Search
  • Follow NativePlanet
Share
» »கேரளாவில் பிரசித்திப் பெற்ற ராமர் கோவில் எங்கே உள்ளது என தெரியுமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்!!

கேரளாவில் பிரசித்திப் பெற்ற ராமர் கோவில் எங்கே உள்ளது என தெரியுமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்!!

கேரளாவில் பிரசித்திப் பெற்ற ராமர் கோவில் எங்கே உள்ளது என தெரியுமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்!!

By Staff

கேரள மாநிலத்தின் திருச்சூர் மாவட்டத்திலுள்ள த்ரிப்ரையாரில் காணப்படும் ஒன்று தான் திருப்பிரவர் ஸ்ரீ ராம கோயில். ஸ்ரீ ராமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஆலயம், மிகவும் பிரசித்திபெற்ற கோவில்களுள் ஒன்றாகவும் விளங்குகிறது. இங்கே எழுந்தருளி இருக்கும் தெய்வமானது, த்ரிப்ரையரப்பன் (அ) த்ரிப்ரையர் தேவர் என்றழைக்கப்படுகிறது.

இங்கிருக்கும் சிலையானது...துவாரகாவில் கிருஷ்ண பெருமான் வணங்கியதாக நம்பப்படுகிறது. கிருஷ்ண பெருமான் காலத்திற்கு பிறகு, இந்த சிலையானது கடலில் மூழ்கியதாகவும், அதன்பிறகு மீனவர்களால் வெளியில் கொண்டு வரப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அவர்கள் இந்த சிலையை ஊள்ளூர் ஆட்சியாளர்களிடம் தர, அந்த சிலையை கொண்டு ஆலயம் அந்த இடத்தில் நிறுவப்பட்டதாகவும் வரலாற்றின் பேச்சால் நமக்கு தெரிய வருகிறது.

கேரளாவில் பிரசித்திப் பெற்ற ராமர் கோவில் எங்கே உள்ளது என தெரியுமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்!!

Sivavkm

மற்ற ராம கோவில்களை காட்டிலும்...இங்கே காணும் சிலையில் நான்கு கைகளை அவர் கொண்டிருக்க, ஒவ்வொரு கைகளிலும் சங்கு, தட்டு, வில் மற்றும் திருமண மாலையையும் அவர் கொண்டு இங்கே வீற்றிருப்பது வந்து பார்ப்போரை வியக்க வைக்கிறது. தீவ்ரா ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் இந்த ஆலயம், நன்கு அறியப்பட்ட மூன்று நம்பூதிரி குடும்பங்களால் நிர்வகிக்கப்படுகிறது. ஆம், அவர்கள் தான் சேலூர் மேனா, ஜனப்பள்ளி மேனா, மற்றும் பன்னப்பள்ளி மேனா ஆவர். கொச்சி தேவசம் வாரியம் நிர்வாகத்தை எடுத்துக்கொள்ளும் முன்னே இவர்களால் உரிமையுடன் எடுத்து உபசரிக்கப்பட்டு வருகிறது.

இந்த முக்கிய தெய்வமான ராமனை தவிர்த்து, ஹனுமான், கணபதி, தட்சினாமூர்த்தி, சாஸ்தா மற்றும் கோசலா கிருஷ்ணர் ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்ட சன்னதிகளும் இங்கே காணப்படுகிறது.

ஆலய கட்டிடக்கலையை பற்றிய அழகிய பதிவு:

சன்னதி முழுக்க மர சிற்பங்களால் நிறைந்திருக்க, ஆலயத்தின் கருவறையானது வட்ட வடிவத்தில் காணப்படுகிறது. அவை, ஒரு கூம்பு கூரையை போன்று செப்பு தகடுகளால் ஆனது. சன்னதியில் பல சிற்பங்கள் காணப்பட, அவை அனைத்தும் இராமாயணத்தின் சித்தரிக்கப்பட்ட காட்சிகளாக சிறந்து விளங்குகிறது. அத்துடன், சுவர்கள் அனைத்திலும் ஓவியங்கள் தீட்டப்பட்டிருக்க, அவை அனைத்தும் இன்று வரை சரியான முறையில் பராமரித்தும் வரப்படுகிறது.
சுவர் ஓவியங்கள் அனைத்தும் கலை வடிவத்தில் காணப்படுவதோடு, அவை மெதுவாக மறைந்துவிடும் தன்மை கொண்டதாகவும் இருப்பதால்...அந்த ஓவியங்களை பாதுகாப்பதற்க்காக அழகுபடுத்தப்பட்டும் வைக்கப்பட்டிருக்கிறது.

