» »அழிந்து கொண்டிருக்கும் அரிதான வன விலங்குங்கள் இந்தியாவில் எங்கெல்லாம் இருக்குன்னு தெரியுமா?

அழிந்து கொண்டிருக்கும் அரிதான வன விலங்குங்கள் இந்தியாவில் எங்கெல்லாம் இருக்குன்னு தெரியுமா?

Written By: Balakarthik Balasubramanian

இந்தியாவின் வனவிலங்கு தென்படும் இடங்கள் யாவும் புகைப்படக்காரர்கள், வனவிலங்கு மற்றும் பயண ஆர்வலர்களின் முக்கிய இடமாக விளங்கும் ஒன்றாகும். அதிர்ஷ்ட வசமாக, உலகிலேயே பலவித உயிரினங்களுக்கு உறைவிடமாக இந்தியா இருப்பது நம் நாட்டிற்கே பெருமை சேர்க்கிறது. இந்திய இமயமலை, மேற்குத்தொடர்ச்சி, கிழக்குத்தொடர்ச்சி என பலவும் முக்கிய தரவு இனத்தை கொண்டிருப்பதோடு, பாதுகாப்பான மற்றும் அசாதாரண விலங்குகளுக்கு அடைக்கலமும் தந்திருக்கிறது.

இந்த வனவிலங்குகள் மட்டும் நம் கிரகங்களின் அழகினை பாதுகாக்க பங்களிக்கவில்லை. ஆனால், இந்த வனவிலங்குகள், நாம் வாழும் சூழலை வளமானதாக மாற்ற பெரும் துணை புரிகிறது என்பதே உண்மை. கவலையான விசயம் என்னவென்றால்...ஒவ்வொரு வருடமும் மனித வளத்தால், இந்த வனவிலங்குகளின் வாழ்க்கை வேகமாக அழிக்கப்படுகிறது என்பதே. இருப்பினும், பல தேசங்கள் ஒன்றிணைந்து வேலையில் ஈடுபட்டு விலைமதிப்புடைய வனவிலங்குகளின் வாழ்க்கையை பாதுகாக்கவும் முன்வந்துள்ளது.

இந்தியாவில் எண்ணற்ற வனவிலங்கு சரணாலயங்களும், உயிர்க்கோளம் கையிருப்புகளும், தேசிய பூங்காவும், பாதுகாப்பு பகுதிகளும், தனியாக ஒதுக்கப்பட்ட பகுதிகளும், காடுகளும் என நீண்டும் அகன்றும் காணப்படுகிறது. இந்த தனித்தன்மை மிக்க நிலப்பரப்புகளும், சூழலும்...தாவரங்களின் வளர்ச்சியிலும், விலங்குகளின் பராமரிப்பிலும் முக்கியத்துவம் கொண்டு தனித்தன்மையுடன் விளங்குகிறது. இந்த இயற்கை அழகு அந்த இடத்திற்கு பெருமை சேர்க்க, நாடு முழுவதும் கொள்ளை போகும் இன்பத்தையும் அது நமக்கு தருகிறது. சில இடங்களில் உலகிலே அழிந்து கொண்டிருக்கும் உயிரினங்களையும் நம்மால் பார்க்க முடிகிறது.
தொடர்ந்து படிப்பதன் மூலம் சில அழிந்துகொண்டிருக்கும், அரிதான உயிரினங்களையும், அதனை நாம் இந்தியாவில் எங்கே காணலாம்? என்பதையும் பார்க்கலாம்.

 லடாக்கில் காணப்படும் பனிச்சிறுத்தை:

லடாக்கில் காணப்படும் பனிச்சிறுத்தை:

லடாக் என்றால் ‘உயர்ந்த மலைப்பாறைகளின் நிலம்' என அர்த்தமாகும். இமய மலையின் இந்த அற்புதமான நிலப்பரப்பில் காணப்படும் பனிச்சிறுத்தைகள், உலகிலேயே அழிந்து வரும் உயிரினமாகவும், பயம் தரக்கூடிய ஒரு இனமாகவும் காணப்படுகிறது. லடாக் இன்றும்... யாராலும் ஆராய்ந்திடாத, தொடாத பகுதிகளையும், பாறைகளையும், மலை நிலப்பகுதிகளையும் கொண்டிருக்கிறது. குளிரின் தாக்கத்தால் பெரிய பூனை உரோமங்களும் உருவாகிறது.

