» »சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1

சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1

Posted By: Udhaya

இந்தியாவில் எத்தனை தீவு இருக்கிறது என்றால் உடனே லட்சத்தீவு, அந்தமான் நிகோபார் தீவு என்று சிலவற்றை நம்மால் கூகுளிடாமல் அடுத்த நொடியே சொல்லிவிடமுடியும். ஆனால் இந்த தீவுகளுக்கு செல்ல சற்று சிரமப்படவேண்டும் அல்லது நேரச் செலவோ, பொருட்செலவோ சற்று அதிகம். அதற்கேற்ப உல்லாசமும், அனுபவமும் சிறந்து இருக்கும். ஆனால் நினைத்தமாத்திரத்திலேயே நாம் ஒரு தீவுக்கு செல்லவேண்டும் என்றால், முடியுமா? ஏன் முடியாது. வாங்க இப்பவே போகலாம் இந்த தீவுக்கு.

வழி : 1. சென்னையிலிருந்து - தூத்துக்குடி
2. கோவையிலிருந்து - தூத்துக்குடி

தமிழகத்தின் இருவேறு துருவங்களிலிருந்தும் இந்த தீவுக்கு செல்லவிரும்புபவர்களுக்காக இரண்டு வழிகளிலும் உங்களுக்கு நேட்டிவ் பிளானட் தமிழ் வழிகாட்டியாக விரும்புகிறது.

 போருக்கு தயார்

போருக்கு தயார்

போர் என்றவுடன் ஏதோ என்று பதறிவிடவேண்டாம். இப்போது எதற்கெடுத்தாலும் போர்.. ஆமாம் போர் என்றபடி சமூகவலைத்தளங்களில் டிரெண்ட் செய்கிறார்கள். அந்த சொல்லிலேயே இந்த பயணத்தை போர் என்போம். உங்கள் இருப்பிடத்தைப் பொறுத்து வழிகளை முடிவு செய்துகொள்ளுங்கள். வாருங்கள் புறப்படுவோம்.

சென்னை

சென்னை

சென்னையிலிருந்து புறப்படுகிறவர்கள் கார், பைக், பேருந்து என எந்த வாகனத்தில் புறப்பட்டாலும் முதலில் தூத்துக்குடி வந்தடைய வேண்டும். அதற்கு ஏற்ற சிறந்த பாதையை டிராபிக் குறைவான, டோல்கேட்டுகள் குறைவான பாதையை தேர்ந்தெடுத்தல் நலம். அப்படி சென்னை - தூத்துக்குடி மார்க்கத்திற்கு மூன்று பாதைகள் உள்ளன.

முதல் பாதை

முதல் பாதை

சென்னை - செங்கல்பட்டு - மேல்மருவத்தூர் - திண்டிவனம் -விழுப்புரம் - திருச்சி - மதுரை வழியாக தூத்துக்குடியை அடையலாம்.

இந்த பாதையில் மதுரையிலிருந்து காரியாபட்டி, அருப்புக்கோட்டை வழியாக பயணிக்கவேண்டும்.

இது சற்று எளிமையான பாதையாக இருப்பினும் அவ்வப்போது போக்குவரத்து நெரிசலுக்கு ஆளாகிறது. என்பதால் கூடுதல் பாதையாக மற்றொரு வழியும் உள்ளது.

 இரண்டாம் பாதை

இரண்டாம் பாதை


இது மாற்றுப்பாதையாகக் கொள்வது நல்லது. இடையில் சில டோல்கேட்கள் தவிர்க்கமுடியும் என்றாலும் சற்று அதிக தூரம் எடுக்கும் பாதை இதுவாகும்.

உளூந்தூர்பேட்டையிலிருந்து பிரியும் சாலை இளவனாசூர் - கள்ளக்குறிச்சி, சின்னசேலம், ஆத்தூர், சேலம் , நாமக்கல், கரூர் , திண்டுக்கல் வழியாக மதுரையை அடைகிறது. பின் அங்கிருந்து மேற்கூறிய வழியில் பயணிக்கலாம்.

