Search
  • Follow NativePlanet
Share
» »தமிழ்த்திராவிட தென்னிந்தியாவை ஆண்ட சோழர்களின் வரலாற்று பூமி - தஞ்சை மாநகரம்

தமிழ்த்திராவிட தென்னிந்தியாவை ஆண்ட சோழர்களின் வரலாற்று பூமி - தஞ்சை மாநகரம்

தமிழ்த்திராவிட தென்னிந்தியாவை ஆண்ட சோழர்களின் வரலாற்று பூமி - தஞ்சை மாநகரம்

தமிழ்நாட்டின் முக்கிய கலாச்சார பூமியான தஞ்சை மாவட்டமானது தமிழ்த்திராவிட தென்னிந்தியாவை ஆண்ட மூவேந்தர்களுள் சோழர்கள் ஆண்ட மண்ணாகும். ராஜராஜசோழனால் கட்டப்பட்ட பிருகதீஸ்வரர் ஆலயம் எனப்படும் தஞ்சை பெருவுடையார் கோயில் இந்நகரத்தின் கலாச்சார அடையாளமாக வீற்றிருப்பதோடு உலகளாவிய கீர்த்தியையும் பெற்றுத்தந்திருக்கிறது. இக்கோயில் யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரியச்சின்னம் எனும் பெருமையை பெற்றுள்ளது. 18ம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து நாட்டின் முக்கியமான கலாச்சார மையமாக விளங்கும் தஞ்சாவூர் மாவட்டம் தென்னகத்தில் அதிகம் பக்தர்களும் பயணிகளும் வருகை தரும் நகரமாக திகழ்ந்து வருகிறது.

வாருங்கள் தஞ்சாவூர் மாநகரத்தின் அழகிய புகைப்படங்களைக் காண்போம்.

தஞ்சை பெரிய கோவில்

தஞ்சை பெரிய கோவில்


தஞ்சை எனப்படும் தஞ்சாவூரின் அடையாளமாக வீற்றிருக்கும் இந்த பிரகதீஸ்வரர் கோயில் அல்லது பெருவுடையார் கோயிலின் ஆதிப்பெயர் ‘ராஜராஜுச்சுரம்' என்பதாகும். பழந்தமிழ் பேரரசாக விளங்கிய சோழ சாம்ராஜ்ஜியத்தின் ஒரே வரலாற்றுச்சான்றாக இந்த மஹோன்னத ஆலயம் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் நகரில் வீற்றிருக்கிறது. வேறெந்த சோழர் கால கோட்டைகளோ அரண்மனைகளோ நகர இடிபாடுகளோ காலத்தின் ஊடே நமக்கு மிஞ்சவில்லை.

Nittavinoda

பெரிய கோவில்

தஞ்சை பெரிய கோவிலின் அழகிய புகைப்படங்கள்

பெரிய கோவில்

தஞ்சை பெரிய கோவிலின் அழகிய புகைப்படங்கள்

பெரிய கோவில்

தஞ்சை பெரிய கோவிலின் அழகிய புகைப்படங்கள்

பெரிய கோவில்

தஞ்சை பெரிய கோவிலின் அழகிய புகைப்படங்கள்

பெரிய கோவில்

தஞ்சை பெரிய கோவிலின் அழகிய புகைப்படங்கள்

பெரிய கோவில்

தஞ்சை பெரிய கோவிலின் அழகிய புகைப்படங்கள்

பெரிய கோவில்

தஞ்சை பெரிய கோவிலின் அழகிய புகைப்படங்கள்

பெரிய கோவில்

தஞ்சை பெரிய கோவிலின் அழகிய புகைப்படங்கள்

பெரிய கோவில்

தஞ்சை பெரிய கோவிலின் அழகிய புகைப்படங்கள்

விஜயநகர கோட்டை

விஜயநகர கோட்டை

தஞ்சை பெரிய கோயிலிலிருந்து 2 கி.மீ தூரத்தில் வடக்கே இந்த விஜயநகர கோட்டை அமைந்துள்ளது. 16ம் நூற்றாண்டின் மத்தியில் நாயக்க மற்றும் மராட்டா மன்னர்களின் பங்களிப்பில் இக்கோட்டையின் வெவ்வேறு அங்கங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. தஞ்சை அரண்மனை, சங்கீத மஹால், தஞ்சாவூர் கலைக்கூடம், சிவகங்கைபூங்கா மற்றும் சரஸ்வதி மஹால் நூலகம் ஆகியவை இந்த கோட்டை வளாகத்தினுள் இடம் பெற்றுள்ளன.

