» »டில்லியில் உள்ள புனித தர்காவான நிஷாமுதின் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!!

டில்லியில் உள்ள புனித தர்காவான நிஷாமுதின் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!!

Written By: Balakarthik Balasubramanian

தில்லியின் நிஷாமுதின் பகுதியில் காணப்படும் கல்லறை தான் ஹஷ்ராத் நிஷாமுதின் அவுலியாவாகும். நாட்டில் பிரசித்திபெற்ற சுபி கல்லறைகளுள் ஒன்றும் கூட...இந்த தர்காவில் கவிஞர் அமீர் கொஸ்ரோ மற்றும் ஷாஜகான் மூத்த மகளின் கல்லறை, அவரின் மனைவி ஜஹானாரா பேகம் ஆகியவர்களின் கல்லறையும் காணப்படுகிறது.

சுபி சிஷ்டியை சேர்ந்த ஹஷ்ராத் நிஷாமுதின் மிகவும் பெயர்பெற்ற ஒரு துறவியாவார். அவருக்கும் நாட்டில் சீடர்கள் பலர் இருக்க, அவர் அஜ்மீரின் கவஜா மொய்னுதீன் சிஷ்டியின் ஆன்மீக வாரிசாகவும் விளங்கினார்.

மதிப்பிற்குரிய சுபி துறவியின் கல்லறைக்கு எண்ணற்ற பக்தர்கள் வந்து செல்ல, இஸ்லாமிய நம்பிக்கை கொண்டவர்கள் மட்டும் வராமல்...அனைத்து விதமான சீடர்களும் வந்து செல்கின்றனர் என்பதே உண்மை. தில்லி சுல்தான்களான முகமது துக்லக் மற்றும் அலாவுதீன் கில்ஜி போன்ற தீவிர பக்தர்களும் சுபி துறவிக்கு இருக்கின்றனர்.

நிஷாமுதின் தர்கா பற்றிய இன்னும் பல தகவல்கள்:

நிஷாமுதின் தர்கா பற்றிய இன்னும் பல தகவல்கள்:

இந்த தர்காவின் அமைப்பானது சதுர வடிவத்தில் காணப்பட, இதனை சுற்றி அரங்குகள், திறந்த நுழைவாயிலை அலங்கரித்து கொண்டு அழகிய காட்சியை தருகிறது. இந்த கல்லறையின் மேல்புறத்தில் குவிமாடம் ஒன்று காணப்பட, செங்குத்தான கோடுகளை கொண்டு கருப்பு பளிங்கு கற்கள் ஜோடிக்கப்பட்டிருக்கிறது. அதோடு ஒட்டுமொத்த இந்த அமைப்புக்கும் மகுடம் சூட்டியவாறு தாமரை முகடு ஒன்றும் காணப்படுகிறது.

பளிங்கு குவிமாடம் கல்லறை ஒன்று 1605ஆம் ஆண்டு அமீர் கொஸ்ரோவுக்கு கட்டப்பட்டு காணப்பட, அவற்றின் சிறிய அறைகளை சிக்கலான திரைகள் சூழ்ந்திருக்க...1496ஆம் ஆண்டு பெரிய கல்லறை கற்களும் மேதி கவாஜாவுக்காக அமைக்கப்பட அவர் தான் பாபர் பேரரசரின் ராஜ சபையில் இருந்தவர் என்பதும் நமக்கு தெரிய வருகிறது.

jacob jung

 மணற்கல் அமைப்பு:

மணற்கல் அமைப்பு:


இந்த அமைப்பானது சிவப்பு நிற மணற்கல்லை கொண்டு கட்டப்பட, இன்று வருடங்களை கடந்த ஓவியங்களை இவ்விடம் தாங்கிகொண்டு நிற்கிறது. 20ஆம் நூற்றாண்டிற்கு முன்னதாக இது நிறுவப்பட்டதாக நம்பப்பட, இந்த தர்காவின் காவலாளியான ஹாஷன் நிஷாமி என்பவர்...தெரியாமல் ஓர் கோடினை இந்த வண்ணம் தீட்டப்பட்ட இடத்தில் கிழித்துவிட்டதாகவும் பாரிசீக மொழியில் அவர் விவரித்ததாகவும் தெரிய வருகிறது. அதன் பின்னர் அவர் சிவப்பு மணல்கற்களை கொண்டு பொறிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

