Search
  • Follow NativePlanet
Share
» »ஒவ்வொரு பெண்ணும் தன் பாய் பிரண்டுடன் நிச்சயம் போக விரும்பும் இடங்கள்

ஒவ்வொரு பெண்ணும் தன் பாய் பிரண்டுடன் நிச்சயம் போக விரும்பும் இடங்கள்

By Super Admin

பெண்களின் மனதை புரிந்து கொள்வது எத்தனை கடினம் என்பது நம் எல்லோருக்கும் நன்கு தெரியும். அதுவும் காதலியின் மனதை புரிந்து கொள்வது என்பது கையில் குச்சியை வைத்துகொண்டு உலகத்தை திருப்ப நினைப்பது மாதிரி முடியவே முடியாத காரியம். அதிலும் பலர் தங்கள் மனதினுள் பல ஆசைகளை கொண்டிருந்தாலும் தங்கள் காதலனிடம் வெளிப்படையாக சொல்லாமல் அவர்களாக புரிந்து கொண்டு அதை நிறைவேற்ற வேண்டும் என நினைப்பார்கள்.

யதார்த்தத்தில் ஆண்களை விட பெண்களுக்கு ஊர் சுற்ற சுதந்திரம் கொஞ்சம் குறைவே. அதனாலேயே பெண்கள் பலருக்கு பயணத்தின் மேல் தனியொரு ஆசை இருக்கும். இதை மட்டும் புரிந்துகொண்டு அவர்கள் விரும்பும் இடத்திற்கு நீங்கள் கூட்டிசென்றால் உங்கள் மேல் அவர்களுக்கு வரும் காதலை யாராலும் பிரிக்க முடியாததாகும். வாருங்கள், ஒவ்வொரு பெண்ணும் தன் பாய் பிரண்டுடன் நிச்சயம் போக விரும்பும் இடங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

கிழக்கு கடற்கரை சாலைப்பயணம்:

கிழக்கு கடற்கரை சாலைப்பயணம்:

என்னதான் விதவிதமாக ஸ்கூட்டிகள் வந்தாலும் பெண்களுக்கு எப்போதுமே ரொம்ப பிடிக்கும் ஒரு விஷயம் என்றால் அது தங்கள் காதலனுடன் வண்டியில் வேகமாக ஒரு பயணம் போக வேண்டும் என்பதே. அப்படி ஒரு பயணம் போக சென்னையில் இருக்கும் கிழக்கு கடற்கரை சாலையை விட சிறந்த இடம் இருக்கவே முடியாது.

Photo:judepics

கிழக்கு கடற்கரை சாலைப்பயணம்:

கிழக்கு கடற்கரை சாலைப்பயணம்:

கடற்கரையை ரசித்தபடியே எந்தவித தொந்தரவும் இல்லாமல் ஜாலியாக இந்த சாலையில் உங்கள் காதலியை அழைத்து செல்லுங்கள். மேலும் இந்த வழியில் மகாபலிபுரம், முட்டுக்காடு படகு சவாரி, பாண்டிச்சேரி என சில அருமையான சுற்றுலாத்தலங்களும் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Photo: Flickr

அகத்தி தீவு:

அகத்தி தீவு:

பூலோக சொர்க்கம் என்று ஏதேனும் ஓரிடம் இருக்கும் என்றால் அது நிச்சயம் லட்சத்தீவுகள் ஆகத்தான் இருக்க முடியும். பல சிறு தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய இங்கு இருக்கும் அகத்தி தீவு இயற்கை அழகின் புதையலாகும்.

Photo:Binu K S

அகத்தி தீவு:

அகத்தி தீவு:

ஒவ்வொரு பெண்ணும் தன் திருமணதிற்கு பின் தேனிலவுக்கு இங்கே வர நிச்சயம் பிரியப்படுவார்கள், அமைதியான வெள்ளை மணல் கடற்கரையில் தெள்ளத்தெளிவான நீலநிற கடலை ரசித்தபடி தங்கள் காதல் துணையுடன் சிறு களவி கொள்ள எந்த பெண்ணுக்குத்தான் பிடிக்காது?.

Photo:torbus

அகத்தி தீவு:

அகத்தி தீவு:

மேலும் நீங்கள் விருப்பப்பட்டால் வெறும் 5 கி.மீ நீளமுள்ள இந்த தீவில் ஜாலியாக சைக்கிளிங் செல்லலாம். கொச்சி துறைமுகத்தில் இருந்து 460 கி.மீ தொலைவில் உள்ள இந்த தீவை கப்பல் பயணம் மூலம் நாம் அடையலாம்.

