Search
  • Follow NativePlanet
Share
» »தங்கமாக மாற்றும் சித்தர் மூலிகை..! காவல் காக்கும் "எடப்பாடி பூதம்"

தங்கமாக மாற்றும் சித்தர் மூலிகை..! காவல் காக்கும் "எடப்பாடி பூதம்"

என்னங்க, தலைப்ப பாத்த உடனேயே டென்சன் ஆகிட்டீங்களா... பரவால விடுங்க, நாம விசயத்துக்கு வருவோம். சித்தர்கள் மகிமையைப் பற்றி எத்தனையோ கட்டுரைகள்ள நாம படிச்சிருப்போம். ஏன், போகர் சித்தரின் மகிமைகளை பழனி நவபாஷான முருகன் சிலை ரூபத்துல இன்னைக்கும் நம்ம ஊரே கொண்டாடிட்டு தானே இருக்கு. சித்தர் இன்னும் எத்தனை எத்தனையோ அம்சங்களை உருவாக்கிவச்சத பல வரலாற்று ஆய்வுகள் மூலமா கேள்விப்பட்டுட்டு தானே வரோம். இன்றும் ஒரு சில தென்னக மலைகளில் சித்தர்கள் வாழ்ந்து வரதாகவும், அவர்களைக் கண்டதாகவும் செய்திகள் வந்த வன்னம்தானே இருக்கு. அதையெல்லாத்தையும் கடந்து, இந்த சித்தர்கள் உருவாக்கியதுல ஆச்சரியமும் வியப்பும் கொண்டது எதுன்னு தெரியுமா ?. இவங்க உருவாக்கி வச்ச மூலிகை ஒன்று நம்ம ஊருல தாங்க இருக்கு. அந்த மூலிகையோட மகிமையும், அதைக் காக்கும் பூதம் குறித்தும் தொடர்ந்து தெரிந்துகொள்வோம் வாங்க.

தங்கமாக்கும் மூலிகை

தங்கமாக்கும் மூலிகை

நோய் தீர்க்கும் நவபாஷாணம், கூடுவிட்டு கூடுபாயும் மந்திர மூலிகை, பாதரசம் கொண்ட ரசமணி என சித்தர்கள் உருவாக்கி இன்னும் எத்தனை எத்தனையோ மகிமை நமக்கு தெரியும். சில நேரங்களில் எதையும் தங்கமாக மாற்றும் மூலிகைகளைக் கூட சித்தர்கள் உருவாக்கி வைத்துள்ளனர் என நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், அது எங்கே உள்ளது ? இப்ப எப்படி இருக்குன்னு தெரிஞ்சா ஒரு நிமிசம் தலையே சுத்திடும்ங்க.

Jaseem Hamza

எங்க இருக்கு தெரியுமா ?

எங்க இருக்கு தெரியுமா ?

எதன் மீது பட்டாலும் தங்கமாக மாற்றும் மூலிகை சேலம் மாவட்டம், எடப்பாடி அடுத்துள்ள தங்காயூர் வேலம்மாள் வலசு என்ற பகுதியில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் தாங்க இருக்கு. சும்மாவெல்லாம் போய் எடுத்துட்டு வர முடியாது. ஊருக்கு ஒதுக்குப்புறமா அமைந்துள்ள சூரியமலையில் ஒரு மர்மக் குகையில் தான் அந்த மூலிகை இருக்கு. மேலும், அப்பகுதியில் பல மர்மங்கள் புதைந்திருப்பதாகவும் உள்ளூர்வாசிகள் மூலம் அறிய முடிகிறது.

shanmugamp7

குகை அமைப்பு

குகை அமைப்பு

மலையை குடைந்து உருவாக்கப்பட்ட மர்மமான அந்த பாதாள குகையில் இரண்டு அறைகள் காணப்படுகின்றன. இதில், முதல் அறை கொஞ்சம் பெரியதாகவும், இரண்டாவது அறை சிறியதாகவும் உள்ளது. இரண்டாவது அறையில் உள்ள ஒரு துவாரத்தின் வழியாக உள்ளே நுழைந்தால் மட்டுமே சித்தர் காத்துவரும் அந்த மூலிகையை பார்க்க முடியும் என கூறப்படுகிறது. ஆனால், அந்த குகை துவாரம் வழியாக யாருமே உள்ளே செல்ல முடிவதில்லை. அக்குகையின் தோற்றத்தைக் கொண்டு அளவிடுகையில், குகைக்குள்ளே மைதானம் போன்ற விரிந்த இடம் இருப்பதாக கணிக்க முடிகிறது. இதுகுறித்து ஊர் பெரியவர்கள் கூறுகையில், குகை மண்டபத்தின் உள்ளே மண்டபம் போல் உள்ள அறையில் தங்க மூலிகையும், அதனை உருவாக்கிய கொங்கண சித்தர் இன்றும் அதற்கு பாதுகாப்பாக இருப்பதாகவும் திகிலூட்டுகின்றனர். அதுமட்டுமா, கொங்கண சித்தருக்கும், தங்கமாக மாற்றும் மூலிகைக்கும் பாதுகாப்பாக அப்பகுதியில் ஒற்றைக் கண் பூதம் ஒன்றும் உள்ளதாக எடப்பாடியில் பரவலாக தகவல் உள்ளது.

RAJUKHAN SR RAJESH

ஆதாரம்

ஆதாரம்

ஒற்றைப் மலை எனப்படும் சூரியமலை சித்தர் குகைக்கு முற்புறத்தில் மலைப் பாறையில் மேடை போல செதுக்கப்பட்டு மூலிகைகளை அரைப்பதற்கு உரல் போல ஒரு துளை உள்ளது. அந்த இடத்தில் அமர்ந்து தியானம் செய்வதற்கு ஏற்ப சிறிய மேடை போன்ற அமைப்பும் செதுக்கப்பட்டுள்ளது. இவை எல்லாம் கொங்கண சித்தர் அப்பகுதியில் வாழ்ந்ததை உறுதிப்படுத்தும் ஆதாரங்களாகவே உள்ளன.

Hari Shankar05

பாதாள குகை வழிபாடு

பாதாள குகை வழிபாடு

பாதாள குகைக்கு முன் சிறிது தொலைவில் கொங்கண சித்தரின் சிலை, விநாயகர் சிலை என பல சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. பவுர்ணமி மற்றும் சனிக்கிழமைகளில் இங்கு வழிபாடு நடத்தப்படுகிறது. அடுத்த முறை சேலம் செல்ல திட்டமிட்டால் தவறால் இந்த சித்தர் குகைக்கும் சென்று வாருங்கள். மேலும், இதனருகே உள்ள பனைமரத்துப்பட்டி ஏரி, சுகவனேஸ்வரர் கோவில், சங்ககிரி கோட்டை உள்ளிட்ட பகுதிகளும் சிறந்த சுற்றுலாத் தலங்களாகும்.

Kksens85

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more