Search
  • Follow NativePlanet
Share
» »குஜராத்தில் அடையாள சின்னமாக விளங்கும் சில அரண்மனை படிக் கிணறுகள்!!

குஜராத்தில் அடையாள சின்னமாக விளங்கும் சில அரண்மனை படிக் கிணறுகள்!!

குஜராத்தில் அடையாள சின்னமாக விளங்கும் சில அரண்மனை படிக் கிணறுகள்!!

By Balakarthik Balasubramanian

குஜராத் மாநிலத்தில் ஏறத்தாழ 100 படிக் கிணறுகள் காணப்படுகிறது. இதனை 'வாவ்' என்றழைப்பர். படி கிணறுகளுக்கு உள்ளூர் மக்களால் உச்சரிக்கப்படும் ஒரு பெயர் தான் இது. இந்த 'வாவ்' என்பது பாரம்பரியமாகவும், நிலத்தடி நீர் அறுவடை அமைப்புகளாகவும் காணப்பட, உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல் வந்து செல்லும் சுற்றுலா பார்வையாளர்களும் குளுமையானதொரு உணர்வை கொள்கின்றனர்.

இங்கே காணும் படிக் கிணறுகள் சாதாரணமானதாக இருப்பதில்லை. இதன் கட்டிடக்கலையை அதிசயித்து பார்க்க வைக்க, இதன் வடிவமைப்பு பரிமாணமானது, கி.மு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வடிவமைக்கப்பட்டதாய் தெரிகிறது. அனைவராலும் நன்கு அறியப்பட்ட இராணி கி வாவ் என்பவர், இதனை யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளப் பட்டியலில் இடம் பெற்று இருப்பதை கண்டறிந்தார்.

வசதிக்கு ஏற்ப, குஜராத்தில் காணப்படும் பிரசித்திபெற்ற தளங்கள் யாவும், அஹமதாபாத்திலிருந்து மூன்று திசைகளிலும் பரந்து விரிந்து காணப்படுகிறது. நீங்கள் ஒரு சிறு பயணம் அல்லது வார விடுமுறையை கழி(ளி)க்க எண்ணினால், குஜராத்தின் மத்திய பகுதியிலும், மாநிலத்தின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் காணப்படும் இந்த கட்டிடக்கலையின் அதிசயத்தை கண் குளிர கண்டு மனம் மகிழலாம்.

இந்த மாநிலத்தை சுற்றியுள்ள அனைத்து படிக் கிணறுகளுக்கும் பயணம் செய்து மனதை பரவசத்தில் ஆழ்த்த வேண்டுமென்றால், நமக்கு சுமார் 15லிருந்து 20 நாட்கள் தேவைப்படுகிறது. சிலர் ஒரு நாளுக்குள்ளும் விஜயம் செய்யலாம். இந்த சௌராஷ்டிராவில் காணப்படும் அதிசயிக்கும் கட்டிடக்கலைகள் பற்றிய மேலும் பல தகவலை நாம் தொடர்ந்து படிப்பதன் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

 வான்கனெர் அரண்மனை படிக் கிணறு – ராஜ்கோட்:

வான்கனெர் அரண்மனை படிக் கிணறு – ராஜ்கோட்:

பாரம்பரியத்தின் அமைப்பை பாதுகாப்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இந்த வான்கனெர் அரண்மனை விளங்குகிறது. இந்த அரண்மனையானது...இன்று பாரம்பரிய தங்குமிடமாக மாற்றப்பட்டு ராயல் ஓசஸ் ஹோட்டல் என்னும் பெயரில் இயங்கி வருகிறது. இந்த அழகான அரண்மனையில் படிக்கிணறு ஒன்று 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் காணப்பட்டதாகவும், அதன் முந்தைய பெருமையை மீட்டெடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது... ராயல் ஒயாசிஸ் வான்கனெர் மூலம் கைவிடப்பட, அதன்பின் அந்த படிக்கிணறு நன்றாக பராமாரிக்கப்பட வேண்டுகோளும் விடப்பட்டது. அது நம்மை இன்று அதிசயிக்கவும் வைக்கிறது.

வான்கனெரிலிருந்து தோராயமாக 200 கிலோமீட்டருக்கு வெளியே இந்த அஹமதாபாத் காணப்படுகிறது. அங்கிருந்து இன்னும் 100 கிலோமீட்டர்கள் நாம் செல்ல, சுரேந்திர நகரில் பரந்து விரிந்து காணப்படும் காட்டுக் கழுதை சரணாலயத்தை நம்மால் பார்த்து பரவசமடைய முடிகிறது.

official site

 அடி கடி வாவ் மற்றும் நவ்கன் குவோ:

அடி கடி வாவ் மற்றும் நவ்கன் குவோ:

இரண்டு படி கிணறுகளை இருப்பிடமாக கொண்டிருக்கிறது குஜராத்தில் காணப்படும் இந்த ஜுனகாத். அவை, அடி கடி வாவ் மற்றும் நவ்கன் குவோ ஆகும். இவை இரண்டும், பாறைகளிலிருந்து வெட்டப்பட்டிருக்கிறது. இந்த நவ்கன் குவோவிற்கு தோராயமாக 1000 வயதுகள் ஆக, பதினைந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது தான் இந்த அடி கடி வாவ் ஆகும்.

