» » செயற்கைகோள்களை தடுமாறச் செய்யும் தலம் - உண்மை என்ன தெரியுமா?

செயற்கைகோள்களை தடுமாறச் செய்யும் தலம் - உண்மை என்ன தெரியுமா?

Posted By: Udhaya

அதிகம் படித்தவை :  கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு இப்படி ஒரு ரூட் இருக்கு தெரியுமா?

நேட்டிவ் பிளானட் தமிழில் உங்கள் அருகிலுள்ள இடங்களின் சிறப்பு தன்மை பற்றி தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது திருநள்ளாறு எனும் ஊரைப் பற்றி.

ஒரு செயற்கைக்கோள் செயலிழந்து விட்டால் அதை திரும்பவும் இயக்குவதென்பது மிகவும் கடினம். அப்படி இருக்கையில் சனி கிரகத்தை நெருங்கி சென்ற செயற்கைக் கோள்கள் செயலிழந்து பின் மீண்டும் செயல்பட்டது என்று உலாவும் தகவல்கள் எந்த அளவுக்கு உண்மை என்பது நாசாதான் சொல்லவேண்டும்.

உலகநாயகனின் அற்புதமான திரைப்படங்கள் படம் பிடிக்கப்பட்ட இடங்கள்

வழக்கம்போல் நாசா அறிவியலை முதன்மைபடுத்த, உண்மைகளை கண்டறிந்து பலர் பலவிதமாக கருத்து கூறி வருகின்றனர்... சனியின் மாயமா இல்லை சனீஸ்வரனின் மந்திரமா வாருங்கள் திருநள்ளாற்றுக்கு ஒரு சுற்றுப்பயணம் செய்யலாம்.

கேரளாவின் 26 சுற்றுலாத் தலங்கள்! - ஒரு ஃபுல் ரவுண்ட் அப்

உண்மையில் திருநள்ளாறு சனீஸ்வரன் செயற்கைக் கோள்களை நிறுத்தி விளையாடுகிறாரா முழுவதும் படியுங்கள்.

திருநள்ளாற்றில் நடந்தது என்ன?

திருநள்ளாற்றில் நடந்தது என்ன?

பூமியைச் சுற்றி வரும் செயற்கைக் கோள்கள் திருநள்ளாறு வழியாக செல்லும்போது சில விநாடிகள் நின்றதாக தகவல்கள் பரவி வருகின்றன.

VasuVR

சேட்டிலைட் நின்றதா

சேட்டிலைட் நின்றதா


ஒரு சேட்டிலைட் சற்று விநாடிகள் நின்றால் என்னவாகும் என்பதை கற்பனை கூட செய்யமுடியாது.. அது வெடித்து சிதறலாம். எங்கேயோ போய் விழலலாம். வான்வெளியில் மறைந்து கூட விடலாம். அப்படி இருக்கையில் திருநள்ளாறு சம்பவம் எதை காட்டுகிறது.

Aravind Sivaraj

சேட்டிலைட் கேமராவில் பதிவாகிய திருநள்ளாறு

சேட்டிலைட் கேமராவில் பதிவாகிய திருநள்ளாறு

திருநள்ளாறு அருகே வரும்போது சேட்டிலைட் செயலிழந்து விட்டதாக கூறுகிறார்களே,, அப்படியானால் சேட்டிலைட் கேமராவில் எப்படி திருநள்ளாறு படம் விழுந்தது என்று கேட்கின்றனர் பலர். சரிதானே?

சனீஸ்வரன் வைக்கும் ட்விஸ்ட்

சனீஸ்வரன் வைக்கும் ட்விஸ்ட்


இந்தியா வழியாக செல்லும் அனைத்து செயற்கை கோள்களும் குறிப்பாக திருநள்ளாறு வழியாக செல்லும்போது 3 விநாடிகள் ஸ்தம்பித்து விடுகிறதாம். இது சனி பகவான் வைக்கும் ட்விஸ்ட் என்கிறார்கள்.

சனி கிரகத்துக்கும் சனீஸ்வரனுக்கும் உள்ள தொடர்பு என்ன

சனி கிரகத்துக்கும் சனீஸ்வரனுக்கும் உள்ள தொடர்பு என்ன

நாசா இதை சனி கிரகம் அருகே செல்லும்போது ஒரு ஸ்தம்பிப்பு நடந்ததாக கூறியதாக சில தகவல்கள் பரவின.. இன்னும் சிலர் இதை திருநள்ளாறு சனீஸ் வரனின் திருவிளையாடல் என்கின்றனர்.. இந்த அறிவியல் உலகத்துல எதை நம்புறதுனு தெரியலயே... அப்போ உண்மையில் இரண்டு சனிக்கும் உள்ள தொடர்பு என்ன?

