லப்படுகிறது. இந்த யோசனையால், லேஹ் நகரம் உயிர்ப்பித்து எழ, சாந்தி ஸ்தூபி வடிவத்தை ஜப்பானியர்களை கொண்டு அமைத்திட, பிக்ஷு யோம்யோ நாகமுரா மற்றும் குஷோக் பகுலா ஆகிய லடாக் புத்தர்களுக்கு கீழும் இவ்விடம் நிறுவப்பட்டது.

இந்த மாபெரும் ஸ்தூபியை 1983ஆம் ஆண்டு கட்ட துவங்க, 1984ஆம் ஆண்டு பிரதமரான இந்திரா காந்தி அரசின் கீழ், ஸ்தூபிக்கு செல்ல சாலைகள் அமைக்க ஒப்புதலும் வழங்கப்பட்டது.

Antara Sarkar

ஸ்தூபியை பற்றிய சில தகவல்கள்:

ஸ்தூபியை பற்றிய சில தகவல்கள்:

அடிவாரத்தில், தற்போதிருக்கும் தலை லாமாவின் படம் வைக்கப்பட்டிருக்க, அதோடு இணைந்து சில புத்தர்களின் கைவினைகளும் காணப்படுகிறது. புத்தரின் முக்கிய சிலை ஒன்று, ‘தர்மாவை சக்கர வடிவில் திருப்புவது' போன்று அமைந்திருக்க, அல்லது இதனை ‘தர்மசக்கரம்' என்றும் அழைக்கின்றனர். இது தான் ஸ்தூபியின் முதல் நிலையாக இருக்கிறது. இரண்டாம் நிலை நினைவு இல்லமாக, புத்த பிறப்பு, இறப்பு மற்றும் தீய சக்தியை அவர் தியானத்தின் மூலம் தோற்கடித்தவை சித்தரிக்கப்பட்டுள்ளது.

இவற்றை கடந்து உலக அமைதி மற்றும் செழிப்பும், நிலவ 2,500 வருடங்களுக்கும் முன்னர் புத்த மதத்தில் நடந்தனவற்றை ஸ்தூபியில் நினைவாக்கப்பட்டுள்ளது. இது தான் ஜப்பான் மற்றும் லடாக்கிற்கு இடையிலான ஆரோக்கிய பிணைப்பாகவும் கருதப்படுகிறது.

லேஹ் நகரத்தின் முக்கிய இடத்தில் இது அமைந்திருக்க, இது சுவாரஸ்யங்களை தரும் இடங்களுள் ஒன்றாகவும் காணப்படுகிறது. இங்கிருந்து பார்க்கப்படும் சூரிய உதயம் மற்றும் அஸ்தமன நிலைகள், மறக்கமுடியாத அனுபவத்தை தர! இரவு நேரத்தின் சாந்தி ஸ்தூபி ஒளியின் பிரகாசம் மனதில் அமைதியை உண்டாக்குகிறது.

இந்த சாந்தி ஸ்தூபி, காலை 5 மணிக்கு திறக்கப்பட இரவு 9 மணி வரை வாரத்தின் அனைத்து நாட்களிலும் சுற்றுலா பயணிகளுக்காக திறந்தே காணப்படுகிறது.

Navaneeth KN

 லேஹ்ஹை நாம் அடைவது எப்படி?

லேஹ்ஹை நாம் அடைவது எப்படி?

ஆகாய மார்க்கமாக அடைவது:

இராணுவ விமான நிலையமான லேஹ் விமான நிலையம், சாதாரண சோதனைகளை கடந்து கடுமையான சோதனைகளுடனே அனுப்பப்படுகிறது. உங்களிடம் இணையத்து டிக்கெட் (eTicket) இருக்குமெனில், ஒரு நகலை (Copy) உங்கள் கையில் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். அவ்வாறு நீங்கள் வைத்துக்கொள்ள மறந்தால், லேஹ் உள்ளே நுழைவதற்கான அனுமதி தரப்பட மாட்டாது. இந்த விமான நிலையமானது சண்டிகர், புதுதில்லி, ஸ்ரீ நகர் என பல நகரங்களுடனும் இணைந்தே காணப்படுகிறது.

தண்டவாள மார்க்கமாக அடைவது:

லேஹ் அருகில் இருக்கும் இரயில் நிலையமாக பத்தன்கோட் மற்றும் சண்டிகர் காணப்படுகிறது. இருப்பினும், இந்த இரண்டு இடங்களும் 800 கிலோமீட்டர் தொலைவில் இருக்க, இங்கிருந்து லேஹ்ஹிற்கு நாம் செல்ல அனைத்து வழிகளையும் சுற்றிட 3 நாட்கள் ஆகிறது. இந்த வழியை பெரும்பாலும், லேஹ்ஹிற்கு செல்லும் பயணிகள் தவிர்ப்பது வழக்கமாகும்.

சாலை மார்க்கமாக அடைவது:

பயண ஆர்வலர்களின் முறையாக இந்த சாலை வழி அமைகிறது. பயண ஆர்வலர்கள் லேஹ்ஹை அடைய பைக் அல்லது காரை மணலியிலிருந்து எடுத்து செல்வது வழக்கமாக, இந்த ட்ரைவ்விற்கு 473 கிலோமீட்டர் ஆகிறது. சில சமயங்களில், மக்கள் ஸ்ரீ நகர் வழியாகவும் செல்ல, 434 கிலோமீட்டர் நம் பயணத்திற்கு தேவைப்படுகிறது.

இந்த நகரத்தின் உள்ளே நாம் செல்ல, அரசு பேருந்துகளும் உதவ, பயண செலவும் குறைவாக அமைவதோடு, நாம் செல்ல சவுகரியமான சூழலையும் உருவாக்கி தருகிறது. அதே நேரத்தில், வாடகை கார்களின் மூலமாகவும் நாம் லேஹ்ஹை அடையலாம்.

Vinodtiwari2608

Read more about: travel