பாகுபலி திரைக்கு வந்து இந்திய சினிமாவையே புரட்டி போட்டிருக்கிறது. 250 கோடி ருபாய் செலவில் மூன்று ஆண்டுகள் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் இந்திய சினிமாவின் வசூல் சாதனைகள் அனைத்தையும் முறியடித்து வருகிறது. மிகபிரம்மாண்டமாக உருவான இந்த திரைப்படமானது 'பாகுபலி' என்ற அரசனின் வாழ்கையில் நடந்த விஷயங்களை பற்றியதாகும். படம் முழுக்கவும் ஒரு புனைவுக்கதை போல தோன்றினாலும் உண்மையில் பாகுபலி என்ற மன்னர் படத்தில் வருவது போலவே அவருடைய சகோதரருடன் சிம்மாசனதிற்காக யுத்தம் புரிந்திருக்கிறார்.
பின் தன்னுடைய ராஜ்ஜியம் அனைத்தையும் விட்டுவிட்டு முற்றும் துறந்த ஜைன மத துறவியாக வாழ்ந்திருக்கிறார். அவருக்கு கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஹாசன் என்ற இடத்தில் மிகப்பெரியதொரு கோயில் இருக்கிறது. அந்த இடத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

ஷ்ராவனபெலகோள :
கர்நாடகா மாநிலத்தில் அதன் தலைநகரான பெங்களுருவில் இருந்து 158 தொலைவில் ஹாசன் மாவட்டத்தில் சந்னராயபட்டணா என்ற நகருக்கு அருகில் உள்ள ஷ்ராவனபெலகோள என்ற இடத்தில் ஒரு மலையின் மீது அமைந்திருக்கிறது கோம்மடேஸ்வரா பாகுபலி கோயில். இங்கே தான் பாகுபலியின் மிகப்பெரியதொரு சிலை இருக்கிறது.
Photo:Travelling Slacker

ஷ்ராவனபெலகோள :
ஜைன மதத்தினரின் மிகமுக்கிய யாத்ரீக ஸ்தலமாக இந்த கோம்மடேஸ்வரா கோயில் இருக்கிறது. இந்த கோயில் இருக்கும் இடம் தான் 2000 ஆண்டுகளுக்கு முன்பாக ஜைன மதத்தின் முக்கிய கேந்திரமாக இருந்து வந்திருக்கிறது. இந்த சிலை அமைந்திருக்கும் விந்தியகிரி மலையில் ஏராளமான ஜைன துறவிகள் வாழ்ந்திருக்கின்றனர்.
Photo:Philip Larson

ஷ்ராவனபெலகோள :
இந்த ஷ்ராவனபெலகோளவில் சந்திரகிரி மற்றும் வித்தியகிரி என இரண்டு மலைகள் இருக்கின்றன. அவற்றில் சந்திரகிரி மலையில் இந்தியா முழுமையும் ஆண்ட முதல் சக்ரவர்த்தியான சந்திரகுப்த்த மௌரியர் தன்னுடைய கடைசி காலத்தில் ஜைன மதத்தை தழுவி ஒரு துறவியாக வாழ்ந்து கி.மு 298 ஆம் ஆண்டு உயிர்துறந்திருக்கிறார்.

ஷ்ராவனபெலகோள :
ஷ்ராவனபெலகோள நகரில் உள்ள வித்தியகிரி மலையில் ஆசியாவிலேயே மிகப்பெரிய ஒற்றைக்கல்லினால் வடிக்கப்பட்ட சிலையான கோம்மடேஸ்வரா பாகுபலி சிலை அமைந்திருக்கிறது. கி.மு 983 ஆண்டு கங்கரு வம்ச மன்னர்களால் இது கட்டப்பட்டிருக்கிறது.
Photo:romana klee

பாகுபலியின் கதை :
வித்தியகிரி மலையில் முற்றும் துறந்து முனிவராக பிரமாண்டமாக வீற்றிருக்கும் பாகுபலி இப்படி ஜைன துறவியாக மாறியதன் பின்னணியில் சுவாரஸ்யமான ஒரு கதை சொல்லப்படுகிறது. இப்போது வெளிவந்திருக்கும் பாகுபலி படமும் இந்த கதையை தழுவி தான் எடுக்கப்பட்டிருக்கிறது. அது என்ன கதை என்பதை அடுத்த பக்கத்தில் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
Photo:Jag_e

