Search
  • Follow NativePlanet
Share
» »காதலர்களை உல்லாசப்படுத்தும் கேரள மலைத் தொடர்கள்...!

காதலர்களை உல்லாசப்படுத்தும் கேரள மலைத் தொடர்கள்...!

நகரத்தில் கான்கிரீட் காடுகளில் வாழும் நாம் இயற்கையின் அழகை ரசிக்க மறந்துவிட்டோம். நரகமான இந்த நகர வாழ்க்கையில் இருந்து சில நாட்களேனும் இயற்கை அன்னையின் மடியில் மகிழ ஓர் பசுமை வனக் குடிலுக்கு செல்வோம்.

பசுமையான தென்றல், பசுமை போர்த்திய இயற்கையின் அழகுக்கு முன்னாள் இவ்வுலகில் எதுவுமே நிகராகாது. நகரத்தில் கான்கிரீட் காடுகளில் வாழும் நாம் இயற்கையின் அழகை ரசிக்க மறந்துவிட்டோம். நரகமான இந்த நகர வாழ்க்கையில் இருந்து சில நாட்களேனும் இயற்கை அன்னையின் மடியில் மகிழ ஓர் பசுமை வனக் குடிலுக்கு செல்வோம் வாங்க.

செம்பரா சிகரம்

செம்பரா சிகரம்


கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ளது செம்பரா சிகரம். மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக நீலகிரி மலைகளை ஒட்டி அமைந்திருக்கும் இந்த செம்பரா சிகரம் தான் மலைகள் சூழ்ந்த நகரமான வயநாட்டின் மிக உயரமான சிகரமாகும். கடல்மட்டத்தில் இருந்து 6,000 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது. வயநாடு மாவட்டத்தின் தலைநகரமான கல்பேட்டாவில் இருந்து வெறும் 8 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது.

Jaseem Hamza

மலையேற்ற விரும்பிகளுக்காக

மலையேற்ற விரும்பிகளுக்காக


கல்பெட்டாவில் இருந்து சுமார் 11.5 கிலோ மீட்டர் சாலை மார்க்கமாக பயணித்தால் செம்பரா மலைத் தொடரின் அடிவாரம் இருக்கும் ஊரான மேப்படியை அடையலாம். அங்கிருந்து இந்த சிகரத்தில் மலையேற்ற பயணத்தை துவங்கலாம். கேரளாவில் டிரெக்கிங் செய்ய விரும்புகிறவர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலாமான ஓரிடமாக இந்த செம்பரா சிகரம் திகழ்கிறது.

Dipu TR

என்ன சிறப்பு தெரியுமா ?

என்ன சிறப்பு தெரியுமா ?


செம்பரா சிகர மலையேற்றத்தின் சிறப்பே இங்குள்ள காதல் ஏரி தான். செம்பரா சிகரத்தில் இருக்கும் இந்த ஏரியானது இயற்கையாகவே காதல் இதய வடிவத்தில் அமைந்திருக்கிறது. மேலும் இந்த ஏரியில் இருந்து வயநாட்டை மொத்தமாக கண்டு ரசிக்கவும் முடியும் என்பதாலேயே வருடந்தோரும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான காதலர்கள் இங்கு படையெடுக்கின்றனர்.

Arunkumar003prpc

நினைவுல வெச்சுக்கோங்க...

நினைவுல வெச்சுக்கோங்க...


இந்த மலையேற்ற பயணத்தை மேற்கொள்வதற்கு முன்பாக வயனாடு வனச்சரக அலுவலகத்தில் உரிய அனுமதி பெற வேண்டியது அவசியம் ஆகும். மலையேற்றத்தில் ஈடுபடுகிறவர்களுக்கு உதவியாக மாநில சுற்றுலாத்துறை சார்பில் தேவையான உபகரணங்கள் வழங்கப்படும்.

M.arunprasad

காதல் ஏரியும் கைகோர்த்த காதலியும்...

காதல் ஏரியும் கைகோர்த்த காதலியும்...


உங்கள் காதலியுடன் அல்லது மனைவியுடனோ எங்காவது அழகான இடத்திற்கு செல்ல ஆசைப்பட்டால் நிச்சயம் வயநாட்டில் இருக்கும் இந்த செம்பரா ஏரிக்கு வாருங்கள். பேரழகு நிறைந்த காதல் ஏரியில் மனதுக்கு மிகவும் பிடித்தவருடன் நேரம் செலவிடுவதை விடவும் சிறந்த விசயம் வேறேதாவது இருக்க முடியுமா என்ன?.

Unknown

எங்கே உள்ளது ?

எங்கே உள்ளது ?


செம்பரா சிகரமானது கொல்லேகள் - மைசூர்- கோழிகோடு சாலையான NH 212-வில் இருந்து 11 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. கேரள - கர்நாடக எல்லையை ஒட்டி அமைந்திருப்பதால் இரண்டு மாநிலங்களில் இருந்தும் பரவலாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Karkiabhijeet

சுற்றுவட்டார சுற்றுலாத்தலங்கள்

சுற்றுவட்டார சுற்றுலாத்தலங்கள்


செம்பரா சிகரத்தை தவிர வயநாட்டில் மூன்று லட்சம் வருடங்களுக்கு முன்பு மனிதன் வாழ்ந்ததாக சொல்லப்படும் எடக்கல் குகைகள், ஆயிரம் ஆண்டுகள் பழமையான மகா விஷ்ணுவின் கோவிலான திருநெல்லி, குருவதீப் ஓடை போன்ற இடங்கள் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும சிறந்த தலங்களாக திகழ்கிறது.

Shareef Taliparamba

சென்னை - செம்பரா

சென்னை - செம்பரா


சென்னையில் இருந்து கேரளாவில் உள்ள செம்பராவிற்கு வர திட்டமிட்டீர்கள் என்றால் மங்களூர் எக்ஸ்பிரஸ், மடகோன் எக்ஸ்பிரஸ், மங்களூர் மெயில், வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ், சென்னை எக்மோர் மங்களூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களின் மூலம் பயணிக்கலாம். கோழிக்கோடு, தாமரசேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து செம்பரா செல்ல பேருந்து வசதிகளும் உள்ளன.

Arian Zwegers

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X