» »எங்க ஊரு குட்லாடம்பட்டிக்கு முன்னால குற்றாலம் எல்லாம் எம்மாத்திரம்..!!

எங்க ஊரு குட்லாடம்பட்டிக்கு முன்னால குற்றாலம் எல்லாம் எம்மாத்திரம்..!!

Written By: Sabarish

ஒரு அடர்ந்த காட்டில் நடந்துசெல்வதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். எங்கும் பச்சை பசேலென மரங்கள் சூழ, சில்லென வீசும் காற்றில், பறவைகளின் மொழியை கேட்டுக்கொண்டே மெல்ல மெல்ல நடந்து செல்கிறீர்கள். அப்போது எங்கோ வெகு தூரத்தில் ஓங்கார ஒலியுடன், சிங்கத்தின் கர்ஜனை போல, ஆர்பரித்துக்கொட்டும் அருவியின் சத்தம் கேட்கிறது. அருகே நெருங்க நெருங்க அதிகரிக்கும் அருவியின் ஒலி உங்களை சிலிர்ப்படைய வைக்கிறது. மலையுச்சியிலிருந்து ஓங்காரமிட்டு அருவி கொட்ட, எப்படி இருக்கும் அந்த அனுபவம் என்று எண்ணிப் பாருங்கள்.

இப்படியெல்லாம் பல அனுபவங்களைத் தரும் அருவிகள் நம்ம ஊருலயே சில இடங்களில் மறைந்து காணப்படுகிறது. அப்படிப்பட்ட ஓர் அருவியில் தான் இன்று நாம் நீராடி மகிழப் போகிறோம். என்ன ரெடியா..!?

எங்க இருக்கு தெரியுமா ?

எங்க இருக்கு தெரியுமா ?


ஏலே, நானும் மதுரக் காரண்தான்டா'ன்னு நம்ம பசங்க அடிக்கடி கெத்தா சொல்வாங்களே அந்த ஊருலதாங்க இந்த அருவி இருக்கு. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரைக்கு அறிமுகமே வேண்டாம்னு உலகம்பூரா வாழுர தமிழனுக்கு தெரியும், இருந்தாலும், தமிழ்நாட்டு சுற்றுலாத்தலங்கள அறிமுகப்படுத்துற இந்த இணைய தலத்துல மதுரையோட பெருமைகளையும், முக்கிய அம்சங்களையும் கொஞ்சம் சொல்லிதானே ஆகனும்.

© Jorge Royan

வைகை நாகரீகம்

வைகை நாகரீகம்


நான்மனக்கூடல், கிழக்கத்திய ஏதென்ஸ், திருவிழா நகரம், தாமரை நகரம், தூங்கா நகரம்னு பல்வேறு சிறப்புப்பெயர்களையும் பெற்றுள்ள இந்த மதுரை வைகை ஆற்றின் கரையில புராதன தமிழ் நாகரிக நகரமாக எழும்பியுள்ளது. இதன் வடக்கில் சிறுமலை மலைத்தொடரும், தெற்கில் நாகமலை மலைத்தொடரும் மதுரை மாநகரின் சிம்ம சொப்பன இயற்கை அரணாக உள்ளது.

எஸ்ஸார்

சுற்றுலாத் தலங்கள்

சுற்றுலாத் தலங்கள்


மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், காந்தி மியூசியம், கூடல் அழகர் கோவில், காஜிமார் பெரிய மசூதி, திருமலை நாயக்கர் அரண்மனை, வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம், திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை, அழகர் கோவில், வைகை அணைன்னு மதுரைய சுற்றிலும் ஏராளமான சுற்றுலாத் தலங்கள் இருப்பது நாம அறிந்ததே. ஆனால், இதையெல்லாம் தவிர்த்து பசுமைக் காடு சூழ அமைந்துள்ள அருவியப் பத்தி உங்களுக்கு தெரியுமா?

