» »அழிக்கப்பட்ட கோட்டை மேடு..! கோயம்புத்தூரின் அதிர்ச்சி வரலாறு தெரியுமா ?

அழிக்கப்பட்ட கோட்டை மேடு..! கோயம்புத்தூரின் அதிர்ச்சி வரலாறு தெரியுமா ?

Written By: SABARISH

PC: தகவலுழவன்

தனது சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தும் மன்னர்கள், செல்லும் இடமெல்லாம் ஒரு கோட்டையை நிறுவி, தங்களது ஆட்சியை நிலைநாட்டுவது வழக்கம். அவ்வாறு தென்னிந்தியாவில் ஆட்சிசெய்த மன்னர்களும் பல கோட்டைகளை எழுப்பி, அந்தக் கோட்டைகள் இன்றளவும் தமிழகம் முழுவதும் காணப்படுகிறது. ஆனால், கால சூழ்நிலை மற்றும் செயற்கைச் சீற்றங்களினால் அழிக்கப்பட்ட மன்னர்களின் குடியிருப்புகள் தற்போது எந்த நிலைமையில் உள்ளது என்று யாரேனும் அறிவாரா?. அவ்வாறான ஒரு கோட்டையைப் பற்றி பார்க்கலாம் வாங்க.

எங்க இருக்கு தெரியுமா?

எங்க இருக்கு தெரியுமா?

PC: Ask27

தமிழகத்தில் மூன்றாவது பெரிய நகரம், சிறந்த தொழில் வளர்ச்சி அடைந்த நகரம், தென்னிந்திய ஜவுளி உற்பத்தியின் தலைநகரம்... என்னங்க, கண்டுபிடிச்சுட்டிங்களா? ஆமாங்க, கோவை என்றழைக்கப்படும் கோயம்புத்தூரையும், இப்பகுதி குறித்த வரலாற்றையும் தான் இந்த கட்டுரையில நாம பார்க்க போறோம்.

எனக்கு இன்னொரு பேரு இருக்கு

எனக்கு இன்னொரு பேரு இருக்கு

PC: Magentic Manifestations

நொய்யலாறு, சிறுவாணித் தண்ணி, மேற்கே மலைக் காடு, செந்தமிழ் பேச்சு, குளுகுளுக்கு குன்னூரு, அடஅடஅட, நினைக்கும்போதே மனசு குளிருதுங்க. அப்படிப்பட்ட இந்தப் பகுதில கோசர் இன மக்கள் கோசம்புத்துர் என்னும் இடத்தை தலைமையிடமாகக் கொண்டு வாழ்ந்து வந்துள்ளனர். இதுவே, காலப்போக்கில் மருவி கோயம்புத்தூர் என்று அழைக்கபடுகிறது.

யார் யார் ஆண்டார்கள் ?

யார் யார் ஆண்டார்கள் ?

PC: Rsrikanth05

கோயம்புத்தூர் சோழர்களின் ஆட்சிக் காலமான இரண்டாம் நூற்றாண்டிலிருந்தே இருந்து வந்துள்ளது. இதனை சாளுக்கியர்கள், பாண்டியர்கள், விஜயநகர பேரரசர்கள் என பல மன்னர்கள் ஆட்சி செய்துள்ளனர். தொடர்ந்து, தென்னிந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனி கால்வைப்பதற்கு முன்பு மைசூரை ஆண்ட திப்புவின் ஆட்சியின் கீழே கோவை பகுதிகள் இருந்துள்ளன.

கோவையைக் காக்கும் கோணியம்மன்

கோவையைக் காக்கும் கோணியம்மன்

PC: Booradleyp1

மதுரைக்கு எப்படி மீனாட்சி அம்மனோ, அதேப்போல, கோவைக்கு இந்த கோணியம்மன். கோவையின் மையப்பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற இக்கோயிலை மையமாகக் கொண்டே கோயம்புத்தூர் நகரம் அமைக்கப்பட்டது. இக்கோவிலின் வரலாறு 13 ஆம் நூற்றாண்டளவில் அமைந்தது என சான்றுகள் உள்ளன. இருளர்களால் 600 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது.

திப்பு- பிரிட்டிஸ் படையெடுப்பு

திப்பு- பிரிட்டிஸ் படையெடுப்பு

PC: Mural artist is Gari Melchers

மதுரை நாயக்கர்களுக்கும் மைசூர் மன்னர்களுக்குமிடையே 1700களில் கோவையில் சண்டைகள் நடைபெற்றன. அப்போதுதான் கோவையின் ஆட்சி மைசூர் மன்னர்களின் கீழ் சென்றது. தொடர்ந்து, மைசூரு மன்னர்னகளுக்கும், பிரித்தானியருக்கும் நடைபெற்ற போர்கள், ஆட்சி மாற்றம் என திப்பு சுல்தானின் மறைவிற்குப் பிறகு மைசூர் முந்தைய ஆட்சியாளர்களிடமே ஒப்படைக்கப்பட்டது. அந்த நேரத்தில் கோயம்புத்தூர் பிரித்தானியர் தங்களின் மதராசு மாகாணத்தில் இணைத்துக் கொண்டனர்.

