» »கோவாவில் கொண்டாடப்படும் அட்டகாசமான கார்னிவல் திருவிழாவை பற்றி தெரியுமா?

கோவாவில் கொண்டாடப்படும் அட்டகாசமான கார்னிவல் திருவிழாவை பற்றி தெரியுமா?

Posted By: Staff

என்னதான் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்து வாயைக்கட்டி வயிற்றைக்கட்டி சொத்து சேர்த்து வைத்தாலும் அதையெல்லாம் அனுபவிக்காமல், கொண்டாடாமல் இருந்தால் நாம் வாழ்வதற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும். முன்பெல்லாம் மாலை நேரங்கள் சக மனிதர்களுடன் பேசி மகிழ்வதற்கானதாக இருந்தது. விசேஷ நாட்களில் சொந்தங்கள் கூடி களிப்பதும், ஊர் கூடி திருவிழாக்கள் கொண்டாடுவதும் இருந்தன. அவையெல்லாம் இன்றைய நவீன நகர வாழ்கை சூழலில் மறைந்துவிட்டன.

சரி, இதற்கு தீர்வு தான் என்ன?. வருகின்ற பிப்ரவரி மாதம் இந்தியாவின் பார்டி நகரமான கோவாவில் 'கோவா கார்னிவல்' என்னும் திருவிழா நடக்கவிருக்கிறது. கொண்டாட்டங்களின் உச்சமாக பார்க்கப்படும் இந்த திருவிழா கொண்டாட்டங்கள் பற்றி மேலும் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.    

கோவா கார்னிவல் !!

கோவா கார்னிவல் !!

கடற்கரைகளுக்கும் விடிய விடிய நடக்கும் பார்டிகளுக்கும் பெயர்பெற்ற கோவா மாநிலத்தை சுற்றிப்பார்க்க பிப்ரவரி மாதம் சிறந்த நேரமாகும்.

குளுகுளு சீதோஷ்ணம் நிலவுவதோடு இந்த மாதத்தில் தான் 'கோவா கார்னிவல்' திருவிழாவும் நடக்கிறது. பிரேசில் நாட்டில் உள்ள ரியோ நகரில் வருடாவருடம் நடக்கும் கார்னிவல் திருவிழாவை போன்றது தான் இந்த கோவா கார்னிவல் திருவிழாவும்.

Madan kumaraswamy

கோவா கார்னிவல் !!

கோவா கார்னிவல் !!

கோவாவின் முக்கியமான நகரங்களில் ஒன்றான பனாஜியில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. மொத்தம் மூன்று நாட்கள் நடக்கும் இவ்விழா ஆடல், பாடல், வண்ணமயமான அலங்கார ஊர்திகளின் ஊர்வலங்கள் என்று களைகட்டுகின்றன.

Madan kumaraswamy

கோவா கார்னிவல் !!

கோவா கார்னிவல் !!

மோமோ என்ற லத்தின் அமெரிக்க அரசனின் காலத்தில் தான் இதுபோன்ற கார்னிவல் கொண்டாட்டங்கள் துவங்கியிருக்கின்றன.

அதை நினைவுகூரும் பொருட்டு ஒவ்வொரு கார்னிவல் திருவிழாவின் போதும் மோமோ அரசனாக ஒருவர் வேடமிட்டு இந்த கொண்டாட்டங்களுக்கு தலைமை தாங்குகிறார்.

Joel's Goa Pics

கோவா கார்னிவல் !!

கோவா கார்னிவல் !!

இஸ்லாமில் ரமலான் நோன்பு விரதம் கடைபிடிக்கப்படுவது போல கிறிஸ்துவத்தில் 'லேண்ட்' எனப்படும் 40நாள் நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. இந்த நோன்பு விரதத்துக்கு முன்பு மூன்று நாட்கள் விரும்பியபடி குடித்து கொண்டாடத்தான் இந்த கார்னிவல் விழா கொண்டாடப்படுவதாக சொல்லப்படுகிறது.

இந்த கார்னிவல் விழா 18ஆம் நூற்றாண்டில் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறதாம்.

Joel's Goa Pics

கோவா கார்னிவல் !!

கோவா கார்னிவல் !!

பொதுவாக இவ்விழா சபடோ கோர்டோ நாளில் அதாவது சனிக்கிழமை தொடங்கி ஸ்ரோவ் டியுஸ்டே என்னும் செவ்வாய்க்கிழமையன்று நிறைவு பெறுகிறது.

இந்த மூன்று நாட்களும் கோவாவின் தெருக்கள் அனைத்தும் வண்ணமயமாக காட்சியளிக்கின்றன. எங்கெங்கு காணினும் மக்கள் விதவிதமாக உடையணிந்து ஆட்டம்,பாட்டம் என கொண்டாடுவதை பார்க்கமுடியும்.

jembe

கோவா கார்னிவல்!!

கோவா கார்னிவல்!!

இந்த விழா நடைபெறும் மூன்று நாட்களும் 24மணிநேரமும் தெருக்களில் மக்கள் கூடி ஆடிப்பாடி குடித்து கொண்டாட்டங்களில் ஈடுபடுகின்றனர்.

சிறியவர், பெரியவர் என்ற வயது வித்தியாசமின்றி அனைவரும் இந்த கார்னிவலில் கலந்துகொள்ளலாம்.

Apoorva Guptay

கோவா கார்னிவல்!!

கோவா கார்னிவல்!!

கார்னிவல் திருவிழாக்கள் கொண்டாடுவது போர்துகீசியர்களின் பண்பாடு ஆகும். உலகில் எங்கெங்கெல்லாம் போர்துகீசியர்களின் காலனி ஆதிக்கம் இருந்ததோ அந்த இடங்களிலெல்லாம் கார்னிவல்கள் இன்றும் கொண்டாடப்படுகின்றன.

இந்த வழக்கம் 800ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

Parag Sankhe

கோவா கார்னிவல்!!

கோவா கார்னிவல்!!

2016ஆம் வருடத்திற்கான கோவா கார்னிவல் பிப்ரவரி 6ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 9ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.

இப்போதுதான் புத்தாண்டு கொண்டாட்டங்கள் முடிந்திருக்கிறது, கோடைகால சீசன் ஆரம்பிக்கவும் சில மாதங்கள் இருப்பதால் ஹோட்டல்களில் குறைந்த விலைக்கே கிடைக்கும். கோவா ஹோட்டல் விவரங்கள்.

Parag Sankhe

கோவா கார்னிவல்!!

கோவா கார்னிவல்!!

கோவா கார்னிவல் கொண்டாட்டங்களின் சில புகைப்படங்கள்.

Arian Zwegers

கோவா கார்னிவல்!!

கோவா கார்னிவல்!!

கார்னிவல் கொண்டாட்டம் !!

Apoorva Guptay

கோவா கார்னிவல்!!

கோவா கார்னிவல்!!

கார்னிவல் கொண்டாட்டம் !!

Joel's Goa Pics

கோவா கார்னிவல்!!

கோவா கார்னிவல்!!

கார்னிவல் கொண்டாட்டம் !!

djfrantic

கோவா கார்னிவல்!!

கோவா கார்னிவல்!!

குறைந்த செலவில் நண்பர்களுடன் கோவா சென்று ஆசைதீர கொண்டாட வேண்டும் நினைப்பவர்கள் நிச்சயம் இந்த வருட கோவா கார்னிவலை தவறவிடாதீர்கள்.

கோவாவில் இருக்கும் சுற்றுலாத்தலங்கள் பற்றிய முழுமையான விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

mamta tv