Search
  • Follow NativePlanet
Share
» »மகாபாரதம் நிகழ்த்தப்பட்ட இடம் எங்கிருக்கு தெரியுமா?

மகாபாரதம் நிகழ்த்தப்பட்ட இடம் எங்கிருக்கு தெரியுமா?

ஆம். முற்கால இந்தியா என்று சொல்லப்படும் பகுதிகள் மகாராட்டிரதேசம், திராவிடதேசம், சோழதேசம், சிம்மளதேசம், பாண்டியதேசம், கேரளதேசம், கர்னாடகதேசம் உள்ளிட்ட 56 தேசங்களாக இருந்தது.

இந்த தொடரில் அடுத்ததாக நாம் பார்க்கவிருப்பது சௌராட்டிர தேசம்

சௌராட்டிர நாடு என்பது தற்கால குசராத்து மாநிலத்தின் மேற்கு பகுதியில் உள்ள சௌராட்டிர தீபகற்பம் எனும் கத்தியவார் தீபகற்ப பகுதியாகும். இத்தீபகற்ப பகுதியில் தற்கால ராஜ்கோட் மாவட்டம், போர்பந்தர் மாவட்டம், ஜாம்நகர் மாவட்டம், ஜூனாகாத் மாவட்டம், அம்ரேலி மாவட்டம், பவநகர் மாவட்டம், மோர்பி மாவட்டம், போடாட் மாவட்டம், சுரேந்திரநகர் மாவட்டத்தின் கிழக்கு பகுதி, தேவபூமி துவாரகை மாவட்டம் மற்றும் கிர்சோம்நாத் மாவட்டம் 11ஆகிய மாவட்டங்களை கொண்டுள்ளது. குசராத்து மாநிலத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள சூரத் என்ற நகரத்தின் பெயர் சௌராஷ்ட்டிரா என்ற சொல்லில் இருந்து வந்தது.

இத்தேசம், தற்போதைய குசராத்து மாநிலத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் எல்லைகள், வடக்கே கட்சு வளைகுடாவும், தெற்கே காம்பே வளைகுடாவும், மேற்கே அரபியன் கடலும், கிழக்கே தற்போதைய குசராத்து மாநிலத்தின் இதர பகுதிகளால் சூழப்பட்டது. சௌராஷ்ட்ரதேசத்தின் நிலப்பரப்பு முக்கடல்களால் சூழப்பட்டதால் இதனை சௌராட்டிர தீபகற்பம் அல்லது கத்தியவார் தீபகற்பம் என்பர்.

மகாபாரத களம் இப்போ எப்டி இருக்குனு தெரிஞ்சிக்க 6ம் பக்கம் வாங்க.....

பார் போற்றும் பர்வதமலை பரவசமூட்டும் அதிசயங்கள்.. தெரியுமா?

யாதவர்கள் ஆண்ட பகுதிகள்

யாதவர்கள் ஆண்ட பகுதிகள்

பண்டைய பாரத நாட்டின் மையப்பகுதியிலும் மேற்கு பகுதியிலும் யது குலம் எனப்படும் யாதவர்கள் ஆண்ட பகுதிகளான துவாரகை, மற்றும் ஆனர்த்த தேசம், லாட தேசம் சௌராட்டிர நாட்டில் உள்ளது.

சௌராஷ்ட்டிரம்

சௌராஷ்ட்டிரம்

யது குலத்தினர் ஆண்ட பிற நாடுகள், மதுரா, சேதி நாடு, தசார்ன நாடு, சூரசேனம், விரஜ நாடு, மகத நாடு, குந்தி நாடு, அவந்தி நாடு, மாளவம், ஹேஹேய நாடு மற்றும் விதர்ப்ப நாடு ஆகும். கத்தியவார் தீபகற்பத்தில் அமைந்துள்ள மேற்கு குசராத்து பகுதியை இன்றளவும் சௌராஷ்ட்டிரம் என்றே அழைக்கின்றனர். மேலும் இப்பகுதியில் வாழும் மக்கள் தங்களை சௌராஷ்ட்ரீகள் என்றே அழைத்துக் கொள்கிறார்கள்.

மகாபாரதத்தில் சௌராட்டிர நாடு

மகாபாரதத்தில் சௌராட்டிர நாடு

சகாதேவனின் படையெடுப்புகள்

மகாபாரதம், சபா பர்வம், அத்தியாயம் 30-இல் தருமரின் ராஜசூய யாகத்தின் பொருட்டு சகாதேவன் பௌரவ நாட்டை வென்று, பின் சௌராட்டிர நாட்டு யாதவர்களின் ஒரு பிரிவினரான விருஷ்ணிகள் ஆண்ட துவாரகை நாட்டின் மீது போர் தொடுத்தான். ஆனால் துவாரகை நாட்டு மன்னன் உக்கிரசேனர் சகாதேவனுடன் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டான்.

