Search
  • Follow NativePlanet
Share
» »பிறக்கும் முன்னரே மன்னரானவன் ஆண்ட இடங்கள் பற்றி தெரியுமா?

பிறக்கும் முன்னரே மன்னரானவன் ஆண்ட இடங்கள் பற்றி தெரியுமா?

கரிகால் சோழன் சங்க காலத்தைச் சேர்ந்த ஒரு சோழ மன்னன் ஆவான். இவன் தந்தையின் பெயர் இளஞ்செட்சென்னி. கரிகால் சோழனுக்கு திருமாவளவன், மற்றும் பெருவளத்தான் என்னும் பட்டப்பெயர்களும் உண்டு. முதலாம் கரிகாலன் தாய் வயிற்றில் இருந்தபோதே அவன் தந்தையான இளஞ்சேட்சென்னி இறக்கவே,தாய் வயிற்றிலிருந்தபடியே அரச பதவி பெற்றான்.

கரிகாலன் பண்டைய சோழர்களில் மிக முக்கியமானதொரு மன்னன் ஆவான். சோழகுலத்தை, தன் முன்னோர்கள் ஆண்ட ஆட்சிப் பகுதியிலிருந்து விரிவு படுத்தினான். அதாவது, காஞ்சி முதல் காவிரி வரை பரவ வழிவகுத்தான். பிற்கால வரலாற்றில் இவனது வெற்றிகளும் சாதனைகளும் மிகவும் மிகைப்படுத்தப்பட்டன.

சங்ககாலச் சோழர்களில் கரிகாலனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற பெயர் உண்டு.

அரியாசனம் ஏறுவதற்கு தன் பிறப்புரிமையான பதவியை இழந்து சில ஆண்டுகள் சிறையில் வைக்கப்பட்டான். சிறையினின்று இவன் தப்பிச்சென்று ஆட்சியைக் கைப்பற்றியதைக் கற்பனை வளம்மிக்க கவிஞர்கள் உயர்வு நவிற்சியாக வருணித்துள்ளனர்.

புலிக்குட்டி, கூண்டுக்குள்ளே இருந்து வளர்ந்தே பலம் பெறுவது போல, எதிரிகளின் சிறைக்கூடங்களில் வாழ்ந்த போது கரிகாலன் வல்லவன் ஆயினான். ஒரு குழியில் யானை பிடித்து அடக்கப்படுகிறது. ஆனால் அதே குழியை நிரப்பி தப்பித்து ஓடி, பெண் யானையுடன் சேர்ந்துவிடும் இயல்பு அதற்கு உண்டு. இவ்வாறே கரிகாலன் சிறையில் இருந்த காலமெல்லாம் சிந்தித்துச் சிந்தித்து, சீரிய முடிவுகளுக்கு வந்து சிறைக்காவலரைக் கொன்று தப்பி, பிறகு படிப்படியாகப் புகழும் பெருமையும் அடைந்தான்.

இவ்வளவு புகழ் கொண்ட கரிகாலன் ஆட்சி செய்த இடங்கள், அங்குள்ள சுற்றுலாத் தளங்கள், கோவில்கள் பற்றி காண்போம்

வெண்ணி

வெண்ணி


இவனது ஆட்சியில் நடைபெற்ற முதல் பெரும் போர் வெண்ணிப்போர். சோழ அரியணையைக் கரிகாலன் நிலையாகப் பெறுமாறு செய்ததும், தமிழகத்தின் முடியுடைய மூவேந்தர்க்குத் தலைவனாக விளங்குமாறு செய்ததும் இப்போரே. ஏனெனில் இவ்வெற்றியின் மூலம் தனக்கெதிராக அமைக்கப்பட்டிருந்த ஒரு பெரும் கூட்டணியை அவன் முறியடித்துவிட்டான்.

Pc: Venu62

தலைநகரம்

தலைநகரம்

கரிகாலன் ஆட்சியில் இரண்டு இடங்கள் தலைநகராக இருந்தன. அவை காவிரிப் பூம்பட்டினமும், உறையூரும்.