Photo:Thejas

பாண்டிச்சேரி:

பாண்டிச்சேரி:

நம்மவர்களுக்கு பாண்டிச்சேரி போவதே பாதி விலையில் சரக்கு வாங்கத்தான். ஆனால் பலவகையான உணவுகள் அல்லது பழமையான விஷயங்களை விரும்பும் பெண்கள் பாண்டிச்சேரிக்கு ஒருமுறையாவது செல்ல வேண்டும் என விரும்புவர்.

இன்னும் மாறாமல் அப்படியே இருக்கும் பிரஞ்சு கால கட்டிடங்கள், அற்புதமாக திட்டமிடப்பட்டு கட்டப்பட்ட நகரங்கள், இந்திய உணவுகளுக்கு முற்றிலும் மாறான சுவை உடைய பிரஞ்சு உணவுகள் என பாண்டிச்சேரி பல ரசனைகளின் கலவையாக உள்ளது.

Photo:പ്രതീഷ് പ്രകാശ്

பாண்டிச்சேரி:

பாண்டிச்சேரி:

உங்கள் பெண் தோழியுடன் பிரஞ்சுகால கட்டிடம் ஒன்றில் நடத்தப்படும் ஒரு பிரஞ்சு உணவகத்தில் வித்தியாசமான உணவை சாப்பிடுங்கள். அப்படியே கடற்கரையில் காலாற நடந்தபடி உங்கள் அன்பானவருடன் மனம் விட்டு பேசலாம்.

Photo:Alpha

கூர்கில் சாகச படகு சவாரி:

கூர்கில் சாகச படகு சவாரி:

உங்கள் தோழிக்கு மனதுக்குள் ரகசியமாக ஹிரோயினி ஆகும் ஆசை இருக்கிறது என நீங்கள் நினைத்தால் அவரை உண்மையாகவே அப்படி உணர வைக்க சாகச விளையாட்டுகளுக்கு அவரை அழைத்து செல்லுங்கள்.

Photo:Rohan Babu

கூர்கில் சாகச படகு சவாரி:

கூர்கில் சாகச படகு சவாரி:

சீறிப்பாயும் ஆற்றை எதிர்த்து மிதவைபடகில் அமர்ந்தபடி இயற்க்கை எழில் கொஞ்சும் கூர்கில் சாகச படகு சவாரி செய்வது உண்மையிலயே ரொம்ப வித்தியாசமாகவும், காடினமான சூழலை ஒன்றாக சமாளித்து கடந்து வருகையில் ஏற்ப்படும் பிணைப்பும் உங்களுக்குள்ளான நம்பிக்கையை அதிகப்படுத்தும்.

Photo:Rajesh_India

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்:

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்:

என்னதான் பெண்கள் கேளிக்கைகளையும் கொண்டாட்டங்களையும் விரும்பினாலும் கோயிலுக்கு செல்ல ஆசைப்படாத பெண்களே இருக்க முடியாது. தன் குடும்பத்தினருடனோ, தோழிகளுடனோ செல்வதை விடவும் தன் எதிர்கால கணவனுடன் ஒரு முறையாவது கோயிலுக்கு சென்று வர வேண்டும் என்று ஒவ்வொரு பெண்ணும் விரும்புவாள்.

Photo:McKay Savage

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்:

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்:

பேரழகு பொருந்திய மீனாட்சி அம்மனை வழிபட்டு விட்டு கோயில் பிரகாரத்தில் உங்கள் எதிர்கால துணையுடன் வளம் வருவது பரசவமூட்டும் ஒரு அனுபவமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

Photo:Ranjith shenoy R

கோவா பார்டி:

கோவா பார்டி:

பசங்களுக்கு கல்லூரி நாட்களில் நண்பர்களுடன் கோவா சென்று கடற்கரைகளில் ஆட்டம் பாட்டம் என்று கொண்டாடும் புகைப்படங்களை பேஸ்புக்கில் பார்க்கும் பெண்களுக்கு தாங்களும் இப்படி கடற்கரைகளில் ஆட்டம் பாட்டம் என கொண்டாட வேண்டும் ஆசை எப்போதுமே இருக்கும்.

பலர் இதுபோன்ற விஷயங்களை வெளியில் சொல்ல தயக்கம் காட்டுவர். முடிந்தால், நண்பர்கள் சிலரும் தோழிகளும் ஒன்றாக ஒருமுறை கோவா சென்று கண்ணியத்துக்கு உட்பட்டு கொண்டாடி மகிழுங்கள். உங்கள் காதலை சொல்ல நினைத்தால் கோவா கடற்கரைகளை விட சிறந்த ஒரு இடம் இருக்க முடியாது.

Photo:Alagich Katya

More News

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+