Search
  • Follow NativePlanet
Share
» »உலகின் மிகப்பெரிய உங்கள் கற்பனைக்கும் மீறிய அனைத்தும் கொண்ட இந்துக் கோயில்

உலகின் மிகப்பெரிய உங்கள் கற்பனைக்கும் மீறிய அனைத்தும் கொண்ட இந்துக் கோயில்

By Staff

உலகமே இந்தியக் கட்டிடக்கலையைப் பார்த்து பிரமித்துக்கிடக்கிறது. அதிலும் இந்தியாவில் கட்டப்பட்டுள்ள தொன்மையான கோயில்கள் கட்டிடக்கலையின் உன்னத சாட்சியங்களாக இன்று நம்மிடையே உள்ளன.

ஆனால் நிகழ்காலத்தில் இவற்றை விஞ்சும் விதமாக கோயில்களோ, வேறு சில கட்டிடங்களோ வெகுநாட்கள் இந்தியாவில் தோன்றாமல் இருந்தன. அந்தக் குறையை போக்கும் விதமாக, பாரம்பரிய கோயில்களோடு போட்டிபோடக்கூடிய நவீன படைப்பாக சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோயில் கட்டப்பட்டுள்ளது.

சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோயில் டெல்லி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து 25 கி.மீ தொலைவிலும், ரயில் நிலையத்திலிருந்து 9 கி.மீ தூரத்திலும் தலைநகர் டெல்லியில், யமுனா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.

டெல்லி ஹோட்டல்கள் 

சுவாமிநாராயண்

சுவாமிநாராயண்

18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்திய வைஷ்ணவ ஞானி சுவாமிநாராயண் அவர்களின் நினைவாக சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோயில் கட்டப்பட்டுயள்ளது.

படம் : ビッグアップジャパン

11000 கட்டிடக்கலைஞர்கள், 5 ஆண்டுகள்!

11000 கட்டிடக்கலைஞர்கள், 5 ஆண்டுகள்!

2005-ஆம் ஆண்டு திறக்கப்பட்ட சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோயிலைக் கட்டி முடிக்க மொத்தம் 5 ஆண்டுகள் ஆகியுள்ளது. இதன் கட்டுமான பணியில் 11000 கட்டிடக்கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.

படம் : Stanislav Sedov and Dmitriy Moiseenko

நினைவுச்சின்னம்

நினைவுச்சின்னம்

அக்ஷர்தாம் கோயில் வளாகத்தின் மையத்தில் அமைந்துள்ள முதன்மை நினைவுச்சின்னம் 141-அடிகள் (43 மீ) உயரம், 316-அடிகள் (96 மீ) அகலம் மற்றும் 370-அடிகள் (110 மீ) நீளம் கொண்டது. அதோடு இந்த நினைவுச்சின்னத்தில் 234 அலங்காரமாகச் செதுக்கப்பட்ட தூண்கள், ஒன்பது குவிமாடங்கள், இந்துசமயத்தின் சாதுக்கள், பக்தர்கள், ஆச்சாரியார்களின் 20,000 மூர்த்திகளின் சிலைகள் ஆகியவை அமைந்துள்ளன. மேலும் மத்திய குவிமாடத்துக்குக் கீழாக 11-அடிகள் (3.4 மீ) உயரத்துடன் சுவாமிநாராயணன் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த நினைவுச்சின்னத்திடையே சீதை-ராமன், ராதா-கிருஷ்ணன், சிவன்-பார்வதி, இலட்சுமி-நராயணன் போன்ற பிற இந்து தெய்வங்களின் சிலைகளையும் பயணிகள் காணலாம்.

படம் : Swaminarayan Sanstha

இளஞ்சிவப்பு மணற்பாறைகள்

இளஞ்சிவப்பு மணற்பாறைகள்

ராஜஸ்தான் இளஞ்சிவப்பு மணற்பாறைகள் மற்றும் வெள்ளை சலவைக்கல் இரண்டையும் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ள இந்த கோயிலில் உலோகக்கட்டமைப்புகளோ, கான்கிரீட் கலவையோ பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

