» »எந்த சாலைப்பயணம் சூப்பரா இருக்குன்னு தெரிஞ்சுக்கனுமா? இதைப் படிங்க!!

எந்த சாலைப்பயணம் சூப்பரா இருக்குன்னு தெரிஞ்சுக்கனுமா? இதைப் படிங்க!!

Written By: Bala Latha

இந்தியாவில் உள்ள சில சாலைகள் பயணம் செய்ய மதிப்பு மிக்கதாகும். இங்கே சாலைவழிப் பயணத்திற்கு இந்தியாவின் சிறந்த சாலைகள் மற்றும் வழிகளுள் சிலவற்றைப் பற்றிக் காண்போம்.

நீங்கள் சாலைகளை நேசிக்கும் ஒரு நபரா? அல்லது எதைப் பற்றியும் கவலைப் படாமல் திறந்த வெளிக் காற்றை அனுபவித்து மகிழ்பவரா? நீங்கள் உங்கள் ஆன்மா ஊர்சுற்றித் திரியும் ஆவல் கொண்டதென்று நினைக்கிறீர்களா? பனி மூடிய சாலைகளிலும், காடுகளுக்கிடையே உள்ள நெடுஞ்சாலைகளிலும் சொர்க்கத்தைத் தேடும் ஒரு ஜீவனா நீங்கள்?

இது ஒவ்வொருவரும் சலிப்பான அலுவலக மேசைகளுக்கு குட்பை சொல்லி பிரியாவிடையளிக்க காத்திருக்கும் வார நாட்களாகும். ஒரு வார இறுதி நாட்களின் போது உங்களுக்கு வரும் ஒரே எண்ணம் என்னவென்றால், யாரும் இதுவரை பயணிக்காத பாதைகளைத் தேர்ந்தெடுத்து சாலைகளை கடக்க வேண்டும் என்பதே ஆகும்.

எதைப் பற்றியும் கவலை இல்லாமல் சாகசங்கள் நிறைந்த நிலப்பரப்புகளில் உங்களை மறுபடியும் கண்டறியும் ஒரு கனவு; நிலப்பரப்பு முழுவதற்கும் காற்றை மட்டுமே துணையாகக் கொண்ட உங்கள் தனித்த ஆன்மா, இதை விட ஈர்க்கத்தக்கது வேறு ஏதாவது உண்டா?

உங்கள் ஊர்ச்சுற்றும் ஆவல் கொண்ட ஆன்மாவை திருப்திப் படுத்த இந்தியாவில் பல சாலைகள் மற்றும் பாதைகள் உள்ளன. அத்தகைய சில சாலைகள் மற்றும் பாதைகளுக்கு உங்களைக் கொண்டு செல்கிறோம் - அவற்றில் சில பனி மூடிய சிகரங்கள் வழியாகவும், சில அடர்ந்த காடுகளின் வழியாகவும் மற்றும் சில உங்களுக்குள் இருக்கும் சாகச விரும்பிக்காக.


ஆராய்ச்சியாளர்களையே வாயைப் பிளக்கவைத்த தமிழகத்தின் மர்மங்களைப் பற்றி தெரியுமா?

1. பாம்பன் பாலம் :

1. பாம்பன் பாலம் :

தீவை நிலப்பரப்புடன் இணைக்கும் இந்த அழகிய நீட்டிப்பு ஒரு அற்புதமாகும்.
20 நிமிடங்களில் எளிதாக கடக்கக் கூடிய 13.5 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலம் இந்தியாவின் மிகப் பெரிய பாலங்களில் இரண்டாவது இடத்தை பெறுகிறது. வேகமாக வீசியடிக்கும் ஈரப்பதமான காற்றுடன் கூடிய திகைப்பூட்டும் காட்சிகள், நிச்சயமாக பெறப்பட வேண்டிய ஒரு தனித்தன்மையான அனுபவமாகும்.
தகவல் பெறப்பட்ட இடம் : wikipedia.org

2. மணாலியிலிருந்து லே :

2. மணாலியிலிருந்து லே :

இது நாட்டின் மிகுந்த அழகான மற்றும் கண்ணுக்கினிய காட்சிகளைக் கொண்ட சாலைகளில் ஒன்றாகும். பல பாலிவுட் பாடல்களுக்கு பிண்ணனிக் காட்சியமைப்பாக இருந்து வந்துள்ளது. 474 கிலோ மீட்டர் நீட்டமுடைய அற்புதமான ஓட்டுநர் பாதையானது, உயர்ந்த மலைச் சிகரங்கள், அற்புதமான பள்ளத்தாக்குகள், புகழ் வாய்ந்த இயற்கை காட்சிகள் மற்றும் மனதைக் கொள்ளைக் கொள்ளும் நிலப்பரப்புகளின் வழியே உங்களை அழைத்துச் செல்கிறது.