சிறப்பு பாதை

சிறப்பு பாதை

இது பொதுவாக கூகுள் உள்ளிட்ட எந்த வழிகாட்டியிலும் இல்லாத பாதையாகும். இது அதிக தொலைவாக கருதப்பட்டாலும், சிறந்த பொழுதுபோக்குகள் நிறைந்த பாதை.

வெறுமனே சாலையை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு வருவது போர் என்பவர்கள் இந்த பாதையைத் தேர்ந்தெடுக்கலாம். கிழக்கு கடற்கரையோரமாக சாலையில் பயணித்தல் யாருக்குத்தான் பிடிக்காது சொல்லுங்கள்.

சென்னை - பாண்டிச்சேரி - வேளாங்கன்னி - திருத்துறைப்பூண்டி - அதிராம்பட்டினம் - ஜமாலியா - காட்டுமாவடி - அம்மாப்பட்டணம் - தொண்டி - தேவிப்பட்டினம் - ராமநாதபுரம் - கீழக்கரை - வைப்பாறு - வளச்சமுத்திரம் வழியாக தூத்துக்குடியை அடையலாம்.

மற்ற இருபாதைகளும் பெரிய சுவாரசியமானதாக இல்லாததால் இந்த பாதையைத் தேர்ந்தெடுத்து சுற்றுலாவைத் தொடர்வோம். ஒருவேளை அந்த பாதைகளில் பயணிப்பவர்களென்றால் கவலையின்றி மேற்சொன்ன வழிகளில் பயணிக்கலாம்.

சென்னை

சென்னை


சென்னையிலிருந்து நம் பயணத்தைத் தொடங்கும் முன் அந்த மாநகரத்தின் சில சிறப்புக்களை தெரிந்துகொள்வோம். இந்தியாவில் தில்லி, மும்பை, கல்கத்தா நகரங்களுக்கு அடுத்து பெரிய நகரம். தென் இந்தியாவின் நுழைவு வாயில். தமிழ்நாட்டின் தலைநகர். இந்தியாவின் சிறந்த துறைமுக நகரங்களில் ஒன்று. 2000 ஆண்டுகள் பழமையானது. சிறந்த கலை, கலாசார மற்றும் பண்பாட்டு மையமாக விளங்குகிறது. உலகின் இரண்டாவது நீண்ட, அழகிய கடற்கரை (மெரினா) உள்ள நகரம். இந்திய நகரங்கள் மட்டுமல்லாமல் உலக நாடுகளுடனும் சிறந்த போக்குவரத்துத் தொடர்பு கொண்டுள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட செயின்ட் ஜார்ஜ் கோட்டையைச் சுற்றி இந்த நகரம் ஏற்படுத்தப்பட்டது.

சென்னையைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள

சென்னை - பாண்டிச்சேரி

சென்னை - பாண்டிச்சேரி

சென்னையிலிருந்து 155கிமீ தொலைவில் அமைந்துள்ளது பாண்டிச்சேரி. இந்த பயணம் கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக அமையும். இதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள சொடுக்கவும்.

பாண்டிச்சேரி

பாண்டிச்சேரி


பழம் பெருமையுடைய காலனீய நகரமான பாண்டிச்சேரியில் குதூகலிக்க ஏராளமான அம்சங்கள் உள்ளன. உங்களுக்கு நேரமிருந்தால் பயன்படுத்திக்கொள்ளவும். பாண்டிச்சேரி பற்றி பல விசயங்களை இந்த கட்டுரை தெளிவாக விளக்குகிறது.

Sanyam Bahga

 பாண்டிச்சேரி - வேளாங்கன்னி

பாண்டிச்சேரி - வேளாங்கன்னி

பாண்டிச்சேரி - வேளாங்கன்னி வழித்தடம் 158 கிமீ நீளம் கொண்டது. இந்த பயணம் 3 முதல் 4 மணி நேரம் அமைகிறது. இந்த வழித்தடத்தில் பல சுற்றுலா அம்சங்களும், ஆன்மீகத் தலங்களும் உள்ளன. சிதம்பரம், சீர்காழி, காரைக்கால், நாகப்பட்டினம் என வழியில் பல பிரபலமான இடங்கள் உள்ளன. கடலூர் தாண்டியது பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகளும் வருகின்றன. அடுத்து நாம் திருத்துறைப்பூண்டி நோக்கி நகர்வோம்.

