» »மாட்டுக்கறிக்கு தடை... சிவனுக்கு மீன் படையல் தரும் விசித்திர கோயில்

மாட்டுக்கறிக்கு தடை... சிவனுக்கு மீன் படையல் தரும் விசித்திர கோயில்

Posted By: Udhaya

கண்ணப்பன் என்னும் ஒருவன் கடவுளுக்கு மீன் சமைத்துப் படைத்தான் என்பது புராணகதைகளில் வருவது. புராணங்கள் உண்மை என நம்புபவர்களுக்கு இது உண்மையான சம்பவம். அதே நேரம் கடவுள் மனிதர்களிடத்தில் கொண்ட அன்புக்கு சான்றாக நிகழ்ந்த விசயமாகவும் பார்க்கவேண்டும்.

ஆனால், திடீரென்று வந்த சைவ ஆதரவு. அசைவம் சாப்பிடுவது தவறானது என்ற பரப்புரையை செய்கிறது. அசைவம் சாப்பிடுவதும் சாப்பிடாததும் அவரவர் விசயம்.

சிவனுக்கு மாமிசம் படைத்த கண்ணப்பனைப் போல இங்கு ஒரு கோயிலில் சிவபெருமானுக்கு மீன் சாதம் படைக்கின்றனர். அதை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குகின்றனர். எங்கே தெரியுமா?

அதிகம் படிக்கப்பட்ட கட்டுரைகள் கீழே....

சிறப்பு தெரியுமா?

சிறப்பு தெரியுமா?

இந்த கோயிலின் சிறப்பு என்னவென்றால் இந்த மூலவருக்கு படையலே மீன் குழம்புதான்

கடவுளர்களுக்கு நெய்வேத்யம்

கடவுளர்களுக்கு நெய்வேத்யம்

பொதுவாக கோயில்களில் உள்ள கடவுளர்களுக்கு நாம் பழங்கள், காய்கள், இனிப்புகள் பலகாரங்கள் என பலவற்றை படைப்போம். மாமிசம் சாப்பிடும் கடவுளர்களும் உள்ளனர்.

ஆனால் சிவன் கோயிலில் மாமிசம் படைப்பது என்பது நம் செவிக்கு எட்டாத அரிய செய்திதானே.

மாமிசம் சாப்பிட்ட சிவன்

மாமிசம் சாப்பிட்ட சிவன்


புராணத்தில் , கண்ணப்பன் என்னும் பக்தன் ஒருவன் அறியாமையால் மீன் படைத்து, அதை சிவன் சாப்பிட்டதாக கதைகள் உள்ளன.

நிஜத்தில் மீன் சாப்பிடுகிறாரா சிவபெருமான்?

நிஜத்தில் மீன் சாப்பிடுகிறாரா சிவபெருமான்?

ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள இந்த கோயிலில் சிவபெருமானுக்கு மீன் சாப்பாடு படைக்கின்றனர்.

பிரசாதம்

பிரசாதம்

வெறும் மீன் மட்டுமல்லாமல், மற்ற கோயில்களில் படைப்பது போல சக்கரை பொங்கலுடன், காய்கறிகளும் படையல் செய்கின்றனர்.

மனம் இன்புறும் சிவபெருமான்

மனம் இன்புறும் சிவபெருமான்

இந்த படையலை மனம் மகிழ்ந்து சிவன் ஏற்றுக்கொள்வதாகவும், அதை அப்படியே பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கிறார்கள் எனவும் சொல்கின்றனர்.

புண்ணியங்கள்

புண்ணியங்கள்

இந்த பிரசாதம் வாங்கி உண்ணப்படுவதால் நோய் நீங்கி நல்லது நடக்கும் என்பது ஐதீகமாம்.

எங்கு அமைந்துள்ளது?

எங்கு அமைந்துள்ளது?


இந்த விஜயநகரம் மாவட்டம், விசாகப்பட்டினம் அருகே அமைந்துள்ளது. விசாகப்பட்டினத்துக்கும், ஸ்ரீகாகுளத்துக்கும் இடையே அமைந்துள்ளது.

எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?

ரயிலில் செல்வதாக இருந்தால், சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் கங்கா காவேரி விரைவு ரயிலில் சென்று விஜயவாடாவை அடைய வேண்டும்.