திப்புவின் படையைக் காத்த அம்மன்

திப்புவின் படையைக் காத்த அம்மன்

PC: Ramamanivannan

பிரிட்டிஸ்காரர்களை எதிர்த்து கோவை வந்த மைசூர் மன்னர் திப்புசுல்தான், ஓர் கூடாரத்தை அமைத்து, அதில் அவரும் அவரது போர்படையினரும் தங்கினார்கள். ஒருநாள் திப்பு சுல்லாதனின் வீரர்களுக்கு அம்மை தாக்கியது. அப்போது, அருகில் ஓர் மரத்தடியில் இருந்த அம்மனை நோயால் பாதிக்கப்பட்ட வீரர்கள் வழிபட்டனர். அப்போது, அந்த இடத்தில் இருந்த தண்டுக்கீரையை இடித்து அதன் சாறை எடுத்து, அம்மனுக்கு பச்சிலை அபிஷேகம் செய்கிறேன்.

தண்டுமாரியம்மன்

தண்டுமாரியம்மன்

PC: Redtigerxyz

இதன்பின் ஒரு சில நாட்களிலேயே அந்த போர் படை வீரர்களை வாட்டிய அம்மை நோய் நீங்கியது. இதனால் மகிழ்ச்சியடைந்த போர்படை வீரர்கள் அனைவரும் அந்த அம்மனுக்கு சிறியதாக மரத்தாலேயே கூரை அமைத்து வழிபட்டார்கள். அபிஷேகமாக தண்டுக்கீரை சாற்றையே வழங்கி "தண்டுமாரியம்மன்" என்று பெயர் வைத்தனர். இந்த தண்டுமாரியம்மன் கோவில் இன்றளவும் கோவையில் பிரசிதிபெற்ற ஆன்மீகத் தலமாக திகழ்கிறது.

 திப்புக் கோட்டைகள்

திப்புக் கோட்டைகள்

PC: Sydenham, Thomas

திப்பு சுல்தான் கோயம்புத்தூரில் மேற்கொண்ட தனது ஆட்சியின் போது கோட்டைகளை நிறுவினார். அவ்வாறு ஒரு கோட்டையே தற்போது உக்கடம் அருகே உள்ள கோட்டை மேடு பகுதி. இந்தக் கோட்டை பிரிட்டிசாரின் போரின்போது பலமுறை தாக்கப்பட்டது. இருப்பினும், திப்புவின் படையை மீறி கோட்டையை தகர்க்க முடியவில்லை. 1782-யில் திப்புவின் உத்தரவின் பேரிலேயே இந்த கோட்டை தரைமட்டமாக்கப்பட்டது. அந்த கோட்டை இருந்த இடம்தான் இன்றைய கோட்டை மேடு.

பெயர் காரணம்

பெயர் காரணம்

PC: Henry Singleton

பல ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட கோட்டை முழுவதும் தகர்க்கப்பட்ட பின் அந்த பகுதியே கட்டிடக் கழிவுகளால் உயரமான மேடாக காட்சியளித்தது. தற்போதும் அப்பகுதி சற்று மேடாகத்தாக் காணப்படும். இதனாலேயே அப்பகுதிக்கு கோட்டை மேடு என பெயர் சூட்டப்பட்டது. இந்த மேட்டுப்பகுதியில் தான் தற்போது பல குடும்பங்கள் கட்டிடங்களைக் கட்டி வாழ்ந்து வருகின்றனர்.

கோட்டை மேட்டின் சுற்றுவட்டாரம்

கோட்டை மேட்டின் சுற்றுவட்டாரம்

PC: map

பொதுவாக, இராஜ கோட்டை என்பது சுற்றிலும் பாதுகாப்புகள் நிறைந்ததாக இருக்கும் என்பது நாம் அறிந்ததே. அவ்வாறாக அமைக்கப்பட்டதே கோவையில் இருந்த கோட்டையும். வாளாங்குளம், உக்கடம் பெரிய குளம், செல்வம்பதி ஏரி, நரசம்பதி, கிருஷ்ணாம்பதி, செல்வ சிந்தாமணி, செட்டிபாளையம், குறிச்சி குளம், வெள்ளளூர், சிங்காநல்லூர் என மிகப்பெரிய அளவிலான குளங்கள் சூழ கட்டமைக்கப்பட்டுள்ளது திப்புவின் கோட்டை. தற்போது அந்தக் குளங்களில் பல இருக்கும் இடம் தெரியாமல் குடியிருப்புகளாக மாறிவிட்டது.