 பிச்சாவரம் காடுகள்

பிச்சாவரம் காடுகள்


கடலூரின் முக்கிய சுற்றுலாத் தலமாக பிச்சாவரம் மாங்குரோவ் காடுகள் விளங்குகின்றன. உலகிலேயே இரண்டாவது மிகப் பெரியதாகவும் மற்றும் ஆரோக்கியமானதாகவும் பிச்சாவரம் மாங்குரோவ் காடுகள் கருதப்படுகின்றன. இது சிதம்பரத்திலிருந்து 14 கிமீ தொலைவில் உள்ளது. குறுக்கும் நெடுக்குமாக இங்கு செல்லும் எண்ணற்ற சிறு சிறு தீவுக்கூட்டங்கள் உள்ளூர் மற்றும் புலம்பெயர் வெளிநாட்டு பறவைகளின் தங்குமிடமாக அமைந்திருக்கின்றன.

வாட்டர் ஸ்னிப்ஸ், ஹெரான், பெலிகன், கார்மோரான்ட்ஸ் மற்றும் ஈக்ரெட் ஆகியவை அவற்றில் சில குறிப்பிடத்தக்க பறவை வகைகளாகும். செப்டம்பர் முதல் ஏப்ரல் வரையிலும் மற்றும் நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரையிலும் உலகெங்கிலும் உள்ள பறவை கவனிப்பாளர்களை ஈர்க்கும் இடமாக இந்த காடுகள் உள்ளன. இந்த காடுகளுக்குள் படகுப் பயணம் செய்து சுற்றிப் பார்க்க முடியும் என்பது சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மற்றுமொரு அம்சமாகும்.

VasuVR

திருத்துறைப் பூண்டி

திருத்துறைப் பூண்டி

இங்கு பல சுற்றுலா அம்சங்கள் இருந்தாலும் இந்த ஊர் உலகப்புகழ் பெற காரணமாக இருப்பது இங்குள்ள ஒரு கோயில்தான். 1000 முதல் 2000 வருடங்களுக்கு முன் கட்டிய கோயில் இதுவாகும். பிறவி மருந்தீஸ்வரர் கோயில் என்றால் மிகச்சிறப்பாகும். இந்த கோயிலில் தற்போது சனிப்பெயர்ச்சியை எதிர்கொள்ளும் பக்தர்கள் அதிகம் வந்து செல்கின்றனர். சித்திரை திருவிழா, நவராத்திரி விழாக்கள் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

எந்த நோயாக இருந்தாலும் இங்கு சென்று வழிபட்டால் 41நாள்களில் குணமாகிவிடும் என்றும் கூறப்படுகிறது.

SriniG

திருத்துறைப்பூண்டி - தொண்டி

திருத்துறைப்பூண்டி - தொண்டி


திருத்துறைப்பூண்டி - தொண்டி வழித்தடம் 123கிமீ தூரம் கொண்டதாகும். அதிராம்பட்டினம் - ஜமாலியா - காட்டுமாவடி - அம்மாப்பட்டணம் வழியாக தொண்டியை அடைவது சிறந்த கடற்கரை சுற்றுலாவாக அமையும். ஏனெனில் இந்த பாதை கடலோரத்தில் செல்லும்படியாக அமைக்கப்பட்டுள்ளது.

திருத்துறைப்பூண்டியிலிருந்து கிளம்பும்போது வழியில் மாருதி அம்மன் கோயில், மாரித்தம்மாள் தேவாலயம், காளியம்மன் கோயில், அங்காளபரமேஸ்வரியம்மன் கோயில், எடையூர் மசூதி, காத்தவராயன் கோயில் என பல ஆன்மீகத் தலங்கள் அமைந்துள்ளன.

உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம்

உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம்

இந்த பாதையில் தில்லைவிலகம் எனும் பகுதிக்கு அருகில் உதயமார்த்தாண்டபுரம் அமைந்துள்ளது. இது இந்த பகுதியில் மிகவும் புகழ்பெற்ற பறவைகள் சரணாலயமாகும். தற்போது மழை பெய்து நீர் தங்கி இருப்பதால் அதிக பறவைகள் வந்துசெல்கின்றன.

