Search
  • Follow NativePlanet
Share
» »முனிவருக்கு காட்சியளித்த நரசிம்மன்..! தென் அகோபிலமான பூவரசன் குப்பம்..!

முனிவருக்கு காட்சியளித்த நரசிம்மன்..! தென் அகோபிலமான பூவரசன் குப்பம்..!

பிரகலாதனைக் கொல்லத் தான் எடுத்த முயற்சிகளில் எல்லாம் தோற்றுப்போன இரணியன் தானே நேராகப் பிரகலாதனைக் கொல்லப் போன போது பிரகலாதன் பயமின்றி தான் வணங்கும் கடவுள் தன்னைக் காப்பார் என்றான். இரணியன், விஷ்ணுவைத் தானே கொல்லப் போவதாகக் கூறி உன் கடவுளைக் காட்டு என பிரகலாதனிடம் கேட்க, பிரகலாதனோ தன் கடவுள் அரி ஸ்ரீமன் நாராயணர் எங்கும் இருப்பார் எதிலும் இருப்பார், ஏன் தூணிலும் இருப்பார் எந்தத் துரும்பிலும் இருப்பார் என்று கூறினான். இரணியன் கோபத்தில் ஒரு தூணை உடைக்க, ஸ்ரீமன் நராயணர், நரசிம்ம அவதாரமாக தூணில் இருந்து வெளிவந்து இரணியன் பெற்ற சாகா வரங்கள் பலிக்காத வகையில் அவனை வதம் செய்து பிரகலாதனைக் காத்தருளினார். இதையெல்லாம் புராணங்களின் வாயிலாக நாம் கேட்டிருப்போம். ஆனால், இரணியனால் பாதிக்கப்பட்ட முனிவர்களுக்கு நரசிம்மன் அருள்பாலித்த சிறப்பு குறித்தும், அந்த தலம் குறித்தும் தெரியுமா ? வாருங்கள், புராணங்களின் பாதையில் அந்த ஆலயத்தை நோக்கி பயணிப்போம்.

எங்கே உள்ளது ?

எங்கே உள்ளது ?

விழுப்புரத்தில் இருந்து பண்ருட்டிக்கான தேசிய நெடுஞ்சாலை 36-யில் சுமுர் 18 கிலோ மீட்டர் பயணித்தால் பூவரசன்குப்பத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ லட்சுமி நரசிம்மன் கோவில். அல்லது, காவணிப்பாக்கம் வழியாகவும் சுமார் 18.5 கிலோ மீட்டர் பயணித்தால் இக்கோவிலை அடையலாம்.

Vaikoovery

கோவில் சிறப்பு

கோவில் சிறப்பு

நரசிம்மர் அவதரித்த இடம் அஹோபிலம் என்று அழைக்கப்படுகிறது. இது ஆந்திர மாநிலத்தில் உள்ளது. சப்தரிஷிகளான அத்ரி, பரத்வாஜர், ஜமதக்னி, வசிஷ்டர், கௌதமர், கௌசிகர், காச்யபர் ஆகியவர்கள் இரணியவதத்தை காண விரும்பி இறைவனை வேண்டி தவம் இருந்தனர். அவர்களுக்காக திருமால் காட்சி கொடுத்த இடம் தான் பூவரசன்குப்பம். இத்திருத்தலம் தென்அஹோபிலம் என்று வணங்கப்படுகிறது.

Adityamadhav83

தலவரலாறு

தலவரலாறு

பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவில் கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் முதலாம் பல்லவ மன்னரால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தின் முக்கிய எட்டு நரசிம்மர் தலங்களில் நடுவில் இருப்பது பூவரசன்குப்பம் கோவிலாகும். அதாவது பூவரசன் குப்பம் நடுவில் இருக்க, இதைச் சுற்றி சோளிங்கர் நரசிம்மர், நாமக்கல் நரசிம்மர், அந்திலி நரசிம்மர், சிங்கப் பெருமாள் கோவில், பரிக்கல் நரசிம்மர், சிங்கிரி கோவில் லட்சுமி நரசிம்மர், சித்தனைவாடி நரசிம்மர் ஆகிய தலங்கள் அமைந்துள்ளன. இத்தகைய சிறப்புவாய்ந்த இத்திருத்தல மூலவர் லட்சுமி நரசிம்மர் நான்கு கரங்களுடன் காணப்படுகிறார்.

Muthukumaran pk

திருவிழா

திருவிழா

சித்திரை மாதம் நடக்கும் நரசிம்ம ஜெயந்தியன்று சகஸ்ர கலச திருமஞ்சனம் சிறப்பாக நடைபெறும். சுவாதி நட்சத்திரத்தன்று நடைபெறும் விசேஷ வழிபாடுகளில் பங்கேற்று வழிபட்டால் கடன்கள் தீரும், செல்வம் குவியும் என்பது நம்பிக்கை. வைகுண்ட ஏகாதசி, புரட்டாசி, வைகாசி, தைமாதங்களில் வெகு விமர்சையாக விழா கொண்டாடப்படுகிறது.

Ssriram mt

நடை திறப்பு

நடை திறப்பு

ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில் நடை காலை 6 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறக்கப்பட்டிருக்கும்.