Pc: Wikipedia

உறையூர்

உறையூர்

உறையூர் தமிழ்நாட்டில் உள்ள திருச்சிராப்பள்ளி(திருச்சி) மாநகரின் ஒரு பகுதியாகும். காவேரியாற்றின் தென்கரையில், திருச்சிராப்பள்ளி கோட்டை இரயில் நிலையச் சந்திப்புக்கு மேற்கில் அமைந்துள்ளது. திருச்சிராப்பள்ளி முக்கிய இரயில் நிலையச் சந்திப்பிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவிலும், திருச்சிராப்பள்ளி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கிறது.

வெக்காளியம்மன் கோவில்

வெக்காளியம்மன் கோவில்


அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோயில், திருச்சிராப்பள்ளி மாநகரத்தின் மேற்கு பகுதியில் உள்ள உறையூரில் உள்ளது. இக்கோயில் காலத்தால் முற்பட்டதும் வரலாற்று சிறப்புற்றதுமாகும்.

PC: TRYPPN

வெக்காளியம்மன்

வெக்காளியம்மன்

சோழன் நெடுங்கிள்ளியின் மகன் பெருநற்கிள்ளி, உறையூரில், நங்கைக்கு பத்தினிக் கோட்டம் சமைத்து நாள்தோறும் விழாவெடுத்து, அலங்காரம் நிகழ்த்தி வந்தான்" என்று சிலப்பதிகார காவியத்தின் வரலாற்றுச் செய்தி மூலம் தெரியவருகிறது.

இந்த பத்தினி கோட்டத்தில் எழுந்தருளச் செய்த கண்ணகி வழிபாடுதான், காலப்போக்கில் வெக்காளியாக பெயர் மருவி வந்துள்ளதாகத் தெரிகிறது.

PC: P.Periyannan

தங்கத்தேர் பவனி

தங்கத்தேர் பவனி


வெக்காளியம்மன் ஒரு ஊர்க்காவல் தெய்வமாகையினால், உறையூரின் எல்லைப்பகுதியில் எழுந்தருளியுள்ளாள். வெக்காளியம்மன் கோவில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. எல்லைத் தெய்வங்களை வெட்ட வெளியில் அமைப்பது மரபு என்பதால் வெக்காளியம்மனுக்கும் கூரை ஏதுமின்றி அமைத்துள்ளார்கள். ஆனால் வெக்காளியம்மன் கூரையின்றி இருப்பதற்கு ஒரு சிறப்புக் காரணம் உள்ளது.

PC: wiki

அழிகிய மணவாளப் பெருமாள் கோவில்

அழிகிய மணவாளப் பெருமாள் கோவில்

உறையூர் அழகிய மணவாளர் கோயில் 108 வைணவத் திருத்தலங்களுள் இரண்டாவது திருத்தலம் ஆகும். இது திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூரில் அமைந்துள்ளது. இத்தலம் திருஉறையூர் (திருக்கோழி) என்ற பெயரில் புராண காலத்தில் அழைக்கப்பட்டுள்ளது.

PC: Ssriram mt

பரமபதவாசல்

பரமபதவாசல்

கலியுகத்தில் மண்ணில் மறைந்த இப்பகுதியை மீட்டு சோழ மன்னன் இப்பொழுதிருக்கும் பெருமாளையும் தாயாரையும் பிரதிஷ்டை செய்து அமைத்த திருக்கோயிலே தற்போது உள்ளது.


PC: Ssriram mt

நுழைவு வாயில்

நுழைவு வாயில்

சோழ நாட்டு அரண்மனை யானை இங்கு வந்தபோது கோழி ஒன்று யானையைத் தாக்கி ஓடச் செய்ததால் கோழியூர் என்ற பெயர் ஏற்பட்டு அது பின்னர் திருக்கோழி என மாறிற்று

PC: sriram mt

பஞ்சவர்ணசுவாமி கோயில்

பஞ்சவர்ணசுவாமி கோயில்

உறையூர் பஞ்சவர்ணேசுவரர் கோயில் என்பது திருச்சிராப்பள்ளி நகரின் உறையூர் பகுதியில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயம் சம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் ஐந்தாவது தலமாகும். இச்சிவாலய மூலவர் பஞ்சவர்ணேசுவரர் என்றும், அம்பாள் காந்தியம்மை என்றும் அழைக்கப்படுகிறார். உதங்க முனிவருக்கு இறைவன் ஐந்து காலங்கள் ஐந்து வண்ணங்களாக காட்சியளித்த தலமாகும்.