PJeganathan

 தீ ஆறு

தீ ஆறு

தீ ஆறு அதாவது அக்னி ஆறு அதிராம்பட்டினம் தாண்டியதும் அமைந்துள்ளது. இதன் அருகே மாங்குரோவ் காடுகள் உள்ளன. அவை சுற்றுலாத்தளமாக உள்ளூர் மக்களால் பாதுகாக்கப்பட்டுவருகிறது. இப்படியாக பயணித்தால் 2மணி நேரத்தில் தொண்டியை அடைந்துவிடலாம்.

PJeganathan

தொண்டி

தொண்டி

சங்க இலக்கியங்களில் ஆர்வமுடைவர்களுக்கும், வரலாறு பற்றிய தெளிவு கொண்டவர்களுக்கும் இந்த இடம் அறிமுகமில்லாமல் இருக்காது. பாண்டியரின் காலத்தில் தொண்டி துறைமுகமாக விளங்கியது.

இங்கு சிதம்பரேஸ்வரர் கோயில், தொண்டியம்மன் கோயில் என்ற ஆன்மீகத் தலங்களும் உள்ளன.

Nileshantony92

தொண்டி - தூத்துக்குடி

தொண்டி - தூத்துக்குடி

இந்த பாதையில் தேவிப்பட்டினம் - ராமநாதபுரம் - கீழக்கரை - வைப்பாறு - வளச்சமுத்திரம் வழியாக தூத்துக்குடியை அடையலாம். இந்த பயணத்தின்போது அகோர வீரபத்ர கோயில், முல்லிமுனை, கரண்காடு, ரானபத்திரகாளியம்மன் கோயில், பாண்டிகோயில், சின்னப்பள்ளி உள்ளிட்ட இடங்களைக் காணமுடியும்.

இந்த வழித்தடம் 187கிமீ தொலைவு கொண்டது. சிப்பிக்குளம், வேம்பாறு, வைப்பாறு உள்ளிட்ட இடங்களைத்தாண்டி தூத்துக்குடியை நாம் அடையலாம்.

கோவை - தூத்துக்குடி

கோவை - தூத்துக்குடி

கோவையிலிருந்து தூத்துக்குடிக்கு பல்லடம் - குண்டடம்- கொளத்துப்பாளையம் ஒட்டன்சத்திரம் - மதுரை வழியாக அடைவது எளிது. இது 355கிமீ எடுக்கிறது. வேறு வழிகள் இருந்தாலும் அவை மழையினால் சாலைகள் மோசமாக இருப்பதால் இந்த வழியில் செல்வதே சிறந்தது.

 தூத்துக்குடி - வான் தீவு

தூத்துக்குடி - வான் தீவு


உள்ளூர் மக்களால் சர்ச் ஐலான்ட் அதாவது ஆலயத் தீவு என்றழைக்கப்படும் இது தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

ஒட்டப்பிடாரம் தாலுகாவில் அமைந்துள்ள அரசனடி கிராமத்துக்கு சொந்தமான இந்த தீவு 6 கிமீ தொலைவில் கடலுக்குள் அமைந்துள்ளது. ஆயத்தொலைவுகள்: 8°50'12"N 78°12'38"E

Lenish Namath

 பரப்பளவு

பரப்பளவு

மொத்தம் 16 ஹெக்டேர் மற்றும் 56ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த தீவு விழாக்களுக்கு சிறப்புவாய்ந்தது. ஊரில் ஏதேனும் விழா என்றால் இளைஞர்கள் இந்த தீவுக்கு வருகை தருகின்றனர்.

தூத்துக்குடியிலிருந்து

தூத்துக்குடியிலிருந்து

தூத்துக்குடியிலிருந்து 12கிமீ தொலைவில் உள்ளது இந்த வான்தீவு. இது கடற்கரையிலிருந்து 6கிமீ படகு பயணத்தில் செல்லும் தொலைவில் அமைந்துள்ளது.

அரிப்பின்காரணமாக இந்த தீவு படிப்படியாக கடலுக்குள் மூழ்கி வருகிறது என்பது சுற்றுலாப் பிரியர்களை வருத்தத்தில் ஆழ்த்தும் செய்தியாகும்.