பின் அங்கிருந்து டொரன்டோ ரயிலில் விசாகப்பட்டினம் வழியாக விஜயநகரத்தை அடையலாம்.

ஒருவேளை விமானத்தில் செல்வதென்றால், சென்னை - விசாகப்பட்டினம் விமான சேவை அடிக்கடி கிடைக்கிறது.

 ராமகிருஷ்ணா மிஷன் பீச்

ராமகிருஷ்ணா மிஷன் பீச்

ராமகிருஷ்ணா மிஷன் பீச் அல்லது RK பீச் என அழைக்கப்படும் இந்த கடற்க்கரை தான் விசாகப்பட்டினத்தில் இருக்கும் மிகப்பிரபலமான கடற்க்கரை ஆகும்.

ஆர்கே பீச்

ஆர்கே பீச்

இந்த கடற்கரையில் நாம் நீச்சலடிக்கலாம், சூரியக்குளியல் போடலாம், பீச் வாலிபால் விளையாடலாம் மற்றும் மாலை வேளைகளில் சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் அந்திவானில் நிகழும் வர்ணஜாலங்களை கண்டு மனம் குளிரலாம்.

 நீர்மூழ்கி கப்பல் அருங்காட்சியகம்

நீர்மூழ்கி கப்பல் அருங்காட்சியகம்

இந்த பீச்சில் இருக்கும் முக்கிய ஈர்ப்புகளில் ஒன்று இந்திய கடற்ப்படையின் நீர்மூழ்கி கப்பல் அருங்காட்சியகம் ஆகும்.

கடற்கரையை ஒட்டியுள்ள பீச் ரோடு.

கடற்கரையை ஒட்டியுள்ள பீச் ரோடு.

கடற்கரையை ஒட்டியுள்ள பீச் ரோடு.

 யாராதா பீச்

யாராதா பீச்

விசாகப்பட்டினம் நகரில் இருந்து 15 கி.மீ தொலைவில் பேரழகும், அமைதியும் நிறைந்து காட்சி தருகிறது யாராதா கடற்க்கரை.

யாராதா கடற்கரை

யாராதா கடற்கரை

யாராதா கடற்கரையில் அலைகள் கரையை முத்திமிடுகின்றன.

பொர்ரா குகைகள்

பொர்ரா குகைகள்

பொர்ரா என்றால் தெலுங்கில் 'நிலத்தினுள் குடையப்பட்டவை' என்று அர்த்தமாம். அரக்கு பள்ளத்தாக்கில் உள்ள ஆனந்தகிரி மலையில் கடல்மட்டத்தில் இருந்து தோராயமாக 2000 அடி உயரத்தில் அமைந்திருக்கின்றன.

கம்பலகொண்டா வனவிலங்கு சரணாலயம்:

கம்பலகொண்டா வனவிலங்கு சரணாலயம்:


விசாகப்பட்டினம் நகரத்தில் இருந்து வெறும் 25 கி.மீ தொலைவிலேயே அமைந்திருக்கும் அற்புதமான இயற்க்கை எழில் கொஞ்சும் இடம் தான் கம்பலகொண்டா வனவிலங்கு சரணாலயம்.

சிம்ஹச்சலம் நரசிம்மர் கோயில்:

சிம்ஹச்சலம் நரசிம்மர் கோயில்:

விசாகப்பட்டினம் நகரில் இருக்கும் மிக முக்கியமான ஆன்மீக ஸ்தலங்களுள் சிம்ஹச்சலம் நரசிம்மர் கோயிலும் ஒன்றாகும்.

அரக்கு பள்ளத்தாக்கு

அரக்கு பள்ளத்தாக்கு

இன்னும் அதிகம் பிரபலமாகாத அதேசமயம் அற்புதமான இயற்கை காட்சிகளை கொண்டுள்ள இடம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திற்கு அருகில் அமைந்திருக்கும் அரக்கு பள்ளத்தாக்கு ஆகும்.

உலகின் மிகப் பணக்கார கோயிலைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

ராஜஸ்தானில் இருக்கும் வித்தியாசமான சுற்றுலாத்தலங்கள்

கம்பாளா - எருது பூட்டி ரேஸ் ஓட்டுவோம் வாங்க...

கோவை நகரின் அரிய புகைப்படங்கள்

இசையெழுப்பும் அதிசய தூண்கள் உள்ள கோயில்கள் எவை தெரியுமா?

Read more about: travel, temple