கோயில் கட்டுமானம்

கோயில் கட்டுமானம்


வீரவாதித்தன் என்னும் சோழ அரசன் உலாவரும்பொழுது அவனது யானையைக் கோழி சண்டையிட்டு வென்றதால் இத் தலத்திற்குக் கோழியூர் என்ற பெயரும் உண்டு.
முக்கீச்சுரம் திருச்சிராப்பள்ளி நகரின் ஒரு பகுதியான உறையூரே முக்கீச்சுரம் எனப்படுகிறது. கடைத்தெருவில் இக்கோயில் உள்ளது.


PC: sriram mt

புகழ் சோழ நாயனார்

புகழ் சோழ நாயனார்

  • நாயன்மார்களுள் ஒருவரான புகழ்சோழ நாயனார் இத்தலத்தில் பிறந்தார். இவருடைய சிலை இச்சிவாலயத்தில் தனி சன்னதியில் அமைக்கப்பட்டுள்ளது.
  • மூவேந்தர்களும் சேர்ந்து இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளனர்.
  • இச்சிவாலயத்தில் உள்ள கல்வெட்டுகள் சோழர் கல்வெட்டுகளாகும். அக்காலத்தில் நிலக்கொடை, ஆபரணக்கொடை, திருவிழா கட்டளைகள் போன்றவற்றை பற்றி கூறுகிறது.
  • இச்சிவாலயம் கோச்செங்கணாரின் மாடக் கோவிலாகும்.


Pc: Ssriram mt

தான்தோன்றீஸ்வரர் கோயில், உறையூர்

தான்தோன்றீஸ்வரர் கோயில், உறையூர்

இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக தான்தோன்றீஸ்வரர் அருள் பாலிக்கிறார். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.

PC: Ssriram mt

சுவர் சிற்பங்கள்

சுவர் சிற்பங்கள்

இக்கோயிலில் காணப்படும் சுவர் சிற்பங்கள்

PC: Ssriram mt

கோவிலின் விமானம்

கோவிலின் விமானம்

கோயிலின் விமானம்

PC: Ssriram mt

கங்கைகொண்ட சோழபுரம்

கங்கைகொண்ட சோழபுரம்

கங்கைகொண்ட சோழபுரம் அரியலூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிற்றூர் ஆகும். இவ்வூர் சோழர்களின் பெருமரசை நிறுவிய முதலாம் இராஜராஜ சோழன் மகனான இராசேந்திர சோழனால் உருவாக்கப்பட்டு பிற்காலச் சோழர்களின் தலைநகரமாக விளங்கியது. இங்கு இராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட சிவாலயம் இன்றும் உள்ளது. அதனை ஐக்கிய நாடுகள் அமைப்பு உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது

Pc: Benjamin Preciado

கங்கை கொண்ட சோழபுரம் கோயில்

கங்கை கொண்ட சோழபுரம் கோயில்

மேலை, கீழைச் சாளுக்கிய தேசங்களிலும் ஈழம் பாண்டிய சேர தேசங்களை வெற்றிக் கொண்ட இராஜேந்திர சோழன் 1019இல் கங்கை வரை படையெடுத்து சென்று வெற்றியும் கண்டார். அதனால் கங்கை கொண்ட சோழன் என்ற பட்டமும் பெற்றார். அதன் நினைவாக 1023இல் கங்கை கொண்ட சோழபுரம் எனும் புதிய தலைநகரை உருவாக்கினார். இங்கு சிவபெருமானுக்கு கங்கைகொண்ட சோழீசுவரர் கோயில் எனும் மாபெரும் கோவிலை அமைத்தார்

PC: wiki

சோழகங்கம்

சோழகங்கம்

கங்கை வரை பெற்ற வெற்றியின் நினைவாக கங்கை கொண்ட சோழப் பேரேரி அமைக்கப்பட்டது. இதற்கு சோழகங்கம் என்றும் பெயர் உண்டு

PC: Amar

பூம்புகார் கடற்கரை

பூம்புகார் கடற்கரை

இயற்கை எழில் கொஞ்சும் அற்புத கடற்கரை

Pc: Kasiarunachalam

நன்றி

நன்றி

நன்றி! தொடர்ந்து இணைந்திருங்கள்

Read more about: travel பயணம்

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more