லடாக்கில் காணப்படும் ஹெமிஸ் தேசிய பூங்கா மழுப்பக் கூடிய உயிரினங்களுக்கு சிறந்த இடமாக விளங்குகிறது. பனிச்சிறுத்தை காணும் இந்தியாவின் மற்ற இடங்களாக உத்தரகான்ட், இமாச்சல பிரதேசம், சிக்கிம், ஆந்திர பிரதேசம் ஆகியவையும் இருக்கிறது.

 லடாக்கில் நாம் பார்க்க வேண்டிய மற்ற இடங்கள்:

லடாக்கில் நாம் பார்க்க வேண்டிய மற்ற இடங்கள்:

பிரசித்திபெற்ற லடாக்கில் நாம் காண வேண்டிய மற்ற இடங்களாக பாங்கோங்க் ஏரி, நுப்ரா பள்ளத்தாக்கு, லேஹ் அரண்மனை, கர்துங்கா லா வழி, சாடார் ஆகியவை நாம் குளிர்காலத்தின்போது பயணிக்க வேண்டிய தனித்துவமிக்க இடங்களாக இருக்கிறது. மலை ஏறும் ஆர்வலர்கள் ஷான்ஷ்கர் நதியில் பயணிக்கலாம். பனிச்சிறுத்தை பயணம், மார்கா பள்ளத்தாக்கு பயணம், ஸ்டோக் காங்க்ரி என பல பிரசித்திபெற்ற பயண இடங்கள் லடாக்கில் அமைந்து நம்மை பரவசமூட்டுகிறது.

Samson Joseph

 அருணாச்சல பிரதேசத்தில் காணப்படும் சிவப்பு பாண்டா:

அருணாச்சல பிரதேசத்தில் காணப்படும் சிவப்பு பாண்டா:

இந்தியாவின் அகன்று விரிந்த, குறைவாக ஆராய்ந்த இந்த அருணாச்சல பிரதேசத்திற்கு ‘சூரிய உதயத்தின் நிலம்' என பொருளாகும். அழகிய மிகப்பெரிய ஏழு தங்கை மாநிலம் எனப்படும். இதனை ‘இந்தியாவின் ஆர்க்கிட் மாநிலம்' என்றும் அழைப்பர். மேலும் உயிரியல் மற்றும் தாவரவியல் நிபுணர்களின் சொர்க்கம் என்றழைக்கப்படும் இந்த இடம், எண்ணற்ற தாவரங்களையும், விலங்குகளையும் கொண்டிருக்கிறது. ஆதிவாசிப் பழங்குடியினர், வனவிலங்குகளின் சிறந்த வாழ்க்கை, யாரும் தொட்டிராத நிலம், என இந்த அருணாச்சல பிரதேசம் முழுக்க அழகிய காட்சியாகவே தென்படுகிறது.

ஈர்க்கும் பல்லுயிரினங்களும், அருமையான வெப்ப சூழ்நிலையும், பசுமை நிறைந்த ஊசியிலை காடுகளும், மூங்கில் காடுகளும், அருணாச்சல பிரதேசத்தின் பள்ளத்தாக்குகளையும் என பலவற்றை வாழிடமாக கொண்டிருக்கும் சிவப்பு பாண்டா அழிந்துவரும் மற்றொரு உயிரினம் என்பதும் தெரிய வருகிறது. பெரிய பாண்டாவின் உறவினராக சிறியது இருக்க, பெரியது பார்ப்பதற்கு சிவப்பு-பழுப்பு நிற உரோமம் கொண்டு, தனித்துவமிக்க நீண்ட வாலுடனும் திரிகிறது.

https://en.wikipedia.org/wiki/File:Red_Panda_(25193861686).jpg

 அருணாச்சல பிரதேசத்தில் நாம் பார்க்க வேண்டிய மற்ற இடங்கள்:

அருணாச்சல பிரதேசத்தில் நாம் பார்க்க வேண்டிய மற்ற இடங்கள்:

அருணாச்சல பிரதேசத்தின் தலைமையில் சிக்கிம், மேகாலயா, டார்ஜிலிங்க் ஆகிய இடங்களில் பார்ப்பதற்கு அழகிய மற்றும் மலுப்பக்கூடிய விலங்குகள் இருக்கிறது. அருணாச்சல பிரதேசத்தில் நாம் பார்க்க வேண்டிய மற்ற இடங்களாக டவாங்க், பொம்டில்லா மடாலயம், சேலா கடவு, பாங்கடெங்க் சோ ஏரி, நுரனாங்க் வீழ்ச்சி என நிறையவே இருக்கிறது.