படம் : Russ Bowling

சஹஜாநாத் பிரதர்ஷன்

சஹஜாநாத் பிரதர்ஷன்

கோயில் வளாகத்தில் உள்ள ‘சஹஜாநாத் பிரதர்ஷன்' எனும் கூடத்தில் இயந்திரபொம்மைகள், தத்ரூப காட்சி மாதிரிகள் போன்றவற்றை பயன்படுத்தி ஸ்வாமிநாராயணனின் வரலாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. உலகசமாதானம், ஒற்றுமை, கருணை, தொண்டு போன்ற மானுட அம்சங்களை வலியுறுத்துவதுடன் ஒப்பற்ற மஹாசக்தியை முன்னிலைப்படுத்துவதாகவும் இந்த சித்தரிப்புகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

படம் : Balurbala

நீலகண்ட கல்யாண யாத்ரா

நீலகண்ட கல்யாண யாத்ரா

இந்த கோயில் வளாகத்தில் ‘நீலகண்ட கல்யாண யாத்ரா' எனும் விசேஷமான ஆவணப்படம் ஒரு பிரம்மாண்ட திரையில் (85' X 65') பக்தர்களுக்காக திரையிடப்படுகிறது. இமாலயம் தொடங்கி கேரளக்கடற்கரை வரை இந்தியாவிலுள்ள முக்கிய ஆன்மீக புனித்தலங்கள், சடங்குகள் மற்றும் மரபுகள், கலாச்சாரம், திருவிழாக்கள் போன்றவற்றை படம் பிடித்து தொகுத்து இந்த சிறப்பான ஆவணப்படம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

படம் : Os Rúpias

படகுச்சவாரி

படகுச்சவாரி

சான்ஸ்க்ருதி விகார் எனப் பெயரிடப்பட்டுள்ள படகுச்சவாரியானது இங்கு வருகை தருபவர்களை கிட்டத்தட்ட 12 நிமிடங்களில் இந்தியவரலாற்றில் 10,000 ஆண்டுகள் வழியாக அழைத்துச் செல்கிறது. வருகையாளர்கள் மயில் போன்ற வடிவத்தில் சிறப்பாக அமைக்கப்பட்ட படகுகளில் அமர்ந்து, செயற்கையாக அமைக்கப்பட்டுள்ள ஆற்றில் தமது பயணத்தைத் தொடருவர். இது தட்சசீலா, உலகின் முதலாவது பல்கலைக்கழகம்,[19] வேதியியல் ஆய்வுகூடங்கள், புராதன மருத்துவமனைகள் மற்றும் கடைத் தெருக்கள் ஆகியவற்றின் மாதிரிகளைக் கடந்து, கடைசியாக இந்தியாவின் எதிர்காலத்துக்கான நம்பிக்கையை வெளிக்காட்டும் செய்தியுடன் நிறைவுபெறுகிறது.

படம் : Os Rúpias

பாரத் உபவான்

பாரத் உபவான்

பாரத் உபவான் என்றழைக்கப்படும் தோட்டத்தில் தழையால் அலங்கரிக்கப்பட்ட புல்வெளிகள், மரங்கள் மற்றும் புதர்கள் உள்ளன. இந்தத் தோட்டத்தில் இந்தியாவின் பண்பாடு மற்றும் வரலாற்றுக்குப் பங்களித்தவர்களின் பித்தளை சிற்பங்கள் வரிசையாக இருக்கும்.

படம் : Daran Kandasamy

யக்ஞபுருஷ் குண்டம்

யக்ஞபுருஷ் குண்டம்

அக்ஷர்தாம் வளாகத்தின் யக்ஞபுருஷ் குண்டம் மற்றும் அதிலுள்ள இசைநீரூற்று மற்றொரு சிறப்பம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது. வேதகால யாக குண்டம் மற்றும் நவீன இசை நீரூற்று அமைப்பு இரண்டையும் கலந்து இந்த அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. புராதன கால படிக்கிணறு போன்று பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த குண்டம் அல்லது கிணறு உலகிலேயே மிகப்பெரிய படிக்கிணறாக உருவாக்கப்பட்டிருக்கிறது. மாலை நேரங்களில் இந்த குண்டத்தின் இசை நீரூற்று இயக்குவிக்கப்படுகிறது. வண்ண விளக்குளால் ஜொலிக்கும் இந்த அதிஉயர நீரூற்றுகள் மாயாஜாலம் போன்று பார்வையாளர்களை திகைக்க வைத்துவிடுகின்றன.