சாதாரணமாக இரண்டு நாட்கள் எடுத்துக் கொள்ளும் இந்தப் பயணம், உங்களை பழமையான வர்த்தக பாதைகள் மற்றும் மிக அதிகமான உயரங்களின் வழியே அழைத்துச் சென்று ஒரு சிலிர்ப்பான சாகச அனுபவத்தைத் தரும். இந்த சாலைகள் ஜூன் முதல் செப்டம்பர் வரை மட்டுமே திறந்திருக்கும். எனவே உங்கள் நாள் காட்டியில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள் மற்றும் இந்த அழகிய சவாரிக்கு நாட்களை ஒதுக்குங்கள்.
PC: wikipedia.org

3. லே விலிருந்து கர்டுங் லா :

3. லே விலிருந்து கர்டுங் லா :

இந்த சாலை, சாலை வழிப் பயணங்களின் மெக்கா என்று கருதப்படுகிறது. இந்த நுப்ரா பள்ளத்தாக்கின் நுழைவாயில் சியாச்சின் பனிப்பாறையாறுகளை நோக்கித் தொடர்கிறது. ஒருவர் மலைகளுக்கு இடையில் உள்ள மடாலயங்கள் மற்றும் பல்வேறு வகையான புவியியல் மாற்றங்களை எல்லாம் வழியில் கடந்து, உலகின் மிகுந்த உயரத்தில் உள்ள வாகன போக்குவரத்து சாலையான கர்டுங் லா வை அடையலாம்.

தகவல் பெறப்பட்ட இடம்: wikimedia.org

4. ஜெய்ப்பூரிலிருந்து ரன்தம்போர் :

4. ஜெய்ப்பூரிலிருந்து ரன்தம்போர் :

இந்தப் பயணம் உங்களுக்கு ஒரு ஜங்கிள் புக் அனுபவத்தைத் தரும். புத்துணர்ச்சியான காற்று, காட்டுவழி ஜீப் பயணங்கள், இரவில் நட்சத்திரங்களை பார்த்தல் என்று இவை அனைத்தும் இந்த இடத்தை ஒரு புகைப்படக் கலைஞர்களின் சொர்க்கமாக ஆக்கியுள்ளது. ஆரவல்லி மலைத் தொடர்களின் பசுமை அரண் முதல் ரன்தம்போரின் கரடுமுரடான காடுகளின் குறுக்கே புதர்கள் பரவியுள்ள சிறுநிலங்கள் வரை, இந்த சாலை ராஜஸ்தானின் சிறந்த புவியியலை உங்களுக்கு அளிக்கின்றது.

தகவல் பெறப்பட்ட இடம் : wikimedia.org

5. ரோஹ்டங் கணவாய் :

5. ரோஹ்டங் கணவாய் :

13,054 அடி உயரத்தில் உள்ள இது லஹால் மற்றும் ஸ்பிட்டி பள்ளத்தாக்குகளின் நுழைவாயிலாக சேவையாற்றுகின்றது. இந்த கணவாயானது பனிப்பாறை ஆறுகள், சிகரங்கள், லஹால் பள்ளத்தாக்கு மற்றும் சந்திரா ஆறு ஆகியவற்றின் அழகிய காட்சிகளை நமக்கு அளிக்கிறது.

செனாப் மற்றும் பீஸ் ஆறுகளின் ஆற்றுப் பள்ளத்தாக்குகளுக்கு இடையே உள்ள ஓடை வடிகால் பரப்பில் அமைந்துள்ளது. இந்தக் கணவாயானது ஈரப்பதமான குலு பள்ளத்தாக்கு மற்றும் வறண்ட மிக அதிக உயரத்திலுள்ள லஹால் மற்றும் ஸ்பிட்டி பள்ளத்தாக்குகளுக்கு இடையே இயற்கையாக பிரிக்கப்பட்டுள்ளது.