Karthikeyan Balasundaram

குட்லாடம்பட்டி அருவி

குட்லாடம்பட்டி அருவி


சிறுமலை முகட்டு சரிவுல இருந்து ஜில்லுன்னு நம்மல மகிழ்விக்க ஓடி வரும் தண்ணீர் நம்மைத் தழுவிச் செல்லும் இதமான இடம்தான் இந்த குட்லாடம்பட்டி அருவி. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி என்ற மலையோர கிராமத்தில் இது அமைந்துள்ளது.

எஸ்ஸார்

தடாகை அம்மன்

தடாகை அம்மன்


குட்லாடம்பட்டி அருவிக்கு தடாகை நாச்சியம்மன் அருவின்னு இன்னொரு பேரும் இருக்கு. அடிவாரத்தில் உள்ள கோவிலில் இருந்து அருவிக்கு ஒரு சில படிக்கட்டுக்களை கடந்து செல்ல வேண்டும். வார இறுதி நாட்கள்ல சின்னதா ஒரு ட்ரிப் போக ஆசைப்பட்டா இந்த அருவி உங்க பட்ஜெட்டுக்கும், நேரத்திற்கும் ஏற்ற சுற்றுலாத் தலமாக இருக்கும்.

PRABUSGnaz

சின்ன குற்றாலம்

சின்ன குற்றாலம்


பார்ப்பதற்கு குற்றாலத்தைப் போலவே தோற்றம் கொண்டாலும், அங்கிருப்பதைப் போல ஆபத்து நிறைந்த அருவியில்லை இது. மிகவும் சாந்தமான நீரோட்டம், குறைவானக் கூட்டம், குழந்தைகளுக்கு ஏற்ற பாதுகாப்பு என பல்வேறு சிறப்பம்சங்களையெல்லாம் இது கொண்டுள்ளது.

Mdsuhail

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 36 கிலோ மிட்டர் அலங்காநல்லுர், பாலமேடு வழியாக பயணம் செய்ய வேண்டும். இங்கு செல்ல குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு முறை நகரப் பேருந்து வசதிகள் உள்ளது.

BalaramanL

மதுரைக்கு செல்ல...

மதுரைக்கு செல்ல...


மதுரை மாநரம் நாட்டின் பல்வேறு பகுதிகளுடனும் நல்ல முறையில் போக்குவரத்து வசதிகளால் இணைக்கப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையத்திலிருந்து டெல்லி, சென்னை, மற்றும் பெங்களூரு நகரங்களுக்கு நேரடி விமான சேவைகள் உள்ளன. இதுதவிர, மாநிலத்தலைநகர் சென்னையில் சர்வதேச விமான நிலையமும் அமைந்துள்ளது. ரயில் மார்க்கமாகவும் சென்னை, மும்பை, கொல்கத்தா, மைசூர் உள்ளிட்ட நகரங்களுடனும் சிறப்பான ரயில் சேவைகளால் மதுரை மாநகரம் இணைக்கப்பட்டிருக்கிறது.

Nileshantony92

எப்போது செல்ல வேண்டும்...

எப்போது செல்ல வேண்டும்...


மதுரைக்கு உட்பட்ட பகுதிகளின் பருவநிலை பெரும்பாலும் வறட்சியுடன் காணப்படும். இருப்பினும் தமிழகத்தில் தற்போது ஆங்காங்கே கோடை மழை பெய்து வரும் நிலையில் மதுரையில் உள்ள குட்லாடம்பட்டி அருவியிலும் சீரான நீர் ஓட்டம் உள்ளது. ஏப்ரல், மே வரையிலான காலம் இங்கு செல்ல உகந்த சூழலைக்கொண்டுள்ளன. இம்மாதங்களில் இதமான குளுமையான சூழல் நிலவுகிறது. மதுரையின் பிற பகுதிகளையும், கோவில்களையும் சுற்றிப்பார்க்க இக்காலம் மிகவும் ஏற்றது.

Mirthyu

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்