Thiyagu Ganesh

கோட்டையின் அழகிய புகைப்படங்கள்

விஜயநகர கோட்டையும் அதன் அழகும்

கோட்டையின் அழகிய புகைப்படங்கள்

விஜயநகர கோட்டையும் அதன் அழகும்

கோட்டையின் அழகிய புகைப்படங்கள்

விஜயநகர கோட்டையும் அதன் அழகும்

கோட்டையின் அழகிய புகைப்படங்கள்

விஜயநகர கோட்டையும் அதன் அழகும்

கோட்டையின் அழகிய புகைப்படங்கள்

விஜயநகர கோட்டையும் அதன் அழகும்

கோட்டையின் அழகிய புகைப்படங்கள்

விஜயநகர கோட்டையும் அதன் அழகும்

கோட்டையின் அழகிய புகைப்படங்கள்

விஜயநகர கோட்டையும் அதன் அழகும்

கோட்டையின் அழகிய புகைப்படங்கள்

விஜயநகர கோட்டையும் அதன் அழகும்

கோட்டையின் அழகிய புகைப்படங்கள்

விஜயநகர கோட்டையும் அதன் அழகும்

கோட்டையின் அழகிய புகைப்படங்கள்

விஜயநகர கோட்டையும் அதன் அழகும்

கோட்டையின் அழகிய புகைப்படங்கள்

விஜயநகர கோட்டையும் அதன் அழகும்

சரஸ்வதி மஹால் நூலகம்

சரஸ்வதி மஹால் நூலகம்


ஆசியாவிலேயே மிகப்பழமையான நூலகம் என்ற புகழை பெற்றுள்ள சரஸ்வதி மஹால் நூலகம் தஞ்சாவூர் நகரத்தில் அமைந்திருக்கிறது. இங்கு மிகப்பழமையான ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் தமிழ், மராத்தி, தெலுங்கு, ஆங்கிலம் போன்ற மொழிகளில் ஏராளமான நூல்களும் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.

தஞ்சாவூர் ஓவியக்கூடம்

தஞ்சாவூர் ஓவியக்கூடம்


தஞ்சாவூர் ஆர்ட் காலரி அல்லது ஓவியக்கூடமானது 1600ம் ஆண்டில் கட்டப்பட்ட தஞ்சை அரண்மனையில் ஒரு பகுதியில் இடம் பெற்றுள்ளது. இங்கு பல அற்புதமான சிலைகள் மற்றும் ஓவியங்களை பார்க்கலாம். ராஜராஜ சோழன் கலைக்கூடம் என்றும் அழைக்கப்படும் இந்த காட்சிக்கூடத்தில் பல அரிய சோழர்கால செப்புச்சிலைகளை கண்டு மகிழலாம். இவை யாவும் 9 - 12ம் நூற்றாண்டுகளை சேர்ந்தவையாகும்.

PP Yoonus

சங்கீத மஹால்

சங்கீத மஹால்

சங்கீத மஹால் என்றழைக்கப்படும் இந்த இசைக்கூடம் தஞ்சாவூரில் அவசியம் பார்க்க வேண்டிய அம்சமாகும். இது தஞ்சை அரண்மனையின் முதல் தளத்தில் அமைந்துள்ளது. 17ம் நூற்றாண்டில் செவப்ப நாயக்கர் எனும் நாயக்க வம்ச மன்னரால் இது கட்டப்பட்டிருக்கிறது. தென்னிந்தியாவில் ஒலியியல் நுட்பங்களுடன் அமைக்கப்பட்டிருக்கும் இசைக்கூடமாக இது கருதப்படுகிறது. மன்னர்கள் இக்கூடத்தில் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளை அரங்கேற்றி மகிழ்ந்துள்ளனர்.

Aruna.bommana

இராஜ இராஜ சோழன் மணிமண்டபம்

இராஜ இராஜ சோழன் மணிமண்டபம்


இராஜ இராஜ சோழன் மணிமண்டபம் தஞ்சை மாநகரின் நடுவில் அமைந்துள்ளது. இந்த அழகிய மணிமண்டபம், சோழா்காலத்து கட்டிடக்கலையின்படி கட்டப்பட்டது. இங்கு, ஒரு அழகிய தோட்டம் அமைந்துள்ளது. அதில், நீருற்று, ஊஞ்சல், சறுக்கு மரம் ஆகியன அமைந்துள்ளன. இந்த மண்டபத்தின் அடிதளத்தில் 1984-ல் இராஜ இராஜ சோழனின் 1000-வது பிறந்த தினத்தின் நினைவாக கட்டப்பட்ட அருங்காட்சியகம் அமைந்துள்ளது,

Aruna

ஷ்வார்ட்ஸ் தேவாலயம்

ஷ்வார்ட்ஸ் தேவாலயம்

டச்சு மிஷனரி போதகா் சி.வி.ஷ்வார்ட்ஸ் மீது சரபோஜி மஹாராஜா கொண்டிருந்த மட்டற்ற பற்றுக்காரணமாக கி.பி.1779-ல் தஞ்சாவூா் அரண்மனை தோட்டத்தில் கட்டப்பட்டது இந்த ஷ்வார்ட்ஸ் தேவாலயம்.

WestCoastMusketee

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X