நுழைவாயில் வழியாக அமீர் கொஸ்ரோவின் கல்லறையின் அழுத்தமான மரக்கதவுகளை நாம் அடைய அங்கிருந்து பழங்காலத்து அறை ஒன்று நம் கண்களுக்கு தென்படுகிறது. பதினான்காம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த இடத்தின் அறையானது எப்பொழுதும் பூட்டப்பட்டிருக்க, சுபிகளின் சிறப்பு வருகை கூட்டத்தின்போது மட்டும் இது திறக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

Varun Shiv Kapur

 பன்முக கல்லறைகள்:

பன்முக கல்லறைகள்:

இந்த அமீர் கொஸ்ராவின் கல்லறைக்கு அருகில் இன்னும் இரண்டு கல்லறைகள் காணப்பட, அவற்றுள் ஷாஜகானின் மகள் மற்றும் மனைவியின் கல்லறையான ஜஹனரா என்ற ஒன்றும், மற்றுமொன்று முகலாய அரசரான முகமது ஷாஹ் ரங்கீலாவின் கல்லறை என்பதும் நமக்கு தெரிய வருகிறது. ஜஹனராவின் கல்லறையானது புற்களால் சூழ்ந்திருக்க, அதில் காணும் கல்வெட்டுகளில், எழுத்துக்களும் காணப்படுகிறது. அது என்னவென்றால்...'என் கல்லறையை எதும் சூழவில்லை, இந்த புற்களை காப்பாற்றுங்கள்: தாழ்மையுள்ளவர்களின் கல்லறைக்கு மூடிய புற்களானது நல்லதே' என்னும் வாசகம் காணப்படுகிறது.

தர்காவின் வெளிப்புறத்தில் அடகா கானின் கல்லறை ஒன்று காணப்பட, இந்த கல்லறையானது சிவப்பு மணற் கற்களை கொண்டும், பளிங்கு கற்களை கொண்டும், வண்ணம் தீட்டப்பட்ட ஓடுகளாலும் அழகிய வடிவம் பெற்று மனதை வெகுவாக கவர்கிறது. 1562ஆம் ஆண்டு அக்பரின் ஆட்சியின்போது சிறந்த மனிதரான பரிதுன் கான் என்பவரால் இக்கல்லறை கட்டப்பட்டதாகவும் தெரியவருகிறது.

Varun Shiv Kapur

ஜமத் கானா மஸ்ஜித்:

ஜமத் கானா மஸ்ஜித்:

துறவியின் கல்லறையை சுற்றி பெரிய மற்றும் சிறிய கல்லறைகள் காணப்பட, காலம் கடந்து இவை கட்டப்பட்டதாக தெரியவருகிறது. அத்தகைய காரணத்தினால், துறவியின் கல்லறைக்கு அருகாமையிலே இவை புதைக்கப்பட்டதாகவும் கருதப்படுகிறது.

நிஷாமுதின் கல்லறையின் மேற்கு பக்கத்தில் சிவப்பு மணல் கற்களால் கட்டப்பட்ட ஜமா கானா மஸ்ஜித்தும் காணப்படுகிறது. இந்த மசூதியில் மூன்று இடைவெளிகள் காணப்பட, மேல் புறத்தில் சிறிய குவிமாடம் ஒன்று காணப்படுகிறது. இந்த நுழைவாயில், தாமரை மொட்டு போன்று ஆலை டர்வாஷா வரிகளால் வடிவமைக்கப்பட்டிருக்க, குதாப்பில் இந்த அமைப்பு காணப்படுகிறது. அலாவுதின் கில்ஜியின் மகன்களுள் ஒருவரால் இந்த மஸ்ஜித் கட்டப்பட்டதாகவும், இந்த அமைப்பு பழமையான ஒன்று என்பதும் நமக்கு தெரிய வருகிறது.

Varun Shiv Kapur

Read more about: travel, temple, delhi