Suresh Rao

வழிபாடு

வழிபாடு

கி.பி. மூன்றாம் நூற்றாண்டில், நரசிம்மர் தூணிலிருந்து தோன்றியதால் அக்காலத்தில் பூவரசன் குப்பத்தில் ஒரு தூணையே நரசிம்மராக வழிபாடு செய்து வந்துள்ளார்கள். அதன் பின், பல்லவர்கள் நரசிம்மருக்கு கோவில் கட்டி சிலை பிரதிஷ்டை செய்தனர். இதையடுத்து அந்த தூண் ஹோம மண்டபம் பகுதியில் ஒரு இடத்தில் நிறுவப்பட்டுள்ளது. செல்வம் மிகுற்த செழிப்பான வாழ்க்கை வேண்டுவோர், நோய் நொடியற்ற மகிழ்ச்சிகரமான நாட்களைத் தேடுவோர் என பக்தர்கள் அந்தத் தூணிடம் முறையிட்டு சொல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

Ks.mini

தல அமைப்பு

தல அமைப்பு

கோவில் மூலவர் சன்னதி முன்னால் கொடிமரமும் அதன் முன் பலிபீடமும் அமைக்கப்பட்டுள்ளது. கொடிமரத்தின் முன்னே கருடாழ்வார் சன்னதி மூலவரை நோக்கிய வண்ணம் இருக்கிறது. இந்த தலத்தின் விஷேசம் என்னவென்றால் மற்ற இடங்களில் பயங்கரமான உருவத் தோற்றத்தில் காட்சியளிக்கும் நரசிம்மர் இங்கே, தம்பதியர் சமேதராக மிகவும் சாந்தமாய் காட்சியளிக்கிறார். தாயாரின் ஒரு கண் நரசிம்மரையும், மற்றோர் கண் பக்தர்களையும் நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறது. பிரகாரத்தினுள் இராமானுஜர், நாகசன்னதியும் இருக்கிறது.

Ssriram mt

முனிவர்களுக்கு காட்சிதந்த நரசிம்மர்

முனிவர்களுக்கு காட்சிதந்த நரசிம்மர்

இரணிய வதத்திற்குப்பின் பகவானிடம் நரசிம்மத் திருக்கோலத்தைத் தங்களுக்குக் காட்டியருள வேண்டும் என்று முனிவர்கள் வேண்டினர். அதற்கிசைந்த பெருமாள் அவ்வண்ணமே முனிவர்களுக்குக் காட்சி தந்தார். அவ்வாறு காட்சித் தந்தத் தலங்கள் தமிழகத்தில் எட்டு இடங்களில் உள்ளன. அதில் ஒன்றே இத்திருத்தலம். அப்படி நரசிம்மனாக முனிவர்களுக்குக் காட்சிக் கொடுத்தபோது அவரது ஆக்ரோசஷத்தைத் தாங்க முடியாத முனிவர்களும், சப்த ரிஷிகளும் மகாலட்சுமியை வேண்டினார்கள். நரசிம்மரின் கோபத்தை தனிக்க எண்ணிய லட்சுமி அம்மையார், நரசிம்மரின் மடியில் அமர்ந்து ஒரு கண்ணால் நரசிம்மரையும், ஒரு கண்ணால் சப்த ரிஷிகளையும் பார்த்தபோது நரசிம்மர் கோபம் தணிந்து, சாந்தரூபியாக காட்சியளித்தார்.

Ilya Mauter

புராண வரலாறு

புராண வரலாறு

தமிழகத்தில் சமண ஆதிக்கம் நிலவி வந்த காலத்தில் இப்பகுதியை ஆட்சி செய்து வந்த பல்லவ மன்னன் தன் நாட்டு மக்களை கொடுமை செய்து வந்தார். இதனை எதிர்த்துக் குரல் நரஹரி குரல்கொடுத்ததால் அவரைக் கொல்ல ஆணையிட்டார் பல்லவ மன்னர். என்னைக் கொல்ல ஆணையிட்ட உனக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடிக்கட்டும். உன் உடல் அழுகட்டும் என்று சாபமிட்டுக் காற்றோடு கரைந்தார் நரஹரி. ஒரு சில நாட்களிலேயே மன்னருக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்து, உடல் வேதனையால் அவதிப்பட நேர்ந்தது. பின், நாட்டை விட்டே வெளியேறிய மன்னன் ஒரு நாள் தென்பெண்ணையாற்றின் வடகரையில் ஒரு பூவரச மரத்தடியில் களைப்புடன் படுத்திருந்தான். அவன் ஆணவம் அழிந்து ஆதிக்க வெறியில் தான் செய்த பாவங்களுக்காகக் கண்ணீர் விட்டு கலங்கி சோர்ந்து அப்படியே தூங்கி விட்டான். திடீரென்று விழித்தபோது, அவன் மேல் ஒரு பூவரச இலை விழுந்திருந்தது. கீழே விழுந்த அந்த இலையின் அதிர்வைக்கூட அவனால் தாங்க முடியாமல் அந்த இலையை நகர்த்த எண்ணி அதைக் கையில் எடுத்தான். அதில் லட்சுமி நரசிம்மர் உருவம் தெரிந்தது. பூவரச இலையில் பூத்த முறுவலுடன் நரசிம்மர் அன்னையுடன் சேர்ந்து இருப்பதைக் கண்டு கண்ணீர் விட்டு வேண்டினார். அப்போது ஒலித்த அசரீரி இந்தப் பூவரச மரத்தடியிலேயே லட்சுமி நரசிம்மருக்கு கோவில் கட்ட வேண்டும் என கூறியது. மன்னன் கோவில் கட்ட நினைத்த மறுகணமே அவன் உடலில் இருந்த நோய்கள் நீங்கி தெளிவு பெற்றான்.

Kurumban

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?

விழுப்புரம் - புதுச்சேரி சாலையில் உள்ள சிறுவந்தாடு என்னும் ஊரில் இருந்து பூவரசங்குப்பம் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. விழுப்புரம் பண்ருட்டி சாலையில் உள்ள கள்ளிப்பட்டியில் இருந்து இத்தலம் 3 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. விழுப்புரத்தில் இருந்து நேரடி பேருந்து வசதிகளும், தனியார் வாகன வசதிகளும் எளிய முறையில் உள்ளது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more