அஹமதாபாத்திலிருந்து 330 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் ஒரு இடம் தான் ஜுனகாத் ஆகும். சற்று மாற்று பாதையில் நாம் செல்ல, 90 கிலோமீட்டர் பயணிப்பதன் மூலம், கடற்கரை கோவிலான சோம்நாத் ஆலயம், போர்பந்தர் நகரம் மற்றும் காந்தி பிறந்த நகரம் ஆகியவற்றையும் நம்மால் காண முடிகிறது.

Anuradha Shankar

 நவ்லகி வாவ் – வதோதரா:

நவ்லகி வாவ் – வதோதரா:

பதினைந்தாம் நூற்றாண்டின் புகழிடமான லக்ஷ்மி விலாஸ் அரண்மனை.... நவ்லகி வாவ், ‘நவ்லகி' என்னும் பெயர் பெற்றது. இந்த மாபெரும் தோற்றத்தை கட்ட ஒன்பது இலட்சம் தங்க நாணயங்கள் செலவிடப்பட்டதாக நம்பப்படுகிறது. மேலும், இங்கிருந்து ஒட்டுமொத்த லக்ஷ்மி விலாஸுக்கும் தண்ணீர் தரப்பட, ஆனால் இன்றோ பக்கத்தில் இருக்கும் கோல்ப் பாசனத்துக்காக தண்ணீர் தரப்படுகிறது. ஒரு சுவாரஷ்யமான கதை என்னவென்றால்...போர் சமயங்களின் போது, இந்த அரண்மனையானது முற்றுகையிடப்பட, ஒட்டுமொத்த இராணுவமும் இந்த வாவ் உள்ளே மறைந்து நின்று எதிரியை எதிர்க்குமாம்.

அஹமதாபாத்திலிருந்து 115 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் ஒரு இடம் தான் இந்த லக்ஷ்மி விலாஸ் அரண்மனையாகும்.

Emmanuel DYAN

 கெபன் ஷா வாவ் – சாம்பனெர்:

கெபன் ஷா வாவ் – சாம்பனெர்:

உலக பாரம்பரிய தளமான இந்த சாம்பனெர் இன்று இடிந்த நிலையில் காணப்படுகிறது. இருப்பினும் படியானது நன்றாகவே இருக்கிறது. இங்கே காணும் வடிவமைப்பானது...இந்து மற்றும் இஸ்லாமிய கட்டிடக்கலையின் அழகை தாங்கியபடி நிற்கிறது. இந்த கெபன் ஷா வாவை தவிர்த்து, மற்றுமோர் உடைந்த படி கிணறும் அருகில் காணப்பட அது தான் எழுஞ்சுருள் வடிவ கிணறு என்பது நமக்கு தெரியவருகிறது. இது நல்லதோர் நிலையில் தென்படவில்லையென்றாலும், வந்து பார்ப்போருக்கு வியப்பை தந்து இன்றும் அசற வைக்கிறது.
அஹமதாபாத்திலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் இந்த சாம்பனெர் காணப்படுகிறது.

lensnmatter

 மொதெரா சூர்ய குண்டம்:

மொதெரா சூர்ய குண்டம்:

அஹமதாபாத்திலிருந்து வடக்கு திசையில் நாம் பயணிக்க, இரண்டு மணி நேர பயணத்தின் வாயிலாக குஜராத் மாநில நெடுஞ்சாலை வழியாக நாம் செல்ல, இந்த மொதெரா சூரிய ஆலயத்தை நாம் அடைகிறோம். இங்கே தான் வருடா வருடம் ஜனவரி மாதத்தில் மொதெரா நடன விழா அரங்கேறி நம் மனதை ஆரவாரம் செய்கிறது. இந்த ஆலயத்தில் படி கிணறு காணப்பட, அதன் பெயர் ‘சூர்ய குண்டம்' என்பதும் நமக்கு தெரிய வருகிறது. இது பார்ப்பதற்கு ஆலய தொட்டி போல் காணப்பட, சம்பிரதாய குளியலை இங்கே முடித்த பிறகு தான் சூரிய தேவனை அனைவரும் வணங்குகின்றனர்.