கேரளாவில் பிரசித்திப் பெற்ற ராமர் கோவில் எங்கே உள்ளது என தெரியுமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்!!

Kevinsooryan

நமஷ்கார மண்டபத்தில் நிறைய சிற்பங்கள் காணப்படுகிறது. இருப்பினும், நவகிரகத்தை குறிப்பிடும் அல்லது 24 பலகைகளால் மரம் கொண்டு செதுக்கிய ஒன்பது கிரகங்களின் வடிவமைப்பு கவனிக்கத்தகும் விதத்தில் அமைந்து நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது.

கோவிலுடன் தொடர்புடைய புராணம் பற்றி பார்க்கலாம்:

மீனவர் கண்ணுக்கு நான்கு சிலைகள் தென்பட்டதாகவும்...அவற்றுள் ஓர் முக்கியமான சிலை ஸ்ரீ இராமருடையது என்றும் வரலாறு கூறுகிறது. அதன்பின், உள்ளூர் நிலப்பிரபுவான வக்கையில் கைமால் என்பவரால் அங்கே சிலை நிறுவப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

கைமாலை (உள்ளூர் நிலப்பிரபு) நோக்கி வானுயர ஒலி சத்தம் ஒன்று கேட்க, அந்த அசறீரி ஆனது... அங்கே ஒரு மயில் தோன்றி, சிலை நிறுவுவதற்கு சரியான நேரத்தை உணர்த்தும் என்று கூறியதை அடுத்து, கைமாலும், அவனுடைய ஆட்களும் வெகு நேரத்துக்கு அங்கேயே காத்திருந்திருக்கின்றனர். இருப்பினும், வெகு நேரம் கடந்தும் மயில் எந்த ஒரு நேர குறியீட்டையும் அங்கே அவர்களுக்கு காட்டவில்லை. அப்பொழுது, அங்கே ஒரு பக்தன் கையில் மயிலுடன் தோன்ற, தலைமை பூசாரி அந்த நேரத்தில் மனமுவந்து சிலையை நிறுவியதாக வரலாற்றின் மூலம் நமக்கு தெரிய வருகிறது.

கேரளாவில் பிரசித்திப் பெற்ற ராமர் கோவில் எங்கே உள்ளது என தெரியுமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்!!

cheliyan

ஆனால், சிலை நிறுவிய பிறகு அசறீரியில் உணர்த்திய மயில் தோன்ற, அது பூசாரியையும், கைமாலையும் கவலைக்குள்ளாக்கியது. தான் செய்த ஒன்று தவறென அவர்கள் கவலையுடன் இருக்க, மயிலானது அந்த நேரத்தில் அவர்களுக்கு குறியீட்டை உணர்த்த, அந்த இடத்திலே தியாக கல் எனப்படும் வைலய பலிக்கல்லை அவர்கள் நிறுவினார்கள். அதனால், முக்கிய தெய்வத்திற்கு தரப்படும் சம மரியாதையானது அந்த தியாக கல்லிற்கும் தரப்படுவதாக வரலாற்றின் மூலம் நமக்கு தெரிய வருகிறது.

ஆனால், சிலை நிறுவிய பிறகு அசறீரியில் உணர்த்திய மயில் தோன்ற, அது பூசாரியையும், கைமாலையும் கவலைக்குள்ளாக்கியது. தான் செய்த ஒன்று தவறென அவர்கள் கவலையுடன் இருக்க, மயிலானது அந்த நேரத்தில் அவர்களுக்கு குறியீட்டை உணர்த்த, அந்த இடத்திலே தியாக கல் எனப்படும் வைலய பலிக்கல்லை அவர்கள் நிறுவினார்கள். அதனால், முக்கிய தெய்வத்திற்கு தரப்படும் சம மரியாதையானது அந்த தியாக கல்லிற்கும் தரப்படுவதாக வரலாற்றின் மூலம் நமக்கு தெரிய வருகிறது.