குருச்சேத்திரப் போர்

குருச்சேத்திரப் போர்

மகாபாரதம், பீஷ்ம பர்வம், அத்தியாயம் 20-இல் சௌராட்டிர நாட்டின் யாதவகுலத்தின் உட்குலங்களான விருஷ்ணிகுல மன்னர், போஜகுல மன்னர், மற்றும் குந்தி குல மன்னர் ஆகியவர்கள் சௌராட்டிர நாட்டின் தலைமைப் படைத்தலைவர் கிருதவர்மன் தலைமையில் நாராயணீப்படை எனும் பெரும்படையுடன் கௌரவர் படையில் சேர்ந்து குருச்சேத்திரப் போரில் கலந்து கொண்டனர். ஆனால் கிருஷ்ணரும் சாத்தியகி மட்டுமே பாண்டவர் அணியில் சேர்ந்தனர்.

அருச்சுனனின் படையெடுப்புகள்

அருச்சுனனின் படையெடுப்புகள்

தருமரின் அசுவமேத யாகத்தின் பொருட்டு அருச்சுனன் யாக குதிரையுடன் ஆந்திரர்களின் நாட்டு வழியாக சென்று திரும்புகையில் சௌராட்டிர நாட்டின் பிரபாச பட்டினம் (சோமநாதபுரம் (குசராத்து)) கடற்கரையில் புனித நீராடிவிட்டு, விருஷ்ணிகள் (யாதவகுலத்தின் ஒரு பிரிவினர்) ஆண்ட துவாரகை நகரை அடைந்தான். அப்போது யாக குதிரையை துவாரகை நாட்டு விருஷ்ணி குல வீரர்கள் கட்டிப் போட்டனர். இதை அறிந்த துவாரகை நாட்டு மன்னர் உக்கிரசேனர், பாண்டவர்கள் நமது உறவினர் என்பதால் யாக குதிரையை விட்டு விடச் சொன்னார்.

மகாபாரதம் நிகழ்ந்த இடங்களுக்கு சுற்றுலா

மகாபாரதம் நிகழ்ந்த இடங்களுக்கு சுற்றுலா

மகாபாரதம் நிகழ்ந்த இடங்களுக்கு சுற்றுலா செல்வதென்றால் எப்படி போகலாம் தெரியுமா?

சவுராட்டிரம் சுற்றுலாவுக்கு நமக்கு 4 நாள்கள் தேவைப்படுகிறது.

நாள் 1

நாள் 1

அகமதாபாத் சென்று ஜுனகத் வழியாக சாசனை அடைவோம்.

அங்கு உபர்காட் மலைக்கோட்டை, மகாபட் கான் மக்பாரா மற்றும் டர்பார் ஹால் அருங்காட்சியகம் ஆகியவை உள்ளன.

அன்றைய இரவு கிர்ரில் ஓய்வெடுக்கிறோம்.

நாள் 2

நாள் 2

காலை உணவுக்கு பிறகு கிர் காடுகளுக்குப் பயணம் செல்லலாம். பின் அந்த நாள் மாலையில் டையூ வின் அழகிய கடற்கரைகளில் பொழுதை கழிக்கலாம்.

அன்றைய நாள் முழுமையும் கடற்கரை மற்றும் காடுகளில் கழித்துவிட்டு, அங்கேயே இரவு தங்குவோம்.

டையூவில் பார்ப்பதற்கு கண்களுக்கினிய பல்வேறு பகுதிகள் உள்ளன.

நாள் 3

நாள் 3

காலை உணவிற்கு பிறகு, சோம்நாத் செல்கிறோம். சோம்நாத் கோயில், பால்கா திர்த், திரிவேனி பிரதேசம், கீதா மந்திர் மற்றும் லக்ஷ்மி நாரயணர் கோயிலுக்கு சென்றுவிட்டு மாலையில் ராஜ்கோட்டுக்கு பயணிக்கிறோம். ராஜ்கோட்டில் இரவு முழுவதும் கழித்துவிட்டு, பின் காலையில் சுற்றுலாவை மேற்கொள்வோம்.

நாள் 4

நாள் 4

ராஜ்கோட்டில் காலை உணவு உண்டு, அருகிலுள்ள இடங்களுக்கு சென்று விட்டு, அப்படியே அகமதாபாத்திலுள்ள அறிவியல் பூங்காவுக்கும் சென்று நம் சுற்றுலாவை இனிதே நிறைவு செய்வோம்.

இதுபோன்ற சுற்றுலா நிகழ்வுகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் நேட்டிவ் பிளானட் தமிழ்

Read more about: travel temple
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more