Rsmn

நாசாவை மிரள வைத்த திருநள்ளாறு

நாசாவை மிரள வைத்த திருநள்ளாறு

இந்த மூன்று விநாடி ஸ்தம்பிப்பு காரணமாக செயற்கைக் கோள்களுக்கு எதுவும் ஆவதில்லை. அப்படி என்ன மர்மம் இதில் என்று நாசாவே வாயைப் பிளக்கிறது. இதை கண்டுபிடிக்க நாசா முயற்சிகளை மேற்கொண்டது.

ஆராய்ச்சியில் தெரிய வந்த உண்மைகள் என்ன?

ஆராய்ச்சியில் தெரிய வந்த உண்மைகள் என்ன?

இந்த ஆராய்ச்சியின் முடிவில் நாசா வெளியிட்ட தகவல்கள் உலகையே மிரள வைத்தன. திருநள்ளாறு பற்றி உலகுக்கே தெரிந்தது.

கோயிலில் விழும் கருநீல கதிர்கள்

கோயிலில் விழும் கருநீல கதிர்கள்

ஒவ்வொரு விநாடியும் கருநீல கதிர்கள் அந்த கோயிலின் மீது விழுந்து கொண்டே இருக்கின்றனவாம். இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் சனிப் பெயர்ச்சியின் போது இந்த கதிர்களின் அடர்த்தி அதிகமாக இருக்கும்.

ஸ்தம்பிப்பின் ரகசியம்

ஸ்தம்பிப்பின் ரகசியம்

இந்த கதிர்களை கடக்கும்போதுதான் செயற்கைக் கோள்கள் ஸ்தம்பிப்பதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு முறையும் இந்த பகுதியை செயற்கைக் கோள்கள் கடக்கும் போது ஸ்தம்பித்துக் கொண்டேதான் இருக்கிறது. இதுதான் திருநள்ளாறுவின் ஸ்பெஷல்.

தமிழர்களின் அறிவியல்

தமிழர்களின் அறிவியல்


அறிவியலில் வளர்ந்துவிட்டதாக மார்தட்டிக்கொள்ளும் நாமே பல செயற்கை கோள்களைக் கொண்டு கண்டறியும் சனி கிரகத்தின் கதிர்வீச்சி அதிகம் விழும் இடத்தைக் கண்டுபிடித்து, அங்கு கோயில் கட்டி வழிபடச்செய்வது எவ்வளவு பெரிய அறிவியல் திறமை. உண்மையில் வியக்க வைக்கிறதல்லவா என்கிறது திருநள்ளாறு பற்றி வெளியாகும் அந்த தகவல். இஸ்ரோ விஞ்ஞானிகளே இந்த தகவலில் உண்மையில்லை என்று கூறியபின்பும், இதுபோன்ற தகவல்கள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றன. எனினும் நம்பிக்கையுடன் திருநள்ளாறு செல்லும் பக்தர்கள் இதை உண்மை எனவே நம்புகின்றனர். அறிவியலுக்கும் அப்பாற் பட்டதுதானே இறைவன்.

சரி திருநள்ளாறு சுற்றியுள்ள பகுதிகளையும் கொஞ்சம் பார்க்கலாம்.

எங்கே இருக்கிறது

எங்கே இருக்கிறது

புதுச்சேரி மாநிலத்தில், கும்பகோணம் - காரைக்கால் தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ளது திருநள்ளாறு எனும் ஊர். இது சனிப் பெயர்ச்சிக்காகவும், சனி வழிபாட்டிற்கும் புகழ் பெற்றது.

திருநள்ளாறு மசூதி

திருநள்ளாறு மசூதி

திருநள்ளாறில் குறிப்பிட்ட சொல்லும்படியாகவுள்ள இடங்களில் இந்த மசூதியும் ஒன்று.

நடந்து செல்லும் தொலைவில் உள்ள இந்த மசூதி சிறப்பு வாய்ந்ததாகும்.

பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில்

பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில்

இதன் அருகிலேயே பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் ஒன்று உள்ளது. மேலும் ஸ்ரீ தர்பரன்யேஸ்வர சுவாமி கோயில், சரஸ்வதி தீர்த்தம், திருநள்ளாறு நல தீர்த்தம் ஆகியன உள்ளன.

திருநள்ளாறு பற்றிய மேலும் தகவல்களுக்குதிருநள்ளாறு

Read more about: travel, temple