Ashwani Kumar

 கேரளாவில் காணப்படும் சிங்க வால் குரங்குகள்:

கேரளாவில் காணப்படும் சிங்க வால் குரங்குகள்:

இந்தியாவின் மேற்குத்தொடர்ச்சி பகுதி யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாகும். அதோடு மட்டுமல்லாமல்...உலகில் காணப்படும் எட்டு பல்வேறு உயிரினங்கள் வாழும் இடங்களுள் ஒன்றாகவும் விளங்குகிறது. தென்னிந்தியாவின் மேற்குத்தொடர்ச்சியில் ஜோக் வீழ்ச்சி, ஷோலா வனம், குட்ரேமுக் தேசிய பூங்கா, பெரியார் புலி சரணாலயம், யாரும் கண்டிராத நிலம், மறைமுக நீர்வீழ்ச்சி, அடர்ந்த காடுகள் என பல காணப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல்...இங்கே மரங்களும், விலங்குகளும் நிறையவே காணப்படுகிறது.

நீலகிரி மலையில் காணப்படும் சைலன்ட் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா, அதிக வனவிலங்குகளை கொண்டதொரு அழகிய மண்டலமாகும். கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு பள்ளத்தாக்கு தான் இந்த சைலன்ட் பள்ளத்தாக்கு. இந்த இடம் சிங்க வால் குரங்குகளின் (அ) ஒருவகைக் குரங்குகளின் இருப்பிடமாகவும் இருக்கிறது. இந்த உயர் விலங்கு அரிதாக மட்டும் காணப்படாமல் ஆபத்தானதாகவும் இருக்கிறது. கேரளாவை தவிர்த்து, இந்த அரிய வகை விலங்கினம் கர்நாடகாவின் மேற்குத்தொடர்ச்சி மற்றும் தமிழ் நாட்டிலும் காணப்படுகிறது.

Naseer

 கேரளாவில் நாம் காண வேண்டிய மற்ற இடங்கள்:

கேரளாவில் நாம் காண வேண்டிய மற்ற இடங்கள்:

கடவுள் குடிகொண்டிருக்கும் நாட்டில் பல இடங்கள் பார்க்க இருக்க, அவற்றுள் சில இடங்களாக தேக்கடி, முழப்பிள்ளங்காட் கடற்கரை, கொச்சி கோட்டை, குருவாயூர் ஆலயம், குமரோகம் பறவைகள் சரணாலயம், எடக்கால் குகை, அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி என இன்னும் நிறையவே காணப்படுகிறது.

Framesnlight

 குஜராத்தில் காணப்படும் ஆசிய சிங்கம்:

குஜராத்தில் காணப்படும் ஆசிய சிங்கம்:

நம் நாட்டின் தேசத்தந்தை மஹாத்மா காந்தியின் பிறப்பிடமான குஜராத்தை, ‘புராணங்கள் மற்றும் சிங்கங்களின் பூமி' என்றும் அழைப்பர். புகழ்மிக்க வரலாற்றாசிரியர்களையும், ஆராய்ச்சியாளர்களையும் கொண்ட இடம் தான் குஜராத். மேலும், பழங்காலத்து பெருமையையும், வரலாற்றையும் தாங்கிய இந்த தளமானது... சிந்து சமவெளி நாகரிகத்தையும் தாங்கிகொண்டு நிற்கிறது. சுவையான உணவிற்கும், வண்ணமயமான விழாக்களுக்கும், தோழமை கொண்ட மக்களுக்கும் முற்றிலும் சிறந்த பிரசித்திபெற்ற ஒரு இடமாகவும் இது விளங்குகிறது.

