Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவுல வெந்நீர் ஊற்றா..! எங்க பாஸ் இருக்கு ?

இந்தியாவுல வெந்நீர் ஊற்றா..! எங்க பாஸ் இருக்கு ?

சில இடங்களில் இரசாயனங்கள் கலந்து கெட்ட நீராகவும், சில இடங்களில் நல்ல நீரூற்றுகளாகவும் அவை உள்ளன. இந்தியாவில் உள்ள ஓர் வெந்நீர் ஊற்றை நோக்கித்தான் பயணிக்கப் போகிறோம்.

நாம் வசிக்கும் பூமியே விசித்திரமான பல அம்சங்களைக் கொண்டதுதான். அந்த வகையில், வெந்நீர் ஊற்றும் இயற்கையின் படைப்பே. பூமியில் சில இடங்களில் தரைப் பரப்பின் அடியில் உள்ள நீர் மிகவும் சூடாகி கொதிநிலையை அடைகிறது. சில இடங்களில் இரசாயனங்கள் கலந்து கெட்ட நீராகவும், சில இடங்களில் நல்ல நீரூற்றுகளாகவும் அவை உள்ளன. அந்த வகையில் இந்தியாவில் உள்ள ஓர் வெந்நீர் ஊற்றை நோக்கித்தான் இன்று பயணிக்கப் போகிறோம்.

பள்ளத்தாக்குகள் நிறைந்த தேஸு

பள்ளத்தாக்குகள் நிறைந்த தேஸு


அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள லோஹிட் மாவட்டத்தின் ஒரு பகுதிதான் தேஸு என்னும் சிறிய நகரம். இந்தியாவிலேயே சிறிய நகரங்களின் பட்டியலில் ஒன்றாக இது இருந்தாலும் இங்கு காணப்படும் பள்ளத்தாக்குகளும், இயற்கை அம்சங்களும் சுற்றுலாப் பயணிகளை பெரிதும் ஈர்ப்பதில் புகழ் பெற்ற இடமாக உள்ளது.

Appaji

சுற்றுலாத் தலங்கள்

சுற்றுலாத் தலங்கள்


தேஸுயில் சில முக்கியமான சுற்றுலாத் தலங்கள் உள்ளன. அவற்றுள் புகழ் பெற்ற தலமான பரசுராம் குந்த் என்ற தலம், ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் தன்மை கொண்டது. இங்கிருக்கும் நீரில் புனித நீராடவும், தங்களுடைய பாவங்களை நீக்கவும் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருவது வழக்கம்.

Appaji

வெந்நீர் ஊற்று

வெந்நீர் ஊற்று


தேஸுவிற்கு அருகில் உள்ள வாலோங்கில் அமைந்துள்ளது வெந்நீர் ஊற்று. இதில், நீராடி மகிழ்வதற்காகவே வருடந்தோறும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் பயணித்து வருகின்றனர்.

Chris 73

மணிகரன் வெந்நீர் ஊற்றுகள்

மணிகரன் வெந்நீர் ஊற்றுகள்


நாட்டில் உள்ள மற்றுமொறு வெந்நீர் ஊற்றுதான் மணிகரன் வெந்நீர் ஊற்று. மணிகரன் நகரில் உள்ள மிகப்பிரசித்தமான சுற்றுலா அம்சமாக திகழும் இந்த வெந்நீர் ஊற்றுகளில் ஒன்று ஸ்ரீ குரு நானக் தேவ்ஜி குருத்வாராவிலும் மற்றொன்று பார்வதி ஆற்றுப்பகுதியிலும் அமைந்துள்ளது. பார்வதி ஆற்றின் கரையிலுள்ள வெந்நீர் ஊற்று சுற்றுலாப் பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலம்.

Aman Gupta

க்ளோவ் லேக்

க்ளோவ் லேக்


அருணாச்சலப் பிரதேசம், தேஸுவிற்கு பயணம் சென்றால் தவறாமல் சென்று பார்க்க வேண்டிய தளம் க்ளோவ் லேக். பனி மூடிய மலைகளின் பின்னணியில் பசுமை வனக் காடுகள் சூழ அmமைந்துள்ளது க்ளோவ் லேக். இதற்கு அருகில் உள்ள ட்வாம் கிராமத்தின் சோங்க்ஹாம் - வாக்ரோ சாலையிலிருந்து தான் இந்த ஏரிக்கு மலையேற்றம் செய்ய புறப்பட வேண்டும். சிறிய ரக வாகனங்களில் மட்டுமே பயணிக்கும் வகையில் அமைந்துள்ள இதன் நிலப்பரப்பு, பசுமைக் காட்டில் இருந்து பரவும் குளிர்க் காற்று மனதை புத்துணர்ச்சி அடையச் செய்கிறது.

Aaron Hawkins

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X