தகவல் பெறப்பட்ட இடம்: wikipedia.org

6. ஷில்லாங்கிலிருந்து சிரபுஞ்சி:

6. ஷில்லாங்கிலிருந்து சிரபுஞ்சி:

53 கிலோ மீட்டர் நீட்டமுடைய இந்த இடம் உங்களுக்கு வழங்க ஏராளமான மழைத் தூறல்கள், நீர் வீழ்ச்சிகள், குகைகள், கிராமங்கள் மற்றும் அழகான காட்சிகளை தன்னகத்தே கொண்டுள்ளது. மேகாலயா மாநிலம் உங்கள் வழி முழுவதும் குளிர்ந்த காற்று மற்றும் மேக மூட்டத்துடன் உங்களை வரவேற்கிறது. இவ்விடத்தின் இந்திர லோகக் காட்சிகள் நிச்சயமாக உங்களை மயக்கி விடும்.
தகவல் பெறப்பட்ட இடம்: wikimedis.org

7. தேசிய நெடுஞ்சாலை 17 ஷயாத்திரிகள் – கஷேதி மலைக் கணவாய் :

7. தேசிய நெடுஞ்சாலை 17 ஷயாத்திரிகள் – கஷேதி மலைக் கணவாய் :

இந்த திகைப்பூட்டும் மலைக் கணவாய் பிரிவின் மரண வளைவுகள் இந்த கணவாயை மஹாராஷ்டிராவின் மிகுந்த அபாயகரமான மலைக் கணவாய்ப் பிரிவுகளில் ஒன்றாக ஆக்குகிறது. ஷயாத்திரி மலைத் தொடர்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் சாவித்திரி நதிக்கரையில் நெடுஞ்சாலை அமைந்துள்ளது.
தகவல் பெறப்பட்ட இடம்: flickr.com

8. தேசிய நெடுஞ்சாலை 212 பெங்களூர் – ஊட்டி வழியாக பந்திப்பூர் காடுகள்:

8. தேசிய நெடுஞ்சாலை 212 பெங்களூர் – ஊட்டி வழியாக பந்திப்பூர் காடுகள்:

இந்த நெடுஞ்சாலை பந்திப்பூரின் அடர்ந்த காடுகள் மற்றும் முதுமலை மலைத்தொடர்களின் வழியே கடக்கிறது. பந்திப்பூர் தேசிய பூங்கா வழியே கடந்து செல்லும் போது, காட்டு விலங்குகளைக் அதன் இயற்கையான வாழ்விடங்களில் பார்ப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

ஒருவர் சத்தங்களற்ற அமைதியான சுற்றுப்புறச் சூழ்நிலையை அனுபவித்து மகிழலாம் மற்றும் பச்சைப் பசேலென விரிக்கப்பட்ட தரைவிரிப்பில் தொலைந்து போகலாம்.
தகவல் பெறப்பட்ட இடம்: wikimedia.org

9. ஜிலெப்லா கணவாய் :

9. ஜிலெப்லா கணவாய் :

‘ஜிலெப்லா என்கிற வார்த்தை திபெத்திய தொடக்கத்திலிருந்து தோன்றியதுமற்றும் இதன் மொழியாக்கம்அழகான நிலைக் கணவாய் "என்பதாகும். சிக்கிம் மற்றும் திபெத்துக்கு இடையில் கடந்து வரும் இந்தக் கணவாய் உண்மையில் அதன் பெயருக்கேற்றாற் போலத் திகழ்கின்றது.
ஒருவர் தூரத்திலிருந்தே இந்தக் கணவாயின் அடியில் பாயும் மென்மெக்கோ ஏரியுடன், அதன் காடுகளையும் கொண்ட அழகிய காட்சிகளைக் கண்டு மகிழலாம். வசந்த காலம் நடைபெறும் போது இவ்விடத்தின் அழகை விவரிக்க வார்த்தைகளே இல்லை.
தகவல் பெறப்பட்ட இடம்: Wikipedia.org

10. கவ்ஹாத்தி – தவாங் :

10. கவ்ஹாத்தி – தவாங் :

