» » இந்த ரயில்ல போனா நீங்க பிளைட்ல போறமாதிரி உணர்வீங்க தெரியுமா?

இந்த ரயில்ல போனா நீங்க பிளைட்ல போறமாதிரி உணர்வீங்க தெரியுமா?

Written By: Udhaya

இந்திய ரயில்வே தேஜாஸ் விரைவு ரயிலை கோடைகாலத்தில் மும்பை - கோவா வழித்தடத்தில் விட முடிவெடுத்துள்ளது.

இதுனால என்ன... ரயில் விடுறதுலாம் பெரிய விசயமானு கேக்க வறீங்களா

அங்கதான் விசயமே.. தேஜாஸ் ல பயணம் செஞ்சா நீங்க பிளைட்ல போனதா உணர்வீங்களாம்... இப்பவே பாக்கணும்போல இருக்கா.. இந்த ரயில்ல என்னென்ன வசதிகள்லாம் இருக்குனு முழுசா படிச்சிட்டு போங்க...

கொறித்தல் சுவைத்தல்

கொறித்தல் சுவைத்தல்

நீண்ட தூரம் ரயில் பயணம் செய்றவங்க ரயில் நிலையத்துல எப்படா ரயில் நிக்கும். எப்படா காபி, டீ வாங்கி சாப்பிடலாம்னு இருப்பாங்க.. அப்படித்தான் இருக்கும் நம்ம ஊர்ல ரயில்ல குடுக்குற காபி டீ....

நிச்சயமா இந்த ரயில்ல நீங்க இத எதிர்கொள்ளத் தேவையில்லை..

நீங்கள் உங்கள் குடும்பத்துடன் அல்லது உங்கள் அன்பானவருடன் இணைந்து காபி சுவைக்க அருமையான காபிடேரியா அறை அமைக்கப்பட்டுள்ளது.

 உணவு கூடம்

உணவு கூடம்

உங்கள் உணவுப்பழக்கவழக்கத்துக்கு ஏற்றவாறு சுவையான அதிக வகை உணவுகள் இங்கு கிடைக்கும்.

அவற்றை சமைப்பது இந்தியாவின் செலிபிரிட்டி செஃப் என்பது கூடுதல் சிறப்பு.

கழிவிட வசதி

கழிவிட வசதி

நீங்கள் ஐந்து நட்சத்திர விடுதிகளில் காணும் ஓய்வறை அல்லது கழிவறையைப் போல மிகவும் நேர்த்தியான முறையில் அமைக்கப்பட்டிருக்கும். நீர் கண்காணிக்கும் இயந்திரம், ஹேண்ட் டிரையர் என அனைத்தும் தரப்பட்டுள்ளது.

வைஃபை

வைஃபை


வைஃப் இல்லாம கூட இருப்பாங்க சில பேரு வைஃபை இல்லைனா மட்டும் அவங்களுக்கு கையும் காலும் ஓடாது.

அந்த வசதிகளும் இந்த ரயிலில் இருக்கும்,.. நீங்க பேஸ்புக், டிவிட்டர் னு எந்த சமூக வலைத்தளத்திலேயும் உடனடி புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்து மகிழலாம்.

உலகத் தரம்

உலகத் தரம்


உலகத் தரம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு அத்தனை வசதிகளும் இருக்கும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பிரெய்லி காட்டிகள்

பிரெய்லி காட்டிகள்

கண்பார்வை குறைந்தவர்களுக்கான பிரெய்லி வகை டிஜிட்டல் போர்டுகள், டிஜிட்டல் வழிகாட்டிகள், மின்னணு முன்பதிவு அட்டைகள் என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

தீ மற்றும் புகை அறிவுறுத்தி

தீ மற்றும் புகை அறிவுறுத்தி

தீ மற்றும் புகை அறிவுறுத்தும் அமைப்பும் இந்த ரயில் முழுமைக்கும் பொறுத்தப்பட்டுள்ளது.

டிவி

டிவி

பயணம் செய்யும் அனைவருக்கும் டிவி டிஜிட்டல் திரைகள் கொடுக்கப்பட்டுள்ளது. வைபை வசதிகளின் மூலம் இணையத்தை தொடர்பு கொண்டு பாட்டு, படம் என அனைத்தையும் பார்க்கலாம்.

ஹொகேனக்கல் அருவிக்கு ஒரு த்ரில் சுற்றுலா!!!

Read more about: travel, goa, mumbai