பாகுபலியின் கதை :
ஜைன மதத்தின் நவீன யுகத்தின் முதல் தீர்த்தங்கரரான ரிஷப முனிவரின் மகன்கள் தான் பாகுபலி மற்றும் பரதர் ஆவர். ஆதி புராண என்ற நூலில் இவர்களை பற்றிய நிறைய குறிப்புகள் இருக்கின்றன. அரசராக இருந்த ரிஷப முனிவர் துறவறம் மேற்கொள்ள முடிவு செய்த பிறகு தன்னுடைய ராஜ்ஜியத்தை தனது மூத்த மகனான பரதன் ஆள வேண்டும் என கட்டளையிடுக்கிறார்.
Photo:Ankur P

பாகுபலியின் கதை :
இது பிடிக்காத இளைய மகனான பாகுபலி சகோதரனுடன் அரியாசனத்திற்காக யுத்தத்தில் ஈடுபட துணிகிறார். போர் வெற்றி தோல்வி இன்றி சமமாக முடிகிறது. அதன் பின் இந்த சிக்கலை முடிவுக்கு கொண்டுவர ஜல யுத்தம், மல்யுத்தம் போன்ற போட்டிகள் நடத்தப்படுக்கின்றன. இவற்றில் பலவானான பாகுபலியே வெற்றி பெறுகிறார்.
Photo:Travelling Slacker

பாகுபலியின் கதை :
சகோதர யுத்தத்தில் வெற்றிபெற்றாலும் அந்த சண்டை பாகுபலியினுள் மிகப்பெரிய தாக்கத்தை உண்டு செய்கிறது. இதனால் ராஜ்யத்தை ஆளும் தகுதியை பெற்றிருந்தாலும் அதனை பரதருக்கே விட்டுவிட்டு கடும் தவமிருக்க முடிவுசெய்கிறார் .
Photo:Suvajit Sengupta

பாகுபலியின் கதை :
பல ஆண்டுகள் கடும் தவத்தின் பயனாக ஞான முக்தி அடையும் பாகுபலி ஜைன மதத்தின் முக்கிய குருக்களில் ஒருவராக உருவெடுக்கிறார். அவருக்கு இந்த வித்தியகிரி மலையில் மட்டுமில்லாது கர்நாடகா மாநிலத்தில் பல இடங்களும் மிகப்பெரிய சிலைகள் உள்ள கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
balu

எப்படி அடைவது இந்த கோயிலை ? :
அருகிலுள்ள முக்கிய நகரங்கள் மற்றும் பெங்களூரிலிருந்து ஏராளமான பஸ் வசதிகள் ஷ்ரவணபெலகொலாவுக்கு உள்ளன. KSRTC மற்றும் சொகுசு பேருந்துகள் மூலமாகவும் பயணிகள் பெங்களூரிலிருந்து சிரவணபெலகொலாவுக்கு பிரயாணம் செய்யலாம். உள்ளூர் போக்குவரத்து வசதிகளாக டாக்சி, ஆட்டோ போன்றவை மிகுதியாக கிடைக்கின்றன.
Francesco Crippa

எப்படி அடைவது இந்த கோயிலை ? :
பெங்களுரு மற்றும் சென்னையில் இருப்பவர்கள் வார விடுமுறையை கொண்டாட ஏதேனும் வித்தியாசமான இடத்திற்கு செல்ல வேண்டும் என நினைப்பவர்கள் நிச்சயம் இந்த பாகுபலி கோயிலுக்கு வரலாம்.
Travelling Slacker

எப்படி அடைவது இந்த கோயிலை ? :
இந்த கோயிலானது தினமும் காலை ஆறு மணியில் இருந்து மாலை ஐந்து மணி வரை பக்தர்களுக்காக திறந்துவைக்கப்பட்டுள்ளது.
carol mitchell

எப்படி அடைவது இந்த கோயிலை ? :
ஒவ்வொரு பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை பால், சந்தனம், நெய், போன்றவை கொண்டு பாகுபலி சிலைக்கு மகாமஸ்தகா அபிஷேக பூஜை நடைபெறுகிறது. அடுத்தமகாமஸ்தகா அபிஷேக பூஜை 2018 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கிறது.
Thejaswi I

எப்படி அடைவது இந்த கோயிலை ? :
இந்த கோயிலைப்பற்றிய மேலும் பல தகவல்களை தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்துகொள்ளுங்கள்.
Ankur P



Click it and Unblock the Notifications