இந்த சாலை நாட்டின் மிக அழகான இயற்கைக் காட்சிகளைக் கொண்ட காசிரங்கா, சிரபுஞ்சி மற்றும் இம்பால் போன்ற இடங்களின் வழியே செல்கின்றது. இங்கு செல்லும் ஒருவர் புத்த மத கொடிகள், பனி உடையணிந்த மலைகள், இந்திய ராணுவத்தினரின் முகாம்கள் மற்றும் பனிப்பிரதேச காட்டெருமைகள் போன்ற காட்சிகளைக் கண்டு மகிழலாம்.
480 கிலோ மீட்டர் நீளமுடைய இவ்விடத்தைக் கடக்க சுமாராக 9 மணி நேரம் எடுத்துக் கொள்ளும் மற்றும் இங்கு வரும் ஒருவர் இவ்விடத்தின் சுற்றுப்புறங்களின் மிகப் பரந்த வெவ்வேறு வண்ணங்களின் நிற மாலைகளின் பார்வையாளராகிறார்.
தகவல் பெறப்பட்ட இடம்: flickr.com

11. பெங்களூர் – குன்னூர்:

11. பெங்களூர் – குன்னூர்:

குன்னூர் நீலகிரியில் உள்ள இரண்டாவது மிகப் பெரிய மலைவாச ஸ்தலமாகும். தேயிலைத் தோட்டங்களால் சூழப்பட்டுள்ள இங்கு 32 கொண்டை ஊசி வளைவுகளில் பயணிக்கும் போது குளிர்ந்த வானிலையும் சேர்ந்து அற்புதமான அனுவத்தை வழங்குகிறது.
மாசினாகுடி வழியே செல்லும் சாலை, கிராமங்களுக்கு மத்தியில் கலக்கும். நீண்டிருக்கும் குறுகலான சாலைகளுடன் இது உண்மையில் மிக அழகான ஒன்றாகும். மேலும் முதுமலை புலிகள் வனக்காப்பகம் இந்தப் பயணத்தின் நினைவுகளுக்கு அழகை கூட்டுகிறது.
தகவல் பெறப்பட்ட இடம்: flickr.com

12. கன்வார் – மங்களூர்

12. கன்வார் – மங்களூர்

இந்தியாவின் மிகச் சிறந்த கடற்கரையோர பயண இடங்களில் ஒன்றாகும். கொங்கன் கடற்கரை என்று புகழ்பெற்று அறியப்படும் நெடுஞ்சாலைகளின் வழியே பயணம் செய்யும் போது, ஒருவர் கலாச்சாரம், உணவு, மொழி, ஆகியவற்றில் உள்ள மாற்றங்களை அனுபவிக்கலாம்.
மேற்குத் தொடர்ச்சி மலைகள் ஒருபுறமும் மற்றும் கடல் ஒருபுறமுமாக, இது நிச்சயமாக பயணிக்க ஈர்ப்பான ஒரு சாலை ஆகும்.
தகவல் பெறப்பட்ட இடம்: flickr.com

13. பெங்களூரிலிருந்து கோவா:

13. பெங்களூரிலிருந்து கோவா:

பெங்களூரிலிருந்து கோவாவை அடைய மூன்று பாதைகள் உள்ளன.
1. தேசிய நெடுஞ்சாலை 206 வழியாக பெங்களூர் - ஷிமோகா - ஹோனவர், மொத்த தூரம் 640 கிலோ மீட்டர்கள்.
2. தேசிய நெடுஞ்சாலை 4 வழியாக பெங்களூர் - தர்வாத் - போன்ட்டா, மொத்த தூரம் 592 கிலோ மீட்டர்கள்.
3. தேசிய நெடுஞ்சாலை 4 வழியாக பெங்களூர் - ஹுப்ளி, மொத்த தூரம் 706 கிலோ மீட்டர்கள்.
வழி 1 மற்றும் 3 அதிகமாகப் பயணப்படப்பட்ட பாதைகளாகும், ஏனெனில் இரண்டு பாதைகளும் பயணம் செய்கையில் மிகுந்த அமைதியான இயற்கைக் காட்சிகள் நிறைந்த ஒரு சூழலை அளிக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகள், குறுக்கே ஓடும் பல்வேறு நீர்வீழ்ச்சிகள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்களுக்கு மத்தியில் செய்யும் இந்தப் பயணத்தின் வழிகள் நிச்சயமாக சந்தோஷமான நினைத்துப் பார்த்து போற்றக்கூடிய நீண்ட நாட்களுக்கான நீடித்த நினைவுகளை தரும்.
தகவல் பெறப்பட்ட இடம்: flickr.com

14. டெஹ்ரடூன் - நைனிடால் :