மற்றுமோர் புராண கதையாக, மேற்கு பக்கத்து கதவுகள் மூடுவதற்கான காரணம் அமைகிறது. வில்வலிங்க சாமியார் என்பவர் ஒரு புனித புத்திரர் ஆவார். ஆம், அவர் தான் தெய்வத்தை முழுமனதுடன் வணங்கி உண்மை வடிவத்தை கண்டதாக சொல்லப்படுகிறது. அவர் ஒருமுறை த்ரிப்ரையருக்கு வந்த பொழுது, ஸ்ரீ ராமரை வணங்கியதாகவும் புராணத்தின் மூலம் சொல்லப்படுகிறது.

அவருடைய பூஜையின் பொழுது...ஸ்ரீ தேவி மற்றும் பூ தேவி ஆகிய இருவரும் ஆலயத்தின் மேற்கு நுழைவாயில் வழியாக நுழைந்ததை கண்டுள்ளார். ஆம், கிழக்கில் இருக்கும் வாசலிற்கு மாறாக தவறான மேற்கு நுழைவாயிலில் அவர்கள் இருவரும் நுழைய, அவர், இரண்டு தேவிகளிடமும் ஸ்ரீ ராமருக்கு பக்கங்களில் காணப்படும் கருவறையின் வழியாக உள்ளே நுழையுமாறு கட்டாயப்படுத்தினார்.

அந்த தேவிகளை அங்கே நிறுவியப்பிறகு, சாமியார் ஆலயத்தின் மேற்கு பக்கத்து கதவுகளையும், இடப்பக்கத்தையும் மூடிவிட்டார். அதனால், இன்று வரை ஆலயத்தின் மேற்கு பக்கத்து கதவுகள் மூடியே இருப்பதாக சொல்லப்படுகிறது.

கேரளாவில் பிரசித்திப் பெற்ற ராமர் கோவில் எங்கே உள்ளது என தெரியுமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்!!

Akhilan

எப்படி நாம் இந்த ஆலயத்தை அடைவது?

ஆகாய மார்க்க வழி:

நெடும்பச்சேரியில் காணப்படும் கொச்சி சர்வதேச விமான நிலையம் தான் அருகில் அமைந்திருக்கும் ஒரு விமான நிலையமாகும். ஆம், இங்கிருந்து சுமார் 57 கிலோமீட்டர் தூரத்தில் ஆலயம் காணப்படுகிறது. இங்கிருந்து செல்லும் விமானங்கள், இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு இயக்கப்பட மேலும் அயல் நாடுகளுக்கும் சில விமானங்கள் பறந்து கொண்டிருக்கிறது.

தண்டவாள மார்க்க வழி:

தோராயமாக 24 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் திரிசூர் இரயில் நிலையம் தான் ஆலயத்திற்கு மிக அருகில் காணப்படும் ஒரு இரயில் நிலையமாகும். இந்த இரயில் நிலையத்திலிருந்து மாநிலங்களில் உள்ள பல முக்கிய நகரங்களும், நாடு முழுவதும் உள்ள சில இடங்களும் இரயில் போக்குவரத்து சேவையின் மூலம் இணைக்கப்பட்டிருக்கிறது.

சாலை மார்க்க வழி:
த்ரிப்ரையாரை அடைய சிறந்ததோர் வழியாக சாலை போக்குவரத்து வசதி அமைகிறது. கேரள மாநிலத்தில் எண்ணற்ற பேருந்துகள் இங்கே செல்வதற்கு இயக்கப்பட, பெங்களூரு, சென்னை என பல இடங்களிலிருந்தும் கூட இயக்கப்படுகிறது.

Read more about: travel temple
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X