தற்போதுள்ள கட்டமைப்பு ஒரு ஓய்வு இடமாக பயன்படுத்தப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல், தண்ணீரும் இங்கே தேக்கி வைக்கப்படுகிறது. இந்த சூரிய கோவில் கட்டிடக்கலையின் நேர்த்தியான அழகை நாம் காண்பதற்காகவே இங்கே வரலாம். கம்பீரமான மாநாட்டு மண்டபம் ஒன்று தென்பட அது தான் சபை மண்டபம் என்பதும் நமக்கு தெரிய வருகிறது. இங்கே தூண்களில் காணும் ஐம்பத்து இரண்டு அழகிய சிற்பங்கள் ‘நாம் பார்க்க வேண்டிய ஒன்று' என நம் மனதை கட்டி இழுத்து வியக்க வைக்கிறது.

அஹமதாபாத்திலிருந்து 100 கிலோமீட்டர் வெளியில் இந்த மொதெரா சூரியனாலயம் அமைந்திருக்கிறது.

Krishan 1

 இராணி கி வாவ் – பத்தன்:

இராணி கி வாவ் – பத்தன்:

யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளத்தின் இருப்பிடமான பத்தனில் காணும் இராணி கி வாவ்வில், அழகிய படோலா புடவையும் புகழ்பெற்று விளங்குகிறது. சோலாங்கி வம்சத்தை சேர்ந்த ராணி உதயமதியின் பெயராலே இந்த ‘வாவ்' என்னும் பெயர் பெற்றதாகவும் சொல்லப்படுகிறது. அதோடுமட்டுமல்லாமல், இவர் தன்னுடைய கணவனான பதினொன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த பீமதேவா என்பவரின் நினைவாக மிகப்பெரிய அமைப்புகொண்ட ஒரு நினைவிடத்தை கட்டியதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த படிக் கிணற்றின் முக்கிய அம்சமாக தசவதாரம் இருக்கிறது. அதாவது, விஷ்னுபெருமானின் பத்து அவதாரங்கள் தான் தசவதாரம் எனப்படும். இந்த படிக்கிணற்றின் நீளம் 64 மீட்டர் இருக்க, அகலம் 20 மீட்டரும், ஆழம் 27 மீட்டரும் இருக்கிறது. இந்திய தொல்லியல் ஆய்வால் தோண்டப்பட்ட இந்த பகுதியில், சிற்பங்களும், சிலைகளும்...பெரும் வெள்ளத்தின்போது கிடைத்தது.

அஹமதாபாத்திலிருந்து 130 கிலோமீட்டர் தொலைவில் இந்த பத்தன் எனும் பகுதி காணப்படுகிறது.

Santanu Sen

 தாதா ஹரி நி வாவ் – அஹமதாபாத்:

தாதா ஹரி நி வாவ் – அஹமதாபாத்:

இந்த தாதா ஹரி நி வாவ்வில், சில சிறந்த சிற்பங்களானது அழகுபடுத்தப்பட்ட கல் வரிசைகளில் காணப்படுகிறது. இருப்பினும், இந்த இடம் இன்னும் ஒரு பெரிய அளவிற்கு புறக்கணிக்கப்படுகிறது. இந்த வாவ், அடிப்புறத்தில் ஐந்து அடுக்குகளுடன் காணப்பட, கீழ்க்காணும் அடுக்கில் அதிகம் குளிர்ந்தே காணப்படுகிறது. கோடைகாலங்களில் நன்றாக எரிகிறது. இந்த படிக் கிணற்றுகள் கி.பி.1499 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகும். இதனை கட்டியவர், ஹரேம் மேற்பார்வையாளரான சுல்தான் மஹ்முத் பெகதா ஆவார்.

இந்த தாதா ஹரி நி வாவ், அஹமதாபாத்திலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் காணப்படுகிறது.

Parth3681

 அடலாஜ் நி வாவ் – காந்திநகர்

அடலாஜ் நி வாவ் – காந்திநகர்

குஜராத்தில் காணப்படும் இந்த அடலாஜ் நி வாவ், மிகவும் பிரசித்திபெற்ற ஒரு படிக் கிணறாகும். இதனை உள்ளூர் வாசிகளும், சுற்றுலா பயணிகளும், புகைப்படக்காரர்களும் சுற்றி மொய்த்துகொண்டிருக்க, புகைப்படக்காரர்கள் இந்த இடத்தை ஆடை நாகரிகம் (Fashion) மற்றும் திருமண ஷாட்களுக்கு தேர்ந்தெடுக்கின்றனர். இந்த படிக் கிணற்றை கட்டியது 1499 ஆம் ஆண்டு வாழ்ந்த வாககலா தலைவர் வீர்சிங்கின் மனைவியான ருதாபாய் இராணியாவார். இந்த இடத்தில், ஐந்து அடுக்கு ஆழமாக செல்ல, அதன் சுவறுகள் அழகிய பூ சிற்பம் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அங்கே சில தெய்வங்களின் சிற்பங்களும் காணப்படுவது நம் கண்களை வெகுவாக கவர்கிறது.

Sagar Joshi

Read more about: travel gujarat
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X