14. டெஹ்ரடூன் - நைனிடால் :

இந்த சாலை அட்ரினலின் வேகமாகப் பாய வேண்டுமென்று விரும்புபவர்களுக்கானது. எண்ணற்ற வளைவுகள் மற்றும் திருப்பங்களுடன் இந்தப் பாதை சாகசத்தை தேடுபவர்களுக்கு அற்புதமான அனுபவத்தை அளிக்கிறது.
மேலும் ஏராளமான இயற்கை வளங்களைக் கொண்ட இந்தச் சாலையில் இயற்கையின் காதலர்கள் முகத்தில் அறையும் புத்துணர்ச்சியான தென்றலின் தங்களது பங்கைப் பெற்றுக் கொள்ளலாம். இந்த மாயாஜால பயண இலக்கை அடையும் போது இயற்கையின் விருந்தைப் பெற தயாராக இருங்கள்.
தகவல் பெறப்பட்ட இடம்: flickr.com

15. டார்ஜிலிங்கிலிருந்து கேங்டக் :

15. டார்ஜிலிங்கிலிருந்து கேங்டக் :

வளைவான நிலப்பரப்புகள், குறுகிய கணவாய்கள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் பசுமையான தேயிலைத் தோட்டங்கள் பயணம் நெடுகிலும் உங்களுக்கு வழித்துணையாக வரும். மாபெரும் மலைகளில் முடியும் சாலைகளும், அழகுக்கு அழகு சேர்க்கும் இயற்கை நிலக்காட்சிகளும் நீங்கள் சொர்க்கத்தில் பயணிப்பதைப் போன்ற ஒரு உணர்வைத் தரும்.
தகவல் பெறப்பட்ட இடம்: flickr.com

16. ஸ்ரீநகர் – ஜன்ஸ்கர் :

16. ஸ்ரீநகர் – ஜன்ஸ்கர் :

உங்கள் குழந்தைப் பருவக் கதைகளில் "வெகு வெகு தொலைதூர நிலம்" பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நீங்கள் அதற்கான விடையை இங்கே காணலாம். இந்த இயற்கை நிலக்காட்சிகளின் அழகு நிச்சயமாக அழகைப் பற்றிய உங்கள் வரையைறையை மாற்றிவிடும். இது உங்களை நாகரீகத்திலிருந்து தனிமைக்கு திரும்ப எடுத்துச் செல்லும் அத்தகைய ஒரு பயணமாகும்.
தகவல் பெறப்பட்ட இடம்: flickr.com

17. பெங்களூரிலிருந்து ஹம்பி :

17. பெங்களூரிலிருந்து ஹம்பி :

நீங்கள் தேசிய நெடுஞ்சாலை 4 இன் மீது பெங்களூரிலிருந்து சித்ரகூடாவிற்கு பயணிப்பீர்கள், இங்கிருந்து ஒரு புறவழிப் பாதை ஹோஸ்பெட் வழியாக ஹம்பிக்கு செல்ல உங்களை வழிநடத்துகிறது. இந்த சாலைகள் உலர்ந்தும், வறண்டும் இருப்பதால் அதைப் பற்றி மகிழ எதுவுமில்லை.

ஆனால் பயணத்தின் இலக்கு பயணத்தை மதிப்பு மிக்கதாக்குகிறது. ஒரு காலத்தில் செழுமை, பெருமிதம், கலாச்சாரம் மற்றும் வர்த்தகத்தின் பொன்னான சகாப்தமாகக் கருதப்பட்ட இந்த இடம் கனவு போன்ற ஒரு அனுபவத்தை உங்களுக்கு வழங்கும்.
தகவல் பெறப்பட்ட இடம்: flickr.com

அதிகம் பேர் படித்த டாப் 5 கட்டுரைகள்

திருமணத்துக்கு முன்னாடி நீங்க இதையெல்லாம் அனுபவிச்சே ஆகணும் பாஸ்

உலகையே ஆண்ட சோழ ராஜ்ஜியம் வீழ்ந்த இடம் எது தெரியுமா?

நாசாவே வியக்கும் இந்த சிவன் கோவில் மர்மங்கள் உங்களுக்கு தெரியுமா?

ஜெயலலிதாவும் கோடநாடும் தெரிந்ததும் தெரியாததும்

அமலா பாலுடன் நடுக்காட்டில் ஒரு சுற்றுலா போலாமா?

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்