Search
  • Follow NativePlanet
Share
» »நாகலோகம் எங்கே இருக்கிறது தெரியுமா? சத்தீஸ்கருக்கு ஒரு திக் திக் பயணம்

நாகலோகம் எங்கே இருக்கிறது தெரியுமா? சத்தீஸ்கருக்கு ஒரு திக் திக் பயணம்

நாகலோகம் எங்கே இருக்கிறது தெரியுமா? சத்தீஸ்கருக்கு ஒரு திக் திக் பயணம்

மலைப்பாங்கான பூமியையும் பசுமையான காடுகளையும் உள்ளடக்கிய ஜஷ்பூர், சத்தீஸ்கர் மாநிலத்தின் வடகிழக்கு பகுதியில் அமைந்திருக்கிறது. இங்குள்ள உயரமான மலைப்பகுதி 'ஊப்பர் காட்' (மேலேயுள்ள மலைப்பிரதேசம்) என்றும், சற்று கீழே உள்ள மலைகளை உள்ளடக்கிய பீடபூமிப்பகுதி 'நீச் காட்' என்றும் அழைக்கப்படுகின்றன. ஜண்டா காட் மற்றும் பேலாகாட் எனும் இதர இரண்டு மலைப்பிரதேசங்களையும் ஜஷ்பூர் மாவட்டம் உள்ளடக்கியுள்ளது. இங்குதான் இருக்கிறது நாகலோகம். திக் திக் பயணம் என்றவுடன் மலைத்துவிட்டீர்களா? கொஞ்சம் பொறுங்கள். இங்கிருக்கும் அருவிகளை பார்த்தால் நிச்சயமாக மிகப் பெரிய மூச்சு விடுவீர்கள்.

எங்குள்ளது


ஜஷ்பூர்நகர் என்று அழைக்கப்படும் ஜஷ்பூர் மாவட்டத்தலைநகரம் சோட்டாநாக்பூர் பீடபூமிப்பகுதியின் மீது அமைந்திருக்கிறது.

குன்குரி எனும் இடம் உஷ்ணப்பிரதேசமாகவும், பண்ட்ராபட் எனும் இடம் குளிர்ப்பிரதேசமாகவும் இம்மாவட்டத்தில் இடம் பெற்றுள்ளன.

இந்தியாவில் தற்போது ‘நக்சல்' இயக்கத்தினரின் ஆதிக்கத்தில் உள்ள பகுதிகளை குறிக்கும் ‘ரெட் காரிடார்' பட்டியலில் ஜஷ்பூர் மாவட்டம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அழகிய நீர்வீழ்ச்சிகள்

ஜஷ்பூர் மாவட்டம் முழுதும் அழகிய நீர்வீழ்ச்சிகள் நிரம்பியுள்ளதால் இயற்கை ரசிகர்களுக்கு பிடித்தமான எழில் அம்சங்களுக்கு இங்கு குறைவே இல்லை.

என்னென்ன நீர்வீழ்ச்சிகள் இருக்கின்றன

ராஜ்புரி நீர்வீழ்ச்சி, கைலாஷ் குஃபா, தன்புரி நீர்வீழ்ச்சி, ராணி தஹ் நீர்வீழ்ச்சி, பிரிங்ராஜ் நீர்வீழ்ச்சி, கதீட்ரல் குன்குரி, தமேரா நீர்வீழ்ச்சி, குடியாராணி கி குஃபா, ஸ்னேக் பார்க், சொக்ரா அகோர் ஆஷ்ரம், பதல்கோலே அப்யாரண், குல்லு நீர்வீழ்ச்சி, சுரி நீர்வீழ்ச்சி, ராணி ஜூலா, பனே நீர்வீழ்ச்சி, ஹர தீபா, லோரோ காட்டி மற்றும் பேல் மஹாதேவ் போன்றவை இங்குள்ள முக்கியமான சுற்றுலா அம்சங்களாகும்.

எப்போது செல்வது

ஒரு பீடபூமிப்பகுதியில் அமைந்திருப்பதால் ஜஷ்பூர் வருடம் முழுக்கவே இனிமையான பருவநிலையை கொண்டுள்ளது.

நாகலோகம்

தப்காரா எனும் இடத்தில் இந்த ஸ்னேக் பார்க் எனப்படும் பாம்புப்பண்ணை அமைந்துள்ளது. நாகலோக் என்றும் இந்த பாம்புப்பண்ணை அழைக்கப்படுகிறது. பெயருக்கேற்றபடி இங்கு இந்திய நாகம், கட்டுவிரியன், ராஜ நாகம் போன்ற பாம்பு வகைகள் போன்றவை பாதுகாத்து வளர்க்கப்படுகின்றன.

நீர்வீழ்ச்சிகளை எப்படி அடைவது?

ராஜ்புரி நீர்வீழ்ச்சி, தன்புரி நீர்வீழ்ச்சி, ராணி தஹ் நீர்வீழ்ச்சி, பிரிங்ராஜ் நீர்வீழ்ச்சி, தமேரா நீர்வீழ்ச்சி, குல்லு நீர்வீழ்ச்சி, சுரி நீர்வீழ்ச்சி, பனே நீர்வீழ்ச்சி போன்ற அழகிய நீர்வீழ்ச்சிகள் ஜஷ்பூர் பகுதியில் அமைந்திருக்கின்றன. இவற்றில் பிரிங்ராஜ் நீர்வீழ்ச்சி மாவட்டத்தலைநகரிலிருந்து 15 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது. இது ஒரு முக்கியமான பிக்னி ஸ்தலமாகும். ராஜ்புரி நீர்வீழ்ச்சி மற்ற எல்லா நீர்வீழ்ச்சிகளையும்விட பிரசித்தமாக அறியப்படுகிறது. இவை தவிர ராணி தஹ் நீர்வீழ்ச்சி மற்றும் தன்புரி நீர்வீழ்ச்சி ஆகிய இரண்டும் பசுமையான காட்டுப்பகுதியின் நடுவே ரம்மியமான இயற்கைக்காட்சிகளின் நடுவே வீற்றிருக்கின்றன. பனே நீர்வீழ்ச்சி குன்குரி எனும் இடத்திலிருந்து 25 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இதுவும் அவசியம் பார்க்க வேண்டிய நீர்வீழ்ச்சியாகும். குல்லு மற்றும் சுரி நீர்வீழ்ச்சிகளும் இதனை ஒட்டியே அமைந்திருக்கின்றன. இந்த எல்லா நீர்வீழ்ச்சிகளுமே செழிப்பான தாவர வளம் மற்றும் காட்டுயிர் வளம் நிரம்பிய வனப்பகுதிகளால் சூழப்பட்டிருப்பது ஒரு முக்கியமான சிறப்பம்சமாகும்.

Read more about: travel chhattisgarh
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X