வரலாற்றை சுமந்து நிற்கும் சங்கமேஸ்வரர்

வரலாற்றை சுமந்து நிற்கும் சங்கமேஸ்வரர்

PC: Edmund David Lyon

கோட்டைமேடு பகுதியில் சங்கமேஸ்வரர் கோவில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைமையான சிவன் கோவில் ஆகும். கோட்டை ஈஸ்வரன் கோவில் என்றும் உள்ளூர் மக்களால் அழைக்கப்படுகிறது. சங்குப் பூக்கள் இருந்த காட்டை அழித்து இந்தக் கோவில் கட்டப்பட்டதால் சங்கீஸ்வரன் என்றும், சோழ மன்னர் இங்கு வந்து வழிபட்டதால் சோழீஸ்வரமுடையார் என்றும், விஜயநகரப் பேரரசினர் வழிபட்டதால் சங்கமீஸ்வரன் என்றும் பெயர் வந்தது.

கோவிலின் வரலாறு

கோவிலின் வரலாறு

PC: Sanchi stupa

1792 ஆம் ஆண்டு மூன்றாம் மைசூர் போருக்குப் பின்னர் இப்பகுதியில் இருந்த கோட்டை முற்றிலும் அழிக்கப்பட்டது. சங்கமேஸ்வரர் கோவிலும் சிதைக்கப்பட்டன. பின், நான்காம் மைசூர் போருக்குப் பின்பு சங்கமேஸ்வரர் கோவில் ஓரளவு சீரமைக்கப்பட்டது. இந்தக் கோவிலுக்கு என சுண்டக்காமுத்தூரில் 1.42 ஏக்கர் தோப்பும், 0.25 ஏக்கர் குடியிருப்பு நிலமும் உள்ளது.

 கொங்கு மண்டலத்தில் இன்னொரு கோட்டை தெரியுமா ?

கொங்கு மண்டலத்தில் இன்னொரு கோட்டை தெரியுமா ?

PC: Pratheept2000

மேற்கு தொடர்ச்சிமலைக் காடுகளில் உருவாகி கோவை, மேட்டுப்பாளையம் வழியாக ஈரோடு மாவட்டத்தினுள் நுழைகிறது பவானி ஆறு. இந்த ஆற்று நீரை சேமிக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ள பவானிசாகர் அணையின் நீர்ப்பகுதியில் அமைந்துள்ளது தண்டல்கோட்டை. திப்புசுல்தான் ஆட்சி;க காலத்தில் இப்பகுதி மக்களிடம் வரி வசூலிக்கும் அரசு தண்டல் அலுவலகமாக செயல்பட்டு வந்த இந்தக் கோட்டை அக்காலத்தில் தண்டல் நாயக்கன் கோட்டை என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளது.

காணக்கிடைக்காத கோட்டை

காணக்கிடைக்காத கோட்டை

PC: dam map

முழுவதும் கருங்கற்களால் கலைநயமிக்க ஒரு போர்கோட்டை போல் உறுதியாக இருக்கும் இந்தக் கோட்டையை காண்பது எழிதல்ல. பவானி அணையின் நீர்மட்டம் என்று 50 அடியாகக் குறையுமோ அப்போதுதான் இதனைக் காண முடியும். சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்து ஒரு சிறு தீவின் மத்தியில் இக்கோட்டை உள்ளதால் பரிசல் அல்லது சிறு படகு மூலம் மட்டுமே சென்று இதனை காண முடியும்.

மர்மம் நிறைந்த கோட்டை

மர்மம் நிறைந்த கோட்டை

PC: Chandrachoodan Gopalakrishnan

இங்குள்ள கருங்கல் சுவற்றில் பண்டைய தமிழ் எழுத்துக்களும், பல சிற்பங்களும் உள்ளன. கோட்டையை எதிரிகளிடம் இருந்து பாதுகாக்க திட்டமிட்ட திப்புசுல்தான், இங்கு பீரங்கிகளை கோட்டையின் நாற்புறங்களிலும் உயரமான அமைத்துள்ளார். இவ்வாறான கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ள இக்கோட்டையில் ஒரு ரகசிய பாதாள அறை உள்ளதாகவும் கோட்டையின் கட்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீரில் மூழ்கும் முன் இங்கிருந்த பழமைவாய்ந்த சாமி சிலைகள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கண்டுகொள்ளப்படாத புதையல்

கண்டுகொள்ளப்படாத புதையல்

PC: Unknown

பல வரலாற்று சிறப்புகளுடன் கூடிய இந்த தண்டல்கோட்டை தற்போது யாரும் காணமுடியாதவாறு நீரில் மூழ்கிய நிலையில் உள்ளது. வரலாற்று வல்லுனர்களும், ஆராய்சியாளர்களும் இதனை ஆய்வு செய்ய வேண்டும். அப்போது கொங்குமண்டலம் குறித்த மேலும் பல உண்மைகள் வெளிவர வாய்ப்புள்ளது.

Read more about: coimbatore, tamilnadu, travel