படம் : Juthani1

யோகி அரடே கமல்

யோகி அரடே கமல்

மேலிருந்து பார்க்கும்போது ஒரு தாமரை போன்ற வடிவிலுள்ள மூழ்கிய தோட்டமானது, ஷேக்ஸ்பியர் மற்றும் மார்டின் லூதர் கிங் ஆகியோரிலிருந்து சுவாமி விவேகானந்தா மற்றும் சுவாமிநாராயணன் வரையான உலக அறிவுமேதைகளின் மேற்கோள்கள் பொறிக்கப்பட்ட பெரிய கற்களை உருப்படுத்திக் காட்டுகிறது.

படம் : Juthani1

நீலகாந்த அபிஷேகம்

நீலகாந்த அபிஷேகம்

பக்தர்கள் நீலகாந்த வர்னி சிலைமீது தண்ணீர் ஊற்றப்படும் சமயச்சடங்கான அபிஷேகம் செய்து, தெய்வநிலை சார்ந்த மேம்பாடு மற்றும் விருப்பங்கள் நிறைவேற்றப்படுதல் போன்றவற்றுக்காக தமது பெருமதிப்பு மற்றும் வழிபாடுகளை வெளிப்படுத்துவர்.

படம் : Department for Business, Innovation and Skills

நாராயண சரோவர்

நாராயண சரோவர்

நினைவுச்சின்னத்தை சூழந்துள்ள நாராயண சரோவர் ஏரியில் 151 ஆறுகள் மற்றும் ஏரிகளின் நீர் கலந்துகிடக்கிறது. நாராயணன் சரோவாரைச் சூழ அமைந்துள்ள 108 இறைவனின் பெயர்களைக் குறிக்கின்ற 108 கௌமுக்குகளிலிருந்து புனித நீர் முன்னே வழங்கப்படுகிறது.

படம் : Stanislav Sedov and Dmitriy Moiseenko

பிரேம்வதி அக்ரகாரம்

பிரேம்வதி அக்ரகாரம்

பிரேம்வதி அக்ரகாரம் அல்லது பிரேம்வதி ஃபூட் கோர்ட் என்பது அக்ஷர்தாம் கோயில் வளாகத்தில் உள்ள சைவ உணவகம் மற்றும் ஆயுர்வேத கடைத்தெருவாகும்.

படம் : Daniel Echeverri

சமூக அமைதி மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சி மையம்

சமூக அமைதி மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சி மையம்

அக்ஷர்தாம் கோயில் வளாகத்துக்கு உள்ளே அமைந்துள்ள சமூக அமைதி மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சி மையம், மூக அமைதி மற்றும் தொடர்பான தலைப்புகளின் ஆராய்ச்சிகளில் ஈடுபடுகிறது. இதன் ஊடாக கல்வியாளர்களும் மாணவர்களும் செயல்முறை சார்ந்த ஆராய்ச்சியை நடத்தலாம். கல்வி, மருத்துவ உதவி, பழங்குடி மற்றும் கிராமப்புற நலன், சூழலியல் மற்றும் பண்பாடு ஆகியவை குறித்த ஆய்வுகள் இம்மையத்தில் நடக்கின்றன.

படம் : Juthani1

கின்னஸ் உலக சாதனை

கின்னஸ் உலக சாதனை

பல்வேறு வசதிகளை உள்ளடக்கிய சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோயில், 17 டிசம்பர் 2007-ஆம் ஆண்டு, "உலகின் மிகப்பெரிய அனைத்தும் கொண்ட இந்துக் கோயில்" என்று கின்னஸ் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டு கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.

படம் : Swaminarayan Sanstha

இருளில் நிலவு!

இருளில் நிலவு!

இரவின் இருளில் பிரகாசிக்கும் நிலவு போல காட்சியளிக்கிறது அக்ஷர்தாம் கோயில்.

படம் : Mohitmongia99

மேற்கூரை

மேற்கூரை

அற்புதமாக அலங்கரிக்கப்பட்ட அக்ஷர்தாம் கோயிலின் மேற்கூரை.

படம் : Deepak Gupta

சுவர்ச்சிற்பங்கள்

சுவர்ச்சிற்பங்கள்

கோயில் சுவற்றில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்கள்.

படம் : Honza Soukup

எங்கு தங்கலாம்?

எங்கு தங்கலாம்?

டெல்லி ஹோட்டல்கள்

படம் : Russ Bowling

டெல்லியை எப்போது மற்றும் எப்படி அடையலாம்?

டெல்லியை எப்போது மற்றும் எப்படி அடையலாம்?

எப்படி அடைவது?

எப்போது பயணிக்கலாம்?

படம் : Russ Bowling

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more