Search
  • Follow NativePlanet
Share
» »சிம்லா ஸ்பெஷல்!!!

சிம்லா ஸ்பெஷல்!!!

By Super Admin

'உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா' என ஒய்யாரமாக இமயமலையின் வடமேற்குப் பகுதியில், "மலைகளின் ராணி" என்ற சிறப்பு பெயரோடு சிம்லா நகரம் வீற்றிருக்கிறது.

திரில்லான பயணத்தை விரும்புவீங்களா?திரில்லான பயணத்தை விரும்புவீங்களா?

இமாச்சலப்பிரதேசத்தின் தலை நகரமான சிம்லா ஆங்கிலேயர்களின் காலத்தில் கோடைகால தலைநகரமாக விளங்கி வந்தது. அன்றும் சரி, இன்றும் சரி சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க

பூமியாகவே சிம்லா நகரம் திகழ்கிறது.

கேதர்நாத் கோயிலுக்கு ஒரு புனித யாத்திரை !!கேதர்நாத் கோயிலுக்கு ஒரு புனித யாத்திரை !!

அதிலும் ஹனிமூன் கொண்டாட வரும் புதுமணத் தம்பதிகளின் கூட்டம் எப்போதும் சிம்லாவில் ஜேஜேவென்றுதான் இருக்கும்!

சிம்லா ஹோட்டல் டீல்கள்

சுற்றுலாத் தலங்கள்

சுற்றுலாத் தலங்கள்

ரிட்ஜ், வைஸ் ரீகல் லாட்ஜ் & தாவரவியல் பூங்கா, கார்ட்டன் கோட்டை, காளி பாரி கோயில், எலிசியம் ஹில், ஜக்கு ஹில் போன்ற பகுதிகள் சிம்லாவின் முக்கிய சுற்றுலாத் தலங்களாகஅறியப்படுகின்றன.

சிம்லாவின் சுற்றுலாத் தலங்கள்

படம் : anurag agnihotri

கல்கா- சிம்லா ரயில்வே

கல்கா- சிம்லா ரயில்வே

கல்கா-சிம்லா ரயில்வே பாதை அமைக்கப்பட்டதன் பின்னணி மிகவும் சுவாரசியமானது. அதாவது ஆங்கிலேயர்கள் சிம்லாவின் குளிர்ச்சியான தட்பவெப்பநிலை காரணமாகதங்களுடைய கோடைக்கால தலைநகராக சிம்லாவை மாற்றிக்கொண்டனர். அதோடு இராணுவ அலுவலகமும் அங்கே நிறுவப்பட்டதால் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தவேண்டியஅவசியம் ஏற்பட்டது. எனவே இமயமலை அடிவாரத்தில் சிம்லா மற்றும் கல்கா ஆகிய இரு நகரங்களுக்கிடையே இந்த ரயில் பாதை அமைக்கப்பட்டு 1903-ஆம் ஆண்டிலிருந்துபோக்குவரத்து தொடங்கப்பட்டது.

ரிட்ஜ்

ரிட்ஜ்

சிம்லா நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள ரிட்ஜ், மலைத்தொடர்களின் மனதை மயக்கும் காட்சிகளை வழங்குகிறது. மே மாதத்தில் கோடைத்திருவிழா இங்கு நடைபெறுகிறது. இது தவிர, ரிட்ஜில் பல்வேறு அரசு விழாக்களும், உள்ளூர் கொண்டாட்டங்களும் நடத்தப்படுகின்றன. இந்த இடம் அழகான சூழலால் நீண்டதூர நடைப்பயணத்துக்கு வாய்ப்பை அளிக்கிறது.

படம் : ShashankSharma2511

அன்னன்டேல்

அன்னன்டேல்

அன்னன்டேல் பசுமையான தேவதாரு மர காடுகளால் அலங்கரிக்கப்பட்ட ஒரு அழகான சுற்றுலாத்தலமாகும். இந்த திறந்த வெளி பகுதி ஆங்கிலேயர் காலத்தில், பிரிட்டிஷ் மக்களை மகிழ்விக்க, ஓட்டப்பந்தயம், போலோ மற்றும் கிரிக்கெட் போன்றவற்றின் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தப்பட்டது.

படம் : Rohit Chhiber

பெஸ்ட் ஹனிமூன் ஹோட்டல்

பெஸ்ட் ஹனிமூன் ஹோட்டல்

ஹனிமூன் ஜோடிகளின் கூட்டம் அதிகமாக காணப்படுவதால் ஒட்டுமொத்த சிம்லாவே ஹாட், ஹாட்டர், ஹாட்டஸ்ட்டா மாறிப்போயிடுச்சு. இங்கு நீங்கள் ஹனிமூன் கொண்டாட வருவதாக இருந்தால் ஒயில்ட்ஃபிளார் ஹோட்டலில் தங்குவது சரியான தேர்வாக இருக்கும். இந்த ஹோட்டல் தேவதாரு மரங்கள் சூழ, பனிபடர்ந்த இமையமலையின் பின்னணியில் ஹனிமூன் ஜோடிகளுக்காகவே கட்டப்பட்டது போல் காட்சியளிக்கிறது. மேலும் சிம்லாவின் சுற்றுலாத்தலங்களுக்கு வெகு அருகில் இருப்பதோடு, இண்டநெட், வைஃபை என்று அனைத்து நவீன வசதிகளையும் இந்த ஹோட்டல் கொண்டிருக்கிறது.