குஜராத்தின் கிர் காடு, இதனை ‘சாசன்-கிர்' என்றும் அழைப்பர். இங்கே தான் ஆசிய சிங்கங்கள் காணப்படுகிறது. இந்த காடுகள் 'உலர்ந்த புதர் நிலமாக காட்சியளிக்க, இலையுதிர் தன்மையுடனும் காணப்படுவதால், மிகவும் முக்கியமான மற்றும் பாதுகாக்க வேண்டிய பகுதிகளுள் ஒன்றாகவும் இது விளங்குகிறது. கம்பீரமான விலங்குகளின் வீடாக இந்த காடு இருக்க, இதேபோல் ஆப்ரிக்கா, ஆசியா, மற்றும் க்ரீசிலும் காணப்படுகிறது.

Mohsin alam3

 குஜராத்தில் நாம் காண வேண்டிய மற்ற இடங்கள்:

குஜராத்தில் நாம் காண வேண்டிய மற்ற இடங்கள்:

இங்கே நம் தேர்ந்தெடுப்புக்கு ஏற்ற எண்ணற்ற கடற்கரைகளும், ஆலயங்களும், வரலாற்று தளங்களும் நிறையவே காணப்பட, குஜராத்தில் நாம் பார்க்க வேண்டிய சுவாரஸ்ய இடங்களாக ரான் ஆஃப் கெட், துவாரகா, தொல் ஏரி பறவைகள் சரணாலயம், மரைன் தேசிய பூங்கா, சபுட்டரா, தொலவிரா, போர்பந்தர் என பல இடங்கள் காணப்படுகிறது.

iamjo

 மத்திய பிரதேசத்தில் காணும் ராயல் பெங்கால் டைகர்:

மத்திய பிரதேசத்தில் காணும் ராயல் பெங்கால் டைகர்:

‘இந்தியாவின் இதயம்' என அழைக்கப்படும் மத்திய பிரதேசம், பழங்காலத்து வரலாற்றுக்கு புகழ்பெற்ற ஒரு இடமாகும். இந்த நிலங்களில் 30 சதவிகிதம் அடர்ந்த காடுகளால் சூழ்ந்திருக்க, வனவிலங்கு பாதுகாப்புக்கும் இங்கே வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. இந்த இடம் இயற்கை கனிமங்கள் அதிகம் நிறைந்ததாகவும் காணப்படுகிறது. மத்தியப் பிரதேசத்தின் பன்னாவில் மிகப்பெரிய வைரமும் உள்ளது. அதோடு, நிறைய பிரசித்திபெற்ற உலக பாரம்பரிய தளமும், செதுக்கிய கோயில்களுமான கஜராஹோவும், சான்சி ஸ்டூபாவும், பிம்பேத்காவில் உள்ள பாறைகளால் ஆன தங்குமிடம் என பார்ப்பதற்கு நிறையவே இங்கு காணப்படுகிறது.

மத்திய பிரதேசத்தின் பந்தவ்கார்ஹ், வனவிலங்கு ஆர்வலர்களுக்கு உகந்ததோர் இடமாகும். அவற்றை எல்லாம் கடந்து, மிகப்பெரிய பல்லுயிரினங்களை கொண்டிருக்கும் இந்த இடம்... சால் காடுகள், மலை சரிவுகள், பரந்து விரிந்த பள்ளத்தாக்கு, என பந்தவ்கார்ஹை உறைவிடமாக கொண்டு புலிகளும் இங்கே நிறையவே வாழ்கிறது. உலகிலேயே பிரசித்திபெற்ற இந்த இடத்தில் எடுக்கும் புகைப்படம் தான் நாம் பார்க்கும் புலியாக இருப்பதோடு,,, பெண்புலியையும் நம்மால் இங்கே பார்க்க முடிகிறது.

Dey.sandip

 மத்திய பிரதேசத்தில் நாம் காண வேண்டிய மற்ற இடங்கள்:

மத்திய பிரதேசத்தில் நாம் காண வேண்டிய மற்ற இடங்கள்:

சுற்றுலா பயணிகளின் கண்களை கவரும் வகையில்...பளுங்கு பாறைகளை கொண்டு பளிச்சென காட்சியளிக்கும் பீதாகாட், ஜபால்பூரிலுள்ள தந்தூர் நீர்வீழ்ச்சி, குவாலியர் கோட்டை, மஹா காலேஸ்வர் ஆலயம், கன்ஹா தேசிய பூங்கா, பெஞ்ச் புலி சரணாலயம், பஞ்ச்மார்ஹி என நிறைய இடங்களை நம்மால் பார்த்து பரவசமடைய முடிகிறது.

Kmohankar

Read more about: travel, tour