ஒயில்ட்ஃபிளார் ஹோட்டலில்

பனிச்சறுக்கு

பனிச்சறுக்கு

சிம்லாவின் பிரபலமான சாகச பொழுதுபோக்கான பனிச்சறுக்கில் ஈடுபடும் சுற்றுலாப் பயணிகள்.

படம் : Chandramohan B V

சிம்லா டூ மணாலி

சிம்லா டூ மணாலி

சிம்லாவிலிருந்து, மணாலி செல்லும் சாலை.

படம் : paVan

பனிமழை

பனிமழை

சிம்லாவின் பனிக்காலங்களில் பெய்யும் பனிமழையை பார்த்து ரசிப்பதும், ஸ்பரிசித்து மகிழ்வதும் அற்புதமான அனுபவம்.

படம் : Sivesh Kumar

நடைபயணம்

நடைபயணம்

சிம்லாவில் பனிப்பொழிவை ரசித்துக்கொண்டே ஒரு நடைபயணம் சென்று பாருங்கள். அதன் பின்பு சிம்லாவை விட்டு செல்ல மனம் வராது உங்களுக்கு!

படம் : anurag agnihotri

காளி பாரி கோயில்

காளி பாரி கோயில்

காளியின் வடிவமான சியாமளா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள காளி பாரி கோயில் 1845-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்தக் கோயிலின் காரணமாகத்தான் சிம்லா என இந்த மலைநகரத்துக்கு பெயர் வந்ததாக சிலர் கூறுகின்றனர். அதாவது சியாமளா என்ற பெயரே பின்னாளில் 'சிம்லா' என்று மாறியதாக சொல்லப்படுகிறது.

படம் : Betelgeuse

குதிரைச் சவாரி

குதிரைச் சவாரி

சிம்லாவில் குதிரைச்சவாரி செல்வது அட்டகாசமான அனுபவம். அதிலும் உங்கள் காதல் துணையோடு குதிரையில் சவாரி செல்வது இனிமையான தருணம்.

படம் : Travels Tips

பனிப்போர்வை

பனிப்போர்வை

சிம்லாவின் பனிக்காலங்களில் மரம், சாலை, வாகனங்கள் என்று அனைத்தும் பனிப்போர்வை கொண்டே மூடப்பட்டிருக்கும்.

படம் : India Untravelled

கோடைத்திருவிழா

கோடைத்திருவிழா

ஒவ்வொரு ஆண்டும் மே மற்றும் ஜூன் மாதங்களில் சிம்லாவின் கோடைத்திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து கலாச்சாரங்களின் மையமாக விளங்கும் சிம்லாவின் ரிட்ஜில் இந்த வண்ண மயமான திருவிழா ஏற்பாடு செய்யப்படுகிறது. மிகவும் ஆடம்பரமாக கொண்டாடப்படும் இந்த திருவிழா சிம்லாவின் அணைத்து தரப்பு மக்களையும் ஈர்க்கிறது.

படம் : Nick Irvine-Fortescue

உட்வில்லே பேலஸ்

உட்வில்லே பேலஸ்

சிம்லாவில் ஆங்கிலேய ஆட்சி காலத்தின் மற்றொரு அடையாளமாக வீற்றிருக்கும் உட்வில்லே பேலஸ்.

படம் : elgreg

டவுன் ஹால்

டவுன் ஹால்

சிம்லாவிலுள்ள டவுன் ஹால் பகுதி.

படம் : Sumit.kumar2209

கிறிஸ்ட் சர்ச்

கிறிஸ்ட் சர்ச்

வட இந்தியாவின் 2-வது பழமையான தேவாலயமாக சிம்லாவின் கிறிஸ்ட் சர்ச் அறியப்படுகிறது.

படம் : ShashankSharma2511

நால்தெஹ்ரா கோல்ஃப் கிளப்

நால்தெஹ்ரா கோல்ஃப் கிளப்

சிம்லாவின் மலையுச்சியில் அமைந்துள்ள நால்தெஹ்ரா கோல்ஃப் கிளப்.

படம் : Subhashish Panigrahi

ராஷ்ட்ரபதி நிவாஸ்

ராஷ்ட்ரபதி நிவாஸ்

ஆங்கிலேயர் காலத்தில் வைஸ் ரீகல் லாட்ஜ் என அறியப்பட்ட ராஷ்ட்ரபதி நிவாஸ். தற்போது இங்கு IIAS எனும் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

படம் : ptwo

எங்கு தங்கலாம்?

எங்கு தங்கலாம்?

சிம்லா ஹோட்டல் டீல்கள்

படம் : Nishanth Jois

சிம்லாவை எப்போது மற்றும் எப்படி அடைவது?

சிம்லாவை எப்போது மற்றும் எப்படி அடைவது?

எப்படி அடைவது?

எப்போது பயணிக்கலாம்?

படம் : DevashishP

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X